தமிழ் நாட்டில் தமிழர் #திருட்டுதிராவிடம் த்திற்கு கட்டுண்டு கிடப்பதற்கு முக்கிய காரணம் #ஈவெரா_எனும்_போலிவிம்பம் ஆகும். திராவிடர்கள் தமக்கிருந்த ஊடக வலிமையால் இந்த விம்பத்தை நன்கு திட்டமிட்ட முறையில் கட்டமைத்திருக்கிறார்கள். உண்மையில் ஈ வெ ரா எனும் போலி கட்டமைப்பு பற்றி இந்த
இழையில் காணலாம்!

#ஈவெரா_எனும்_போலிவிம்பம்
ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------

"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்

30.7.1886
முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...

1.சத்திய மூர்த்தி ஐயர்
2.ஈ.வெ.ராமசாமி
-------
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர்.
இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் என்று கூறப்படுபவர் சத்திய மூர்த்தி ஐயர்.

இவர் "இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது" என்று சொன்னதாகவும்,
அதற்குப் பதிலடியாக முத்துலெட்சுமி அம்மையார்
"உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன்" என்று கூறி அவரின் வாயடைத்தார் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

குறிப்பாக, ஈ.வெ.ராமசாமிதான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது பற்றி ஆராய்வோம்!
முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார்.
அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது.

அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை,
(ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்று மட்டும் குறித்துள்ளார் ).

அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் எழுதி தொடர்ந்து குரல் கொடுத்ததாக கூறப்படும் ஈ.வெ.ரா. குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
---------
ஆம்.
முதலில் அவரைத் தூண்டியதாக அவர் கூறும் இருவரும் பார்ப்பனர்!

லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும்,
பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் செயல்படத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
--------
அவர் வழிகாட்டியாக சுட்டுவது காந்தியை!

அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும்,
அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.
பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார்.
'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
--------

முன்னோடிகளாக அவர் சுட்டியோர் திராவிடவாதிகள் அல்லர்!
1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரையே குறிப்பிட்டு பேசுகிறார்.
-------
ஈ.வே.ரா பற்றி பத்தோடு பதினொன்றாக கூட குறிப்பிடவில்லை!

திராவிடவாதிகளில் நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை ஓரிடத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு திராவிடவாதியான நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முத்துலெட்சுமி அம்மையார் தமது
மசோதாவை தாமதப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான் தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார்.
1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

ஒருவேளை யாரையும் விமர்சிக்க மனமில்லாமல் சத்தியமூர்த்தி ஐயரை விட்டிருக்கலாமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.
அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி.
1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.
பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

ஈ.வெ.ரா எந்த இடத்திலும் அம்மையாரின் நினைவுக்கு வரவில்லை.
என்றால் ஈ.வெ.ரா குரல்கொடுக்கவே இல்லையா?!
அல்லது முத்துலட்சுமி அம்மையார் குறிப்பிடும் அளவுக்கு அது வலுவாக இல்லையா?!

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.
"பெரியாரின் ஆலோசனையின்படியே, சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேள்விகள் கேட்டார்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!
(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)

தகவல்களுக்கு நன்றி:-
Tamilthesiyan.wordpress.com
#ஈவெரா_எனும்_போலிவிம்பம் த்தில் அடுத்து பார்க்க இருப்பது ஈ வெ ரா தனது ஊடகத்தில் எழுதிய "முதலியார் எதிர்ப்பு இயக்கம்" பற்றியது!

சாதியை ஒழிக்கப்போகிறேன் என்று புறப்பட்ட அவர் ஏன் ஒரு சாதியை மட்டும் ஒழிக்க தனது செய்தித்தாளில் கட்டுரை எழுதினார்?

உண்மையில் அவர் சாதியை ஒழிக்க
புறப்பட்டவர்தானா?

அவரை கோபம் கொள்ளச்செய்த அந்த முதலியார்(கள்) யார்?

அவர்தான் தமிழ் நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம்.

விவசாய துறையில் இயக்குனராகயிருந்து ஒருவர் ஓய்வுக்கு செல்கிறார் அந்த இடத்திற்கு பிராமணர் அல்லாத ஒருவரை நியமிக்க கோரி ஒருவரை பரிந்துரை செய்கிறார் ஈவெரா!
ஆனால் முதலமைச்சரோ நியமித்தது கிட்ணமூர்த்தி எனும் தனது சாதிக்காரரை!

இதனால் முதலியார் வகுப்பை சேர்ந்த பக்தவச்சலத்திடம் தனக்கு செல்வாக்கு இல்லை என்று வெகுண்டெழுந்த ஈவெரா முதலியார்களை ஒழிக்க புறப்பட்டார்.

இதுபோலத்தான் 1950களின் இறுதி பகுதியில் தமிழ் நாட்டின் பல அரச அதிகாரிகளாக
மலையாளிகள் இருப்பதாக பட்டியல் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார் அவர். இந்த நிலை தொடர்ந்தால் "மலையாளிகள் எதிர்ப்பு இயக்கம்" தொடங்குவேன் என்று எச்சரித்தார். பின்னர் முன்னாள் முதல்வர் மருதூர் கோபால ராமச்சந்திரன் ஈ வெ ரா வை சந்தித்து அமைதியடைய செய்தார்.
இதுபோலத்தான் ஈ வெ ரா வின் பிராமண எதிர்ப்பு கோட்பாடும் மலர்ந்திருக்கும் என்ற ஐயம் வருவது இயல்பு!

காரணம் அவர் பேராய கட்சியில் இருக்கும்போது புண்ணியம் தேடி காசிக்கு யாத்திரை செய்தார். அங்கே அன்னதான பந்தியில் ஈ வெ ரா பிராமணர் அல்லாதவர் என்ற காரணத்தினால் மிகுந்த அவமானப்படுத்தப்பட்டு
வெளியேற்றப்பட்டார்.

இந்த அவமானம் தாங்கமுடியாமல் தான் பிராமணர் எதிர்ப்புக்கு இயக்கம் ஆரம்பித்தார் என்று எண்ண அவருடைய பிற்கால செயற்பாடுகள் ஏதுக்களாக அமைகின்றன.

எனவே இவரது இதுபோன்ற எதிர்ப்பு இயக்கங்கள் பொதுநலம் சார்ந்து இருப்பதாக தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் ஒருரிருவரால் பாதிக்கப்படும் போது உண்டாகும் கோபத்தை மொத்த சமூகத்தின் மீதும் காட்டும் மனப்பிறழ்வு கொண்டவராகவே கடைசிவரை வாழ்ந்தார்.

ஆனால் இவரது இதுபோன்ற செயற்பாடுகளை, அவர் முன்னுக்கு பின் முரணாக சொன்ன கருத்துக்களையெல்லாம் மொத்தமாக ஒரு கொள்கை என்ற அளவில்
கட்டமைத்து அதை தமிழர் தலைமேல் கட்டி தமிழர் அல்லாதோர் அரசியல், பதவி , பொருளாதார சுகங்களை அனுபவித்துவருகின்றனர். மேலும் அவ்வப்போது தமிழர் உண்மையறிந்து மேலெழ முயன்றால் அவர்களை சாதிய வட்டத்திற்குள் அடைத்துவிடும் அரசியல் திறன் இருக்கிறது தமிழரை ஆளும் தமிழர் அல்லாதோருக்கு.
@threadreaderapp
unroll pls
#ஈவெரா_எனும்_போலிவிம்பம்

தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்ட பெரியார் - கவிஞர் கலைக்களஞ்சியம்

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க

#StopHindiImperialism
இலவசமாக இடம் கொடுத்தார். "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல் "இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு
விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வெ.ரா. 1925-க்குப் பிறகு பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல் கட்டமாக அவரால்
வித்திட்ட ஹிந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

"சித்திர புத்திரன்" என்ற புனைப்பெயரில் பெரியார் ஈ.வெ.ரா. 07.03.1926-ல் தனது 'குடியரசு' இதழில், 'தமிழுக்கு துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்' என்ற தலைப்பில்:

"ஹிந்திக்காக செலவாயிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதவருடையது
என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் மொத்தத் தொகையில் 100-க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதவராயிருந்தும��
100-க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படிப்பவர்களில் 100-க்கு 97
பேர்களாயுள்ளனர். பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

ஆனால், இந்திக்கு எடுத்துக் கொள்வதைப்போல 100-க்கு ஒரு பங்கு கவலை கூட தமிழ் மொழிக்கு எடுத்துக்
கொள்வது இல்லை என்பதையும் இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப் பற்றி வருந்தாமலும், இமாதிரி பார்ப்பனர்களுக்கு மட்டும் பலன் தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமல்
இருக்க முடியவில்லை.

ஹிந்தியைப் பொது மொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்குப் பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாய பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை
நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்ய கற்பித்துத் தரும் ஒரு வித்தையாகி விட்டது. இந்த ரகசியத்தை நமது நாட்டு பாமர மக்கள் அறிவதே இல்லை.
இரண்டொருவருக்கு இதன் இரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப் பாடுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களை தேசத்துரோகி என்று சொல்லி விடுவார்கள்" என்று ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் 'சித்திர புத்திரன்' என்ற புனைப்பெயரில் அக்கட்டுரையை எழுதவேண்டிய அவசியம்தான் என்ன? பெரியார்
ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைப்பெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வெ.ரா.தான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வெ.ரா.வைப் பார்த்து "நீ தானே தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்டாய்"
என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்கு பயந்தே அவர் அவ்வாறு செய்தார்.

1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க அதை நீதிக்கட்சியினர் எதிர்த்தபோது நீதிக் கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வெ.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது?
மூன்றாம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு
தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் திடீர் என்று அவரது 47-வது வயதில் பாசமும், பற்றும் பீரிட்டு வரக்காரணம்தான் என்ன?

அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். தமிழர்கள் மீதும், தமிழ் மொழிமீதும் பற்றுடையவர்போல்
நடந்துக் கொண்டுவந்த பெரியார் ஈ.வெ.ரா. நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். 1.6.1954-ல் வெளியான 'விடுதலை' இதழில் பெரியார் ஈ.வெ.ரா. "நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்? என்று என்னைக் கூடக் கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா,
என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்" என்கிறார்.

"தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி அது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் ஒழி; பழமையின் மொழி; உலகத்திலேயே
சிறந்த மொழி என்று சொல்லபடுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை" என்றும், "எனது ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல" என்றும், "என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை" என்றும் அவர் பலமேடைகளில் பேசியும்,
கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் 'தந்தை பெரியார் சிந்தனைகள்' என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ்ப் புலவர்களைப் பற்றியும், தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும் பெரியார் ஈ.வெ.ரா:
(1) தமிழ் புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியில் ஒரு பயனும் ஏற்பட முடியாதபடி செய்து விட்டார்கள்.

(2) நம் நாட்டில் எனக்கு தெரிந்தவரையில் தமிழ் நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை
3) மக்களுக்கு அறிவு வரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காய புலவனும் இல்லை.

(4) தமிழ் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்தது போல் வேறு எந்த மொழியையும் அந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்ததில்லை.

(5) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாள வேண்டிய மொழியாகும். நாகரீகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள
மொழி என்று கூறுவதற்கில்லை.

(6) தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதேயழிய, அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை. அதுமாத்திரமே அல்லாமல் எவ்வளவுக் கெவ்வளவு தமிழ் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகின்றதே
தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதே இல்லை.

(7) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது. தமிழ் படித்துவிட்டால் பின்பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப் புலவனும், மேதையும் தமிழைப் படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆகிவிடுகின்றான்.
(8) "தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் - நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுப் போன்று தலை தூக்க முடியாமல் செய்து வருகின்றன" என்கிறார்.

#ஈவெரா_எனும்_போலிவிம்பம் தொடரும்....
@threadreaderapp

unroll pls
த்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேர்க்கை, திரிகடுகம், திருக்குறள், நாலடியார் இவைகள் எல்லாம் நன்னெறி இலக்கியங்கள் என்பது கூட பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்குத் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கது. "தமிழ் படித்தால் அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை.
தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது" என்று கூறும் பெரியார் ஈ.வெ.ரா. தன் தாய்மொழியான கன்னடத்திலா படித்தார்? தமிழில்தானே படித்தார்.

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல்
"விடுதலை" இதழின் தலையங்கத்தில் "இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் "கொண்டிருக்கிறார்கள்" என்றும்,
"தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள் என்றும், காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று
பலமாகச் சொல்வேன்" என்றும், 8.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை. தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது
என்பது உறுதி" என்றும் அவரது கையப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.

9.3.1965-ல் "விடுதலை" இதழில் பெரியார் ஈ.வெ.ரா. "ஆட்சி மொழியாக 1965 ஜனவரி 26 முதல் இந்திதான் இருக்க வேண்டும் என்ற பிரிவையும், அதற்குள்ளே (இந்திய அரசியல் சட்டம் 343-க்குள்ளே)
நுழைத்தவர்கள் இந்த அக்கிரகாரத் திருமேனிகள் (டாக்டர் இராஜேந்திரபிரசாத், பண்டிதர் ஜவகர்லால் நேரு) என்பது மறுக்க முடியாத உண்மையாகும்" என்று ஒரு உண்மையான செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967-ல்
நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது.

"என் தலைவர் காமராஜ், என் வழிகாட்டி அண்ணா" என்று 1965-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 'தலைவர்' எனப்பட்ட காமராஜர் 1967ல் நடந்த
தேர்தலில் நின்று அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் P.சீனிவாசன் என்பவரிடம் தோற்றார்.

காங்கிரஸ்சின் படுதோல்வியாலே தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீட்சிக்கு
அன்றைய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மட்டும்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
1967-ல் நடந்த தேர்தலின் போது பெரியார் ஈ.வெ.ரா. ஆதரித்து வந்த காங்கிரஸ்சும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா. 1.10.1967-ல் 'விடுதலை'
இதழில் "தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கின்றார்கள் என்று யாராவது காட்ட முடியுமா?" என்று வெளியிட்டுள்ளார்.
அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரி விட்டார் என்பதுதான்.

பெரியார் ஈ.வெ.ரா. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது ஆற்றிய சொற்பொழிவில் அவர் "பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் முயற்சியாலேயே
1919, 1920-ம் வருடங்களில் நடந்த கிளர்ச்சிகளால் எங்கள் நாட்டிலே ஏன் தெலுங்கு, கன்னடம், மலையாள நாட்டிலே வீதியில் நடக்கிற உரிமை வந்துவிட்டது. இப்படி வீதியில் எல்லோரும் நடக்கலாம். எல்லா ரோடுகளிலும் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையை அப்போது அதிகாரத்தின் மூலம் அமுலுக்குக்
கொண்டுவந்து விட்டார்கள்.

பார்ப்பனர்கள் தண்ணீர் மொண்டு உபயோகப்படுத்துகிற குளத்திலேயும், கிணற்றிலேயும் மற்ற தாழ்ந்த சாதிக்காரர்கள் எனப்படுகிற நாமும் தண்ணீரை எடுக்கலாம், உபயோகப்படுத்தலாம் என்று அப்போது ஜஸ்டிஸ் கட்சியினர் சட்டம் செய்தார்கள். இதெல்லாம் காந்திக்கு முன்பே நடந்த
காரியங்களாகும். காங்கிரசும், காந்தியும் வந்துதான் இந்த காரியங்கள் நடந்தன என்பதெல்லாம் புரட்டும் பித்தலாட்டமுமாகும்.

அது மாத்திரமல்ல எல்லா சாதிக்காரனும் பஞ்சாயத்து போர்டிற்கும், முனிசிபாலிட்டிக்கும், தாலுகா, ஜில்லா போர்டுகளுக்கும், சட்டசபைக்கும் போகலாம் - நியமிக்க வேண்டும்
என்ற திட்டம்கூட காந்தி வருவதற்கு முன்பே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் செய்துவிட்டனர். பார்ப்பானும் சட்டசபைக்குள் நுழையலாம், ப**யனும் போகலான் என்பதெல்லாம் காந்தியால் ஆன காரியம் அல்ல. அதற்கு முன்பே ப**யர், ச**லிகள், ப**ர்கள் என்பவர்கள் சட்டசபையில் இருந்தார்கள் என்பதை நீங்கள்
நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குளத்திலேயும், கிணற்றிலேயும் பார்ப்பானும், ப**யனும், சூ**ரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது. கோயிலுக்குள் போகக் கூடாது, மேல்ஜாதிக்காரனுக்குத் தனிக்குளம், தனிக்கிணறு, தனிக்கோவில் - மற்ற சாதிக்காரனுக்குத் தனிக்குளம், கிணறு, கோவில்கள்
கட்டித்தர வேண்டும் என்பதுதான் காந்தியின் திட்டம் என்பது எனக்குத் தெரியும். யாராவது இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா இன்றைக்குச் சொல்லுவார்கள் காந்திமகான் காட்டிய வழி - மகாத்மாவின் சேவை என்றெல்லாம். இது வெறும் புரட்டு.

நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குக்
காரியதரிசியாக, தலைவனாக இருந்தபோதுதான் ரூ.48,000 (நாற்பத்தெட்டாயிரம் ரூபாய்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு கிராண்ட் அனுப்பினார்கள். எதற்கு? ப**யன், ச**லி, ப**னுக்கு வேறு பள்ளிக்கூடம், ப**யனுக்கு வேறு கோவில் கட்டிக் கொடு; ஏனெனில் அவர்கள் மேல் சாதிக்காரர்களுக்கு என்று இருக்கும்
பள்ளிக்கூடங்கள், கோயில்களுக்குப் போய் இரகளை செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால் அந்தக் காலத்திலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்டம் செய்து விட்டார்கள் - ஒன்றாகப் படிக்க வேண்டும். படிக்கிறதிலே சாதி வித்தியாசம் காட்டக் கூடாது என்று. இன்றுங்கூட அந்தச் சட்டப்படி எல்லாப்
பள்ளிக்கூடத்திலும் அமுல் நடக்கிறது. ப**மர்கள் எனப்படும் ப**யர்கள் சாதிகளிலிருந்து மாணவர்களைச் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் சர்காரின் கிராண்ட் அவைகளுக்குக் கிடைக்காது என திட்டம் செய்து விட்டார்கள்.

கல்வி இன்ஸ்பெக்டர் வரும்போது 'கீழ்சாதிப் பையன்கள் இல்லையா?'
என்பார். 'இல்லை, யாரும் வரவில்லை' என்றால் 'இல்லாவிட்டால் போய் அழைத்துக் கொண்டுவா" என்பார். நான் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே திரு.ராஜகோபாலாச்சாரியார் என்னிடம் வந்து சமுதாய சீர்திருத்தம்தான் நமக்கு வேண்டும்; அது காந்தியால்தான் முடியும் என்று சொல்லி என்னை
காந்தி சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் பதவியை இராஜினாமாக் கொடுத்து வெளியேறி காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். நான் காங்கிரஸ் சென்றபிறகு தமிழன் ஒருவனுக்கு அதுவரை கிடைக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலர் - தலைவர் இடத்தில் என்னை உட்கார வைத்தார்கள்.

ஏனென்றால், திரு.வி.க.
சாதாரண ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து வந்தவர். டாக்டர் வரதராஜலு அவர்கள் 'பிரபஞ்ச மித்திரன்' வாரப் பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்பமாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றிவிடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ.சிதம்பரனார் ஒருவர். அவர்
பாவம் எல்லாவற்றையும் விட்டு நொடிந்து போய் கஸ்தூரிரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். நானோ சிறிது வசதி உள்ளவன். பெரிய வியாபாரி - பல பதவிகளை விட்டு வந்தவன் என்ற முறையில் ராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்வைப்பார். உண்மையாகவே நானும் அதை
நம்பி மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நானும், என்னுடைய ஆட்களும் மேடைதேடிக் கொடுத்துவிட்டோம்" என்று பேசி வந்தார்.
பெரியார் ஈ.வெ.ரா.வின் பேச்சுக்களையும், செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ்மொழி மீதும் வைத்திருந்த
பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், ஹிந்தியை அவர் உள்உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் ஹிந்தியை அவர் எதிர்க்கக் காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது.
நன்றி: புதிய கோடாங்கி (மாத இதழ்) - ஏப்ரல் 2003 இதழ் - எண் 705, 101-ஆவது தெரு, 15-ஆவது செக்டர், கே.கே.நகர், சென்னை 600 078

#ஈவெரா_எனும்_போலிவிம்பம் தொடரும்....
இன்று அண்ணாத்துரை பிறந்தநாளை ஒட்டி,

சிறப்பு பிறந்த நாள் #ஈவெரா_எனும்_போலிவிம்பம்

தாத்தா கட்ட இருந்த தாலி! - அறிஞர் அண்ணா

72 வயதில் 26 வயதுப் பெண்ணை 2வது தடவையாக மணந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்என்ன புரட்சியாளரா?

பெரியார் = போலித் தத்துவக் குப்பை
#அண்ணா111 #HBDAnna111
ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய(பெரியார்) இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர்,
திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான்
தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)

“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அறிஞர் அண்ணா 1940-ல் விடுதலையில் இவ்வாறு எழுதுகிறார்:

“தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான
ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72 ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை
வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினும், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற
அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

இந்தச் சமயத்தில்தான் ராஜாஜியைப் பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி, பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு
காலத்தில் காங்கிரஸில் ஒன்றாகச் செயல்பட்டவர்கள். இன்னமும் நண்பர்கள் தான் என்று வேறு சொல்லப்பட்டது. சொல்லப்பட்டது என்றாலும், ஈ.வே.ரா மேடையேறினால் ராஜாஜி தன் நண்பர் என்ற சிந்தனையே அவருக்கு இராது. அவர் ஒரு பிராமணர் என்பதும் காங்கிரஸ் தலைவர் என்பதும் தான் முன் வந்து நிற்கும்; அவர்
பேச்சின் தோரணையையும் தாக்குதலையும் தீர்மானிக்கும். இருப்பினும், 'என் நண்பரே ஆனாலும், ராஜாஜி ஒரு பிராமணர் ஆதலால் பிராமணருக்குச் சாதகமாகத்தானே அவர் சிந்திப்பார், நமக்கு சாதகமாகவா அவர் எண்ணங்கள் இருக்கும்?' என்றும் அடிக்கடி சொல்வார் மேடைகளிலும் எழுத்திலும்.

இருப்பினும் அவர்
ராஜாஜியைச் சந்தித்துப் பேசுகிறார், திருவண்ணாமலையில் என்பதும் அதுவும் திடீரென நிகழ்ந்த சந்திப்பு என்பதும் அதுவரையும் அந்த மாதிரியான சந்திப்பிற்கான பிரமேயம் ஏதும் இல்லாமல் அது ரகசியமாகவே நிகழ்ந்தது என்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கழகத்தைச் சேர்ந்த தலைவர்கள்
அனேகமாக அனைவருக்குமே அது அதிர்ச்சியைத் தந்தது. எதிரும் புதிருமான இந்த இரு தலைவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சந்திப்பார்கள் என்பதைத் திராவிட கழகத்தவர் எவரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். எனவே, பின்னர் இதை அடுத்து நடந்த ஒரு மகாநாட்டில், அண்ணாதுரை, பெரியாரிடம், 'உங்கள்
இருவரிடையே என்ன பேச்சு நடந்தது என்று சொல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்குப் பெரியார், 'நாங்கள் அரசியல் பேசவில்லை, என் சொந்த விஷயமாகத்தான் பேசிக்கொண்டோம். அதை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று சொல்லித் தட்டிக் கழித்ததாகவும் செய்திகள் வந்தன. அண்ணாதுரை
ஏதோ ஒரு அன்னியரைக் கேட்பது போல பொது மேடையில் கேட்க நேர்ந்ததும், அதற்குப் பெரியார் சொன்ன பதிலும், ஒரு கட்சியின் பெரிய தலைவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பேச்சாகத் தோன்றவில்லை. இருவருக்கும் இடையே நெடு நாட்களாக ஏதோ தமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத உரசலும் புகைச்சலும்
இருப்பதைத்தான் காட்டுவதாகவும் விமரிசனங்கள் வந்தன. படிப்பகங்களிலும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். இதில் கட்சி பிரிந்து காரசாரமாக வாதங்கள் நடந்ததையும் கழகப் படிப்பகங்களில் கழகப் பத்திரிகைகளிலும் மற்ற செய்திப் பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன்.
இவற்றைத் தொடர்ந்து தான் ஈ.வே.ரா - ராஜாஜி சந்திப்பும் அதைத் தொடர்ந்த பரபரப்பான பல சம்பவங்களும். 'அது என் சொந்த விஷயம்' என்று சொல்லித் தட்டிக் கழித்த போதிலும், அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே, பெரியார் - மணி அம்மை திருமணம் பற்றிய செய்தி வந்தது. இது ஒரு பெரும் புயலையே
கிளப்பிவிட்டது. பெரியாருக்கு அப்போது வயது எழுபதுக்கு மேல். மணியம்மைக்கு வயது 26 என்று சொல்லப்பட்டது. வெகு வருடங்களாக, வயதான தலைவருக்கு மகள் போல, பேத்தி போல உதவ வந்த பெண்ணைத் தாத்தா கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கிளம்பினார் என்றால்..... எல்லாக் கழகப் பத்திரிகைகளிலும்,
விடுதலை தவிர மற்றவற்றில், இது பெரிய சர்ச்சைக்கான விஷயமாகியிருந்தது. பொருந்தாத் திருமணம் என்றும், இதுகாறும் பெரியாரும் திராவிட கழகமும் பேசி வந்த கொள்கைகளுக்கு விரோதமான ஒரு செயல் என்றும் அத்தகைய செயலைப் பெரியாரே செய்துவிட்டு அது தன் சொந்த விஷயம் என்றும் க
ட்சிக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் சொன்னது கழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"எனக்கும் என் சொத்துகளுக்கும் ஒரு வாரிசாக, என்னுடன் கடந்த பல வருடங்களாகப் பழகி என் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைச் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாடு இது. என் நலத்திலும்
இயக்கத்திலும் உண்மையான பற்றும் கவலையும் நம்பிக்கையும் கொண்டுள்ள, பல வருடங்களாக என்னுடன் இருந்து என் நம்பிக்கையைப் பெற்றுள்ள மணி அம்மையை வாரிசாக ஆக்கிக்கொள்வதற்குத் தான் இந்த ஏற்பாடு" என்று இப்படி ஏதோ பெரியார் விளக்கம் தந்துகொண்டிருந்தார். ஆக, அன்று வரை அவருக்கு அடுத்த
ஸ்தானத்தில் இருந்த அண்ணாத்துரை மட்டுமல்ல, அவர் கட்சி ஆரம்பத்திலிருந்து அன்று வரை அவருடன் கட்சியில் உழைத்த யாருமே அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரராகவில்லை; அவர் நம்பிக்கை வைத்து கட்சியையும் சொத்தையும் உரிமையாக்கப் போவது அவருக்கு உதவி செய்ய வந்த 26 வயது மணி அம்மையை என்பது
'இதுகாறும் நம்மை நம்பாத ஒரு தலைவரின் கீழா கட்சிக்காக உழைத்தோம்' என்று அனைவரையும் அதிர வைத்தது.

அண்ணாதுரை தன் திராவிட நாடு இதழில் தம் தலைவரின் திடீர் கொள்கை மாற்றத்தையும், இத்தனை வருடங்கள் தன்னுடன் கட்சியில் இருந்த எவரிடமும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு தலைவர் சொல்வதைக்
கேட்டு கண்களில் கண்ணீர் மல்குவதாகவும், தலைவர் தம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதாகவும் எழுதினார். உடனே பெரியார் தனக்கு எதிராகக் கிளம்பிய அத்தனை பேரையும் கண்ணீர்த்துளிகள் என்று விடுதலையில் கிண்டலும் வசையுமாக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னோடு பல
வருஷங்களாக கட்சிப் பணி புரிந்த அத்தனை பேரையும், பெயர் சொல்லக்கூட விருப்பம் இல்லாத வெறுப்பில், வருஷக் கணக்கில் 'கண்ணீர்த்துளிகள்' என்று சொல்வதையே விடாப்பிடியாகக் கொண்டிருந்தார்.

அண்ணாதுரையோ, பெரியாரின் அவ்வளவு கேலியும் பகைமையும் நிறைந்த 20 வருட தொடர்ந்த
பிரசாரத்திற்கும் பதிலாக ஒரு முறைகூட, கோபத்துடனோ, வெறுப்புடனோ பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை. அண்ணாதுரையின் மீது கொண்ட என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. அது வரை அவரது பேச்சையும் எழுத்தையும் கண்ட வியப்பு, இப்போது அவரது குணத்தைக் கண்ட மதிப்பாக வளர்ந்தது.

கடைசியாக
கும்பகோண வாழ்க்கையில் இன்னொரு புதிய சேர்க்கையையும் சொல்ல வேண்டும். மணல் வீடு என்ற சிறுகதைத் தொகுப்பு, சி.சு.செல்லப்பா என்பவர் எழுதியது, ஒன்று கிடைத்தது. அது எப்படி, யாரிடமிருந்து கிடைத்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அந்தக் கால கட்டத்தில் செல்லப்பாவை எனக்கு
அறிமுகப்படுத்தியிருக்கக் கூடியவர்கள் என்று யாரையும் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. அப்போது படித்து வெகு நாட்களுக்கு நினைவில் பதிந்துவிட்ட அத்தொகுப்பில் இருந்த ஒரு கதை இங்கே.

தாசில்தார் குடும்பம் ஒன்று. அவர்களுக்கு வெகு நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு ஜோஸ்யர்
வழி சொல்கிறார். கன்றோடு ஒரு பசு மாட்டைத் தானம் கொடுத்தால் வழி பிறக்கும் என்று. தாசில்தார் அந்த நினைவிலேயே இருக்கும்போது, தாசில்தாரின் மனைவி, அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையிடம் பசுவுக்கும் கன்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பின் தடை ஏது?
மாடும் கன்றும் தாசில்தார் வீட்டுக்கு வந்து சேர, அதிக நாள் பிடிக்கவில்லை. கோதானம் விமரிசையாக நடந்துவிடுகிறது. மாதங்கள் கழிகின்றன. தாசில்தார் குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விசேஷச் செய்தி ஒன்றும் வருவதாக இல்லை. ஒரு நாள் கணக்கப் பிள்ளை ஒரு தட்டில் பழம் பாக்கு, வெற்றிலை,
பணம் சகிதம் தாசில்தார் தம்பதியரை முகத்தில் சந்தோஷம் வழிய நமஸ்காரம் பண்ணி 'பெரியவாள் ஆசீர்வாதம் செய்யணும், ரொம்ப நாளாக இல்லாத புத்திர பாக்கியம் கிடைச்சுடுத்து எனக்கு,' என்கிறார்.

இதற்குப் பின் ஒன்றிரண்டு வருடங்களில், புர்லா(ஓரிஸ்ஸா)வில் இருக்கும்போது,
கலைமகள் பிரசுரமாக சி.சு.செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு 'சரசாவின் பொம்மை' (விலை ரூபாய் இரண்டு) என்று பார்த்த போது, "அட, இவர் அந்த மணல் வீடு செல்லப்பா அல்லவா?" என்ற வியப்புடன் அதிலிருந்து செல்லப்பாவை ஆவலுடன் படிக்கத் தொடங்குகிறேன்.

இதற்கெல்லாம் இடையில் பள்ளிக்கூடம், பாடங்கள்,
பரிட்சை என்றெல்லாம் இருக்கின்றனவே. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, பள்ளிக்கூடம் போவதும் வருவதும் அவ்வளவு தொல்லை தருவதாக இருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. சுந்தரம் பிள்ளை பற்றி முன்னரே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவருடைய சரித்திர வகுப்புகள் தான் எனக்கு மிக சுவாரஸ்யமானவையாக
இருந்தன. அடுத்து, ஆறு பெண்களும், என்னையும் சேர்த்து மூன்று பையன்களுமாக இருந்த ஹிந்தி வகுப்புகள். குறைந்த பேர்களைக் கொண்டிருந்ததாலும் ஹிந்தி ஆசிரியர் என்ற தன் ஆளுமையை எங்களுக்கு பூதாகாரமாக ஆக்கிக் காட்டாத காரணத்தாலும், ஹிந்தி வகுப்புகள் வெகு சகஜ பாவத்திலேயே நடந்ததாலும் ஹிந்தி
வகுப்புகள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. சுவாரஸ்யத்துக்கு மற்றொரு காரணம், ஆறு பெண்களும் தங்களுக்குள் எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் இருப்பதைப் பொருட்படுத்தியவர்கள் இல்லை. அவர்கள் அரட்டையை ஏதோ அப்பாவிகள் போல நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். ஹிந்தியில்
அவர்கள் எல்லோருமே மிகத் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

மற்றபடி வேறு எந்த வகுப்பும் எனக்குப் பிடித்தமாக இருந்ததில்லை. வகுப்பில் நடப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவ்வளவே. ஆனால் இந்த ஒரு மாதிரியான சுவாரஸ்யமின்மை வருஷக் கடைசியில் வந்த இரு பரிட்சைகளின் போது தான் என்னைத் திகிலடைய
வைத்தன. வேறு எங்கும் இல்லாதவாறு, பள்ளியின் இறுதி வகுப்பு அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால், தம் பள்ளியின் தேர்ச்சி எண்ணிக்கையைப் பெரிதாகக் காட்டுவதற்காக, இறுதித் தேர்வில் யாரை அனுமதிப்பது என்பதற்கும் ஒரு தேர்வு இருந்தது. நான் எப்படியோ அந்தக் கண்டத்தைத் தாண்டிவிட்டேன். எப்படி
என்பது இப்போது யோசித்துப் பார்க்கும் போது விளங்குவதில்லை.

எனக்கு இப்போது நன்றாக நினைவில் இருப்பது, அன்று ஹிந்தி பரிட்சை. இரண்டு வருஷ படிப்பில், ஹிந்தி படித்துவிடுவேனே தவிர, அந்த வருட பாடப் புத்தகத்தில் பாதி நான் படிக்காததாகவே இருந்தது. பரிட்சை அன்று காலை ஒரு மணிநேரம்
முன்னதாகவே பரிட்சை ஹாலுக்குப் போய் புத்தகத்தில் படிக்காத பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆபத்பாந்தவனாக, வீர ராகவன் வந்தான். அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, நிறைய பக்கங்கள் உள்ள பாடங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று அவனைச் சொல்லச் சொல்லிக்
கேட்டுக்கொண்டேன். 'ஏண்டா, இதையெல்லாம் ஒரு தடவை கூட நீ படிக்கலையா? என்னடா பரிட்சை எழுதப் போறே நீ?' என்று அவன் சத்தம் போட்டான். ஆனால், நான் கேட்ட பாடங்களில் என்ன இருக்கு? என்று சொல்லவும் செய்தான். இப்படித்தான் நான் விரும்பியே எடுத்துக்கொண்ட ஹிந்தியையும் நான் படித்த லட்சணமும்
இருந்தது.

பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு அரசு நடத்துவது என்றேன். அதை மெட்ரிகுலேஷனுக்குச் சமமான எஸ்.எஸ்.எல்.ஸி. பரிட்சை என்பார்கள். இதில் பாஸ் செய்துவிட்டால், காலேஜுக்கு மேல் படிப்புக்குப் போகலாம். அல்லது வேலை தேட ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் முதலில் பாஸ் செய்ய வேண்டும்.
நிலக்கோட்டையிலிருந்து மாமா வேறு அப்பாவுக்குக் கடிதம் எழுதினார். இந்தப் பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால், மதராஸ் பப்ளிக் செர்வீஸ் பரிட்சைக்கு உட்காரலாம். அதில் பாஸ் செய்துவிட்டால் வேலை சுலபமாகக் கிடைத்து விடும் என்று எழுதியிருந்தார். இது எனக்கு புதிதாக ஒரு கவலையைச் சேர்த்தது.
ஒரு கண்டம் கழியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இன்னொன்று எனக்காக வாசலிலேயே நின்றுகொண்டு எப்போது உள்ளே நுழைவது என்று பயமுறுத்துவது போலிருந்தது. ஆனால் அது மாமாவின் கார்டு வந்த ஓரிரு நாட்கள் தான். பிறகு அது பற்றிய சிந்தனையே இல்லை.

#ஈவெரா_எனும்_போலிவிம்பம் தொடரும்...
@threadreaderapp

unroll pls
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to இளந்திரையன்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!