பொன்முடி சிகரம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அதிகம்பேர் அறிந்திராத மலைவாசஸ்தலங்களில் ஒன்று பொன்முடி இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை வனப்பு,
வெண்மேகங்கள் பசுமை மலைகளை முத்தமிடும் அளவிற்கு பொன்முடி மலைப் பகுதி உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1100
மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதோடு, ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
இது 23 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. டிரெக்கிங் மற்றும் ஹைக்கிங் போன்ற சாகச பயணத்தில் ஈடுபட விரும்பும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாகவும் திகழ்கிறது.
இங்கு அதிகமான பறவை இனங்கள் வாழ்வதாக சொல்லப்படுகிறது
பொன்முடி மலைல் பள்ளத்தாக்குகள், ஏரிகள், தோட்டங்கள் என்று சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் அமைந்துள்ளன. இங்கு கோல்டன் வேலி, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்த்தியர்கூடம்
போன்றவை உள்ளன. பொன்முடிக்கு அருகில் அமைந்திருக்கும் கல்லார் ஆறு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் பகுதியாக இருக்கிறது. ஏனென்றால் பன்னீர் போல தெளிவான நீர் பாயும் இந்த ஆற்றில் கூழாங்கற்கள் அதிகளவில் இருப்பதாலேயே இதற்கு 'கல்லார்' என்ற பெயர். மழைக் காலங்களில் இயற்கையாய் உருவான
ஓடைகள் மற்றும் சிறிய அருவிகள் பார்ப்பதற்க்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மீனாட்டு நீர்வீழ்ச்சி,மினி ZOO,, பொன்முடி கிரஸ்ட் ஆகியவை பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். அருவிகள் புடைசூழ அழகே உருவாய் காட்சியளிக்கும் மீன்முட்டி அருவியை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது.
மேலும்இங்கு நடைபெறும் ஆரன்முலா நீர் திருவிழா முகவும் பிரசித்தி பெற்ற ஆகும். இங்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரை சுற்றுலா பயணிகள் வருகைக்கு சிறந்த பருவம்மாக பொன்முடி உள்ளன. பொன்முடியில் வழக்கமான சுற்றுலா
எதையும் கேரள அரசு அனுமதிப்பதில்லை. அரசுப்பொதுப்பணித்துறை விடுதி ஒன்றும் கேரள சுற்றுலாத்துறை விடுதி ஒன்றும் மட்டுமே உள்ளன. தனியார் விடுதிகள் இல்லை. அரசுவிடுதியில் ஒன்பது அறைகள். கெ.டி.சி விடுதியில் எட்டு குடில்கள். அவ்வளவுதான். காலை வந்து மாலை திரும்பி செல்பவர்கள்தான அதிகம்.
கோல்டன் வேலி

கோல்டன் வேலி டிரக்கிங் பிரியர்களின் சொர்க்க பூமியாகவே திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் பகுதிகளில் கடைகள் அதிகமாக இல்லாததால் நீங்கள் கட்டாயம் உணவு மற்றும் குடிநீரினை டிரெக்கிங்கின் போது எடுத்து வருவது முக்கியம்
மினி ஜு

இந்த மிருகக்காட்சி சாலையில் காணப்படும் பாரசிங்கா என்ற சதுப்புநில மான் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இதுதவிர இங்கு நீங்கள் ஏராளமான அரிய விலங்கினங்களை கண்டு ரசிக்கலாம்.
டிரெக்கிங்

பொன்முடியின் மலைக்குன்றுகளில் டிரெக்கிங் சென்று இயற்கை ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களை கண்டறியும் அனுபவம் உங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத பக்கங்களாய் நிலைத்திருக்கும்.
டிரெக்கிங் செல்ல விரும்பவர்கள் பொன்முடி வன சம்ரக்ஷண சமிதி எனும் அமைப்பு மூலம் டிரெக்கிங்
வழிகாட்டியின் உதவியை பெற முடியும்.
பொன்முடி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் பிரியர்கள் அடிக்கடி வந்து செல்வதற்கு முக்கிய காரணம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் அகஸ்த்தியர்கூடம் என்ற உயரமான சிகரமே ஆகும். இந்த ஆபத்தான சிகரத்தில் டிரெக்கிங் மற்றும் ஹைக்கிங் சென்ற
அனுபவத்தை நீங்கள் எப்போது நினைத்துப் பார்த்தாலும் ஒரு வித சிலிர்ப்பை உங்களுக்குள் உணர்வீர்கள். ஆனால் நீங்கள் இந்த பகுதியை சுற்றிப் பார்பதற்கு வனத்துறையின் அனுமதி பெறுவது முக்கியம்.
பொன்முடி
திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மேற்குமலைத்தொடரின் கடைசி சிகரம் என பொன்முடி சொல்லப்படுகிறது.
பொன்முடிக்கு மக்கள் வருவதற்கான முதற்காரணமே அங்கே குவியும் மேகம்தான். குறிப்பாக ஜூன் ஜூலை மாதங்களிலும் நவம்பர் டிசம்பர் மாதங்களிலும்
கேரளத்தில் மழை பெய்யும்போது இங்கே மேகங்கள் திரள்கின்றன.
எந்தத் தொல்லையும் எந்த சத்தமும் இன்றி இதமான குளிர் பிரதேசத்தில் ஒரு 2 நாள் கழித்து விட்டு வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தாராளமாக இங்கு வரலாம் செலவும் கம்மி தான்
இங்கு தங்க அரசாங்க விடுதிக்கு புக்கிங் செய்யும் இணைய முகவரி இது
ktdc.com/golden-peak

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Film, Food & Travel

Film, Food & Travel Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @FilmFoodTravel

16 Sep
கவி, கேரளா

கேரளாவின் அறியப்படாத அற்புத மலைவாசஸ்தலம் இது. கவி மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. இது அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும்
சுற்றுலாபயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. சபரிமலையில் மகரஜோதி தோன்றும் இடமான பொன்னம்பலமேட்டிற்கு மேலே அமைந்துள்ளது இந்த அழகிய இடம். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து செல்ல 2 வழி, தென்காசி மார்க்கமாக பத்தனம்திட்டா
பாலபள்ளி வழியாக சென்றும், தேனி மார்க்கமாக சென்றால் குமுளி வழியாக வண்டிப்பெரியார் சென்றும் கவி சென்றடையலாம். குமுளியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கவிக்கு செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு பெற்றே செல்லவேண்டும்.
Read 13 tweets
15 Sep
அசோகா மெஸ், அறந்தாங்கி.

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி நுழைந்தவுடன் V.S தியேட்டருக்கு முன்னால் உள்ளது இந்தக் கடை சுமார் 50 வருட பாரம்பரிய செட்டிநாடு உணவகம் இது சமையல் செய்வது முதல் பரிமாறுவது வரை முழுக்க முழுக்க பெண்கள் தான் இந்த ஹோட்டலில் உள்ள ஸ்பெஷலே பரிமாறும் விதம் தான் Image
வேறு எங்கேயும் நான் இந்த மாதிரி பார்த்ததே இல்லை பரிமாறுபவர் கணக்குப் பார்த்து பரிமாறுவது இல்லை. அசைவ அயிட்டங்கள் ஏற்கனவே அளவு பார்த்து கிண்ணத்தில் வைத்து தருவதில்லை நீங்கள் கேட்கும் ஐட்டங்களை பாத்திரத்தோடு எடுத்துவந்து பரிமாறுகிறார்கள் மட்டன் குழம்பு கேட்டாலும் அதிலுள்ள இரண்டு ImageImage
துண்டுகளை சேர்த்து போட்டுவிட்டு செல்கிறார்கள். பொதுவாக அசைவ உணவைப் பொறுத்தவரை மசாலாக்கள் தான் சுவையை நிர்ணயிக்கின்றன கொங்கு ஏரியாவில் பெருங்காய வாசனை தூக்கலாக இருக்கும் நாஞ்சில் ஏரியாவில் காரம் சற்று அதிகமாக இருக்கும். தஞ்சை ஏரியாவில் சீரகம் சோம்பு பயன்பாடு அதிகமாக இருக்கும் Image
Read 11 tweets
14 Sep
B.V.K பிரியாணி (பாய் வீட்டு கல்யாணம்)
சென்னை.

சென்னை பிரியாணி உலகின் ஒரு புதிய உதயம் தான் இது. இந்தக் கடை நாவலூரில் ஏஜிஎஸ் தியேட்டர் தாண்டியவுடன் வரும் சிக்னலில் ரைட் எடுத்து ஒரு 200 மீட்டர் போனால் வரும். இங்கு அமர்ந்து சாப்பிட முடியாது ஒன்லி பார்சல் மட்டுமே. Image
இந்த வருட ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த கடை குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது அதற்கு காரணம் இதன் சுவை மற்றும் இதன் பேக்கிங். அழகான ரியூஸ்ஃபுல் கன்டெய்னரில் வைத்து தருகிறார்கள். இந்தக் கண்டைனர் மட்டும் 80 ரூபாய் இது பிரியாணி விலையில் அடக்கம் இங்கு மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி இரண்டுமே உண்டு.
ஆனால் பெரும்பாலும் மட்டன் பிரியாணி தான் வாங்கிச் செல்கிறார்கள் ஒரு மட்டன் பிரியாணி 380 ரூபாய். விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனால் சுவை மிக மிக நன்றாக உள்ளது மற்ற கடையின் பிரியாணிகளுடன் கம்பேர் செய்யவே முடியாது அவ்வளவு ருசியாக உள்ளது
Read 5 tweets
12 Sep
பாண்டிச்சேரி உணவகங்கள்

பாண்டிச்சேரி பல கலாச்சாரங்களை கொண்ட ஊர். அதனால் அங்கு எல்லா விதமான உணவகங்கள் உள்ளன முக்கியமாக இந்திய, பிரஞ்ச், இத்தாலி, ரோட்டோர கடைகள் நிறைய உள்ளன அவற்றில் முக்கியமான வகைகளைப் பற்றி பார்ப்போம் முதலில் நம்ம கடைகளைப்பற்றி பார்ப்போம்.
சேலம் பிரியாணி

60 வருடங்களாக பிரியாணிக்கு மிகவும் புகழ்பெற்ற இடம் இது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் இங்கு அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். முதலில் நீடராஜபயர் தெருவில் அமைந்திருந்தது இப்போது இடத்தை மாற்றி ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது.
பிரியாணிகள் இங்கு அவ்வளவு ருசியாக இருக்கும் மிஸ் பண்ணிடாதீங்க.

கடையோட டீடெயில்ஸ்:-

Salem biriyani hotel
no. 45, Eswaran Dharmaraja Kovil St, Heritage Town, Puducherry
063795 11828
maps.app.goo.gl/AdNAXRAjLGorad…
Read 22 tweets
12 Sep
பாம் ஜுமேரா, துபாய்

உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இது. கடலின் நடுவே பனைமர வடிவில் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவு ஆகும். இத்தீவை 94 மில்லியன் டன் மணல்
7 மில்லியன் டன் பாறைகளின் கொண்டு ஏறத்தாழ 40 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவை கட்டமைத்தார்கள்
2001ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 2009ல் குடியிருப்பாளர்கள் வீடு ஒப்படைக்கப்பட்டது 1380 ஏக்கர் நிலப்பரப்பில் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது இது. இத்தீவு தண்டு, கிளை, பிறை என்று மூன்று பாகங்களாக உருவாக்கியுள்ளார்கள் தண்டில் இருந்து 17 கிளைகள் விரிகிறது. இதை வடிவமைத்த நிகில் என்னும்
ரியல்எஸ்டேட் நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும் இது துபாய் அரசாங்க நிறுவனம். இத்தீவை உலகின் சொர்க்கலோகம் என்று சொன்னால் மிகையாகாது. நீங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அவை எல்லாமே இத்தீவில் உள்ளன இங்கு தங்க வீடுகளைத் தவிர உலகின் ஆடம்பரமான ஓட்டல்கள்
Read 16 tweets
11 Sep
அரசு பாம்பு வளர்த்த கதை:-

ஒரு அரசு அலுவலகத்தின் பூட்டி வைக்கப்பட்டு இருந்த Record அறைக்குள் ஒரு பாம்பு புகுந்தது.

அதனை, அவ்வலுவலக ஊழியர் பார்த்து விட்டு, கண்காணிப்பாளரிடம் தெரியப்படுத்தினார்.
கண்காணிப்பாளரும், தனது மேல் அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்க நினைத்தார்
ஆனால் அதிகாரி அலுவல் விஷயமாக ஒரு வாரம் வெளியூர் சென்று இருந்தார். ஒரு வாரம் கழித்து அதிகாரி வந்தவுடன், கண்காணிப்பாளர் அவரிடம், நமது அலுவலகத்திற்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது,
அதனைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலதிகாரியும், "சரி, அந்தப் பாம்பினைப் பிடிக்க வனத்துறைக்கு கடிதம் எழுதுங்கள்" என்று கூறிவிட்டார்.

கண்காணிப்பாளரும், பாம்பினைப் பிடித்து தர வனத்துறைக்கு கடிதம் எழுத, அங்கு இருந்து ஒரு வாரம் கழித்து பதில் வந்தது.

"பாம்பினைப் பிடிக்கும் எங்கள் அலுவலக ஊழியர்கள் தற்சமயம் இல்லை
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!