நீதிக் கட்சியும், #அய்யா_பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான சுயமரியாதை இயக்கமும் #கட்டாய_இந்திக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை #இப்போதைய இளையதலைமுறை தம்பிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவர்களுக்கான #திரட் 🙏

👇👇👇
இந்திதிணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் - முதல் அத்தியாயம்
இந்தியா விடுதலை அடையும் முன்னரே 1937-இல் பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி என்ற சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு, நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் (6,7,8ஆம் வகுப்புகள்) இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கியது.👇
அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு விருப்ப மொழிப் பாடமாக இருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றுடன் இந்தி பயில்வதும் கட்டாயமானது..👇
மதராஸ் மாகாண காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் மொழியைப் படிக்க வேண்டும் என முதலமைச்சர் ராஜாஜி உறுதியாக இருந்தார்.👇
சுதந்திரம் அடையும் முன்னர் தேவனாகிரி எழுத்து வடிவில் எழுதப்படும் இந்தி 'இந்துஸ்தானி' என்ற பெயரிலேயே பரவலாக வழங்கப்பட்டது..👇
நவீன இந்தி, உருது ஆகிய மொழிகளை உள்ளடக்கிய பொது வடிவமாகவே இந்துஸ்தானி இருந்தது..👇
தேசப் பிரிவினைக்குப் பிறகு, வட இந்திய மொழியான கடிபோலியை அடிப்படையாகக் கொண்ட தேவனாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்துஸ்தானி 'இந்தி' என்றும்,..👇
அரபு மற்றும் பாரசீக மொழிச் சொற்களின் தாக்கம் அதிகம் கொண்ட, பாகிஸ்தான் பகுதிகளில் பரவலாக வழங்கப்பட்ட, தேவனாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்துஸ்தானி உருது என்றும் வழங்கப்படுகின்றன என்பது இந்தி எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்பில்லாத கூடுதல் தகவல்..👇
கட்டாய இந்திக்கு எதிராக நீதிக் கட்சியும், பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான சுயமரியாதை இயக்கமும் போராட்டத்தில் இறங்கின..🔥💪👇
1938 ஆகஸ்டு 1ஆம் தேதி 'தமிழர் படை' என்ற பெயரில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் உறையூரில் தொடங்கி தமிழகம் முழுதும் கிராம நகர வேறுபாடின்றி மாபெரும் பேரணியாகச் சென்று பட்டிதொட்டியெங்கும் 87 பொதுக்கூட்டங்களை நடத்தினர்..👇
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் குமாரசாமி பிள்ளை உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழுவினர், செப்டம்பர் 11, 1938 அன்று மதராஸ் (இன்றைய சென்னை) நகரில் இருந்த பிரிட்டிஷ் - இந்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை சென்றனர்..👇
இந்தத் தமிழர் படை #அய்யா_பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் #முஸ்லிம்_லீக் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..👇
தமிழகமெங்கும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட #நடராசன் மற்றும் #தாளமுத்து ஆகியோர் 1939இல் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தது..👇
போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.
இருவருமே சிறையில் நோய்வாய்ப்பட்டு, விடுதலைக்காக மன்னிப்பு கடிதம் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்தனர்..👇
அவர்கள் இருவரின் இறுதி ஊர்வலங்களிலும் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மொழிப்போர் தியாகிகளாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றனர்.👇
இரண்டாம் உலகப்போரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டமும் பிரிட்டிஷ் இந்தியா இரண்டாம் உலகப்போரில் பங்கேற்பதை எதிர்த்து நாடெங்கும் உள்ள காங்கிரஸ் மாகாண அரசுகள் நவம்பர் 1939இல் பதவி விலக வேண்டும் என்று அப்போது காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது..👇
இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோதே இந்தியா அதில் பங்கேற்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருந்தது..👇
அப்போதைய வைஸ்ராய் விக்டர் ஹோப் பிரிட்டிஷ் - இந்திய வீரர்களை இரண்டாம் உலகப்போரில் பங்கேற்க வைக்கும் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை இந்த பதவி விலகல் முடிவை எடுத்தது..👇
பாம்பே, பிகார், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், ஒரிசா ஆகிய மாகாண அரசுகள் 1939 அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆட்சியிலிருந்து விலகின.இந்தி பாடத்தைக் கட்டாயமாக்கிய ராஜாஜி தலைமையிலான மதராஸ் காங்கிரஸ் அரசும் அப்போது விலகியது..👇
அனைத்து மாகாணங்களும் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சியின்கீழ் வந்தன.
அதே ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நிறுத்திய #அய்யா_பெரியார் பள்ளிகளில் கட்டாய இந்தி என்ற ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினார்..👇
தீவிரமாக நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 21, 1940-இல் அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின், இந்தி கற்பதை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார்..👇
போராட்டத்தின் தாக்கம்
தமிழகத்தில் திராவிடக் கொள்கைகளைப் பரவலாக்கவும், மக்கள் ஆதரவைப் பெறவும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் அத்தியாயம் முக்கியப் பங்காற்றியது..👇
இந்தப் போராட்டம் நடந்து சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் இன்றுவரை தமிழகத்தை ஆட்சி செய்யும் #திராவிட_அரசியலை நிலைபெறச் செய்வதில் முக்கியப் பங்காற்றியது..👇
மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த காமராஜர் போன்ற தலைவரே தேர்தலில் தோற்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கியது அந்தப் போராட்டம்..👇
இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் 1948ஆம் ஆண்டு தொடங்கியது..👇
அதற்கு காரணம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசு பிறப்பித்த உத்தரவு.மதராஸ் மாகாணத்தில் தமிழ் பேசாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியன பேசப்படும் பகுதிகளில் இந்தி படிப்பது கட்டாயம் என்றும்..👇
தமிழ் பேசும் பகுதிகளில் இந்தி விருப்பப்பாடம் என்றும் தெரிவித்தது அந்த உத்தரவு.பின்னர் அதே உத்தரவு திருத்தப்பட்டு மதராஸ் மாகாணம் முழுமைக்கும் பள்ளிகளில் இந்தி படிப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது..👇
1948இல் #அய்யா_பெரியார் மீண்டும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது #அய்யா_பெரியார் #அண்ணாதுரை போன்றவர்கள் மீண்டும் கைதாகினர் ..👇
பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசு அளித்த உறுதிமொழியால் பெரியார் தலைமையிலான போராட்டம் கைவிடப்பட்டது..👇
கட்டாய மொழிப்பாடமாக இருந்த இந்தி, பள்ளிகளில் விருப்பப்பாடமாக அறிவிக்கப்பட்டது..👇
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் 1964இல் தொடங்கியது..👇
இந்தப் போராட்டங்கள் நடந்தபோது இந்தியா விடுதலை பெற்றிருந்தது மட்டுமல்லாது, மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டிருந்தது..👇
மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் முந்தைய மதராஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இணைக்கப்பட்டிருந்தன..👇
#அய்யா_பெரியார் தலைமையில் நடந்த முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது #திராவிட_இயக்கத்தின் வளரும் தலைவராக இருந்த #அண்ணா அவர்கள் இந்த இராண்டாம் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியாகவே இருந்து செயல்பட்டார் என்று கூறலாம்..👇
இத்தகைய போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தி பேசாத பிற மாநிலங்களான பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகியவற்றிலும் நடந்தன..👇
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபின் முதல் 15 ஆண்டுகள் மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது..👇
அதன் பின்னர் இந்தி மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக இந்தியா முழுதும் இருக்கும் என்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..👇
அதாவது ஜனவரி 26, 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும்.
கெடு நெருங்க நெருங்க இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது..👇
இந்தி பேசாத மாநிலங்களில் இதற்குக் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு தலைமையிலான நடுவண் அரசால் 1963ஆம் ஆண்டு 'அலுவல் மொழிகள் சட்டம்' கொண்டுவரப்பட்டது..👇
அதில் பிரிவு மூன்றில், 15 ஆண்டுகள் கெடு முடிந்தபின்னும் இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாகத் 'தொடரலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது..👇
அதாவது, சட்ட வரைவில் "Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used in addition to Hindi" என்று குறிப்பிடப்பட்டிருந்தது..👇
அதை "the English language shall" என்று மாற்ற வேண்டும் என்று அப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா நாடாளுமன்றத்தில் வாதிட்டார்..👇
“may" மற்றும் "shall" ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என்பதால் சட்ட வரைவில் திருத்தம் தேவையில்லை என்று வாதிட்டார் பிரதமர் நேரு..👇
15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று வாக்குறுதி அளித்தார் நேரு..👇
1965ஆம் ஆண்டு குடியரசு நாள் நெருங்க நெருங்க போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாகின. ஜனவரி 26 துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார் #அண்ணா..👇
அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் குடியரசு தினத்தன்று துக்க தினம் அனுசரிக்கும் போராட்டக்கார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்..👇
மாநிலம் முழுதும் உள்ள மாணவர்கள் ஒரு நாள் முன்கூட்டியே துக்க தினம் அனுசரிக்க முடிவு செய்தனர்##.👇
ஜனவரி 25, 1965 அன்று துக்க தின அனுசரிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக மதுரை திலகர் திடலில் இந்தியை ஒற்றை ஆட்சி மொழியாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17ஐ எரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது..👇
இளைஞர்களின் ஊர்வலம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்திருந்த வடக்கு மாசி வீதி வழியாகச் சென்றபோது போராட்டக்காரர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது..👇
இந்த மோதலில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர் காயமடைகின்றனர். குடியரசு நாள் கொண்டாட காங்கிரஸ்காரர்கள் செய்துவைத்திருந்த அலங்காரங்களுக்கு தீ வைக்கப்படுகிறது..👇
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் வரவழைக்கப்படுகிறது. மாநிலம் முழுதும் நடந்த போராட்டங்களில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் என்று பல தரவுகள் தெரிவிக்கின்றன.👇
இந்தப் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு சொந்த மக்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்வதை எதிர்த்து ..👇
தமிழகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்கள் ஓ.வி.அழகேசன் மற்றும் சி. சுப்பிரமணியம் ஆகியோர் பிப்ரவரி 11, 1965 அன்று பதவி விலகுகின்றனர்..👇
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாடாளுமன்றத்தில் நேரு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று, அன்று மாலையே அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்..👇
இந்த அறிவிப்பு போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த உதவியது..👇
பின்னர் 1967இல், இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்கும் வகையில் அலுவல் மொழிகள் சட்டப் பிரிவு - 3 திருத்தப்பட்டது.
இந்தப் போராட்டங்களால் அண்ணாதுரை தலைமையிலான திமுக பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது..👇
அதை அடுத்து 1967இல் நடந்த மதராஸ் மாகாண சட்டமன்றத்துக்கான தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றன.💪💪💪💪 👇
மக்கள் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் காமராசர் தன் வாழ்நாளில் தோல்வியடைந்த ஒரே தேர்தலாக அந்தத் தேர்தல் இருந்தது..👇
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to அன்புடன் பாலு 
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!