@Don_Updatez
தொற்று நோயை தவிர்ப்பதுடன் பள்ளிகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க NCERT தயாரித்து சமர்பித்துள்ளது. (1/8)
ஆறு கட்டங்களாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது:
- முதற்கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகள்.
- ஒரு வாரம் கழித்து 9 மற்றும் 10ஆம் வகுப்புகள். (2/8)
- அதன்பிறகு மூன்று வாரங்களுக்குப் பிறகு 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்.
- நான்கு வாரங்களுக்கு பிறகு 1 மற்றும் 2ஆம் வகுப்புகள். (3/8)
என திறக்க NCERT பரிந்துரைத்துள்ளது.
வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்கள்:
● ஒவ்வொரு குழந்தைக்கும் முகமூடி அணிவது அவசியம்.
● வகுப்பில் மாணவர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் இருக்க வேண்டும். (4/8)
● குழந்தைகள் தங்கள் இருக்கைகளை மாற்ற கூடாது, அவர்களின் பெயர்கள் மேசையில் எழுதப்பட வேண்டும்.
● வீட்டுபாடங்கள் தினமும் வழங்கப்படும். (5/8)
● பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.
● பள்ளிக்கு வெளியே உணவகங்கள் இருக்க கூடாது. (6/8)
● தினமும் வகுப்பு அறைகள் சுத்திகரிக்கப்படுவதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்யவேண்டும்.
● காலை கூட்டங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெற கூடாது.
(7/8)