லேப்டாப்பிலோ, ஆண்ட்ராய்டு டிவிலயோ, Mi அல்லது அமேசான் firetv stickலயோ YouTube பாக்கும்போது நசநசன்னு விளம்பரங்கள் வருதா? விளம்பரங்களே இல்லாமல் விரும்பிய வீடியோக்கள் பார்க்க பல வழிகள் இருக்கு. ஒவ்வொன்னா பாப்போம்.

#YouTube
#Thread
விக்ரமன் படங்கள் பாத்துருக்கீங்களா? எந்த படத்தை எடுத்துக்கிட்டாலும் அதுல ஒரு பாட்டை fix பண்ணிப்பாங்க. அந்த பாட்டை ஹீரோ ஒரு தடவை ஹீரோயின் ஒரு தடவை, ஹீரோ ஹீரோயின் சேர்ந்து ஒருதடவைன்னு பாடுவாங்க. மெயின் மெட்டை டைட்டில் கார்ட்ல போட்டுப்பாங்க, அதையே சோக BGMமாவும் போட்டுப்பாங்க.
கடைசியா மொத்த கேரக்டர்களும் சேர்ந்து பாடி எண்டு கார்டு போடுவானுக. இதை தான் இப்போ YouTube பண்ணுது. ஆரம்பம் முடிவு மட்டுமில்லாம இஷ்டத்துக்கு இடையிடைல விளம்பரத்தை place பண்ணி பாக்குற அனுபவத்தையே கெடுத்துருது. விளம்பரங்கள் வேணாமா, காசுக்குடுனு அப்பப்போ இளையராஜா அவதாரம் வேற எடுக்குது.
உன் ஆணவத்தை அடக்க ஒருத்தன் வருவான்டான்னு நினைக்கும்போதே YouTube பக்கத்துலயே பானிபூரி கடை போட வந்தவன் தான் Smart YouTube TV. அமேசான் firetv, Mi stick, ஆன்ட்ராய்டு டிவியில் YouTube வீடியோ பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே இந்த app ஒரு வரகரிசி சாதம் தான்.
இது ஒரு third party app தான், Google PlayStoreல கெடைக்காது. ஆனா github கெடைக்கிது. இந்த appப்போட ஸ்பெஷாலிட்டியே தாலிக்கட்டி குடும்பம் நடத்துற Googleலுக்கே தெரியாம YouTubeபை சைட் அடிக்க வைக்கிறது தான்.
சீப்ப ஒழுச்சுவச்சா எப்புடி பாஸ் கல்யாணம் நிக்கும்ன்னா இங்க நிக்கும். Google Servicesசே யூஸ் பண்ண விடலானா எப்புடி அவன் நம்ம details கலெக்ட் பண்ணுவான்? விளம்பரம் குடுப்பான் சொல்லுங்க? Scroll, pop-up, ஆரம்பத்துல, இடைல, முடிவுலன்னு எங்கயும் advt வராது.
Official YouTube appல எப்புடி உங்க accountடை sync செய்வீங்களோ அதே போல தான் இந்த appலயும். எப்புடி பொண்ணுங்க பட்டுன்னு கல்யாணம் ஆனதும் அவங்க பாய் பேஸ்டிய கிழட்டிவிடுறாங்களோ அதே மாதிரி ஏதாவது Google account வச்சு appல Login பண்ணினதும் கிழட்டி விட்டுடலாம்.
Smart YouTube TVல PRO Main, PRO Alt, LITE Main, LITE Altன்னு நாலு mode இருக்கு. நெட் ஸ்பீடுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு mode செலக்ட் பண்ணி பாக்க ஆரம்பிக்கலாம். இதோட பிளேயர் ரொம்ப தனித்துவமானது. எல்லா controlகளும் ஒரே இடத்துல இருக்குறனால அடிக்கடி settings பக்கம் போக தேவை இல்ல.
இதன் settings பக்கம் போய் பாத்தீங்கன்னா எப்பவும் உப்புமாவே போடற பொண்டாட்டி சம்பள நாள் அன்னைக்கி சிக்கன் சூப் வைக்கிறமாதிரி ஏகப்பட்ட features காட்டும். உதாரணமா app open செய்யும்போதே நீங்க subscribe பண்ணின பக்கங்கள் மட்டும் காட்டுற மாதிரி, Music பேஜ்ல boot ஆகற மாதிரி நெறைய...
அடுத்ததா நாம பாக்கப் போறது ஒரு Plug-in. பேரு Magic Actions. பர்சனல்லா எனக்கு ரொம்ப புடிச்சது. சிஸ்டம் யூஸ் பண்ற மீம் கிரேட்டர்னா கண்டிப்பா இந்த Plug-in add பண்ணிக்கோங்க. உங்களுக்கு usualலா கிடைக்கக்கூடிய YouTube viewing அனுபவத்தையே வேற லெவெலுக்கு தரதரன்னு இழுத்துட்டுப் போயிடும்.
Chrome, firefox, Opera போன்ற எந்த பிரௌசர் என்றாலும் பாமக போல் பக்காவாக கூட்டணி அமைக்கக்கூடிய Plug-in இந்த Magic Actions. add செய்து YouTube வெப்சைட்டை ஓபன் செய்த மாத்திரத்தில் வலது மேல் ஓரத்தில் ஒரு ஸ்விட்ச் தோன்றியிருக்கும். அதன்மூலம் black or white modeக்கு மாற்றிக்கொள்ளலாம்.
வெட்டுப்புண், சிரங்கு, தேமல், தோல்வியாதி என்று சகலத்துக்கும் உபயோகப்படும் சைபால் போல (அப்ப்பா, விளம்பரப்படுத்தியாச்சு) Advt block, Cinema mode, AutoHD, Full Screen என்ற எல்லாத்தையும் செவ்வனே செய்யும் ஒரே Plug-in இந்த Magic Actions.
இந்த Plug-in அண்ணன் சீமான் மாதிரி. இது இருந்தா கல்யாணசுந்தரம் ராஜிவ் காந்தின்னு எந்த appம் தேவையில்ல.
7 வருசமா மீம் கிரேட் பண்றேன் அதுலயும் 3 வருசமா YouTube வீடியோகளில் templates எடுக்க யூஸ் பண்றேன். JPEG, PNG ன்னு எந்த format மற்றும் எந்த resolutionலயும் டக்குன்னு SS எடுக்கலாம்
அடுத்த பதிவுல மொபைல்ல YouTube பாக்கும்போது Advt மேல கால் வைக்காம எப்புடி தவ்விப்போயி வீடீயோஸ் பாக்குறதுன்னு விரிவா பாப்போம். நன்றி 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with திடீர் Techie PhD👨🏼‍🎓

திடீர் Techie PhD👨🏼‍🎓 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @nkchandar

16 Aug
மஹேந்திர சிங் தோனி.

சச்சினுக்கு பிறகான காலக்கட்டத்தில் ஏறக்குறைய சச்சினுக்கு நிகரான ரசிகர் ஆதரவுடன் 15 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சுவது என்பது சாதாரணமானதல்ல. அதற்கு தோனி கடந்து வந்த பாதைகளும் சாதாரணமானதல்ல.
#DhoniThePrideOfIndia Image
நான் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த சமையத்தில் fieldingல் எங்க நிக்கிற என்று கேட்ட மாத்திரத்தில் நான் சொன்னது 'Wicket keeping'ண்ணா என்பதே. லாங்கில் நின்றால் பாதி கிரவுண்டை நம் தலையில் கட்டிவிடுவர், கீப்பிங் என்றால் ஸ்டெம்ப் பக்கத்திலேயே நின்றால் போதும் என்று நினைத்து கேட்டேன்.
லாங்கில் நின்றிருந்தால் கூட அவ்வளவு ஓடியிருக்க மாட்டேன் போல, ஒவ்வொரு பந்திற்கும் உக்காந்து எழுந்து பந்தை பாக்கெட் பண்ணி பக்கத்து fielderக்கு எறிந்து சமையத்தில் bowlerருக்கே எறிந்து அடுத்த நாள் நானே கேட்டு லாங் ஆஃப் சென்று செட்டில் ஆனேன்.
Read 17 tweets
4 Jul
Money Management Apps!

வரவு செலவுகளை கண்காணிக்க உதவும் மொபைல் செயலிகள்!

நீங்க செலவு செய்யற பணம் உங்க காலடில கொட்டிக்கெடக்கு, அதை அள்ளியெடுக்குறதும் கிள்ளியெடுக்குறதும் உங்க கைல தானிருக்கு.
#Thread
#MoneyManagementApps
2020 பிப்ரவரி மாசம் நாம யாராவது நெனச்சுப் பாத்துருப்போமா, அடுத்த நாலு மாசத்துக்கு வீட்லயே முடங்கப் போறோம்னு. எனக்கு சாப்பிட கூட நேரமில்ல, கால்ல றெக்கைய கட்டிக்கிட்டு பறந்துக்கிட்டு இருக்கேன்ன்னு சீன போட்டவங்கள கூட றெக்கைய பிரிச்சு hangerல மாட்டி உக்காரவச்சுருச்சு இந்த Quarantine.
வேலையிழப்பு, வருமானமின்மை தாண்டி இந்த Quarantine நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கத்துக்குடுத்துருக்கு. அது இவ்வளவு நாள் நாம செஞ்சுக்கிட்டுருந்ததுல எது ஆடம்பரம் எது அத்தியாவசிய செலவுகள்ன்னு அப்பட்டமா நம்ம கண்ணுல கட்டுனது.
Read 20 tweets
18 Jun
சென்னையில ஒரு பிரண்டு ஈஸ்ட் தாம்பரம்ல ஒரு அபார்ட்மெண்ட் பிளாட் வாங்கலாம்ன்னு பிப்ரவரி மாசமே முடிவு பண்ணி ஒரு பில்டர பார்த்து அட்வான்ஸ்லருந்து லோன் வரை பேசிவச்சுருந்தாரு.
Pandemic, Lockdownன்னு சுழட்டியடிச்சதுல வீடு வேணாம்டா சாமின்னு அட்வான்ஸ் பணம் திரும்பி வாங்க நேத்து அப்பாயிண்மெண்ட் கேட்டு இன்னிக்கி பில்டர் ஆபீஸ் போயிருக்காரு.
போனவரை தடபுடலா வரவேற்துருக்கானுங்க. எப்பவும் கஷ்டமர்களை கொஞ்சம் திமிராவே டீல் பண்ற பிரபலமான பில்டர் அவனுங்க. திடீர் கவனிப்பு கொஞ்சம் கலவரப்படுத்த சந்தேகத்தோட இருந்தவர்கிட்ட..
Read 8 tweets
12 Jun
மை டியர் ஃபிரெண்ட்ஜ்,
Android box பத்தினபதிவு மூலமா subscription இல்லாம LiveTVகளை துல்லியத்தரத்தில் பார்க்கும் ஒரு அற்புத உலகத்திற்கு உங்களை கூட்டிட்டுப்போனேன். அதை நீங்க மறந்துருக்க முடியாது. அதன் தொடர்ச்சியா firetvStickல யூஸ் பண்ண சில appகளை அறிமுகப்படுத்தலாம்ன்னு இருக்கேன். 🙂
இந்த லாக்டவுன்ல அதிகம் கவனம் பெற்ற appனா அது Telegramதான். ஆனானப்பட்ட தமிழ்பாறைகளையே பிரஷர் மாத்திரை போடீங்களா ப்ரோன்னு கேட்டு உக்காரவச்சுருச்சு. இன்னிக்கி உள்ளூர் மற்றும் உலக சினிமான்னு எதுனாலும் Telegramல தேடிட்டு அப்புறமா torrentக்கு செல்பவர்கள் அனேகர்.
ஒன்றரை ஜிபிகளுக்கு மிகாமல் துல்லிய தரத்துடன் 720pகளில் கண்முன் விரியும் படங்களை வெறும் 6inch மொபைல் திரையான சின்ன வட்டத்துக்குள் அடைத்து பார்க்கலாமா? சரி, Telegram சேனல்களில் வரும் படங்களை டவுன்லோட் பண்ணாம firetv stick மூலமா டிவில பாக்க வழி இருக்கானா? இருக்கு.
Read 18 tweets
5 Dec 19
Amazon fireTV stick - Google Chromecast - Android box
---------------------------------------------------------------------------
Single penny செலவில்லாம 1000+ சேனல்களை HD/4K தரத்துல பார்க்கணுமா? அப்ப மேற்கொண்டு படிங்க.
#Thread
1990 தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட பதினஞ்சு வருசத்துக்கு மேல கேபிள் டிவி மோனோபோலியா கோலோச்சிட்டுருந்ததுக்கு அப்புறம் சாவகாசமா வந்து சேர்ந்தது தான் DTH. ஆரம்பத்துல Installation charges குடுத்தது போக மாசாமாசம் ஒரு குறிப்பிட்ட தொகை சந்தாவாக குறுத்துட்டு இருக்குறது பத்தி அலட்டிக்கல
காரணம் கேபிள் டிவியை விட மேம்பட்ட தரத்துல சேனல்கள் தெரியுறதுனால கூட இருக்கலாம். போக DTHல டிவி பார்ப்பது ஒரு சில வீடுகள்ல ஒரு கவுரவமாக வேற பார்க்கப்படுது.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!