, 28 tweets, 6 min read Read on Twitter
நானெல்லாம் ட்விட் போட்டாலே கண்டுக்க மாட்டீங்க
த்ரெட் போட்டா படிக்கவா போறீங்க

இருந்தாலும் போடுறேன்

#பேய்_இருக்கா_இல்லையா

என்னோட அனுபவத்தை சொல்றேன்
முடிவு நீங்களே எடுத்துக்கோங்க

இதான் எங்க ஊரு
கிட்டத்தட்ட மூட நம்பிக்கையில ஊறி போயிருக்குற ஊரு

அப்போ என்கிட்ட பைக் இருந்துச்சு
பைக்க வீட்டு வாசலுக்கு எல்லாம் கொண்டு போக முடியாது
ஊருக்குள்ள ரோட்டு ஓரத்துல தான் நிறுத்தனும்
ஊரோட போட்டோ பாத்தாலே ஏன்னு தெரியும்
விஷயத்துக்கு வருவோம்

அப்போ எல்லாம் நைட் அம்மா சீரியல் பாத்து முடிச்ச உடனே நான் hbo,ஸ்டார் movies இதுல எதாவது இங்கிலிஷ் படம் பாத்துட்டுதான் தூங்குவேன்
இங்கிலிஷ் தெரியாது ஆனா சப் டைட்டிலோட பாத்தா நல்லா புரியும்

எங்க வீட்ல இருந்து ரெண்டு வீடு அடுத்து இருக்க வீட்ல ஒருத்தர் ஆக்சிடன்ட்ல இறந்து ரெண்டு மூணு நாள் தான் ஆயிருந்தது

அவர் எனக்கு கூட தூரத்து சொந்தம்தான்
மாமா முறை வேணும்
அவர் பீன்ஸ் விக்க ஊட்டிக்கு வாடகை ஜீப் எடுத்துட்டு
போகும் போது எங்கப்பாவும் ஊட்டிக்கு கிளம்பிட்டு இருந்தாரு
வா ஓய் வண்டியிலேயே போயிருவோம்னு கூப்டாரு
எங்கப்பா கிளம்ப டைம் ஆகவே நீங்க போங்க ஓய் நான் பஸ்ல வரேன்னு எங்கப்பா சொல்ல
அவர் போயிட்டாரு
அவர் போன கொஞ்ச நேரத்துல போன் வந்துருச்சு ஜீப் ஆக்சிடன்ட் ஆயி அவர் இறந்துட்டார் டிரைவருக்கு
பயங்கர அடிப்பட்டுருச்சுன்னு

நல்ல வேளை எங்கப்பா அந்த ஜீப்ல போகல

டிரைவரும் எங்க ஊரு தான்

ஊரே களேபரம் ஆச்சு
ஏன்னா எங்கூருல ஆக்சிடன்ட்ல இறந்த முதல் ஆளு அவர் தான்

அதுக்கு அடுத்த நாள் எல்லா பார்மாலிட்டீஸும் முடிஞ்சு மதியம் உடம்ப கொண்டு வந்தாங்க

கிராமத்து பக்கம் ஒரு பழக்கம் உண்டு
ஹாஸ்பிடல்லயோ இல்லாட்டி எதாவது விபத்துலயோ,இல்லன்னா தற்கொலை இந்த மாதிரி ஏதோ ஒரு காரணத்துல ஒருத்தர் இறந்துட்டா அவர் உடம்ப ஊருக்குள்ள கொண்டு வரமாட்டாங்க

ஊர் எல்லையிலேயே சம்பிரதாயங்களை முடிச்சிட்டு அப்டியே சுடுகாட்டுக்கு கொண்டு போயிருவாங்க
எங்க ஊருலயும் அதான் நடந்துச்சு

ஊர் எல்லை
பக்கத்துல வச்சு எல்லாம் முடிச்சு சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க

எங்க ஊரு சுடுகாடு ஒரு பெரிய அடர்ந்த காடு
புதைக்கிறது தான் பொதுவான வழக்கம் எங்க ஊர்ல

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி விபத்து,தற்கொலை இந்த மாதிரி சம்பவங்கள்ல இறந்தவங்களை புதைக்காம எரிச்சிருவாங்க

ஆனா
அவர் பையனுக்கு மொட்டை அடிக்க ஆள் வரல,சொந்தக்காரங்க வர்றாங்க wait பண்ணுங்கன்னு கிட்டத்தட்ட ரெண்டரை மணிநேரம் உடம்ப எரிக்காமயே சுடுகாட்டுல வச்சிட்டாங்க
அப்புறம் தான் எல்லாம் முடிச்சு எரிச்சாங்க

அப்பவே ஒருத்தர் சொன்னார்
இப்டி எல்லாம் இவர் உடம்ப எரிக்காம கீழ போட்டு வச்சா அவர்
கோவமா வருவாப்லன்னு

அவர் சொன்ன மாதிரி தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தது

இறந்து போனவரோட பேத்திய அவர் வந்து தூக்குனதாவும் அந்த பாப்பா அந்தரத்துல மிதந்ததாவும் சொன்னாங்க

அந்த கரண்ட் கம்பத்துகிட்ட அவர் நின்னாருன்னு ஒரு கிழவி சொல்லுச்சு

இதெல்லாம் பொய்யின்னு நான் எப்பவும் போல
இருந்துட்டேன்

அவர் இறந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருந்தது
நான் வழக்கம் போல அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு நைட் படம் பாத்துட்டு இருந்தேன்

நைட் 1.30க்கு படம் முடிஞ்சது
நல்ல குளிர் டைம் அது

வழக்கம் போல பின்வாசல் வழியா வெளிய போயி
ஒன் பாத்ரூம் போயிட்டு வந்து தூங்கலாம்னு வீட்டுக்கு சைடுல வந்தேன்
வீட்டு சைடுல கால்வாய் போகும்

அங்க தான் போயி நிக்குறேன்
எந்த சத்தமும் இல்ல
ஊரே அமைதியா இருக்குற டைம் அது

சட்டுன்னு எங்க வீட்டு வாசல கிராஸ் பண்ணி ஒரு உருவம் நடந்து போயிட்டு இருக்கு
எனக்கு பகீர்னு ஆச்சு
ஏன்னா நடந்து போன உருவம் இறந்து போனவர் மாதிரியே தான் இருந்துச்சு.அவர் போடுற மாதிரியே ஜரிக்கின்,குல்லா எல்லாம் அப்டியே இருந்துச்சு
இருட்டுல மூஞ்சு சரியா தெரியல

நான் பாத்ரூம் போயிட்டு திரும்புறேன் அந்த உருவம் சட்டுன்னு கிராஸ் பண்ணி இருந்துச்சு
நான் 20 செகண்ட்ஸ் அப்டியே நின்னுட்டேன்
ஏன்னா அவ்ளோ அமைதியான நேரத்துல யாராவது நடந்து போனா சத்தம் கண்டிப்பா பெருசா கேக்கும்
ஆனா எனக்கு கொஞ்சம் கூட சத்தம் கேக்கல
அதுவுமில்லாம அந்த உருவம் கிட்டத்தட்ட இறந்து போனவர் ஜாடையோட ஒத்து போகவும் அதிர்ச்சியில நின்னுட்டேன்
அப்புறம் அதிர்ச்சியில இருந்து விலகி தைரியமா வாசலுக்கு வந்து பாத்தேன்
போன உருவம் இல்ல
எந்த வீட்டு கதவும் அப்ப திறக்கல

போன உருவம் எங்க போச்சுன்னு யோசிச்சேன்
அப்போதான் தோணுச்சு பைக்ல பெட்ரோல் திருடுற ஆளா இருக்குமான்னு
ஏன்னா பைக்க வீட்டுக்கு கொண்டு போக முடியாததால பொதுவா ரோட்ல தான்
நிறுத்துவோம்
அங்க தான் நைட்ல யாரோ பெட்ரோல் திருடிட்டு இருந்தாங்க

அவனா இருக்குமான்னு யோசிச்சு கீழ என்னோட பைக் நிறுத்தி இருந்த இடத்தை பாத்தேன்
பைக் நிறுத்தி இருந்த இடத்தை மார்க் பண்ணிருக்கேன்
இப்ப போட்டோவுல எப்டி பாக்குறீங்களோ அப்படித்தான் நானும் அந்த இருட்டுல பைக்க பாத்தேன்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்குற மாதிரி என் பைக் பக்கத்துல யாரோ உக்காந்துருக்குற மாதிரியே இருந்துச்சு

அந்த நேரத்துல இறந்து போனவர் நினைப்புல வரல
பெட்ரோல் திருடன் மாட்டிக்கிட்டான்னு தான் தோணுச்சு
யோசிக்காம பட்டுன்னு கீழ இறங்கி பைக் கிட்ட போனேன்

பக்கத்துல போக போக
யாருமே அங்க இல்லன்னு தெரிஞ்சது
பைக் பக்கத்துல நின்னுட்டு சுத்தி சுத்தி பாத்தேன்
யாருமில்ல
நாய் கூட குரைக்காம இருந்துச்சு

மேல ரோட்டுக்கு வந்தேன்
அங்க இருந்து என் வீட்ட பாத்தேன்
அப்ப நான் நின்னு கீழ பாத்த இடத்துல இருந்து யாரோ என்னை பாக்குற மாதிரியே இருந்துச்சு

எனக்கு அப்டியே
தூக்கி வாரி போட்டுருச்சு
உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பிக்குது அந்த குளிர்லயும்

அப்போதான் மூளை யோசிச்சுது நான் நிக்குறது முச்சந்தியிலன்னு

முச்சந்தி ன்னா மூணு வழி பிரியிற இடம்
கிராமத்து பக்கமெல்லாம் பெரியவங்க சொல்லுவாங்க
உச்சி வேளையில முச்சந்தியில நிக்காதன்னு
ஏன்னா அங்க தான் பேய்ங்க
சிலது வீட்டுக்கு வழி தெரியாம உக்காந்துருக்குமாம்
அந்த நேரத்துல நாம போனா நம்மள புடிச்சிரும்னு சொல்லுவாங்க

நான் அதையெல்லாம் நம்ப மாட்டேன்
ஆனா அந்த நைட் நேரத்துல நான் பயந்துருந்த டைம்ல இது தோணவும் மேற்கொண்டு பயம் அதிகமாச்சு

உண்மைய சொன்னா நான் தைரியமான ஆளு தான்
ஆனா அந்த சூழ்நிலை
என்னை பயப்பட வச்சிச்சு

திரும்பவும் ஒருமுறை வீட்ட பாத்தேன்
அந்த இடத்துல யாருமில்ல
காலியா இருந்த மாதிரி இருந்துச்சு

என் அறிவுக்கு அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு வீட்டு பின்னாடி கதவ திறந்து போட்டுட்டு வந்துருக்கேன்னு

பயத்தோட உடம்பும் வேர்த்ததோட வெகுவெகுன்னு மேல ஏறி வீட்டு வாசலுக்கு
போனேன்
அந்த லைன்ல யாருமில்ல
கொஞ்சம் தயங்கிக்கிட்டே ரெண்டு வீடு தள்ளி இருக்க இறந்தவர் வீட்ட பாத்தேன்
வாசல்ல லைட் மட்டும் எரிஞ்சது
அங்கயும் யாருமில்ல

உடம்பு மறுபடியும் வேர்க்க ஆரம்பிச்சுச்சு ஏன்னு புரியல
அப்பவும் போனது யாருன்னு யோசனை ஒரு பக்கம் இருந்துச்சு

என்ன பண்றதுன்னு
தெரியாம பைக்கையும் இறந்தவர் வீட்டையும் மாறி மாறி ரெண்டு மூணு தடவை பாத்தேன்

மனசுல பின்னாடி யாரோ நிக்குற மாதிரி பீல் ஆச்சு
நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு
கொஞ்சம் தைரியத்தோட சினிமாவுல வர்ற மாதிரியே திரும்புனேன்

யாருமில்ல

இனி நிக்க வேணாம்னு முடிவு பண்ணி பின்னாடி
கதவ தாழ் போட்டுட்டு போயி அம்மாவை இறுக்கி கட்டிபுடிச்சி படுத்துட்டேன்

தூக்கம் வரல
யோசனை தான் ஓடிட்டு இருந்துச்சு

ஒரு உருவம் கிராஸ் பண்ணி போனது உண்மை
அது யாரு பேயா இல்ல பெட்ரோல் திருடன் தான் என்னைய பாத்ததும் இருட்டுல எதாவது சந்துக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டானான்னு இன்னும் தெரியல ஆனா
அவ்ளோ அமைதியான டைம்ல நடக்குற சத்தம் கூட இல்லாம போக வாய்ப்பே இல்ல

கரெக்ட்டா நான் திரும்பவும் அந்த உருவம் கிராஸ் பண்ணவும் சரியா இருந்துச்சு
அதான் பக்குன்னு ஆயிருந்தது

இப்பவும் அது திருடன் தான்னு ஒரு டைம் நினைப்பு வந்தாலும் திருடன் இல்லன்னு ஒரு நினைப்பும் வரும்
என்னால அது
பேயா இல்ல மனுசனான்னு சொல்ல முடியாம இன்னும் அந்த குழப்பம் இருக்கு

அந்த சம்பவத்துக்கு அப்புறம் இறந்தவர் வீட்ல பூஜை எல்லாம் பண்ணி அவர் ஆவிய அடக்குனதா சொன்னாங்க

ஆனா உருவம் கிராஸ் ஆனது உண்மை
கீழ இருந்து பாக்கும் போது என் வீட்டுக்கிட்ட நின்ன உருவம் உண்மையா இல்ல பிரம்மையான்னு தெரியல
இப்பவும் யோசனை என்னன்னா யாரு வீட்ல இருந்தாவது திருட்டுத்தனமா எவனாவது வெளிய வந்து என்னைய பாத்ததும் ஒளிஞ்சிக்கிட்டானான்னு கூட தோணும்
எது எப்படியோ ஒரு பயங்கர அனுபவமா அது இருந்தது மட்டும் உண்மை

நடந்ததை அப்டியே எழுதிட்டேன்
முடிவு உங்கள் கையில🙏🙏🙏🙏

நன்றி
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கர்ணர்⚖🍃
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!