#திகுஜராத்ஸ்டோரிஸ்
"பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா" என்ன செய்யப் போகிறார்கள்...??
குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என NCRB
தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஐ.பி.எஸ், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்
அதிகாரியும் உறுப்பினருமான சுதிர் சின்ஹா: “சிலர் காணாமல் போனது குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தனிநபர் வழக்குகள் தெரியப்படுத்துகின்றன" தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி,
2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017இல் 7,712 பேரும், 2018இல் 9,246 பேரும், 2019ஆம் ஆண்டில் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர்.
2020ல், 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது. “காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை அது தீவிரமாகக் கையாள்வதில்லை
என்பதுதான் காவல்துறையின் பிரச்சினை. இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது. ஏனென்றால், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள், மேலும் காணாமல் போன வழக்கை கொலை வழக்கைப் போல கடுமையாக விசாரிக்க வேண்டும்.”
முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் Dr.ராஜன் பிரியதர்ஷினி "சிறுமிகள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம் எனது பதவிக் காலத்தில், காணாமல் போன பெண்களில் பெரும்பாலோர் சட்டவிரோத மனித கடத்தல் குழுக்களால் அவர்களை வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்' என்கிறார்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.