Profile picture
RaguC @RaguC
, 16 tweets, 2 min read Read on Twitter
குருவி வேலை பார்ப்பவர்கள் பற்றிய #thread நேற்று அலுவல் நிமித்தம் கொழும்பு வந்தேன், தீபாவளி விற்பனைக்காக இங்குள்ள கடைகளுக்கு துணிகளை எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 40 பேர், ஆளுக்கு 40 கிலோ அதாவது 1.6 டன் இந்த ஒரு பயனத்துல கொண்டு சேர்க்குறாங்க.
இது மாதிரி ஒவ்வொரு ப்ளைட்டுலும் 30-40 குருவிகள், பயனச்செலவு இவர்களது, கிலோவிற்கு 250-300 ரூ என இவர்களுக்கு கூலி, விமான நிலைய வாசலில் இவர்களுக்கு தரகர் மூலம் “compressed dress bundles” கொடுக்கப்படுகிறது, கொழும்பு விமான நிலைய வாசலிலேயே அங்குள்ள தரகர் வாங்கி கொள்கிறார்
இரண்டு விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகளை முன்னமே இவர்களது தரகர்கள் “கவனித்து” விடுவதால் ஏதும் சிரமமில்லை. Check-in ல் 30 கிலோவை தள்ளிவிட்டு, மீதி 10கிலோவும் ஒரு வெற்றுப் பையுமாக பாதுகாப்பு சோதனையை கடக்கும் இவர்கள் முதலில் போவது Duty Free Shop, ஆளுக்கு 5-8 மதுபாட்டில்கள்
வாங்குகிறார்கள் bacback நிரப்பிக் கொள்கிறார்கள், சிகிரெட் பாக்கெட்டும், இவை இரண்டும் இவர்கள் சொந்த செலவிற்காக விற்க, அது போக சில சமயம் முரண்டு பிடிக்கும் அதிகாரிகளுக்கு தம் கையில் இருந்து கொடுக்கும் பணத்தை ஈடுகட்ட என விரிகிறது இவர்களது
தொழில் ரகசியம். கொழும்பு இறங்கியவுடன் தரகர்களிடம் பொருளை ஒப்படைத்துவிட்டு, பழகிய கடைகளில் மதுபுட்டிகளையும் சிகிரெட்டையும் விற்றுவிடுவார்களாம். எல்லாம் பணப் பரிவர்த்தனை, எந்த நாட்டு பணமாக இருந்தாலும் டீல் ஓகே, டாலர்,ஈரோ என்றால் கூடதல் லாபம் (exchange difference), இது இல்லாமல்
கூடுதலாக ஹவாலா பணபரிவர்த்தனையும் செய்கிறார்கள், ஆளுக்கு இவ்வளவு என நிர்ணையிக்கப்பட்ட பணம் புறப்படும் இடத்தில் பிரித்து கொடுக்கப்பட்டு, இறங்கும் இடத்தில் மொத்தாமாக வசூலிக்கப்பட்டு விடுகிறது. இரவு விமானத்திலேயே திரும்பி விடுகிறார்கள். மீண்டும் மறுநாள் காலை
இன்னொரு பயணம். இந்த தொழில் முழுக்க முழுக்க குழுவாக இணைந்து செய்கிறார்கள், பெரும்பாலும் முஸ்லீம்கள், கொழும்பு மட்டுமல்லாது, சிங்கப்பூர்,மலேசியா, துபாய் என பல நாடுகளுக்கு அந்த பருவத்திற்கேற்ற பொருட்களை கொண்டு செல்வதும் எடுத்து வருவதுமாக, கிட்டத்தட்ட 24 மணி நேரம் தூக்கமற்ற,
சில நாட்கள் தொடர்ச்சியாக என எல்லா நாட்களிலும் பயனம் செய்கிறார்கள்.சிங்கப்பூர்-இந்தியா,துபாய்-இந்தியா(மின்னனு சாதனங்கள்),இந்தியா-சிங்கை,இந்தியா-துபாய்(மளிகை பொருட்கள்),கொழும்பு-இந்தியா(Spices),இந்திய-கொழும்பு(துணிவகைகள்) என கொண்டு செல்வது பெரும்பாலும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட,
சட்ட ரீதியாக குற்றம் சுமத்த இயலாத பொருட்களே என்பதால் பெரும்பாலும் இவர்களுக்கு சட்ட வகையிலான சிக்கல்கள் இல்லை,இவர்களிடம் கெடுபிடி செய்வதன் மூலம் அதிகாரிகள் முறையற்ற வருமானமீட்டுகிறார்கள் என வேண்டுமானால் சொல்லலாம். ஒரு சிலர் விரைவாக அதிக பணம் ஈட்ட சட்டத்திற்கு புறம்பான
பொருட்களையும் எடுத்து செல்கிறார்கள், அவர்கள் மாட்டிக் கொண்டால் கதை அவ்வளவு தான். இவர்களும் கூட தாம் கொண்டு செல்லும் பொதிகளில் உள்ளே என்ன இருக்கிறது என அறியாதவர்கள், பொதியை நிரப்புபவர் ஏதேனும் கைவரிசை காட்டினால் இவர்கள் கதி அவ்வளவுதான், ஆனால் அப்படி நடப்பதற்கான காரணம் வெகு குறைவு
என்கிறார்கள், ஏனெனில் ஒரு முறை அவ்வாறு ஆகிவிட்டதென்றால், அந்த நிறுவனத்தின் பொதியை இந்த குருவிகளின் குழு தொடவே தொடாதாம். நேற்று என்னிடம் இந்த தகவல்களை பகிர்ந்த அதே நபர் இன்று நான் திரும்பும் அதே விமானத்தில் மீண்டும் வருகிறார், அதாவது நேற்று இரவு சென்னை சென்றுவிட்டு,காலை
மீண்டும் கொழும்பு வந்து இப்போது திரும்பிகிறாராம், நாளை காலை 6 மணிக்கு அடுத்து பயனம் இருக்கிறதாம். குறைந்த பட்சம் ஒரு பயணத்திற்கு 2000-3000 ரூ வருமானம். நல்ல மின்னனு சாதனங்கள் கிடைத்தால் கூடுதல் வருமானம், ஆனால் கிட்டத்தட்ட தூக்கம் என்பது கிடையாது, அதிக risk உள்ள தொழில்,
என்பதை தாண்டி இவர்கள் இந்த தொழிலில் ஈடுபட காரணம்
1. படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமை(என்னுடன் வந்தவர் B.E பட்டதாரி)
2.நிலையான வேலைகளில் 10,000 க்கு மேல் வருமானம் கிடைப்பதில்லை
3. மதம் சார்ந்த networking
4. ஊரில் ஏதாவது மின்னனு பழுதுபார்ப்பு கடை வைத்துக் கொண்டால் கூடுதல் வருமானம்
5.நினைத்தால் வேலை பார்க்கலாம் என்ற சுதந்திரம்
6. வயது தடையில்லை
7. கல்வி தகுதி தேவையில்லை
8. சராசிரியாக 20-40 ஆயிரம் வரை வருமானம்
என பல காரணங்கள் இதில்.
பயனசீட்டுகள் கூட தரகர்களிடம் பேசி பொருட்கள் இருந்தால் மட்டுமே போடுகிறார்கள், இவர்களது நன்பர்கள் மூலமாகவே பயனச்சீட்டு
எடுப்பதால் பயனத்தை முடித்துவிட்டு வந்து தரகர்களிடம் பணம் வாங்கி கடனை அடைக்கிறார்கள். ஏதாவது ஒரு சில பொருட்களுக்கு சுங்கம் கட்டிவிட்டால் இவர்களின் மற்ற வேலைகளை நேர்மையான அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்களாம், அதற்காக சில சமயம் எதாவது பொருட்களுக்கு சுங்கவரி கட்ட நேர்ந்தால் அது
வருமானத்தில் இருந்து கட்ட வேண்டி வருமாம். மற்றபடி சட்டத்திற்கு புரம்பான பொருட்களை கொண்டு செல்லாதவரை இது பாதுகாப்பான தொழிலாகத்தான் இருக்கிறது.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to RaguC
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!