, 48 tweets, 5 min read Read on Twitter
எங்கள் அடுத்த வெளியீடு @DravidaMayai வின்
திராவிட மாயை- ஒரு பார்வை- மூன்றாம் பகுதி -1967 முதல் 1981 வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பிடும் பகுதியாகும். இந்தக் காலம் எம்.ஜி.ஆருடைய காலம், அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்பட்ட காலம். திராவிட இயக்கத்தின் போக்கை மடைமாற்றியவர் எம்.ஜி.ஆர்.
@DravidaMayai அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்முதற்றே உலகு.
என்ற குறளை,
ஆதி சிகர முதற்றே உலகு - என்று திருத்தி ஒரு ஆங்கிலேயர் அச்சிட்டார்.
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் இதைக் கேள்விப்பட்டார்.
அச்சிட்ட பிரதிகளை
யெல்லாம் விலை கொடுத்துப் பெற்றுக்கொண்டார். அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹத்தின் போது போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து அதன் விளைவாக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்ற நாவிதரின் பெயர வைரப்பன்.
கதர் ஆடையையும் கழுத்தில் உள்ள தாலியையும், கை வளையல்களையும் தவிர மற்ற எல்லா ஆபரணங்களையும் நாட்டுப் பணிக்காக அகற்றிவிட்டவர் வை.மு.கோதைநாயகி, ‘சாதி ஒழிய வேண்டும்’ என்று குரல் கொடுத்தவர் ஜி.சுப்ரமணிய ஐயர்
காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன் மொழிந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு (28–02-1885). வெள்ளையனுடைய வியாபார நோக்கம் கெடும்படியாக கப்பலோட்டியவர் வ.உ.சிதம்பரனார்.ஆங்கிலேயரின் தலைமைப்பீடமான லண்டன் நகரிலேயே கலகக்கொடி உயர்த்தியவர் வ.வே.சு.ஐயர்.
ஆப்கானிஸ்தானுடைய காபூல் நகரில் “இந்திய சுதந்திர சர்க்கார்” என்ற அமைப்பை உருவாக்கிய செண்பகராமன், காந்தியப் போராட்டங்களின் முதல் களப்பலியான தில்லையாடி வள்ளியம்மை, பின்னி மில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு.வி. கல்யாணசுந்தரனார், அப்பழுக்கற்ற அரசியல்வாதி ராஜாஜி
மக்கள் தலைவர் கு.காமராஜ், திண்டுக்கல் சர்தார் சாகிப், குற்றப்பரம்பரைச சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கல்வியாளர் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், ஜோசப் செல்லதுரை கொர்நீலியஸ் என்ற இயறபெயர் கொண்ட பொருளாதார மேதை குமரப்பா.
கொடிகாத்த திருப்பூர் குமரன், கே.பி. சுந்தரம்பாள், கக்கன் என்று முடிவில்லாத பட்டியல் இது.
தமிழகமே தேசியத்தில் மூழ்கி இருந்த போது, அதிலிருந்து விலகி வேறுபட்டு நின்றவர்கள் மிகச் சிலரே. அந்த கூட்டத்தின் முன்னணித் தலைலர் ஈ.வெ.ராமசாமி. இவருடைய அடிப்படைக் கொள்கை வெள்ளைக்காரனுக்கு வெண்சாமரம் வீசுவது, கவுரவக் குறைவான இந்த வேலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக
அவர் கையில் எடுத்த காரணம் பிராமண துவேஷம். மற்றபடி அன்றாட வசனங்களும் அடிக்கடி ஒப்பனைகளும் மாறி வரும். ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதெல்லாம் இவர் சால்ஜாப்புக்காக ஏற்படுத்திக் கொண்ட மேற்பூச்சுக்களே.
இப்படிப்பட்ட தலைவரின் வாரிசுகளுக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட யோக்கியதை இல்லை என்பதுதான் நம்முடைய கட்சி. ஈ.வெ.ரா. என்பவர் தமிழ மொழியின் எதிரி, இந்திய தேசத்தின் எதிரி என்பது புத்தகத்தின் உள்ளே விவரிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். என்ற தமிழ்ப்பற்றாளரை இந்திய ஒற்றுமையில் அக்கறை கொண்டவரை, ஹிந்து மதச்சார்புடையவரை திராவிடர் கழகத்தவர்கள் கொண்டாடுவதற்கு எந்த பாத்தியதையும் இல்லை.
ஈ.வெ.ரா.வின் திசையிலிருந்து விலகிப் பயணித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, அவரை வழிநடத்திச் சென்ற சி.என்.அண்ணாதுரையும் பிற்காலங்களில் எவ்வாறு பண்பட்டிருந்தார் என்பதையும், இந்திய அரசமைப்புக்குள் தன்னுடைய கட்சியை அழகாகப் பொருத்திக் கொண்டார்
ஈ.வெ.ரா.வின் வெகுஜன விரோதப் பாதையிலிருந்து விலகித் தன் கட்சியை நடத்தியவர் அண்ணாதுரை ஆனால் அண்ணாதுரையின் கொள்கைகளை அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி மறந்துவிட்டார். கட்சியை ஈ.வெ.ரா.விடம் அடமானம் வைத்துவிட்டார்.
அடுத்த கட்டத்தில் இந்தச் சீர்கேட்டில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர். அண்ணாதுரையின் பாதையில் அ.தி.மு.க.வை நடத்திச் சென்றார்.
திராவிடர் கழகத்தின் அமைப்பு விதிகளின்படி அதில் பிராமணர்கள் உறுப்பினர் ஆக முடியாது. ஆனால் தி.மு.க.வில் இந்தத் தடையில்லை.
அண்ணாதுரை தி.மு.க.வில் பிராமணர்களைச் சேர்த்துக் கொண்டார்.
தி.மு.க.வைச் சேர்ந்த நாத்திகம் ராமசாமி இதைக் கண்டித்து எழுதினார். ‘மன்றம்’ என்ற தி.மு.க. அதிகாரப்பூர்வ இதழில் நெடுஞ்செழியன் ‘பிராமணர்களை சேர்த்துக் கொள்வது சரிதான்’ என்று விளக்கக் கட்டுரை எழுதினார்.
“ஹிந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின்மீது மாற்று எண்ணங்களை மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறிஸ்துவத்தைப் பரப்ப முடியாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
இம்முயற்சியின் முதற்கட்டப் பணியாக ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிப்பிடும் பொதுச் சொல்லாக திராவிடம் இந்திய இலக்கியங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.
கால்டுவெல்லுக்கு முன்பு டி.நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார்,”
தியோடர் பாஸ்கரன், அறந்தை நாராயணன், ராண்டார் கை, வெங்கட் சாமிநாதன், கண்ணதாசன், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரை மேற்கோள் காட்டி திராவிட இயக்கத் திரைப்படங்கள் சுதந்திர இந்தியாவின் உண்மையை முழுமையாகப் பயன்படுத்தியவை, காங்கிரஸ் ஆதரவுத் திரைப்படங்கள் (1947-க்கு முன்)
அடக்குமுறையை மீறி வெளிவந்தவை. காங்கிரஸின் போராட்டங்களுக்கு வெகுஜன ஆதரவு கிடைத்தபோது அதில் சினிமாவின் பங்கும் இருந்தது. ஆனால் திரை உலகைச் சேர்ந்தவர்களிடம் தலைமைப் பொறுப்பு தரப்படவில்லை. கதை, வசன கர்த்தாக்களைக் காரியக் கமிட்டியில் சேர்க்கவில்லை.
முதலில் திருக்குறளைத் திருத்தத் தொடங்கிய கிறித்தவர்கள் இப்போது திருவள்ளுவரையே திருத்தத் துணிந்துவிட்டார்கள். தங்களுடைய மௌடீகத்தை மறைப்பதற்காக கரென்சியால் எடை கட்டுகிறார்கள். கோடிகளைக் கொட்டித் தயாரிக்கப்படும் திரைப்படத்தில் தாமஸின் சீடராகத் திருவள்ளுவர் தோன்றப் போகிறார்.
திரைப்படத்துக்கு முன்னோடியாக புத்தகம் ஒன்று வெளிவந்து தமிழ் மண்ணில் நச்சுக் காற்றை வீசிக் கொண்டிருக்கிறது. முனைவர் மு. தெய்வநாயகம் என்ற கிறித்தவர் ‘திருக்குறள் கிறித்தவ நூலே’ என்பதை நிறுவிவிட்டதாகச் சொல்லிக் கொண்டு அலைகிறார்.
பாதிரியார்கள் போட்ட அடித்தளம்தான் திராவிட மாயையின் துவக்கம். ஹிந்து மதம் உயிரோட்டத்தோடு இருக்கும் வரை இந்தியரை அடிமைப்படுத்த முடியாது என்பதே மிஷனரிகளின் பிரச்சினை.
டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப் பட்டணத்திலும் (1647),
நாகைப்பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620)
கிறித்தவம் குறித்துத் தமிழர் ஒருவர் எழுதிய பதில் இது:
“பசுக்களைக் கொன்று தின்னும் வழக்கத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவர்களை வெறுக்கிறோம். மலம் கழித்தபின் அவர்கள் நீர்கொண்டு சுத்தம் செய்வதில்லை.
கடும் போதையுள்ள சாராயம் அருந்துகின்றனர். இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைவதற்கு ஏற்ப இறப்புச் சடங்குகளைச் செய்வதில்லை. திருமணங்களை அவர்கள் கொண்டாடுவதில்லை.”
பொது வகையில் இறைவனைப் பற்றிய கருத்துகளைக் கூறிய திருவள்ளுவர், திருமால், இந்திரன், திருமகள் ஆகிய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். ‘தாமரைக் கண்ணான் உலகு’ என்னுமிடத்தில் திருமாலைச் சுட்டி உள்ளார். ‘திரு’ என்னும் சொல்லால் திருமகளைக் குறிப்பிடும் குறட்பாக்கள் மூன்றுள்ளன.
‘இந்திரனே சாலும் கரி’ என்ற இடத்தில் இந்திரனை நேராகவே சுட்டுகிறார். ‘இரந்தும் உயிர் வாழ்தல்’ குறளில் பிரமதேவனைச் சபிக்கிறார் திருவள்ளுவர்.
காமனாகிய மன்மதனைச் சுட்டும் குறட்பா தனிப்படர் மிகுதி அதிகாரத்தில் காணப்படுகிறது. கூற்றுவன் பெயரையும் விடாது வள்ளுவர் குறிப்பிடும் இடமும் உண்டு
அவர் பூமா தேவியை ‘நிலமென்னும் நல்லாள்’ என்று பெயரிட்டுப் போற்றுவார். தேவர்களைப் பற்றிய சொற்கள் அமரர், புத்தேளிர், வானோர், விசும்புளோர், அவியுணவின் ஆன்றோர் ஆகியன.
திருவள்ளுவர் தம் நூலில் இம்மை மறுமை பற்றியும் சுவர்க்கம், நரகம் ஆகிய இரண்டு உலகங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பறுப்பதே உயிர்கள் எய்தும் பயன்களில் முடிந்த முடிபு என்பதை வள்ளுவர் கூறுவார்.- டாக்டர். மதி. சீனிவாசன் /திருக்குறளில் இறையியல் / திருக்குறள் சிந்தனைகள்/ வானவில் பண்பாட்டு மையம் வெளியீடு.
மறைமலை அடிகளின் நாட்குறிப்பில் (16.06.1928)
திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரவர்கள், அவர்தம் அண்ணன், ‘தமிழ்நாடு’ ஆசிரியர் திரு.சொக்கலிங்கன் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாயக்கர் நடத்திவரும் நாத்திகச்
சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினர்.
என்று எழுதப்பட்டுள்ளது.
எதற்காகப் பெரிய புராணத்தை எதிர்க்க வேண்டும் என்று கேட்டால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நந்தனாரை பிராமணர் ஒருவர் கொடுமைப்படுத்தியதாக
ஈ.வெரா.வைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் மேடைதோறும் பேசுகின்றனர். இவர்களுடைய கருத்துக்கு ஆதாரம் எது என்று நாம் அறிய விரும்புகிறோம்.
ஊடகங்களின் கடாட்சத்தால் உருவானதுதான் பகுத்தறிவு இயக்கம். ‘நந்தனார்’ என்ற திரைப்படம்தான் (எம்.எம்.தண்டபாணி தேசிகர்,
செருகளத்தூர் சாமா நடித்தது -& 1942) அவர்களுடைய வாதத்திற்கு அடிப்படை. திரைப்படத்துக்கு எது ஆதாரம் என்று பார்த்தால் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனம்.’
ஆனால் சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தில் இல்லாத விஷயத்தை
கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிவிட்டார். நந்தனாரை அந்தணர் கொடுமை செய்தார் என்ற செய்தி பெரியபுராணத்தில் இல்லை; அது வெறும் கற்பனை. மேலும் விவரங்கள் அறிய விரும்பு வோர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய ‘கோபால கிருஷ்ண பாரதியார்’ என்ற நூலைப் பார்க்கலாம்.
சிவபக்தியும் ராமபக்தியும் இருக்கும்வரை தமிழர்களைத் தடம் புரளச் செய்யமுடியாது என்று ஈ.வெ.ரா.வுக்குத் தெரியும்.
இஸ்லாத்தில் இவர்களைச் சேர்ப்பதாக இல்லை; ஹிந்துக்களோடு இருக்கும் தொப்புள் கொடி உறவை இவர்கள் தானாகவே அறுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். இவர்கள் கதை இப்படிக் கந்தலானதற்குக் காரணம் என்ன?
கொள்கையில் உள்ள கோளாறு முதல் காரணம்.
சொந்த மதத்தை இறுகப் பிடித்துக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. உறுதியின்மை இரண்டாவது காரணம்.
அடாவடிகளை அறிக்கைகளாகவும் தவறான தகவல்களைத் தத்துவங்களாகவும் அரைகுறைப் படிப்பை அநுபூதியாகவும் கொண்டு வளர்ந்ததே ஈ.வெ.ரா.வால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம்.
மேடைப் பேச்சின் கவர்ச்சி, சினிமாவின் வீச்சு, ஆழமும் அகலமும் இல்லத மொண்ணைத்தனமான எழுத்து ஆகியவை சேர்ந்த சரக்கு, துவக்கத்தில் படித்தவர்களையும் நாளடைவில் பாமரர்களையும் மயக்கியது. அந்த மேடைகளில் பொருள் ஏதும் இல்லாத பூச்சுவேலை அதிகம்.
“Every body remains in a state of rest or motion in a straight line என்று ஏசுநாதரைப் பற்றி எழுதிய கவிதையில் பிரெஞ்சுக் கவிஞன் பெஞ்சமின் டிஸ்ரேலி கூறியதைப் போல”என்று சொல்லி, நிறுத்தி சோடா குடித்துக் கொண்டார் கழகப் பேச்சாளர் ஒருவர். அவருடைய கன்னிப்பேச்சு அது.
அவருக்கு எதிரே இருந்த மக்கள் தொகையில்அரை டவுசர்களே அதிகம். இடம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம்; ஆண்டு 1964.
இங்கிலாந்துப் பிரதமரை பிரெஞ்சுக் கவிஞராகவும், யூத மதத்தைச் சேர்ந்தவரை ஏசுவின் புகழை எழுதியவராகவும் நியூட்டனின் விதியை இலக்கியமாகவும் மாற்றும் ரசவாதம் கழகக் கண்மணிகளிடம் உண்டு.
சுதந்திரம் பெற்ற பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத் துறையை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கியது. சுதந்திர இந்தியாவின் தணிக்கைக் கொள்கைகளால் தி.மு.கழகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகளும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும் திரைக்கு வந்தன.
விடுதலைக்குப் பின் தேசிய முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. நகரங்களைத் தாண்டி மின்சாரம் கிராமங்களுக்கும் செல்லத் தொடங்கியது. கிராமங்கள் மின்சார மயமாகத் தொடங்கியதும் டூரிங் டாக்கிஸ்களும் சினிமாப் படங்களைத் தூக்கிக் கொண்டு கிராமப் புறங்களுக்குள் பிரவேசித்தன.
1931-1947 ஆண்டுகளில் தரிசிக்க முடியாதிருந்த சினிமாப் படத்தைக் கிராம மக்கள் காணுகிற வாய்ப்புகள் உருவாகத் தொடங்கிய (1947-1956) காலத்தில் சினிமாவின் சக்தியைப் புரிந்தவர்களாகத் தி.மு.கழகத்தினர் விளங்கினர்.- தமிழ் சினிமாவின் கதை / அறந்தை நாராயணன் / நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
ஹிந்து மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதும் இல்லை; எவரும் விலக்கப்படுவதும் இல்லை. ஒரு முஸ்லீமும் கிறிஸ்தவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து பிறக்கிறான். மற்ற மதங்களுக்கு அவன் மாறிப் போவது ஏதோ உத்யோகம் பார்க்க உடை மாறிப் போவது மாதிரிதான்.
- ஜெயகாந்தன்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to RarePublications
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!