விஜயும் சற்குணம் ஐஏஎஸும் இல்லாத நாட்கள்

1966 நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியான ஒரு செய்தி: "கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். சிலரிடம் மறைத்துக்கொள்ள எதுவும் இல்லை. சிலர் குடையைப் பிடித்துக்கொண்டும் சிலர் பையை தலைமேல்
போட்டுக்கொண்டும் நிற்கிறார்கள்". இப்படித்தான் இருந்தது அப்போது நிலைமை. அந்தத் தருணத்தில் விஜய்ண்ணா பிறக்கவில்லையென்பதால் என்ன செய்வதென அரசுக்கும் தெரியவில்லை.

1965ல் மிகப் பெரிய உணவுதானிய பஞ்சத்தை இந்தியா எதிர்நோக்கியிருந்தது.
1964-65ல் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி 65-66ல் 72.3 டன்களாகக் குறைந்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை. கேட்கவும் வேண்டுமா? இந்தத் தருணத்தில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1966 நவம்பர் 16ல் இந்தத் திட்டம். ஆனால், எல்லா குடும்பங்களுக்கும் கார்டுகள் கிடைக்கவில்லை.

1967ல் முதலமைச்சரான சி.என். அண்ணாதுரையால் (இவர் விஜய் அண்ணா இல்லை.. வேறு ஒரு அண்ணா.) வாக்குறுதி அளித்தபடி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
ஆனால், அப்போதுதான் தமிழக நிர்வாகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்தது என்கிறார் இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை செயலராக இருந்து ஒய்வுபெற்ற எஸ். நாராயணன்.

அண்ணா துரை வலியுறுத்தியதால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி சில மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் சி.என். அண்ணாதுரை மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கி செயல்படுத்தப்படுவது வழக்கம்.

அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான் கீழிருந்து மேல் நோக்கி திட்டங்களைத் தீட்டும்
பார்வை உருவானது என்கிறார் அவர்.
1969ல் கலைஞர் முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மாறியது. பிரச்சனைகளை அதிகாரிகள் கண்டறிந்து தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் பிரச்சனைகளைச் சொன்னால், அதிகாரவர்க்கம் அதற்கு காதுகொடுக்க வேண்டியிருந்தது.
1960களில் துவங்கி 80களுக்குள் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமங்களின் பிரச்சனைகளை அறிந்தவர்கள்.

1975க்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன
அரிசிக்காக துவங்கப்பட்ட இந்த முறையின் மூலம் சர்க்கரை, மண்ணெண்ணையும் வழங்கப்பட்டன. 1972ல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. இந்த கார்டை வைத்தே, கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்படுகிறன
அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ரேஷன் கார்டுகளுக்காக அடிதடியில் ஈடுபட்ட காலம் மாறி, வருவாய்க்கேற்றபடி வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள், பொருட்களே வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் வரை வந்துவிட்டது.
மக்கள் தொகையின் பெரும் பகுதி அரசி வாங்க ரேஷன் கடைகளைச் சார்ந்திருந்த காலம் மாறியிருக்கிறது.

1970க்கும் 76க்கும் இடையில் மாநிலத்தின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்தது. தனிநபர் வருவாய் 30 சதவீதம் அதிகரித்தது. 1971ல் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு,
1981ல் 54.4 சதவீதமாக மாறியது. 1971ல் 125ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 77ல் 103ஆகக் குறைந்தது. வறண்ட நிலங்களுக்கு நில வரி ஒழிக்கப்பட்டது. 1974ல் கொண்டுவரப்பட்ட சட்டம், பரம்பரைக் கர்ணம் முறையை ஒழித்தது. இதையெல்லாம் இடஒதுக்கீட்டை வைத்து,
தகுதியில்லாமல் வேலைக்குச் சேர்ந்தவர்களே செய்தார்கள்.

திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின, திராவிடச் சித்தாந்தம் என்பது எப்படி மக்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை உண்மையிலேயே அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்
Dravidian Years: Politics and Welfare in Tamilnadu. எழுதியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன்.
இதை விடுத்து சில (போலி)தமிழ்தேசிய சல்லிகள் & சீமானியர்கள் உருவாக்கிய மாயத்தை வைத்து இன்னும் எத்தனை பார்வோர்ட் மெஸேஜ்களை வைத்து படம் எடுத்தாலும் அடி விழுகத்தான் செய்யும்
படம் எழுதிய ஜெமோவுக்கு முக்கிய பங்கு இருக்கு.

முருகதாஸ் & ஜெமோ அவர்களின் பின்னால் போய் அத்யாவசிய பிரச்சனைகளுக்கு குரல் குடுப்பார் விஜய் என்ற தகுதியையும் இழக்க வேண்டாம் என்பதே பெரிய அறிவுரையாக இருக்கும்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to இராசபாளையத்துகாரன்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!