அதில் மதவெறியோ , இந்துத்வாவோ இருப்பதாக கருதமுடியாது. அதன் வளர்ச்சியும் உறுதியும் வேறுமாதிரியானது
கவனித்தால் புரியும்
மோடி முதல்வராகி பிரதமாரனது அப்படித்தான், யாரென்றே தெரியாத அமித்ஷா கட்சி தலைவராகி அமைச்சரானது எல்லாம் அப்படித்தான்.
தமிழகத்தில் அதிமுக அடிக்கடி ஆட்சிக்கு வருவதும், திமுக சறுக்குவதும் இதனால்தான்
காங்கிரஸ் இன்று சுருங்கி போனதற்கு காரணம் கட்சி பெருச்சாளிகள் ஒழிததுவிட்ட ஜனநாயகம்
நிர்மலா சீத்தாராமன் போல புதுமுகங்கள் கூட பெரும் பதவி அடைய முடியும், வாஜ்பாய், மஹாஜன் போன்ற பிம்பங்கள் இல்லாவிட்டாலும் அவர்களால் நிற்க முடிவது இதனால்தான்
திறமையானவர்களுக்கு அங்கு வாய்ப்பு கதவுகள் திறக்கபடுகின்றன
ஒரு குடும்பத்து பிடியோ இல்லை குடும்ப அரசியலோ இல்லை இன்னும் பல மன்னர்கால கட்டுபாடுகளோ அங்கு இல்லை
பாஜகவில் உண்மையான ஜனநாயகம் இருக்கின்றது, அதை மற்ற கட்சிகள் பின்பற்றினால் நாட்டுக்கு நல்லது
அத்வாணியும் அண்ணாவும்
அத்வாணி கட்சியினை வளர்தாரே அன்றி குடும்பத்தை அல்ல, அண்ணாவும் அப்படியே
பாஜக இன்னும் அத்வாணி வழியில் நடக்கின்றது, அது வெற்றிகளை குவிக்கின்றது, அந்த வழி இருக்கும் வரை அது இன்னும் தொடரும்
அதுதான் விஷயம் அன்றி இந்துத்வா அல்ல..