👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood

Jun 21, 2023, 10 tweets

#I_Couldnot_Breathe

பதிவிட்டவர் #VijayBhaskarVijay

1964 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் பல பல இடங்களில் Whites only போர்டுகள் இருந்திருக்கின்றன.

இங்கே வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான நிறவெறி கொள்கையை ஹோட்டல்கள், தியேட்டர்கள், ஸ்விமிங் பூல்கள் என்று பல

இடங்களில் பின்பற்றி இருக்கின்றனர்.

கறுப்பினத்தவர் இதை எதிர்த்து கடுமையாக போராட அதிபர் கென்னடி இந்த நிறவெறியை தடை செய்யும் சட்டம் கொண்டு வர அதற்கான முன் ஏற்பாடுகள் செய்து அதை அறிமுகப்படுத்தும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு லிண்டன் பி ஜான்சன் அதிபராக பொறுப்பேற்றார்

கிட்டத்தட்ட ஒருவருடம் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறார். St. Augustine movement என்ற அமைப்பு இப்பிரச்சனையில் மிக தீவிரமாக இறங்கி போராடுகிறது.

அதனால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து அதிரடிக்கின்றனர்.

அப்படித்தான் நெல் போர்டு என்ற பதினேழு

வயது சிறுமியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ப்ளோரிடாவில் இருக்கும் மன்சூன் மோர்டார் மோட்டல் ஒன்றில் இருக்கும் நீச்சல் குளத்தில் Whites only போர்டை பார்த்த நெல் போர்ட் அதை எதிர்த்து சட்டென்று நீச்சல் குளத்தில் குதித்து விடுகிறார்.

அங்கிருந்து நிறவெறி பிடித்த மோட்டல் உரிமையாளர்

ஒடிவந்து “மேலே வந்து விடு. இது வெள்ளையர்களுக்கு மட்டுமான குளம். கறுப்பர்களுக்கு அனுமதி இல்லை” என்கிறார்.

நெல் போர்ட் வெளியே வர மறுக்கிறார்.

உடனே உரிமையாளர் ஒடிப்போய் கொதிக்கும் ஆசிட்டை எடுத்து வந்து நீச்சல் குளத்தில் ஊற்றுகிறார்.

ஆசிட் நீரோடு சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கிறது

நெல் போர்ட் அசரவில்லை. அப்படியே நீச்சல் குளத்தில் இருக்கிறார்.

“ஆசிட் ஊற்றும்” காட்சியை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கிறார்கள்.

நெல் போர்ட் பொது இடத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்தாக கைது செய்யப்படுகிறார்.

ஆனால் போட்டோ அமெரிக்க இதழ்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது

உலகம் முழுக்க அது பரவி விடுகிறது.

அதிபர் லிண்டன் பி ஜான்சன் “போதும் அமெரிக்காவின் மானம் போனது போதும். அவமானமாக இருக்கிறது” என்று சொல்லி அடுத்த 24 மணி நேரத்தில் Civil Rights Act of 1964 என்னும் சமத்துவ சட்டம் அமெரிக்காவில் நடைமுறைக்கு வருகிறது.

நெல் போர்டிடம் “ஆசிட் ஊற்றும் போது பயமாய் இல்லையா” என்று கேட்டதற்கு

“பயமில்லாமல் இருப்பதை தைரியம் என்று நான் நினைக்கவில்லை. பயம் வரும் போது அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் தைரியம் இருக்கிறது” என்றிருக்கிறார்.

ஆசிட் ஊற்றும் போது எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு

கழுத்தில் கால் வைக்கப்பட்டு அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 2020 ஜியோர்ஜ் ஃப்ளாயிட் சொன்ன அதே வாக்கியத்தைதான் நெல் போர்டும் சொல்லி இருக்கிறார். “I couldn't breathe”.

நம் ஊர் என்றால் ”வெள்ளையர்கள் மட்டும்” என்ற கொள்கையை மதத்தோடு இணைத்திருப்பார்கள்.

மதமே பெரிது என்ற பார்வையில்

அதை ”மதச்சட்டம்” என்று யாரும் எதிர்த்து போராடாமல் அச்சட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்போம். அப்படித்தானே.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling