#கட்டடத்திறப்பு_விழா
கலைஞர் VS மோடி
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க குடியரசுத் தலைவரை ஏன் பாஜக ஒன்றிய அரசு அழைக்காமல் புறக்கணிக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஆமாம், ஏன் அப்படி செய்கிறார் மோடி என்பது தான் மக்களின் எண்ணம்.
அதற்கு உரிய பதிலை சொல்லாத
பாஜகவினர், "2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிய சட்டப்பேரவைக்கான கட்டடத்தை ஆளுநர் ரோசய்யாவை வைத்து திறக்காமல், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திறந்துவைத்தாரே? அது ஏன்?" என அறிவுக்கெட்ட கேள்வியை கேட்கிறார்கள். புரோட்டகால் படி குடியரசு தலைவர் பதவி பெரியதா
பிரதமர் பதவி பெரியதா, ஆளுநர் பதவி பெரியதா என்ற அடிப்படை புரிதல் கூட பாஜகவினருக்கு இல்லை என்பதை அவர்களின் கேள்வி அம்பலப்படுத்துகிறது.
பிரதமரையோ, ஆளுநரையோ புறக்கணித்துவிட்டு, தற்புகழ்ச்சிக்காக கலைஞர் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறக்கவில்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்ற
கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை வரவழைத்து புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறக்க வைத்தார் கலைஞர்
மாநிலத்தின் நிர்வாக தலைவரான ஆளுநர் ரோசய்யாவை முதலமைச்சர் கலைஞர் புறக்கணிக்கவில்லை, அந்த நிகழ்வில் உரிய மரியாதையோடு அவரும் பங்கேற்றார்.
பாஜக எதிரிக்கட்சி என்றாலும் திராவிட மாநிலம் - அண்டை மாநிலம் என்ற அடிப்படையில் நட்பு பேணும் பொருட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவையும், கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் கலைஞர் அழைத்து நிகழ்ச்சியில் உரிய மரியாதையோடு பங்கேற்க செய்தார்.
எதிர்க்கட்சியை, கூட்டணி கட்சியை, கூட்டாட்சியை மதித்த ஜனநாயகவாதி என்ற பண்பின் முழு உருவமாக விளங்கிய அரசியல்வாதி கருணாநிதி என்பதற்கு இது ஒரு சான்று.
ஆனால், நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி நிரலில் என்ன நடக்கிறது?. இந்த நாட்டின் முதல் குடிமகன் - குடிமகள் என்ற
எதிர்க்கட்சியை, கூட்டணி கட்சியை, கூட்டாட்சியை மதித்த ஜனநாயகவாதி என்ற பண்பின் முழு உருவமாக விளங்கிய அரசியல்வாதி கருணாநிதி என்பதற்கு இது ஒரு சான்று.
ஆனால், நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி நிரலில் என்ன நடக்கிறது?. இந்த நாட்டின் முதல் குடிமகன் - குடிமகள் என்ற
பெருமைக்குரியவர் குடியரசுத் தலைவர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் உரிமை பெற்றவர், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பவர் என்ற பெருமைகளுக்குரியவரான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை புறக்கணித்துவிட்டு, தற்பெருமை விளம்பர வெறிக்காக மோடி
புதிய கட்டடத்தை திறக்க உள்ளார் என்பது தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
"கருவறை பூஜையில் தலித், ஆதிவாசி, பெண்களுக்கு அனுமதி இல்லை" என்ற சனாதன மனப்போக்கால் ஆதிவாசி சமூகப்பெண் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி புறக்கணிக்கிறாரா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
புரோட்டகால் படி குடியரசு தலைவர் பதவி பெரியது, பிரதமர் பதவி சிறியது. ஆனால் பெரியவரை புறக்கணித்துவிட்டு சிறியவர் மரியாதையை பெறுவது விளம்பர வெறி தற்புகழ்ச்சிக்காக அலைவதே இந்தியா என்ற ஜனநாயக குடியரசு நாட்டின் அடிநாதமான ஜனநாயக நீதிக்கும் சமூக நீதிக்கும் எதிராக மோடி செயல்படுகிறார்.
மாநிலங்களின் கூட்டாக திகழும் ஒன்றிய ஆட்சித் தலைவரான பிரதமரை வரவேற்று நிகழ்ச்சி நடத்திய களைஞரையும், நாடாளுமன்ற செயல்பாட்டின் நிர்வாகத் தலைவராக திகழும் குடியரசு தலைவரை புறக்கணிக்கும் மோடியையும் ஒப்பிடுவதே அபத்தமானது.
குடியரசுத் தலைவர் புதிய கட்டடத்தை ஏன் திறந்துவைக்க கூடாது?,
அவருக்கு அதற்கான தகுதி இல்லையா? என்ற கேள்விக்கு பாஜக நினைக்கும் உண்மை காரணத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்க்கின்றன. அந்த கேள்விக்கு பாஜக ஒன்றிய அரசு முறையான சரியான பதிலை சொல்லாததால் விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கட்டுரை உதவி :
@EllorumNamudan
படங்கள் :
@smvasu , TP ஜெயராமன்
மிக மோசமான ஜியோ நெட்வொர்க் கொடூரத்தால் ட்வீட்டு லோட் ஆகாமல் அரை மணி நேரம் போராடி பதிவு போட்டேன் பல்லாயிரக்கணக்கில் பகிர்ந்து விடுங்கள் ஐயா..
😜🙄
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.