நமக்கெல்லாம் இது ஒத்துவராது என்று நாமே ஒதுங்கிச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் வேண்டுமென்றே சைக்கோத்தனமாக தேர்வு முறைகளை வைத்திருக்கிறார்கள்.

சரி அவர்கள் படிக்கவில்லையா என்று கேட்காதீர்கள்.
முன்பு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முறையின்படி நடந்த தேர்வுகளில் முதல் நூறு இடங்களில் ஒருவர் கூட அவர்கள் ஏன் அப்பொழுது தேர்வாகவில்லை? எப்படி இப்பொழுது அத்தனை இடங்களையும் அபகரிக்கிறார்கள்?

ஏனென்றால் அப்பொழுது நடந்தது மிகவும் வெளிப்படையான தேர்வு முறை.
1. தேர்வு நடத்தும் மையம் உங்கள் பள்ளியிலேயோ அல்லது அருகில் உள்ள பள்ளிகளிலோதான் நடக்கும், அதில் ஆள் மாறாட்டம் செய்ய வாய்ப்பே இல்லை, மற்ற மாணவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
2. விடைத்தாள் திருத்துவதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். உங்கள் பள்ளி ஆசிரியர் கூட தேர்வுத்தாள் திருத்த சென்றிருப்பார். இந்த மாநிலத்தில் உங்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் தான் உங்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். தேர்வு முடிவிற்கு பிறகு நீங்கள் விடைத்தாள் நகலை வாங்க முடியும்,
மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். சமூகத்தின் அனைத்து பிரிவிலிருக்கும் ஆசிரியர்களும் இந்தப் பிரிவில் இருப்பார்கள்.

3. வெறும் இருப்பிடச்சான்றிதழ் கொடுத்து தமிழக கோட்டாவில் பிஹாரி ஷர்மாக்கள் உங்கள் இடங்களை பறிக்க முடியாது.
4. 85% இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே கிடைக்க கூடிய நிலைமை இருந்தது.

5. தேர்வு நடத்தும் அமைப்பின் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பிடியில் இல்லை.

6. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்.
இப்பொழது நடக்கும் நீட் தேர்வு முறை என்பதின் நோக்கம் நீங்கள் தகுதியுடையவரா என்று பார்ப்பதல்ல, இதன் நோக்கம் இருப்பதில் பெரும்பாலனோரை வடிகட்டுவது, அது நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்.
முறைகேடுகள் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள், சம்மந்தமே இல்லாத நடத்தில் தேர்வு மையங்களை ரேண்டமாக வைப்பதின் மூலம் ஆள் மாறாட்டத்திற்கு துணை போவது.

தேர்வு நடத்தும் CBSE அமைப்பு முழுக்க முழுக்க ஒரே பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருப்பது.
வெளிப்படைத்தன்மை இல்லலாத்தால் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு சாதகமாக செயல்படுவது.

தேர்வுத்தாள் உருவாக்குவதிலோ, திருத்துவதிலோ மாநில அரசின் ஆசிரியர்களுக்கு எந்த பங்கெடுப்பும் இல்லாதது

குஜராத்திற்கு எளிமையான கேள்விகளும் தமிழ்நாட்டிற்கு கடினமாகவும் கேள்வித்தாளை வடிவமைப்பது.
இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை ஏமாற்றி வாய்ப்புகளை திருட்டுத்தனமாக பறிக்க உருவாக்கப்பட்டதே இந்த நீட் தேர்வு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Karthick Ramasamy

Karthick Ramasamy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @karthickmr

24 Sep
பொய்யான ஒரு செய்தியை அவர்களுக்கு சாதகமாக பரப்பும் சாதுரியம் காவிகளை போல வேறு யாருக்கும் வராது.

இந்த விசயத்தை நான் சின்ன வயதில் சில பெரியவர்களிடம் கேட்டிருக்கிறேன். உங்களில் பலரும் கேட்டிருக்கலாம்.

அது
1967ல் திமுக ஆட்சிக்கு வரும்வரை தாலுக்கா ஆபசில் லஞ்சமே கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த லஞ்ச ஊழல் எல்லாம் அறிமுகம் ஆச்சு.

இதை கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் உண்மை போலவே தோன்றும். நாமும் பெரியவர்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள் என நம்பிவிடுவோம். உண்மையில் அந்த பெரியவர்களும் கெட்ட எண்ணத்தில் சொல்லியிருக்க மாட்டார்கள்.
துக்ளக் போன்ற புனிதமான பத்திரிக்கைகளில் படித்திருப்பார்கள். தங்கள் அரசியல் அறிவை காட்டுகிறோம் என்று இந்த பெருசுகள் அள்ளிவிட்டிருக்கும்.

ஆனால் லஞ்சம் ஊழல் என்பது இந்தியர்களிடம் காலம் காலமாக இருப்பது. வெள்ளையர்கள் லஞ்சம் கொடுத்துதான் ஒட்டு மொத்த நாட்டையே கைப்பற்றினர்.
Read 5 tweets
17 Sep
நீங்கள் பெரியார் பெரியார் என்று சொல்வதெல்லாம் வெறும் அரசியலுக்காகவா?
சிறுவயதில் இருந்தே என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது,அது ஊரில் உள்ள பெரியவர்களிடம் அந்தகாலத்தில் இந்த ஊர் எப்படி இருந்தது என்று கதை கேட்பது. எங்கள் வீட்டு பெரியவர்களிடமும் விடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.
எங்கள் தாத்தாவின் அப்பா காலத்தில் எங்களுக்கு என்று எந்த நிலமும் இருந்தது இல்லை. ஊர் பாளையக்காரர்களின் நிலத்தில் விவாசயக் கூலி வேலைதான் பார்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதுதான் தமிழ்நாட்டின் 85% விவசாயிகளின் நிலை அப்பொழுது. ஒட்டு மொத்த விவாசாய நிலங்கள் அத்தனையும் பத்து அல்லது
பதினைந்து சதவிகித ஆட்களிடத்தில் மட்டுமே அப்பொழுது இருந்தது.

காமராசரின் தயவால் என் அப்பாவிற்கு ஆரம்ப பள்ளி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ச்சியான திராவிட அரசுகளின் தயவால் அப்பா, அம்மா இருவருக்கும் அரசு பணி கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Read 5 tweets
29 Aug
மத்யமர் என்று ஒரு முகநூல் குழுமம் இருப்பது நம் நண்பர்கள் பலருக்கும் தெரியும்.

அதிலுள்ள அத்தனை பேரும், நம்ம ஸ்லீப்பர் செல் ஆட்களைத்தவிர ஒரே மாதிரிதான் எழுதுவார்கள். அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 20 வயதாக இருந்தாலும், 60 வயதாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள்.
1.கலைஞர், அண்ணா, பெரியாரை வசைபாடுவது
2. ஆசிரியர் வீரமணி, சுபவீ ஐயா போன்றவர்களை வசைபாடுவது.
3. திமுக தலைவர் ஸ்டாலின் பற்றிய அவதூறு.
4. பட்டியலினத்திற்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் கொடுக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது.
5.அவர்களுக்கு மட்டும் இருக்கும் 10% இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது.
6. இந்தி திணிப்பை ஆதரிப்பது
7. நீட் தேர்வை ஆதரிப்பது.
8. குலக்கல்வித்திட்டத்தை ஆதரிப்பது
9. புதிய கல்விக்கொள்கையை ஆதரிப்பது
10. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டையும் ஆதரிப்பது.
Read 8 tweets
27 Aug
நாங்கள் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு entrance coaching க்காக படித்துக்கொண்டிருக்கும்பொழுது ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதியில் இருந்து நிறைய மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் பகுதியில் இருந்து மருத்துவம் படித்தவர்கள் வெகு குறைவு.
2000ம் பேர் இருக்கும் எங்கள் கிராமத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட மருத்துவப்படிப்பிற்கு சென்றதில்லை.ஆனால் ஜெயங்கொண்டம் பகுதி மாணவர்கள் பல வெற்றிக்கதைகளை சொன்னார்கள். அப்போழுது அந்த பகுதியில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் கூட பலர் சாதித்தனர்
அவர்கள் மிகவும் நம்பிக்கையோடு படித்து பலர் பொது ஒதுக்கீட்டிலேயே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர்.மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, அட்மிசனில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க ஒற்றைச்சாளர முறை போன்றவை இருந்தது.
Read 6 tweets
25 Aug
ஈழப் போராட்டத்தில் இருந்த போராளிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவும் கப்பல் வாங்கவும் நிதியுதவி அளிக்க ஐரோப்பிய, அமெரிக்க, இந்திய பங்குச்சந்தைகளில் கடன் பத்திரங்கள் உருவாக்கப்பட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்று அவர்கள் எதிர்காலத்தில் தனிநாடாக உருவானால் அந்தக் கடனை வட்டியுடன்
திரும்ப முதலீட்டாளர்களுக்கு செலுத்தவேண்டும் என்ற முறையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

ஆனால் அப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் உண்மையில் நடந்துள்ளது. 1820கள் வரை கிரீஸ் துருக்கியின் ஒட்டமான் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்பொழுது கிரேக்கத்தின் விடுதலையை விரும்பி
கிரீஸில் உள்ள போராளிகள் விடுதலை போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்கர்களின் கலாச்சார ரீதியான பாரம்பரியத்தின் மீதுள்ள மரியாதையால் இயல்பாகவே இங்கிலாந்து நாட்டினர் கிரேக்கத்தின் விடுதலையை ஆதரித்தனர்.
ஆங்கிலேயர்களிடம் கிரீஸ் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான மனநிலையை உருவாக்குவதில்
Read 8 tweets
24 Aug
இன்று வரை குஜராத்தில் அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை.

பல வட இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை.

குஜராத்தில் நிலவுடமைச் சமூகமான பட்டேல்கள் இட ஒதுக்கீடு கேட்டுப்பாராடியபோது, குஜராத்தி எழுத்தாளரான ஆகார் பட்டேல் இப்படி எழுதினார்:
“எங்களிடம் ஆங்கிலம் இல்லை.அதனால், இந்தியாவின் புதிய நகர்ப்புற மத்திய வர்க்கத்தால் உருவாக்கப்படும் புதிய சேவை பணித்தொழில்களில் பங்கு பெற முடியவில்லை”
இங்குதான் தமிழர்களின் வாழ்வை மாற்றியமைத்ததில் அறிஞர் அண்ணா முக்கிய இடம்வகிக்கிறார். உலகத்தைப் பார்ப்பதற்கான பெரிய கதவு ஆங்கிலம் இருக்க எதற்கு இந்தியை நாங்கள் படிக்க வேண்டும் என்று. இந்தியை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது மொழியுரிமைச் செயல்பாடு மட்டுமல்ல,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!