Royalo info marketing MLM : உசார் ஐயா உசாரு...!
சென்னை மடிபாக்கத்தை தலைமை அலுவலகமா வச்சி நடந்துட்டு இருக்க ஒரு விளம்பரம் பார்த்து வருமானம் பார்க்கலாம் என இயங்கி வரும் ஒரு MLM நிறுவனம்..! ஆயிர்வேத பொருட்கள் விற்பனையும் செய்றதா சொல்றாங்க..ஆனா அது இவுங்க பன்ற மணி சர்குலேசன மறைக்க பன்ற வேலை..! வாரம் வாரம் பணம் எடுத்துகலாம்,பரிசுகள் ஏறாலம்னு சொல்லி இதுவரை 3 லட்சம் பேர்களுக்கு மேலே சேர்ந்து இருக்காங்க..!
அவர்கள் விற்க்ககூடிய ஆயிர்வேத மாத்திரைகள் & டானிக்... இரத்தத்தை சுத்திகரிக்க மாத்திரை வச்சிருக்காங்களாம்..! இதை வாங்கி MLM சேர்ந்துகலாமாம்..!
Royalo info marketing MLM - ஏற்கனவே எச்சரிக்கை குடுத்து இருந்தோம், இவ்வளவு சீக்கிரத்துல நடக்கும்னு எதிர்பாக்கல...! பணம் போட்ட மக்களுக்கு தற்போது வீடியோ பார்த்த வருமானம் தரப்படுவதில்லை..! ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளம் தரப்படவில்லை என புகார் நிறைய வந்துள்ளது.. பணம் பெற வேண்டும்மென்றான் ஆட்கள் சேர்த்து விட்டபிறகே தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..! 54நாட்களுக்கு ஒரு முறை ஆட்கள் சேர்த்தால் மட்டுமே வித்ட்ராவல் எடுக்க முடியும் எனவும் சொல்லபட்டுள்ளது.. இதற்க்கு "விஸ்வருபம் ப்ளன்" என அறிவித்துள்ளனர்..!
ஆட்கள் சேருவது குறைந்து பணம் வரக்கூடிய அந்த சங்கிலி தொடர் முறிந்ததால் பயனாளர்களுக்கு பணம் தரமுடியாமல் புது ஆட்களை சேர்த்தால் மட்டுமே பணம் என அறிவிக்கபட்டுள்ளது... புது புது காரணங்களை தினமும் சொல்லி வருகின்றனர், இன்று வங்கியில் ஏற்பட்ட பிரச்சனையால் பணம் அனுப்ப தாமதம் என அறிவித்துள்ளனர், ஒரு சிலர் நிறுவனத்திற்க்கு நேரடியாக சென்று பணம் பெற்றுவருகின்றனர்..! ப்ளேஸ்டோரிலும் ர்வீவ் பகுதியில் புகார் செய்துவருகின்றனர்..!
Royalo,myv3ads,sbo jobs விளம்பரம் பார்த்தால் வருமானம் என சுற்றி திரிபவர்களுக்கு இதுதான் நடக்கும்..விளம்பரம் பார்த்தால் வருமானம் தரப்படுவதில்லை..உங்களிடமும் உங்கள் டவுன் லைனில் உள்ளவர்களிடமும் இருந்து வசூலிக்கபடும் பணத்தில் இருந்து ஒரு பகுதியே உங்களுக்கு வழங்கபடுகிறது..! எப்போது இந்த சங்கிலி உடைந்தாலும் நாமம் மட்டுமே மிச்சம்..! ஏனென்றால்.. விளம்பரம் தரும் ஒரு நிறுவனம் Google Adsenseல் விளம்பரம் அளித்தால் ரூ.1லட்சத்திற்க்கு 3 to 5 லட்சம் வியூஸ் வரை தருகிறார்கள்.. அதே நேரம் விளம்பரம் பார்ப்பவர்களுக்கு 1 வியூவிற்கு 15 பைசா கொடுக்கிறார்கள்..! அதிகாரபுர்வ விலைபட்டியலே இதுதான்.. பின்பு எங்கிருந்து ஒரு விளம்பரம் பார்க்க ரூ.10,15,30,60 என தரமுடியும்..அடிப்படை தெரிந்த ஒருவன் இதில் பணம் போடமாட்டான்.. அடுத்தவனை ஏமாற்றியாவது பணம் சம்பாதிக்க நினைப்பவன் செய்யும் வேலை இது..!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.