My Authors
Read all threads
"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.?!"

"கொஞ்சம்ம்ம்ம்ம்ம் பெரிய பதிவு"

#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது?

சத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.?!
என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.

அதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.
#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.

அவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்

#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.
சுகாதாரத்துறைக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் #உமாநாத் IAS அவர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

அன்று பத்திரிக்கையாளர்கள் டெஸ்ட் கிட் விலை குறித்து கேள்வி கேட்கும் வரை பேட்டியளித்து வந்தார் அவர்.
டெஸ்ட் கிட் விலை குறித்து கேள்வி வந்த உடன் #உமாநாத் IAS ஐ திரும்பிப் பார்த்தார். அவர் இவரைப் பார்த்தார். மைக்கை தவிர்த்து ரகசியம் பேசினார்கள்.

பதில் அளிக்கும் பொறுப்பை #உமாநாத் IAS இடம் தள்ளி விட்டார் #விஜயபாஸ்கர்

அது தான் சுகாதாரத்துறை மந்திரி #விஜயபாஸ்கர் டேக்டிக்ஸ்.
பதிலளித்த வரை தனக்கு தெரிந்த விஷயம் போலவும், இது தனக்கு தொடர்பு இல்லாதது போலவும் காட்டும் உத்தி.

#உமாநாத் IAS, "டெஸ்ட் கிட் ஒன்றின் விலை ரூபாய் 600. அய்.சி.எம்.ஆர் தான் விலை நிர்ணயம் செய்தது.

மத்திய அரசும் இதே விலைக்குத்தான் வாங்கியிருக்கிறது" என்று பதிலளித்தார் #உமாநாத் IAS.
அதற்குள் மிகவும் சிரமப்பட்டு போனார் அவர். பாவம்.

பொறுப்பை மத்திய அரசின் மேல் அவர் தூக்கிப் போட்டார். அத்தோடு அந்தப் பிரச்சினையை கைகழுவி விட்டார்கள்.

எதைக் கேட்டாலும், "#கொரோனா காலத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்" என்கிற புராணத்தை #எடப்பாடி வகையறா பாடி வந்ததால் (!),
எதிர்கட்சிகளும் கூட பொறுமை காக்கும் சூழல் இந்த விவகாரத்தில்.
#எடப்பாடி க்கும், #விஜயபாஸ்கர் க்கும் அது வசதியாகிப் போனது.

டெஸ்ட் கிட் பிரச்சினையின் தலையில், பாறாங்கல்லை தூக்கிப் போட்டு விட்ட திருப்தியில் இருந்தார்கள். இது முடிந்துப் போனது என அடுத்த வேலைகளில் மூழ்கிப் போனார்கள்.
பிரச்சினை, எதிர்பாராமல் வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

துவக்கத்திலிருந்து இதை பார்த்தால் நன்கு புரியும்:

இந்தப் பிரச்சினைக்குரிய ரேபிட் டெஸ்ட் கிட் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.இதை #Guangzhon_Wondfo என்ற சீன நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டது.
#சீனா விலிருந்து டெஸ்ட் கிட்டை இறக்குமதி செய்ய முதலில் அனுமதி பெற்ற நிறுவனம் #Matrix நிறுவனம்.

இந்த #மேட்ரிக்ஸ் நிறுவனம் டெஸ்ட் கிட்டை #இந்தியா முழுவதும் விநியோகிக்க
#Real_Metabolics என்கிற நிறுவனத்தையும்,
#Aark_Pharmaceuticals என்கிற ஒரு நிறுவனத்தையும் ஒப்பந்தம் செய்தது.
#Aark_pharmaceuticals நிறுவனத்திற்கு, ICMR (Indian council of Medical Research) கொள்முதல் ஆணையை வழங்கியது.

ஏப்ரல் 16 ஆம் தேதி, #சீனா வுக்கான இந்தியத் தூதர் #விக்ரம்_மிஸ்ரி, "6,50,000 டெஸ்ட் கிட்கள் #Guangzhou விமானநிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது", என்று ட்விட் போட்டார்.
#சீனா வில், தூதர் விக்ரம் அந்த நிறுவனத்தோடு தொடர்பில் இருந்ததால் தான் இந்தத் தகவலை வெளியிட முடிந்தது.

டெஸ்ட் கிட்கள் #இந்தியா வந்து சேர்ந்தது.

விநியோக உரிமை பெற்றிருந்த #ரியல் மற்றும் #ஆர்க் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் பல்வேறு மாநிலங்களுக்கு டெஸ்ட் கிட்டை அனுப்பி வைத்தன.
இந்த நேரத்தில் தான் விலைப் பிரச்சினை வந்து, தமிழக அரசிடமிருந்து பதில் இல்லாமல் இருந்தது. அப்போது தான் அந்த எதிர்பாராத ட்விஸ்ட்.

#ரியல்_மெட்டபாலிக்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு போனது.
பிராது கொடுத்தது.
அந்த பிராதில்தான் சங்கதியே இருக்கிறது.
என்ன பிராது அது.?!
#மேட்ரிக்ஸ் நிறுவனம் எங்களுக்கு #இந்தியா முழுமைக்குமான விநியோக உரிமையை கொடுத்து விட்டு, தமிழகத்திற்கு மாத்திரம் 50,000 டெஸ்ட் கிட்களை சென்னையை சேர்ந்த #Shan_biotech என்ற நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது.

இது ஒப்பந்த மீறல்" என்றது.
இதுவே அந்த பிராது. வழக்கு விசாரணை ஆரம்பித்தது.
சாதாரண தொழில் வழக்காக நினைத்து விசாரிக்க ஆரம்பித்த நீதிபதி புருவம் உயர்ந்தது.

சீனாவில் இருந்து வந்த டெஸ்ட் கிட்டின் விலை ரூ245.

அதை இந்திய அரசுக்கு இவர்கள் விற்கும் விலை ரூ 600. லாபம் ரூ355.
5,00, 000 கிட்களுக்கு கொள்ளை போகும் மக்கள் பணம் ரூ16 கோடியே எழுபத்து அய்ந்து லட்சம்.
"#கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் கூடவா இப்படி வியாபாரம் செய்வது.?!"

மக்கள் நலன் காக்கும் காரியம் இது. 140% லாபம் வைப்பது நியாயம் இல்லை. ரூபாய் 400 என்ற விலைக்கு தான் விற்க வேண்டும்" என்று தீர்ப்பு வந்தது.

"கொள்ளை லாபம் பார்த்தது யார்" என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்தது.
#திமுக தலைவர் #ஸ்டாலின் நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

பதில் அளித்த அமைச்சர் #விஜயபாஸ்கர், ஏற்கனவே #உமாநாத் சொன்ன கதையை திருப்பி சொல்லி இருக்கிறார்.
"இது அய்.சி.எம்.ஆர் நிர்ணயித்த விலை. மற்ற மாநிலங்கள் இதே விலைக்கு தான் வாங்கி இருக்கின்றன".

உண்மைதான்.
மற்ற மாநிலங்கள் இதே விலைக்கு #ஆர்க் நிறுவனத்தின் மூலம் வாங்கிய போது, அய்.சி.எம்.ஆர் ஒப்புதல் பெறாத #ஷான்_பயோடெக் மூலம் தமிழக அரசு மட்டும் வாங்கியது ஏன்.?!
யார் முடிவு அது.?!

இன்னொரு பக்கம்
டெஸ்ட் கிட்கள் சரியாக பரிசோதிக்கவில்லை என #ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்கள் குரல் எழுப்பின.
"5.4 சதவிகித முடிவுகளே சரியாக இருக்கின்றன" என ராஜஸ்தான் அரசு தெளிவாக அறிவித்தது.

ஆனால் தமிழ்நாடு அரசு இது குறித்து வாயே திறக்கவில்லை.
#பாஜக அரசு ஆளும் மாநிலங்கள் வாய் திறக்காமல் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.
மத்திய அரசு அவர்கள் அரசு"

"#தமிழக_அரசு வாய்மூடி மவுனமாக இருந்தது ஏன்.?!"
இப்போது விலை நிர்ணயித்தது மத்திய அரசு என அறிக்கை விடும் #விஜயபாஸ்கர், டெஸ்ட் கிட் சரியாக வேலை செய்யவில்லை என்று ஏன் சொல்லவில்லை.?! எது அவரைத் தடுத்தது.?!

மத்திய அரசு, மத்திய சுகாதாரத் துறை மூலம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"உலக அளவில் டெஸ்ட் கிட் தேவை அதிகமான அளவில் இருந்தது.
பல நாடுகள் அவற்றை வாங்க தூதரக, பொருளாதார, என எல்லாவித சக்திகளையும் பிரயோகம் செய்தன.

இந்த நிலையில் அய்.சி.எம் ஆர் #Wondfo நிறுவனத்திடம் இருந்து நேராக வாங்க முயற்சித்தது.

போக்குவரத்தில் பொறுப்பில்லாதது, 100% முன்பணம் கோரியது, கிட்களை அளிக்க நேர ஒப்புதல் அளிக்காதது Etc...
மேலும் அமெரிக்க டாலரில் ஏற்படும் ஏற்ற இறக்க பாதிப்புகளில் நிறுவனத்தின் நிலைப்பாடு போன்றவற்றால் நேரில் வாங்கவில்லை.

இது தான் முதன்முறையாக சீனாவிலிருந்து டெஸ்ட் கிட் வாங்குவது என்பதால் விலை குறித்த முன் அனுபவம் இல்லை. வந்த டெஸ்ட் கிட்கள் சரியில்லாததால் திருப்பி அனுப்பப்பட உள்ளன.
அதனால் இந்தியாவுக்கு எந்த பொருள் இழப்பும் இல்லை", என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்த்தால், இது சரி தான் எனத் தோன்றும்.

1.சீனாவிடம் மற்ற நாடுகள் செல்வாக்கை பயன்படுத்திய போது, சீன அதிபரை அழைத்து வந்து ரூ100 கோடிக்கு மேல் செலவு செய்து மகிழ்வித்தார் PM #மோடி
அவர் ஏன் தன் செல்வாக்கை பயன்படுத்தவில்லை.?!

2.சீன விலை குறித்த புரிதல் இல்லை என்று சொல்லும் அய்.சி.எம்.ஆர் #தென்கொரியா நாட்டிடம் டெஸ்ட் கிட் விலையை விசாரித்திருக்கலாமே.?!

3.டெஸ்ட் கிட் கிளம்பியதை அறிவித்த சீனாவிற்கான இந்தியத் தூதர், விலை குறித்து அங்கே விசாரித்து இருக்கலாமே.?!
4.டெஸ்ட் கிட்கள் சரியில்லை என்று #காங்கிரஸ் கட்சி ஆளும் #ராஜஸ்தான் மாநிலம் மாத்திரம் குரல் எழுப்பி இருக்காவிட்டால், இந்தப் பிரச்சினையே அமுக்கப்பட்டிருக்கும்தானே?

கிட்களை திருப்பி அனுப்பும் சூழல் ஏற்பட்டிருக்காது தானே?அப்போது #இந்தியா விற்கு பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கும் தானே?
5.இவ்வளவும் சொன்ன மத்திய சுகாதாரத் துறை தன் அறிக்கையில் விலை வித்தியாசம் குறித்து வாய் திறக்காதது #மோடி டெக்னிக் தானே.?!

இதற்கெல்லாம் பிரதமர் மோடி வாயே திறக்க மாட்டார். பெரும் தொகை புழங்கும் #ரஃபேல் விமான ஊழலிலேயே வாய் திறக்காதவர் நம் PM.
அந்தத் தொகையை கணக்கிட்டால் இது குறைவே.
அதனால் இப்படி ஒன்று நடந்ததே தெரியாதது போல் அமைதியாக இருப்பார்.

மத்திய அரசின் விளக்கங்கள் இல்லாமல் #விஜயபாஸ்கர் சில விளக்கங்களை நமக்கெல்லாம் நம் சுகாதாரத்துறை மந்திரி அளித்திருக்கிறார்.

விஜயபாஸ்கர்:
"கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கின்றன"
பதில்: "உணர்திறன் மற்றும் தனித்துவம் போன்ற தொழில்நுட்ப விபரக்குறிப்பை பொறுத்து டெஸ்ட் கிட்டின் விலை நிர்ணயிக்கப்படும்" என்ற அய்.சி.எம்.ஆர் வகுத்துள்ள கொள்கை அடிப்படையில் சரியான கிட்களை கேரளாவும்,ஆந்திராவும் வாங்கியிருக்கலாம்.
தவறு இருந்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாமே.?!
#விஜயபாஸ்கர்: தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் டெஸ்ட் கிட் விலை குறித்து எதிர்கட்சிகள் அரசியல் செய்யவில்லை.

பதில்: ஒன்றை ஞாபகத்தில் வையுங்கள் மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு சப்ளை செய்திருக்கிறது. அது குறித்து #காங் கட்சியின் தலைவர் #ராகுல்_காந்தி கடுமையாக வினா எழுப்பியுள்ளார்.
நம் பிரதமர் #மோடி பதிலளிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு நேரிடையாக வாங்கியதால் தமிழக எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்புகிறார். பதில் சொல்லுங்கள்.

எவ்வளவு நாளைக்கு தான் அரசியல் செய்யக் கூடாது என்றே பேசுவீர்கள் சுதாகாரத்துறை மந்திரி #விஜயபாஸ்கர் அவர்களே.?!
சட்ட விரோதமாக #குட்கா விற்பனை செய்தவர்களிடம், கமிஷன் வாங்கியதாக #CBI வழக்கு நிலுவையில் இருக்கும் போதே உத்தமன் வேடம் போடுகிறீர்களே, அடடா!

ஏழை மக்கள் அடுத்த வேலை உணவுக்கு தடுமாறும் ஊரடங்கு சூழலில், அவர்கள் கொடுத்த வரிப்பணத்தில் கொள்ளை அடிக்கும் மத்திய, மாநில அரசுகள்.?!
சென்னை #ஷான்_பயோடெக் நிறுவன முதலீட்டாளர்கள் கதை வெளியில் வரும் போது, இன்னும் பல பூதங்கள் கிளம்பும் எனத் தகவல்.

#ஊரை அடித்து உளையில் போடும் உத்தமர்களே!

#SSசிவசங்கர் அவர்களின் பதிவு.
#பகிர்வு
#படித்ததில்_அதிர்ந்தது

இணைப்பு :
1. ஆர்க் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கொள்முதல் ஆணை.
2. தமிழக அரசு, சென்னை #ஷான்_பயோடெக் நிறுவனத்திற்கு அளித்த கொள்முதல் ஆணை.

3. தூதர் விக்ரம் மிஸ்ரியின் ட்விட்.

4,5,6,7,8,9. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.
10,11,12. மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கை.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with விஷ்வா I Viswa I

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!