My Authors
Read all threads
சீறிப் பாய்வாரா 'சின்னத் தல!'

@ImRaina @ChennaiIPL #IPL2020 #IPLinUAE

சென்னை அணியைப் பொறுத்தவரை டெத் ஓவர்களில் தோனி என்றால் மிடில் ஓவர்களில் இவர்தான். சிறந்த கீப்பர் தோனி என்றால் மிகச் சிறந்த ஃபீல்டர் இவர்தான். தோனி ‘தல’ என்றால் இவர்தான் ‘சின்ன தல’.
சென்னை அணிக்காக அதிக ரன்கள், அதிக கேட்ச்கள் என பல்வேறு சாதனைகளைத் தன் வசம் வைத்துள்ளவர் சுரேஷ் ரெய்னா. IPL ஆரம்பித்த 2008-ம் ஆண்டே சென்னை அணியில் இணைந்தவர்.
5 கோடி ரூபாய்க்கு அன்று சென்னை அணிக்கு ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஹைடன், ஹசி, ஃபிளெமிங், ஓரம் என எத்தனையோ சர்வதேச வீரர்கள் இருந்தாலும் தமிழக மக்களை பெரிதும் கவர்ந்தது ரெய்னாதான்.
இரண்டு, விக்கெட் போன பின்பு பொறுமையாக ஆடி ஸ்கோரை கட்டமைக்கும் வித்தையாக இருந்தாலும் சரி, கடைசி ஓவர்களில் ஸ்கோரை உயர்த்த ஆண்ட்ரே ரசல் போல அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தாலும் சரி... நான் சகலகலா வல்லவன் என இரண்டையும் திறம்படச் செய்து காட்டுபவர் ரெய்னா.
ஆடுகளத்தில் தடுப்புச்சுவர் போல நின்று கொண்டு தன்னைத் தாண்டி பந்துகள் செல்வதை அறவே விரும்பாத வீரர்.
முக்கியமாக knock out போட்டிகள் என்றால் ரெய்னா ரொம்ப குஷியாகி விடுவார். 2008-ம் ஆண்டு IPL அரையிறுதியில் பொறுமையாக ஆடி அரைசதம் கடந்து சென்னையை வெற்றிபெற வைத்தார்.
2012 ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிராக 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்து, சிஎஸ்கே-வை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். 2014-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை, எந்தக் காலத்திலும் ஒரு கிரிக்கெட் ரசிகன் மறக்க மாட்டான்.
அப்படி ஒரு அதிரடி ரூபம் எடுத்து பவர்பிளே முடிவதற்குள் பல சம்பவங்கள் செய்திருப்பார் ரெய்னா.

லெக் சைட் விலகி வந்து, ஆஃப் சைடில் நல்ல ரூம் create செய்து இவர் அடிக்கும் inside out ஷாட்களைக் காணக் கண் கோடி வேண்டும்.
இத்தனை ஆண்டு கால IPL வரலாற்றில் சென்னை அணிக்காக ஒரேயொரு போட்டியை மட்டுமே மிஸ் செய்திருக்கிறார் ரெய்னா. அந்த அளவுக்கு சென்னை அணிக்கு ஒரு consistent வீரர் என்றால் அது ரெய்னாதான்.
189 IPL போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா, இதுவரை 5,368 ரன்களைக் குவித்துள்ளார். இந்தியக் கேப்டன் கோலி மற்றும் ரெய்னா தவிர யாருமே IPL வரலாற்றில் 5,000 ரன்களைக் கடந்தது இல்லை. அதே போல் ரெய்னாவைத் தவிர வேறு யாரும் IPL வரலாற்றில் 100 கேட்ச்கள் பிடித்ததில்லை. இதுவே ஒரு சாதனை.
இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரெய்னா, சென்ற வருடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. மூன்று அரைசதம், 350-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கு அது போதுமானதாக இல்லை.
இன்னும் 47 நாள்களில் IPL தொடங்கவுள்ள நிலையில், தவறுகளை எல்லாம் சரி செய்து மீண்டும் பவுண்டரிகளை பறக்க விடப்போகும் தங்களின் சின்ன தலையைக் காண ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக உள்ளனர்.

Writes: Wilson HBK

@threadreaderapp "unroll"
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Gully Sports

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!