My Authors
Read all threads
ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது.

அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். அது மனித இயல்புதானே.?!

எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான மிருகத்தைப் பிடித்து வளர்த்தால் என்ன என்று விபரீதமாகச் சிந்தித்தான் அவன்.
அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் மக்களிடம் உயரும் என்று தீவிரமாக நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது.

ஆவலுடன் அதைக் கையில் பிடித்து பெருமையாக தன் வீட்டுக்கு எடுத்து வந்தான் அந்தப் பிரகஸ்பதி.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும், குழந்தைகளும், சக நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள்.

அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள்.

அவனோ அவர்கள் சொல்வதை எல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு அந்த முதலைக் குட்டியை தன் செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.
எங்கே சென்றாலும் அவன் முதலைக் குட்டியோடு சென்று வந்தான்.

போகும் இடமெல்லாம் மக்கள் தன்னைக் கண்டவுடன் மிரண்டபடி பின் வாங்குவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும் அவன் அதைத் தூக்கி சுமப்பதை மட்டும் விடவேயில்லை. விருப்பிச் செய்தான் அந்த காரியத்தை.
முதலை இப்போது ஐந்தடி நீளம் வளர்ந்துவிட்டது. எவ்வளவு இறைச்சி போட்டாலும் சாப்பிட்டு விடுகிறது.

ஆனால் முதலையின் மீது உள்ள பயம் காரணமாக அவனது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள்.

அவன் நண்பர்களும் அவனிடம் முன்பு போல கூடிப் பேச, பொழுதைக் கழிக்க விரும்புவதில்லை.
இருந்தாலும் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படும் "ஒரு விதமான போதை" அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு நாள் முதலைக்கு அவன் போட்ட தீனி போதவில்லை.
இப்போது அது ஆறடி வளர்ந்திருந்தது.

அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அது அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது.
நன்கு வளர்ந்துவிட்ட முதலையின் வலிமையோடு அவனால் போராட முடியவில்லை.

அந்தோ பரிதாபம். மிகுந்த போராட்டத்திற்குப் பின் அவன் ஆசையாக வளர்த்த முதலையினால் அவன் விலை மதிப்பில்லாத உயிர் அவனிடமிருந்து பிரிந்தது.

இந்த பாழாய்ப் போன "குடிப் பழக்கமும்" இந்தக் குட்டி முதலையும் ஒன்றே..?!
ஆபத்தில்லாத ஒன்று போலத்தான் நம்மில் பெரும்பாலனவர்கள் வாழ்வில் உள்ளே "குடிப் பழக்கம்" உள்ளே நுழைகிறது.

நம் கூடவே அது வளர்கிறது.
நமக்குத் தெரியாது, அதன் கோரப் பசிக்கு, அந்த முதலையைப் போல ஒரு நாள் அது நம்மையே விழுங்கி விடக் கூடும்.

குடியால் கிடைக்கும் மகிழ்ச்சி சில நாள் மட்டுமே.?!
எனவே "சூதானமாக" இருப்போம். குடிவெறியை இந்த #கொரோனா காலகட்டத்திற்கு பிறகாவது நிச்சயம் ஒழிப்போம். ஒழிக்க வேண்டும்.

எனவே, குடி எனும் முதலையை இந்த #லாக்டவுன் காலக்கட்டத்தைப் பயன்படுத்தி கொன்று விடுவது நாட்டிற்கு எப்படியோ தெரியாது. அது நன்மையா, தீமையா என்பது நமக்கு நிச்சயம் தெரியாது.
குடி வெறியை ஒழிப்பது என்பது அவரவர் வீட்டிற்கு, அவரவர் மனைவிக்கு, அவரவர் பெற்றோருக்கு, அவரவர் குழந்தைகளுக்கு, அவரவர் நண்பர்களுக்கு, அவரவர் தம் உறவினர்களுக்கு, அவரவர் வாழும் அக்கம் பக்கத்தினருக்கு, அவரவர் வாழும் சமுதாயத்திற்கு, "முக்கியமாக அவரவர் சம்பாதிக்கும் பணத்திற்கு" நல்லது.
நீதி: குடியை நிறுத்துவதில் வெற்றி பெறவேண்டும் என்று கருதினால் அதனைத் தீவிரமாகக் கருதி மனதை ஒருநிலைப்படுத்தி அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.
"மனமிருந்தால் மார்க்கமுண்டு"

🙏#இந்த_நாள்_இனிய_நாள் ஆக எல்லோருக்கும் அமைய வாழ்த்துகள் நண்பர்களே🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with விஷ்வா I Viswa I

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!