நான் எங்காத்து மாமிகிட்ட நாளைக்கு சனிக்கிழமை, லீவு என்ன சமையல்னு கேட்டேன். இன்னிக்கு தானே வரலக்ஷ்மி விரததுக்கு அத்தனை பண்ணி இருக்கேன். So tomorrow partial lockdown at kitchen அப்படின்னு சொன்னா. இப்போவெல்லாம் லாக்டௌன் அப்படினாலே எல்லாம் உண்டுனு அர்த்தம்
ததியன்னம் அல்லது தயிர்சாதம், staple food for many,
கான்டினென்டல் ஸ்டைல்ல, பீட்ஸா, லஸ்ஸாநியா சாப்பிட்டாலும் சரி, ஓரியண்டல் ஸ்டைல்ல வெஜ் மஞ்சூரியன் வித் பர்ண்ட் கார்லிக் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டாலும் சரி ஆத்துக்கு வந்து ஒரு பிடி தயிர்சாதம் சாப்பிடலைனா சாப்பிட்ட த்ருப்தியே இருக்காது.
ததியன்னம் சாப்பிட்டா தத்தியா போகவேண்டியது தான், முட்டாளுக்கு மூணு வேளை மோருஞ்சாதம் இதெல்லாம் செம உடான்ஸ்
ததிபாண்டனுக்கு (தயிர் பானை பண்ணுபவர்) மோக்ஷம் குடுக்க போன பெருமாள் அங்க இருந்த பானைகள், மண், சக்கரம் எல்லாத்துக்கும் மோக்ஷத்த குடுத்து இருக்கார்,
தயிர்சாதம்ன உடனே சாதத்துல தயிர கலக்கறதுனு நெனைச்சிக்க கூடாது. அது ஒரு அழகான ப்ராஸஸ். ஒரு விஷயம் தெரியுமோ, மகாவிஷ்ணு தசாவதாரம் மாதிரி
ஒண்ணுக்கு நாலரை இல்லைனா அஞ்சு தண்ணி விட்டு கஞ்சியோட கொழவா சாதத்த வடிச்சிக்கணும். இளம் சூடா இருக்கறசே கொஞ்சம் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாத்தையும் திருமாறிக்கணும் (பாய்ஸ்ல செந்தில் சொல்லறா மாதிரி).
பத்து விதமான தயிர்சாதம்னா, மாதுளை, கறுப்பு திராட்சை சேக்கலாம் ; மணதக்காளி வத்தல பொறிச்சி திருமாறலாம் ; கேரட், வெள்ளிரிகாய் துருவி சேக்கலாம் ; எலுமிச்சை, நார்த்த இலைய திருமாறினா வாசனையா இருக்கும்.