அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகள்,நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார்.அருகில் வந்து,‘ஏன் தூங்கவில்லை?’ என்றார்.

மனசு சரியில்லை என்றாள் மகள்.

உனக்கு அன்பான குடும்பம் இருக்கும்போது என்னம்மா? என்றார் அப்பா.

‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள்.
என்ன என்று சொல் நானும் தெரிந்துகொள்கிறேன், என்றார் அப்பா ஆர்வமாக!

மகள் சொன்னாள்,
அப்பா, என் அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அவளிடம் நான் நட்புடனும் உரிமையுடனும் பழகுவேன்.
தன் குழந்தையின் முதலாம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட அவள் ஆசைப்பட்டாள்.அதற்காக அலுலவகத்தில் சில ஊழியர்களிடம் பண உதவி கேட்டாள்.
அவர்கள் மறுத்துவிட்டார்கள். நான் அதைக் கேள்விப்பட்டு, அவள் கேட்காமலேயே முன்வந்து பணம் கொடுத்தேன்.அதை வாங்கிக் கொண்டு எனக்கு மிகுந்த நன்றி சொன்னாள்.
அதன்பிறகு பிறந்த நாள் நெருங்க நெருங்க அவள் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது. என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். பிறந்த நாளுக்குக்கூட என்னை பெயருக்கு அழைத்தாளே தவிர, மனமார அழைக்கவில்லை. ஆனால் அவளுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்களை எல்லாம் திரும்பத் திரும்ப அன்போடு அழைத்தாள்.
என்னை வேண்டுமென்றே ஒதுக்கியதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நான் அவளிடம்,"பிறந்த நாள் அன்று எனக்கு வேறு வேலை இருக்கிறது,வர முடியாது" என்று சொல்லிப் பார்த்தேன்.அவள் உடனே,‘சரிங்க மேடம், உங்க இஷ்டம்’என்று சொல்லிவிட்டாள். என்னை வரச்சொல்லி வற்புறுத்துவாள் என்று எதிர்பார்த்தேன்.
பிறந்த நாள் முடிந்து விட்டதா?
என்று கேட்டார் அப்பா.

நேற்று பிறந்த நாள். போகவில்லை. அந்தக் குழந்தைக்காக இந்த பொம்மையெல்லாம் வாங்கி வைத்தேன்.
அவள் அழைக்காத அலட்சியமும், ஒரு குழந்தைக்கு பொம்மை வாங்கி வைத்து கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சியும் என்னை துன்புறுத்துகிறது என்றாள் மகள்.
அப்பா உடனே, நீ அவளுக்கு பண உதவி செய்த பிறகு அந்தப் பெண்ணை பொதுவில் அனைவர் முன்னாலும் எதற்காகவாவது கிண்டல் செய்தாயா? என்று கேட்டார்.

நினைவில்லை அப்பா, என்றாள் மகள்.

யோசி மகளே! நிச்சயம் அப்படி ஒன்று நடந்திருக்கும், என்றார் அப்பா.

சிறிது நேரம் கழித்து மகள் சொன்னாள். ஆமாம், அப்பா!
நான் பண உதவி செய்து ஒருவாரத்தில் அவள் ஒரு மஞ்சள் கலர் புடவை அணிந்து வந்திருந்தாள்.
அது அவள் கணவன் ஆசையாக எடுத்துக் கொடுத்த புடவையாம்.
நான் அதைப் பார்த்த உடனே, ஏய், மஞ்ச கலரு ஜிங்குசாண்.
இதை எல்லாம் கட்டினா கூலிங்கிளாஸ் போட்டுதான் பாக்கணும் போல கண்ணு கூசுது’ என்றேன் விளையாட்டாக!
அதற்கு சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். ஆனால் அவளும் சிரித்தாளே என்றாள் மகள்!

நீ அவள் குழந்தையின் பிறந்த நாளுக்கு உதவி செய்துவிட்டு அவளை அவமானப்படுத்தினால் பதிலுக்கு எப்படி அவள் கோபத்தை, இயலாமையை உன்னிடம் காட்ட முடியும்?
வேறு வழியில்லை, சிரித்துதானே ஆகவேண்டும் என்றார் அப்பா!
பின்பு அப்பா யோசித்து ஒரு யோசனை சொன்னார் மகளிடம்.

அதன்படி மறுநாள் காலை ஒரு மணி நேரம் முன்பாகவே மகள் கிளம்பி அவள் வீட்டுக்குச் சென்றாள்.
தொட்டிலில் கிடந்த மகனை தூக்கிக் கொஞ்சி, பிறந்த நாளுக்கு வரமுடியலடா! இதோ உனக்கு பொம்மை வாங்கி இருக்கேன் பாரு! என்று பொம்மையை அருகில் வைத்தாள்.
அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்த்து, நேத்து எங்க குடும்ப வாட்ஸ்அப் குரூப்ல என் சொந்தக்கார பையன் ஒருத்தன், பேச்சு வாக்கில் நான் 10ம் வகுப்பு மார்க் எடுத்தது பற்றி சொல்லி கிண்டல் செய்தான்.

அவன் அதை ஜாலிக்காக செய்தாலும் பொதுவில் அப்படி கிண்டல் செய்ததை என்னால் தாங்கமுடியவில்லை பெண்ணே!
அப்போது நான் உன்னை ‘மஞ்சள் கலர் ஜிங்குசாண்’ என்று கிண்டல் செய்தபோது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. என்னை மன்னித்துக் கொள்’’என்றாள்.

அந்தப் பெண் கண்ணீர் மல்க இவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

பின் அங்கிருந்து பைக்கை எடுத்து ஆஃபிஸ் நோக்கி நிம்மதியாக வந்தாள்.
ஆஃபிஸ் வரும் வழியில் தந்தை தன்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது,
"ஒரு மனிதனுக்கு நீ கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவன் தன்மானத்தில் கைவைத்துவிட்டால் அவன் உன்னை எதிர்க்கவே செய்வான்"
புரிதலுடன் சிரித்துக் கொண்டாள்.

தன் தந்தையையும், அவர் சொன்ன அர்த்தத்தையும் நினைத்து பெருமையும் கொண்டாள்.
நீதி: எல்லாவற்றையும் விட தன்மானம் மனிதர்களுக்கு மிகவும் முக்கியம்.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டுமானால் தன்மானம் கிலோ என்ன விலையே தவிர, சாதாரணமான பொது ஜனங்களுக்கு தன்மானம் மிக முக்கியம்.

🙏#இந்த_நாள்_இனிய_நாள் ஆக அமைய வாழ்த்துக்கள்🙏
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to விஷ்வா I Viswa I
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!