#கறைபடிந்த_கரம் 18
#ஸ்டிங்_ஆபரேஷன்
ஒருவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க, சம்பந்தப்பட்ட நபரை நம்ப வைத்து நாடகமாடி ஆதாரத்துடன் குற்றச்செயலை அம்பலப்படுத்துவது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டைக்கொடுத்து லஞ்சம் வாங்கியவரைக் கையும்களவுமாகப் பிடிப்பது போன்றது
பெரும்பாலும் ஸ்டிங் ஆபரேஷனின் நோக்கம், அதிகாரவர்க்கம் கண்டுகொள்ள மறுக்கும், துணைபோகும் குற்றச்செயல்களை அம்பலப்படுத்துவதாக இருக்கும்.
டெகல்கா என்ற செய்திப்பத்திரிக்கைதான் பல்வேறு ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டாலும், 'The Truth: Gujarat 2002' என்ற பெயரில் குஜராத் படுகொலைகள் தொடர்பான
உண்மைகளை வெளிக்கொணர, 2007-ல நடத்திய ஸ்டிங் ஆபரேஷன், பரபரப்பை ஏற்படுத்தியது. 6 மாத காலமாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையின் முடிவுகளை, 2007 நவம்பரில் வெளியிட்டது. இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த பலரும் மிகவும் தற்பெருமையுடன் செய்த படுகொலைகள் குறித்துப் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாயின.
குஜராத் படுகொலைகளுக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியும் அவரது காவல்துறையும் முழு ஆதரவு தந்ததை அம்பலப்படுத்தியது.
இந்த டெகல்காவிலிருந்து அனிருத்தா பாஹல் என்பவர் பிரிந்துவந்து கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார்.
அதுவும் ஸ்டிங் ஆபரேஷன்களில் ஈடுபட்டது.
2019 தேர்தலுக்கு முன்பாக, பாஜக செல்வாக்கை உயர்த்துவதற்காக, இந்தியாவில் இயங்கிவரும் 25 ஊடக நிறுவனங்களிடம், இந்துத்வா கருத்துக்களை மறைமுகமாகப் பரப்புவது, பணத்துக்காகச் செய்திகளை வெளியிடுவது என்ற வகையில், 500 கோடி ரூபாய்வரை பேரம் பேசி, ஊடக நிறுவனத்தின் மேல்மட்ட அதிகாரிகளையும், சில
ஊடகங்களின் நிறுவனர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ஒப்புக்கொண்ட இந்தியா டுடே, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர் என்று பல்வேறு குழுமங்களைச் சேர்ந்தவர்களின் ஆடியோப்பேச்சுப் பதிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியது.
பாஜகவில் பதவியைக் கேட்டு தன்னை அணுகும் பெண்களிடம் அத்துமீறுவதை வழக்கமாகக் கொண்டவரென்று கேடி ராகவன் என அம்பலப்படுத்துவதற்காக வீடியோவை எடுத்த மதன்,
சில நாள் முன்பு youtube பிரபலங்கள் கட்சியிலுக்கு ஆதரவாக பேசுவதற்காக கையூட்டு பெற்றதை வீடியோவாக வெளியிட்டது கூட
ஆப்ரேஷனாக கருதப்பட்டது
ராகவன் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவை வெளியிடும் முன்னதாக எதற்காக அண்ணாமலையிடம் திரும்பத்திரும்ப அனுமதி கேட்க வேண்டும்? அவரா இந்த ஆபரேஷனை செய்யச்சொன்னவர்? ஓராண்டு காலமாக பாஜகவில் கவனிக்கப்படாத, மதன் youtube பிரபலங்களை அம்பலப்படுத்திய உடன், எஞ்சிய பகுதிகளை வெளியிடாமல் காணாமல் போனார்
பாஜகவில் அண்ணாமலைக்குக் கிடைத்த தலைவர் பதவிக்காகத் தூண்டில் போட்ட பலரில் ராகவனும் ஒருவர். உள்கட்சிப்பூசலில் ராகவனை அப்புறப்படுத்த, திட்டமிட்டு அம்பலப்படுத்தினர்.
உண்மையான ஸ்டிங் ஆப்ரேஷன் என்றால் பிளாக்மெயில் செய்வது போல ஒவ்வொன்றாக விடுவேன் என்று கூறிக்கொண்டு இருக்க மாட்டார்கள்
இந்த பின்னணியில் @ptrmadurai குறித்து அண்ணாமலை வெளியிடும் ஆடியோ உண்மை எனில் அமைச்சரை உளவு பார்க்க அண்ணாமலைக்கு துணை யார்?
போலி என்றால் கிரிமினல் வழக்கு பாயும் என்று அறிந்தும் துணிந்து பறப்ப யார் தைரியம் கொடுக்கிறது?
இரண்டுக்கும் ஒரே பதில்:
ஒன்றிய பிஜேபி அரசு
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.