My Authors
Read all threads
ஒரு சீரான கதியில் அந்த இரயில் சென்று கொண்டிருந்தது.

குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும் இதமாக இருந்தது.

நன்கு காலை நீட்டி ஜன்னல் பக்கம் தலை திருப்பி வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன் நான்.

சென்னையின் நெரிசல்களை வேகமாகப் பின் தள்ளி வண்டி வேகம் எடுத்தது.
எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்ததால் சென்னையின் அந்த "பேவரேட் வாசம்" என் நாசிக்கு நாசிக்கு எட்ட வில்லை.

பை த வே, நான் சென்னையில் வேலை பார்ப்பவன். அலுவலக வேலையாக மதுரைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

நாளை இரவே சென்னை திரும்ப வேண்டும். திருமணம் இன்னும் ஆகவில்லை.
வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை "யாரிடமும்" சிக்கிக்கொள்ளாமல்.

என் பார்வையை உள்ளே திருப்பினேன்.
என் எதிரே அமர்ந்திருந்தவர் நடுத்தர வயதில் இருந்தார்.

அவர் சாப்பிடுவதற்கும், வேலை செய்வதற்கும் நிச்சயம் சம்பந்தம் இல்லை. நல்ல தொந்தியும், தொப்பியுமாக இருந்தார்.
சீட் தாராளம் இல்லையென்றால் இட நெருக்கத்தை உணர்ந்திருப்போம்.

மெல்ல புன்னகைத்து கையில் கொரித்துக் கொண்டிருந்த பாக்கெட்டை என்னிடம் நீட்டினார். சாட் ஐட்டம். வேண்டாம் என்று மறுத்தேன்.

"'இம்போர்ட்டட்" என்றார்.
மீண்டும் அதே புன்னகையை தந்தேன் அவருக்கு பரிசாகத் தந்தேன்.
அவர் "இம்போர்ட்டட்" என்று சொல்லி என்னை வீழ்த்த பார்த்தது எனோ எனக்குப் பிடிக்கவில்லை.

கையில் உள்ளதை ஓரமாக வைத்துவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார். பேச்சுக் கொடுக்கப் போகிறாரோ.?! உள்ளுணர்வு சொன்னது.

மெல்ல அவரை எடை போட்டேன், சமீபத்திய வெளிநாடு ரிட்டன் என தெரிந்தது.
நல்ல காலம் #கொரோனா பீதிக்கு முந்தைய காலகட்டமோ அவர் தப்பித்தார்.

இல்லை இருமினார் என்று போலீஸில் பிடித்துக் கொடுத்திருப்பேன்.

எல்லாம் அந்த "இப்போர்டேட்" மேட்டர்தான்.
இந்த மாதிரி ஓவர் "ஸ்மார்ட்" ஆட்களிடம் மிகுந்த எச்சரிக்கை வேண்டும் என்று என் உள்ளுணர்வு அழுத்திச் சொன்னது.
பொதுவாக இவர்களைப் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள், தாய்மொழி நன்கு தெரிந்தாலும்.
நம் ஊரைப் பற்றி இழிவாகப் பேசுவது இவர்களுக்கு கை வந்த கலை.வெளிநாட்டைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.

இவரும் அப்படித்தான் என்று நினைத்தேன்.

நான் பயந்தது போலவே"ஐ ஆம் ஷிவ்"என்றார் ஆங்கிலத்தில்.
சிவா,சிவகுமார்,சிவராமன் அல்லது சின்னப்பன் எதோ ஒன்று...?!

"திஸ் கண்ட்ரி வில் நெவர் இம்புரூவ்" என்றார் தொடர்ந்து.

"ஏன் என்ன விஷயம்." என்றேன் தமிழில். மாட்டினாயாடா மவனே!

"பாருங்களேன், எங்க பார்த்தாலும் ஒரே குப்பை. அழுக்கு." என்றபடி தன்
ஷூ காலைத் தூக்கி என் பக்கம் போட்டார்.
ஒரு இருக்கையில் காலைப் போடும்போது எதிரில் இருப்பவரிடம் ஒரு கர்ட்டஸிக்கு அனுமதி வாங்க வேண்டும் என்கிற நாகரிகம் கூட இல்லாமல்.

இங்கே குப்பையை எங்க போடுவது என்று கூட தெரிவது இல்லை என்றபடி மீண்டும் அதே பொட்டலத்தை எடுத்து கொரிக்க ஆரம்பித்தார்.

அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன் அவரை.
அவர் இப்போது வெளிநாடு புகழ் பாடும் படலத்தை தொடருவார் என்று எதிர் பார்த்தேன். ஏமாற்றவில்லை என்னை.

ஐரோப்பாவைப் பாருங்க. அமெரிக்காவைப் பாருங்க.
(அடேய் அதுதான் பார்த்தோமே அவங்க லட்சனத்தை இந்த #கொரோனா காலகட்டத்தில். நல்ல லட்சனம் போடா - இது என் மைன்ட் வாய்ஸ்) எவ்வளவு சுத்தம்.
நீர் நிலையெல்லாம் எவ்வளவு சுத்தம்.

குப்பையை அதற்கான தொட்டியில்தான் போடுவாங்க. வேறெங்கும் காண முடியாது. நமக்கு இந்த ஊரு சரிவராது பாஸ். (யாரு நான் உனக்கு பாஸா..?!) என்ன சத்தம், என்ன தூசி, என்ன பொலூஷன், சீக்கிரமா அங்கே போய்விடுவேன் என்றார்.

கையில் இருந்த ஸ்நாக்ஸ் பாக்கெட் காலி.
அந்தப் பாக்கெட்டை கையால் நசுக்கி நாகரிகம் இல்லாமல் பட்டென்று ஒரு சத்தம் வரவைத்துப் பந்தாக்கினார்.

நான் அவர் காலை எடுக்கச் சொல்லி ஜன்னலோரக் கண்ணாடியில் முகம் பதித்து வெளியே வேடிக்கை பார்ப்பது போல பாவ்லா செய்தேன்.

சட்டென்று பந்தை தன் இருக்கைக்கு அடியில் உருட்டி விட்டார்.
பட்டென்று நேராக உட்கார்ந்து, எதிரே இருப்பவரை ஒரு சொடக்குப் போட்டு, "அங்கிள் தேர் இஸ் எ 'வேஸட் பின்' நியர் த டாய்லெட்" என்றேன் அந்தத் தடிமாடு புத்திக்கு உரைக்கும்படி தெளிவான ஆங்கிலத்தில்.

அந்த தடித்தவர் முகம் பட்டென்று மாறியது.

உள்ளுக்குள் எதோ ஒன்று உறுத்தியிருக்க வேண்டும்..?!
தன் பெரிய தொப்பையுடன் அவர் குனிந்து அந்த குப்பைப் பந்தைத் தேடுவது நிஜமாகவே வேடிக்கையாக இருந்தது.

மவனே நீ இனிமே இந்தியாவில் எங்குமே குப்பையை கண்ட இடத்தில் போடக்கூடாதுடா கபோதி என்று மனதில் எண்ணிக்கொண்டேன்.

நிம்மதியான உறக்கம் அதன் பிறகு எனக்கு.
அவர் முகத்தை அதன் பிறகு பார்க்காமல்.
நீதி: "வெளிநாடுகளின் மோகம் தேவையே.
அது தவறு என்று சொல்லவில்லை யாரும்.

ஆனால் நம்நாடு எந்த வெளிநாட்டிற்கும், எந்த விதத்திலும் சளைத்தது அல்ல.

சொல்லப்போனால் நம்நாடு எல்லா விதங்களிலும் எந்த வெளிநாட்டை விடவும் மேன்மையானது.?!"

🙏#இந்த_நாள்_இனிய_நாள் ஆக அமைய வாழ்த்துகள் நண்பர்களே!🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with விஷ்வா I Viswa I

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!