, 94 tweets, 73 min read Read on Twitter
நவீன தமிழகத்தின் தந்தை👑
#கலைஞர் #Kalaignar #Thread
தெற்காசியாவின் மிகப்பெரிய #நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

September 15, 2010
"#கத்திப்பாரா #மேம்பாலம்" - ஆசிய துனை கண்டத்தில் க்ளோவர் இலை அமைப்பில் கட்டபட்டுள்ள மிகப்பெரிய பாலம் இதுதான்.

அக்டோபர் 26 , 2018
"#அண்ணா #மேம்பாலம்"

தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் மிக நீண்ட முதல் மேம்பாலம்.

ஜூலை 1, 1973
#வள்ளுவர் #கோட்டம்

புலவருக்காக 128 அடி உயரத்தில் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சின்னம்.

ஏப்ரல் 27, 1973
திருநெல்வேலி "திருவள்ளுவர் #இரட்டை #மேம்பாலம்"

இந்தியாவில் கட்டபட்ட முதல் இரண்டடுக்கு மேம்பாலம், (800 மீட்டர் நீளம்)

திருக்குறள் போன்று இரண்டு அடுக்கு என்பதால் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது.

நவம்பர் 13, 1973
"#பூம்புகார் சுற்றுலா நகரம்" சிலப்பதிகார கலைக் கூடம்(1973)

இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் "பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்"

பழந்தமிழர் துறைமுகமான காவேரிபூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைக்கபட்டுள்ளது.
குளித்தலை - முசிறி
"பெரியார் மேம்பாலம்" (1971)

ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம். ( 1450 மீட்டர்)
#கலைஞர் #Kalaignar
"குடிசை மாற்று வாரியம்" (1971)

இந்தியாவில் முதன்முதலாக "குடிசை மாற்று வாரியம்" , "குடிநீர் வடிகால் வாரியம்" அமைத்து வீடுகள் குடிநீர் வசதி வழங்கியவர் கலைஞர்.
#தொழில்_புரட்சி
"சேலம் இரும்பு உருக்காலை " (16/09/1970)

சேலம் இரும்பு உருக்காலை கலைஞர் எடுத்த பெரும் முயற்சியால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
(செப்டம்பர் 20, 1989)

கிழக்கு ஆசியாவில் முதன்முதலாக "#கால்நடை #மருத்துவ #பல்கலைக்கழகம்" உருவாக்கியவர் கலைஞர்.
இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக 1971ல் "#தமிழ்நாடு #வேளாண்ன்மை #பல்கலைக்கழகம்" கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.
1969ல் இந்தியாவிலேயே முதல் முதலாக "#போலீஸ் #கமிஷன்" அமைத்து காவல் துறையின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டு வந்தார் #கலைஞர்

1969ல் கோபால்சாமி தலைமையில் முதல் ஆணையமும், 1989ல் சபாநாயகம் ஐஏஎஸ் தலைமையிலும் பரிந்துரைத்த கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்கப்பட்டது.
1969ல் தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய கலைஞர், 'வங்கிகளை நாட்டுடமை’ ஆக்கிட வேண்டும் என ஆலோசனை கூறினார்.

இதனை ஏற்று அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார்.
ஆசியாவின் மிகப்பெரிய தேர் - #திருவாரூர் தியாகராஜர் கோயில் #தேர் (96 அடி உயரம், 360 டன் எடை)

1948 ஆம் ஆண்டிலிருந்து அந்த தேர் ஓடாமல் நின்றிருந்தது. அந்த தேரை முழுவதும் பழுது பார்த்து தேரோடும் வீதிகளை விரிவுபடுத்தி, 20 ஆண்டுகளுக்கு பின் 1970ல் தேரோட்டத்தை நடத்தியவர் #கலைஞர்.
ஆசியாவின் மிகப்பெரிய #பேருந்து_நிலையம் - 37 ஏக்கர் பரப்பளவில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம். (1999) #கலைஞர் #Kalaignar
சென்னை கடற்கரை சாலையில் "#இந்திய #கடல்சார் #பல்கலைக்கழகம்".

நவம்பர் 14, 2008ல் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது
1997ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் பெயரில் " #பெரியார் #பல்கலைக்கழகம்" ஒன்றை உருவாக்கினார் #கலைஞர்.
#உழவர்_சந்தை
விவசாயிகள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் ஏதுமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் உழவர்  சந்தைகளை 1999 மே 13 அன்று அமைத்தார். மதுரை அண்ணாநகரில் துவக்கினார். நவம்பர் 14-2000 அன்று நூறாவது உழவர் சந்தையை திறந்து வைத்தார் #கலைஞர்
"#பூம்புகார் #கப்பல் #போக்குவரத்துக் #கழகம்" - ஏப்ரல் 11, 1974 அன்று அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் டி.வி.எஸ், ஏ.பி.டி, ஜெய விலாஸ் என்று சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவில் முதன்முதலாக #பேருந்துகளை #அரசுடமையாக்கினார். தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் பேருந்தை இயக்கினார்.
பேருந்தை அரசுடைமையாக்கினார்... அதை தொடர்ந்து கிராம பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வர அந்த பேருந்தையே இலவசமாக்கினார்.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு # இலவச பயண அனுமதி சீட்டு.
கிராம ஏழை, ஒடுக்கபட்ட மாணவர்களின் பள்ளி படிப்புக்கு தடையாக இருக்கும் அத்தனை முட்டுக்கட்டைகளையும் உடைத்த கையோடு நிற்கவில்லை…

மின்னலாக மாவட்டம் தோறும் கலை அறிவியல் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க துவங்கினார்
( கலைஞர் உருவாக்கிய கல்லூரிகள் தனி பதிவாக )
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று #முதல் #தலைமுறை #பட்டதாரி சலுகைக்காக விண்ணப்பிக்கும் இளைய தலைமுறை மாணவ மாணவிகளே…
ஒரு முறையாவது எண்ணியதுண்டா? உங்களை பட்டதாரியாக்கி பார்க்க, உங்கள் பெற்றோர் கனவை நனவாக்க திட்டங்களை வகுத்தது யார் என்று?

அவர்தான் #கலைஞர்
இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் முழுவதும் பரவலாக 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கியவர் #கலைஞர்.

இந்தியாவிலேயே பிரசவ மரணம் அரிதாக நடக்கும் மாநிலம் தமிழகம். இதற்கு அன்றே கலைஞர் மேற்கொண்ட இலவச பிரசவம், பிரசவகால நிதி போன்ற திட்டங்களே காரணம்.
கிராமங்களின் அடிப்படை வசதியை மேம்படுத்திட கலைஞர் ஆட்சியில் செயல்படுத்தபட்ட "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்"

500க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமங்களில் இணைப்பு சாலை அமைத்தல், தெரு மின் விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செயல்படுத்தினார் #கலைஞர்
இந்தியாவில் முதல்முறையாக கலைஞர் ஆட்சியில்தான் "#சட்டமன்ற #உறுப்பினர் #தொகுதி #மேம்பாட்டுத் #திட்டம்" கொண்டு வரப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குத் தேவையான முக்கியப் பணிகளை செயல்படுத்த மற்றும் தொகுதி மக்களின் கோரிக்கையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொள்ள இத்திட்டம்
"தமிழ் இணைய கழகம்" உருவாக்கியவர் #கலைஞர்.

" Tamil Virtual University " Feb 17, 2001

அச்சில் இருந்த தமிழ் மொழியை அடுத்த கட்டமாக இணையத்தில் ஏற்றி உலகறிய கொண்டு சேர்த்த பெருமை கலைஞரையே சேரும்.
#visit :
tamilvu.org
கலைஞர் ஆட்சியில் "ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம்" கொண்டு வரப்பட்டது. (30/1/2007)

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குடிநீர் பிரச்சனையை போக்க இந்த திட்டம் 616 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் 20 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் பிரச்சனையை போக்க கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் "#ஒகேனக்கல் #கூட்டு #குடிநீர் #திட்டம்" (26/06/2008)

இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள்
#தமிழ்நாடு #ஆசிரியர் #கல்வியியல் #பல்கலைக்கழகம்(2008)

இந்தியாவில் முதன் முதலாக ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்தும் நோக்கில் , கல்வியலுக்காக தனி பல்கலைக்கழகத்தை ஜூலை 1, 2008ல் உருவாக்கினார் #கலைஞர்

கல்வியியல் இளநிலை(B.Ed) மற்றும் முதுநிலை(M.Ed) படிப்புக்கள் பயிற்றுவிக்கப்படுகிறது
#டாக்டர் #அம்பேத்கர் #சட்ட #பல்கலைக்கழகம்

இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)

பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை முதன்முதலில் சூட்டியவரும் #கலைஞர் அவர்களே.
கோவை குடிநீர் ஆதாரம் #சிறுவாணி #அணை(1973)

1973 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டு வரவேண்டுமென முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு சின்ன செக் டேம் கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது
(1)
சட்டபடியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவால் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, சிறுவாணியில் புதியதாக ஒரு அணை கட்டிக்கொள்ள அனுமதித்தனர். அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வந்தது(2)
#சிறுவாணி_அண
சென்னை மீஞ்சூரில் #கடல்நீரை_குடிநீராக்கும் #திட்டம் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்டது (ஜூலை 30, 2010)

இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு கூடுதலாக விநியோகிக்கப்படும். இதன்மூலம் 20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்
தமிழகத்தில் காவிரி ஓடும் பாதையில் இதுவரை சிறியது பெரியதாக மொத்தம் 14 அணைகள் உள்ளது.

அதில் #மேட்டூர் அணை ஆங்கிலேயர்கள் கட்டியது. #கல்லனை கரிகாலன் கட்டியது. மீதமுள்ள 12 அணைகளை கட்டியவர் #கலைஞர்.
@aravindhtwts
1996 கலைஞர் ஆட்சியில் ஏழை,எளியோர்கள் முன்கூட்டியே நோயை கண்டறிந்து மருத்துவ வசதிகளை அளிக்கும் திட்டமாக #வருமுன் #காப்போம் #திட்டம் கொண்டுவரப்பட்டது (பயனாளிகள் 77லட்சம்)

2001ஜெயா ஆட்சியில் நிறுத்தபட்டு 2006ல் மீண்டும் திட்டம் நடைமுறைக்கு வந்தது(முகாம்-18742, பயனாளிகள்-17,75,085)
"பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்" என்றார் #பெரியார்

“தோழமைதான் சமத்துவத்தின் கனி; சமதர்ம மணம்; அதைக் காண வேண்டுமானால் சாதி தொலைய வேண்டும்” என்றார் #அண்ணா

பெரியார் அண்ணா காட்டிய வழியில், சாதியை ஒழித்து சமத்துவம் உருவாக்கும் நோக்கில் #கலைஞர் தீட்டிய திட்டம்தான் #சமத்துவபுரம்
“சமத்துவபுரத்தில் குடியேறும் நீங்கள் காட்டுகின்ற ஒற்றுமை இந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும். சமத்துவபுரங்கள் வளரட்டும். தமிழ்நாடே சமத்துவபுரமாக ஆகட்டும்"

ஆகஸ்ட்17, 1998 அன்று மதுரை மேலகோட்டையில் முதல் சமத்துவபுரத்தை திறந்து வைத்து #கலைஞர் ஆற்றிய உரை.
ஆசியாவின் மிகப்பெரிய மொத்த காய்கறி பழ மற்றும் பூக்கள் விற்பனை நிலையம்.

கலைஞர் சாதனை திட்டம் #கோயம்பேடு_மார்க்கெட்

295 ஏக்கர் பரப்பளவில்
Phase1 - காய்கறி, பழம் பூக்கள் விற்பனைக்கு 3200 கடைகள்
Phase2 - ஜவுளி, Phase3 - உணவு தாணியம் விற்பனை கடைகள் அமைந்துள்ளது.
#Kalaignar #DMK
October 2, 1971
இந்தியாவில் முதல்முறையாக சமுதாயத்தில் புறக்கணிக்கபட்ட பிச்சைகாரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு இல்லம் அமைத்து கொடுத்தவர் #கலைஞர்.
#Kalaignar #DMK
1969 -70
ஏழை எளிய மக்களுக்கு கண் சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக "கண்ணொளி சிகிச்சை திட்டம்" கலைஞர் அவர்களால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தபட்டது.
#Kalaignar #DMK
(2009)
இந்தியாவில் முதன்முறையாக கிராம, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவத்தை அறிமுகபடுத்தியவர் டாக்டர் #கலைஞர் #DMK
இந்தியாவிலேயே முதன்முறையாக கலைஞர் ஆட்சியில் உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி #மாற்றுத்திறனாளி என பெயர் சூட்டி அழகு பார்த்தவர் கலைஞர்.
“சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்”. (1)
சிங்கார சென்னையாக்கியவர் ஸ்டாலின்
சென்னையை "ஆசியாவின் டெட்ராய்டாக்கியவர்" #கலைஞர்

ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை சென்னையில் பெருமளவில் உருவாக்கி, பொருளாதாரத்தில் தமிழகத்தை உயர்த்தியவர்

Hundai, Royal Enfield, FORD, BMW Daimler போன்ற பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்.
மார்ச் 29, 2007 - BMW கார் உற்பத்தி தொழிற்சாலையை துவங்கி வைத்தார் #கலைஞர்

முதல்வர் கலைஞரிடம் 2007ல் Hundai நிறுவனம் தமிழக காவல்துறைக்காக 100 சொகுசு கார்களை வழங்கியது

நோக்கியா, மோட்ரோலா, சாம்சங், பாக்ஸ்கான், டெல் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளும் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
#மாற்றுத்திரனாளிகள்

1/3/2010 -மாற்றுத்திரனாளிகள் என பெயர் சூட்டினார்

தனி நலவாரியம், தனி துறை

பேருந்தில் 25% கட்டண சலுகை. ரயில்களில் மாற்று திரனாளிகளுக்கு தனி பெட்டி உறுதி செய்தார்

பள்ளி,கல்லூரிகளில் 3% இடஒதுக்கீடு

தனியார் நிறுவனத்தில் 5% இடஒதுக்கீடு

உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத தனி சிறப்பு.

மாற்றுத்திரனாளிகள் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் #பிரெய்லி எழுத்துக்களால் எழுதப்பட்ட "#விரல்மொழியார்" என்ற நூலை வெளியிட்டுள்ளனர்.
#Kalaignar #PhysicallyChallanged
தமிழ் #செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே 8 ஏக்கர் பரப்பளவில் #செம்மொழி_பூங்கா ஒன்றை 24/11/2010 அன்று நிறுவினார் #கலைஞர்.

இந்த பூங்காவில் 500க்கும் மேற்பட்ட தாவரங்கள் இடம்பெற்றுள்ளது.
#Kalaignar #SemozhiPoonga
1972 > சுதந்திர தின வெள்ளி விழா முதல் கவர்னர் ஏற்றிவந்த தேசிய கொடியை அந்தந்த மாநில முதல்வர்களே ஏற்றி வைக்கும் உரிமையை அனைத்து மாநிலகளுக்கும் பெற்றுத் தந்தவர் #கலைஞர்.
1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 ஏழை விவசாயிகளுக்குக் பகிர்ந்து கொடுத்தார் #கலைஞர்

#Kalaignar #தமிழகவிவசாயி
இந்தியாவிலேயே முதன்முதலாகக் விவசாயிகளுக்காக ‘இலவச மின்சாரம்’ மற்றும் பம்ப்செட் கொடுத்தவர் #கலைஞர்.  
#Kalaignar #Thread
#தமிழகவிவசாயி
2006 - பதவியேற்ற மேடையிலேயே 7000 கோடி விவசாயக் கடன்களை முழுவதும் ரத்து செய்தார்

2006 - 50% பயிர் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தார்

2006 - 2010 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 891 கோடி ரூபாயை வழங்கினார் #கலைஞர்
கலைஞர் காப்பீடு திட்டம், ஜூலை 2009. ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு 1,00,000 வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெறும் திட்டத்தை கொண்டு வந்தார் 
#கலைஞர் #DMK
1989 - கலைஞர் ஆட்சியில் பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள்.
#கலைஞர் #DMK
பிறவியில் இருந்தே பேச முடியாத ஏராளமான குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார் #கலைஞர்

உலக சுகாதார நிறுவனம்(WHO) கூட்டத்தில் இதை பற்றி குறிப்பிட்டபோது கலைஞரைஅனைவரும் எழுந்து நின்று பாராட்டி கைதட்டினார்கள்.
#காணொளி கீழே காண்க
#பெண்கள் முன்னேற்றத்திற்காக #கலைஞர் வகுத்த திட்டங்கள் ஏராளம்.

* மூவலூர் ராமாமிர்தம் ஏழை பெண் திருமண உதவி திட்டம்
* ஈவெரா மணியம்மையார் கைம்பெண் மகள் திருமண உதவி திட்டம்
* முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம்.
* அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண உதவி திட்டம் (1)
மக்கள் சிரமமின்றி பயன்பெறும் வகையில் அனைத்து துரை அலுவலகங்களையும் ஒருசேர உள்ளடக்கிய நான்கு அடுக்கு மாடி கட்டிடம், "சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" கலைஞர் ஆட்சியில் கட்டபட்டது. #கலைஞர்
சிறுதொழில் வளர்ச்சிக்கென தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (Small Industries Development Corporation Limited - #SIDCO)1970ல் கலைஞரால் உருவாக்கப்பட்டது. தமிழகம் எங்கும் தொழிற்பேட்டைகள் அமைத்தல், தேவையான மூலப்பொருட்களை வழங்கல், தயாரிக்கும் பொருட்களைச் சந்தப்படுத்தல் ஆகியன நோக்கம்
தொழில் வளர்ச்சி கழகம் (State Industries Promotion Corporation of Tamil Nadu - #SIPCOT) பெருந்தொழில்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிற்வளர்ச்சிக்கென 1971ல் கலைஞரால் உருவாக்கப்பட்டது.

20 தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டது #கலைஞர்
இராணிப்பேட்டையில் 1973லும் 1989லும், ஓசூரில் 1974லும் 1989லும் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டன (அதாவது 13 ஆண்டு வனவாசத்துக்கு முன்பும் பின்பும்)
1996-2001 ஆட்சிலும் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிப்காட் தொழில் வளாகங்கள் திறக்கப்பட்டன
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மாநில மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்க தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (Electronics Corporation of Tamil Nadu- #ELCOT) கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. தமிழக ஐ.டி துறையின் விரிவாக்கம் மாநில மின் பரவலாக்கத்தின் மூலம் இதுவே
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் விரிவான தகவல் தொழில்நுட்பக் கொள்கையை 1997ல் #கலைஞர் உருவாக்கினார். மத்திய அரசு கூட 2004ல் தான் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவித்தது.
தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் உச்சியில் ஏறி நின்று சென்னையில் நிகழ்த்தி வரும் அமைதியான புரட்சி பற்றி உரக்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஓசையில்லாமல் ஏராளமான மென்பொருள் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரே நகரம் சென்னைதான்” - DQ Week டெல்லி இணைய இதழ் (06.03.2000)
சுதந்திர போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்தவர் தியாகி வ.உ.சி.

பின்னர் தொலைந்து போன அந்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கியவர் அன்றைய முதல்வர் #கலைஞர்.
#சொன்னது: 'கக்கன்' மாதிரி ஒரு எளிமையான அரசியல்வாதியை பார்க்க முடியாது. 😊

#சொல்லாதது: காங்கிரஸாரே செய்யாதபோது, தமிழகத்தில் கக்கனுக்கு சிலை நிறுவிய ஒரே தலைவர் #கலைஞர்.💪 👇

(31/08/1997 - அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் முதல் கக்கன் சிலை நிறுவப்பட்டது)
1998: இந்தியாவில் முதன்முதலில் கணினி கல்வியை அரசு பள்ளிகளில் ஒரு பாடமாக கொண்டு வந்தவர் #கலைஞர் அவர்கள். இதன்மூலம் தமிழகத்தின் தகவல் தொழிநுட்ப புரட்சிக்கு அன்றே வித்திட்டார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக தகவல் தொழில்நுட்ப கொள்கையை (IT Policy) உருவாக்கியவர் #கலைஞர்.

தகவல் தொழில் நுட்பத்திற்கென்றே ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் தனி துறை உருவாக்கப்பட்டு 05/10/1998 முதல் தலைமை செயலகத்தில் செயல்பட துவங்கியது.
04/07/2000 அன்று சென்னை தரமணியில் 12 அடுக்கு மாடிகள் கொண்ட "டைடல் பார்க்" #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

முழுவதும் குளிர்பதனபடுத்தபட்ட டைடல் பார்க் கட்டிடத்தில் மின்சாரத்தை சிக்கனபடுத்துவதற்காக இந்தியாவில் முதன்முதலாக "Thermal Energy Storage System" அறிமுகம் செய்யப்பட்டது.
சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு நிறுவனங்கள் கொண்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது.

தரமணி துவங்கி OMR சாலை முழுவதும் "தகவல் தொழிலநுட்ப நெடுஞ்சாலை" என்று சொல்லும் அளவுக்கு IT நிறுவனங்கள் #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
#கலைஞர் ஆட்சியில் OMR சாலையில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் துவங்கப்பட்டது. குறிப்பாக TCS, CTS, Wipro, Infosys, Polaris போன்ற மென்பொருள் நிறுவனங்கள் துவங்கப்பட்டது.
11/02/2010 திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள "தகவல் தொழில்நுட்ப பூங்காவை" உருவாக்கியவர் அன்றைய முதல்வர் #கலைஞர்.
02/08/2010 அன்று கோவையில் அமைந்துள்ள "டைடல் பார்க்" தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தவர் #கலைஞர்.

Picture 1: FOR COIMBATORE 02/08/2010: Chief Minister M. Karunanidhi Inaugurating the TIDEL Park (IT-SEZ) Coimbatore 👇
இந்தியாவிலேயே முதன் முதலாக லோக்பால் சட்டத்திற்கு முன்னோடியாக 12/02/1973ல் "பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் குற்றத்தடுப்பு சட்ட மசோதாவை" சட்டமன்றத்தில் அறிமுகபடுத்தினார் முதல்வர் #கலைஞர்

அந்த சட்டத்தை எதிர்த்து வந்த எம்ஜிஆர், தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்தை ரத்து செய்தார்.
#Real:
* நரிக்குறவர்களுக்கு நல வாரியம் அமைத்தவர் தலைவர் #கலைஞர்
* நரிக்குறவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தனி நபர் மசோதா கொண்டு வந்தவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா.

#Reel: 👇👇👇
29.05.09
#அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3%உள்ஒதுக்கீடு வழங்கியவர் #கலைஞர்

"நான் அருந்ததிய சமுதாயத்தை சார்ந்தவன் என்று தெரிந்தபிறகு என்னோடு பழகிய பலர் என்னை விட்டு விலகினர். ஆனால் கலைஞர் வீட்டில் என்னை அவர்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து அன்புடன் நடத்தினர்" -கலைஞர் உதவியாளர் நித்யா
இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழகத்தில் #கலைஞர் கொண்டு வந்த சட்டங்கள் - முன்னாள் நீதிபதி A K ராஜன் 👇

1) தகவல் உரிமை சட்டம்(1997)
2) ராகிங் தடுப்பு சட்டம்(1996)
3) ஈவ் டீசிங் தடுப்பு சட்டம்(1998)
4) அதிக வட்டி வசூல் தடுப்பு சட்டம் (2001) பிறகு இந்தியா முழுவதும் சட்டமாக்கப்பட்டன
1989: இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கியவர் #கலைஞர்

இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு பணிகளில் பெரும் பதவிகளில் இடம்பெற வித்திட்ட தலைவர் கலைஞர்.
#WomensDay #Kalaignar
1973: கலைஞர் ஆட்சியில்தான் முதன்முதலாக தமிழக காவல்துறையில் பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். இன்று டிஜிபி போன்ற உயர்பதவிகளில் பெண்கள் பணிபுரிய வித்திட்டவர் கலைஞர்.
#WomensDay #Kalaignar
1989: கலைஞர் ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான பெண்களுக்கு கடனுதவியும் தொழிற்பயிற்சியும் வழங்கப்பட்டது.
#WomensDay #Kalaignar
1989: கலைஞர் ஆட்சியில் ஏழை பெண்களுக்கு இலவச உயர்க்கல்வி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

UG வரை அளிக்கப்பட்ட இந்த இலவச கல்வித்திட்டமானது 2008ஆம் ஆண்டு முதல் PG வரை நீடிக்கப்பட்டது.
#WomensDay #Kalaignar
பால்ய திருமணத்தை தடுக்க நமது பெண்கள் பள்ளிக்கல்வி வரையேனும் படிக்க #கலைஞர் தீட்டிய மகத்தான திட்டம்தான், 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்.
*10 வகுப்பு வரை - 25,000 + தங்கம்
*பட்டப்படிப்பு - 50,000 + தங்கம்
#WomensDay #KalaignarThread
(1975) கணவனை இழந்த பெண்களை குடும்பமே கைவிட்டுவிடும் அன்றைய சூழலில், அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த "டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு (கைம்பெண்)விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டத்தை கொண்டு வந்தார் #கலைஞர்.
#WomensDay
தொடர்ந்து...
*கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்,
*அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம்,
*ஈ.வெ.ரா. மணியம்மையார் ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் கொண்டு வந்தார் கலைஞர்

இதன் சிறப்பு உதவித்தொகை பெண்களிடமே ஒப்படைக்கப்படும்
#WomensDay
1975:
ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டிலேயே துவக்கி வைத்தார் அன்றைய முதல்வர் #கலைஞர்.
#WomensDay #Kalaignar
(2009)
ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை 2009ஆம் ஆண்டு கால கழக ஆட்சியில் அறிமுகபடுத்தினார் #கலைஞர்.
#WomensDay #Kalaignar
1998:
விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட ஆனையிட்டார் #கலைஞர்.
50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஏழை பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் #கலைஞர்.
#WomensDay #Kalaignar
1989:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமையால் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைச் சரிக்கட்ட 6000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார் #கலைஞர்
#WomensDay
1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு செய்து; கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெற்று ஜனநாயகக் கடமை ஆற்றிடும் வாய்ப்பை உருவாக்கித் தந்தவர் #கலைஞர்
#WomensDay
கலைஞரின் சத்தான திட்டங்களில் ஒன்று அரசு பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம்.

1989ல் ஆட்சிக்கு வந்த #கலைஞர் இந்த திட்டத்தை செயல்படுத்தினார். முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கவும் உத்தரவிட்டார்.
#Kalaignar #KalaignarThread
State Board, Matric, CBSE கல்வி என்று பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் மனதில் உருவாகும் ஏற்றத்தாழ்வை போக்க தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் #கலைஞர் உருவாக்கிய திட்டம்தான் "#சமச்சீர்கல்வி"
எழுபதுகளில் குதிரை பந்தைய சூதாட்டத்தால் சென்னையில் குடும்பத்தை இழந்தவர்கள் ஏராளம்.

1973ஆம் ஆண்டு #கலைஞர் ஆட்சியில் குதிரைப் பந்தயத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகளாக நடந்துவந்த குதிரைப் பந்தயமானது, 14-08-1974 அன்று நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. #Kalaignar
1990: தமிழ்தாய் வாழ்த்து பாடல் இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் நெல்லையில் "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" உருவாக்கியவர் #கலைஞர்.
#Kalaignar #KalaignarThread
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to நித்யா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!