Wolfrik Profile picture
15 Sep, 19 tweets, 3 min read
மருத்துவகல்வி சுதந்திர இந்தியாவில் முதலில் தரமானதாக இருந்தது, இந்திரா காலம் வரை கூட கொஞ்சம் பரவாயில்லை

இந்திராவின் அந்திம காலங்களில் கல்வி வியாபரம் இங்கு ஆரம்பமானது, தமிழ்நாட்டில் அதை தொடங்கி வைத்தவர் ராம்சந்தர்

ராம்சந்தருக்கு சுய அறிவு கொஞ்சம் கிடையாது, துதிபாடிகள் "உங்களை போல
வருமாண்ணே" என சொல்லி நயவஞ்சகமாக சில தந்திர அணுகுமுறைகளை செய்தால் அவரிடம் சாதிக்கலாம்

அப்படி கல்வியினை விற்போம் அரசு நிறுவணமும் இருக்கட்டும்,தனியார் கல்வியும் இருக்கட்டும் பணம் இருப்பவன் தனியாரிடம் படிக்கட்டும் பணமில்லாதவன் அரசு நிறுவணத்தில் படிக்கட்டும் என மூளை சலைவை செய்யபட்டது
மூளை இருப்போருக்கே இத்திட்டம் மேம்போக்காக நல்லதிட்டமாக இருக்கும் பொழுது மூளை இல்லாத கோஷ்டிக்கு எப்படி புரியும்?

ராம்சந்தரின் சிந்தனை அண்ணாயிசம் தொடங்கி ஈழவிவகாரத்தில் அவர் வழங்கிய குபீர் காமெடிகளிலே தெரிந்த விஷயம்

ஆம், பணம் இருப்பவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வி என
கல்வி அவர்காலத்தில்தான் பிரிந்தது, அரசு பள்ளி மாணவர்கள் பின் தங்க தொடங்கியது அப்பொழுதுதான்

ராம்சந்தரை குளிர்விக்க என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் துதிபாடி கூட்டம் செய்தது

"அண்ணே உங்க பெயர்ல ராமசந்திரா யுனிவர்சிட்டிண்ணே, அண்ணே அம்மா பெயர்ல சத்யபாமா காலேஜ்ணே.. அண்ணே உங்க
பொண்டாட்டி பெயர்ல ஒண்ணு இருக்கட்டுமாண்ணே.." என்ற பல குரல்கள் கேட்க தொடங்கின‌

கல்வி வியாபரம் தொடங்கியது, அதுவரை சும்மா சுற்றிகொண்டிருந்தவனெல்லாம் "கல்வி தந்தை" என அடையாளமிட தொடங்கியது அப்பொழுதுதான்

ஜேப்பியார், ராமசந்திர உடையார், எஸ்.ஏ ராஜா என ஏகபட்ட கல்விதந்தைகளின் தொடக்க காலம்
ராம்சந்தர் காலமே

பின் வந்த சமூக நீதி காவலர் கருணாநிதி இதில் உள்ள கொளுத்த லாபத்தை கண்டார், அவர் கட்சியினருக்கும் கல்லூரிகள் வந்தன‌

பின் ஜெயாவும் கருணாநிதியும் வாரி வாரி கல்லூரிகளை வளர்த்தனர், புற்றீசல் போல கல்லூரியும் பள்ளிகளும் பெருகின, வசூல் பெருகியது

திமுக, அதிமுக என எல்லா
கட்சியும் பினாமி பெயரில் கல்லூரி வசூலில் குளித்தன. ஆனால் கல்வி தரம் என்பது தாழகிடந்தது.

பேராசியருக்கான தரமோ தேர்வோ தகுதியோ இல்லா நிலையில் குப்பை பேராசிரிய பெருமக்கள் அவர்களை விட குப்பைகளை உருவாக்கினர்

இந்நிலையில் மத்தியில் நிலையில்லா ஆட்சி இல்லாமல் போயிற்று,இதனால் திமுக தயவில்
ஆட்சி நடக்க இஷ்டத்துக்கு இங்கு அல்லேலூயா சபைகள் போல பொறியியல் மருத்துவ கல்லூரிகள் வந்தன‌

பொறியியல் கல்லூரிகளுக்கு இன்னொரு யோகம் ஐடி கம்பெனி வடிவில் வந்தது, உலகமெல்லாம் ஏற்பட்ட கணிபொறி யுகத்தின் அடிமைகள் சப்ளையினை தமிழக கல்லூரிகள் செய்தன‌

அந்த அடிமைகள் உழைப்பார்களே தவிர
ஒரு மண்ணாங்கட்டியும் உருவாக்க தெரியாது, கவனியுங்கள் சீன ஐடி கோஷ்டி டிக்டாக் தொடங்கி அலிபாபா வரை ஏகபட்ட செயலிகளை செய்து உலகை கலக்கிய பொழுது தமிழக ஐடி கோஷ்டிகள் காண்டம் சர்சை முதல் பல சர்ச்சையில் சிக்கின‌

இங்கு தரம் அப்படி

இப்படி ஐடி அடிமைகளை தவிர தரமான ராக்கெட் விஞ்ஞானி ,
எந்திரவியல் பொறியாளர், எலக்ட்ரானிக்ஸ் விற்பனர் என யாரையும் இந்த குப்பை கல்லூரிகள் உருவாக்கவில்லை, தரம் அவ்வளவு மோசமாயிற்று

இதே நிலைதான் மருத்துவ கல்லூரிக்கும் வந்தது, அது மக்கள் உயிரோடு சம்பந்தபட்ட விஷயம் அல்லவா?

இதில் இந்தியா மட்டும் தனித்து நின்று "அவன் இவன்" ஆர்யா போல
"நீ டாக்டர் , நீ ஸ்பெஷலிஸ்ட், நீ சரிஜரி ஸ்பெஷலிஸ்ட், நீ கைனி" என ஆளாளுக்கு பட்டம் கொடுக்க முடியாது , உலக மருத்துவ கழகத்தின் விதிகளுக்குள் அடங்க வேண்டும்

இல்லாவிடில் ரஷ்ய மருத்துவ கோஷ்டி உலகளவில் தள்ளிவைக்கபடுவது போல் ஆகிவிடும்

இதனால் இந்தியா நீட் தேர்வினை கொண்டுவந்தது,
அது 2012 வாக்கில் மத்திய அரசால் பரீசிலனையில் இருந்த பொழுது அதை ஆதரித்த கட்சி திமுக,அப்பொழுது அது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது

பின் பாஜக அரசு அதை அமுல்படுத்தியது

இப்பொழுது தனியார் கல்லூரியின் கைகளில் இருந்த மருத்துவ கல்வி கொள்ளையினை நீட் உடைக்கின்றது,முன்பு மாநில மக்களுக்கும்
இல்லாமல் அடுத்த மாநிலம்,அடுத்த நாடு என சீட் பல கோடிகளுக்கு விற்கபட்டது

நீட் தேர்வு வந்துதான் அந்தந்த மாநில மக்களுக்கு 85% இடம் கிடைக்கிறது அதுவும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும்,தகுதியின் அடிப்படையிலும் கிடைகின்றது

இது போக 15% வெளி மாநிலத்திலும் இடம் கிடைக்கிறது,
அந்த வாய்ப்பு 4 முறை உண்டு

உண்மையில் இதுதான் செய்யபட வேண்டிய விஷயம், இதில் மாணவர் நலன் பாதிக்கபடவில்லை மாநில நலனோ, இட ஒதுக்கீடோ பாதிக்கபடவில்லை மாறாக காக்கபட்டிருக்கின்றது

இதில் மாணவர் பின் தங்கினால் அதற்கு ராம்சந்தர் காலத்தில் கொண்டுவந்த பணக்காரனுக்கு ஒரு கல்வி ,
ஏழைக்கு ஒரு கல்வி என்பதுதான் விஷயம்

இந்தி படிக்காததும், தமிழக அரசு மாணவர்கள் ஆங்கிலத்தில் பின் தங்கியதுமே சிக்கலுக்கு காரணம், இன்னொன்று கல்வி திட்டம்

நீட் தேர்வுக்கு தகுதியானபடி இங்கு பாடதிட்டம் மாற்றபட வேண்டும் புதிய கல்வி கொள்கை அதைத்தான் செய்கின்றது
இதெல்லாம் காலமாற்றம் வருங்கால கல்வி முறை இப்படித்தான் தேர்வும் போட்டியுமாக இருக்கும்

நீட் தேர்வும் புதிய கல்விமுறையும் வருங்காலத்துக்கு மாணவர்களை அழைக்கின்றன், திமுக திராவிட கோஷ்டி கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு அழைத்து செல்ல விரும்புகின்றன‌
ஆழ யோசியுங்கள், வருங்கால தலைமுறை வர்க்க பேதமின்றி எழும்ப வேண்டுமானால் எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டுமானால் புதிய கல்வி கொள்கையும் இந்தியும் இன்னும் பலவும் வந்து இங்கு தனியார் கல்வி கொள்ளையினை ஒழிக்க வேண்டும்
அது அல்லாது ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்காமல் அழிச்சாட்டியம் செய்வோம் என்றால் அங்கு குழப்பமே மிஞ்சும்

அப்படி குழப்பாமல் இருக்க ஒன்று நாட்டோடு இணைந்து பயணிக்க வேண்டும் அல்லது தனிநாடு கோர வேண்டும், அது நடக்குமா?
ஆக இதை இரண்டும் செய்யாமால் குழப்பி அடிப்பது திமுக போன்ற முதலைகள் நிரம்பிய கட்சிக்கே லாபம், திமுக தனிநாடு கோராமல் இந்தியாவுக்குள் இருந்து குழப்பம் விளைப்பதின் உள்நோக்கம் அறிந்தால் உங்களுக்கே தெளிவு வரும், இந்த இம்சைகளை புறந்தள்ளுவீர்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Wolfrik

Wolfrik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Wolfrik1

24 Sep
தமிழக அரசியல் நிலை எப்படி இருக்கின்றதென்றால் யார் என்ன சொன்னாலும் அடுத்த ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்குத்தான் பிரகாசமாக இருக்கின்றது, அதை மறுக்க முடியாது

இந்த சமூக ஊடகமெல்லாம் வெறும் 2% கூட மக்கள் வராத இடம், மீதி 98% வாக்குவங்கி இதற்கு வெளியேதான் இருக்கின்றது,
அங்கு சூழலே வேறு.

அதிமுகவினை பொறுத்தவரை 10 வருடம் இருந்தாயிற்று இன்னும் அதை நீட்டிப்பது சரியல்ல, சரியான தலமை இல்லா நிலையில் உட்கட்சி தகறாறும் உள்ள நிலையில் அவர்களுக்கு வெற்றி எளிதில் சாத்தியமில்லை

வாய்ப்பு திமுகவுக்கு உண்டு ஆனால் அதன் கடந்த கால சரித்திரம் என்ன சொல்கின்றது
திமுக ஒரு காலமும் தனியாக வென்ற கட்சி அல்ல, அதுவும் ராம்சந்தரின் பிரிவுக்கு பின் கூட்டணி இல்லாமல் வென்ற கட்சி அல்ல‌

இதை நன்கு உணர்ந்துதான் கருணாநிதி கூட்டணியில் கவனமாக இருப்பார், நம்புகின்றீர்களோ இல்லையோ இப்பொழுது இருந்திருந்தால் பெரும் கூட்டணியினை ஆட்சிக்கு எதிரான அறிக்கை என
Read 9 tweets
24 Sep
அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது : செய்தி

அநேகமாக வசனம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்..

"கண்ணா நான் துண்டு சீட்டு பார்த்து பேசுறவன் இல்லே, துண்டு ரெண்டு வெட்டு ஒண்ணுண்ணு பேசுறவன்.." Image
"இன்னைக்கி நாம செய்ற பாவமெல்லாம் நாளைக்கி நம்ப பிள்ளைகள் ரூபத்துல வந்து பழிவாங்கும்."

"இங்கபாரு புகழ் உச்சத்துல இருக்கிறவன் புள்ளைகள இல்லாமலே இருந்திரணும், அப்படி இருந்தாலும் நம்ப தொழிலுக்கும் புகழுக்கும் வாரிசாக்க கூடாது, அது ஆண்டவனுக்கே புடிக்காது"
"அப்பன் விட்டுட்டு போன மந்தைய மேய்க்கிறது திறமை இல்லை, தனக்குன்னு ஒரு மந்தைய உருவாக்குறதுதான் திறமை"

"நான் 300 கோடி கொடுத்து ஒரு எஜனான தேடுறவன் இல்ல, 300 கோடி பேரு என் பின்னால வரவைக்கிற வேலைக்காரன்."
Read 7 tweets
24 Sep
அரசியலுக்கு லாயக்கில்லாதவர் எனும் முழு தகுதியினை பெற்றுவிட்டார் ராகுகாந்தி, இவர் தேசத்தின் மிகபெரிய ஆபத்து

இந்த உலகத்தின் ஒவ்வொரு நாடும் சுயநலமானது, அவர்களின் தேவைக்கும் வாய்ப்புக்கும் மட்டுமே நட்பு பாராட்ட கூடியது

இங்கு "சமாதானத்தை விரும்பினால் முதலில் பலசாலியாக
இருத்தல் வேண்டும்" என்பது பொதுவிதி, அதுவும் அண்டை நாடுகள் பலம் பெருகும் பொழுது நாமும் பலம் பெற்றே தீரவேண்டும்

காங்கிரஸ் எங்கே நல்லுறவினை வளர்த்தது என்பதுதான் தெரியவில்லை

பாகிஸ்தானுடன் தீரா பகைக்கு காங்கிரஸ் நடத்திய 3 போர்களே காரணம். இலங்கையில் நடத்த அத்தனை குழப்பங்களுக்கும்
காங்கிரஸே காரணம்

இங்கு சில நாட்டு பகைகள் தானாக வரும், பாகிஸ்தானும் சீனாவும் அப்படி. சில பகைகள் உருவாக்கபடும் இலங்கை உள்பட பல நாடுகள் அப்படி

சரி காங்கிரஸ் பலமான நல்லுறவினை வைத்திருந்தால் ஏன் இந்திராவும் சாஸ்திரியும் நேருவும் போர் நடத்தியிருக்க வேண்டும்,
Read 6 tweets
24 Sep
உன் வீட்டின் முன்வாசலை எதிர்வீட்டுக்காரன் ஆக்கிரமிக்கின்றான், விடாத சண்டையிடு நான் உன்னோடு இருக்கின்றேன் என தூண்டிவிடும் ஒருவன், அப்படி ஒரு சண்டை நடக்கும் பொழுது பின்வாசலை ஆக்கிரமித்தால் எப்படி இருக்கும்?

அப்படி இருக்கின்றது நேபாள நிலமை

நேபாள சீன சிக்கல் 1950களில் தோன்றிற்று,
இந்தியாவும் பலவீனமாக இருந்த நிலையில் நேபாளம், பூட்டான், சிக்கிம், பர்மா போன்ற நாடுகள் சீனா சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அமைதியானது

1962லே நேபாளத்தை மிரட்ட தொடங்கியிருந்தது சீனா, மிக இக்கட்டான நிலையில் இருந்த நேபாள மன்னர் ஒருமாதிரி சமாளித்து சென்றுகொண்டிருந்தார்
இந்திய சீனபோரின் பொழுது நேபாள கூர்க்காக்கள் அடங்கிய பிரிவினைத்தான் முதலில் இந்தியா களத்துக்கு அனுப்பியது, ஆனால் "ஏ நேபாள சகோதரர்களே, நாமெல்லாம் ஒரே ரத்தம்" என சீனா உணர்ச்சியினை தூண்டிவிட ஆரம்பித்தது இதன் பின்பே விழித்த இந்தியா கூர்க்காக்களை திரும்ப அழைத்து வேறு பிரிவுகளை அனுப்பி
Read 9 tweets
24 Sep
சீப்புக்கு இப்பொழுது முற்றியே விட்டது

ஒரு புறாவுக்காக தன் உடலையே கொடுத்த சிபிசோழன் வாழ்ந்த மண் இது

கொல்லாமை, புலால் மறுத்தல் என உயிர்களை கொல்லாமை பற்றி இரு அதிகாரங்களை எழுதிய வள்ளுவன் பிறந்த மண் இது

தமிழரின் உணவு பெரும்பாலும் சைவமாகவே இருந்தது என்பதற்கு ஏகபட்ட ஆதாரங்கள் உண்டு, Image
அவர்கள் போற்றிய ஜீவ‌ காருண்யம் பெரிதாகவே இருந்தது

அசைவம் உண்டால் கோவிலுக்கு வராதே என விலக்கி வைத்த சமூகம் இது , அது இன்றும் உண்டு

கறிசோறு தமிழன் கலாச்சாரம் என சொன்னவன் எவன்? முதலில் சோறே தமிழனின் முழு உணவு அல்ல, பல்வேறு தானியங்களில் அதுவும் ஒன்றாய் இருந்தது
இதில் கறிகுழம்பு தமிழரின் அடையாளம் என எங்கிருந்து சொல்ல முடியும்? அப்படியே பாணிபூரி வடக்கத்திய உணவாம்

பாணிபூரி ஒரு சிற்றுண்டி வகை என்பது கூடவா தெரியாது

மனிதர் நன்றாக சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருக்கும் போல, மீடியா வேலையினை விட்டுவிட்டு
Read 4 tweets
23 Sep
வாலியின் பல வரிகள் அப்படியே பலித்துவிடுவது அவருக்கான வரம், ராமசந்திரனுக்கு அவர் எழுதிய பல வரிகள் அப்படியே பலித்தன‌

இப்பொழுது ஒரு பாடல் பார்த்து கொண்டிருக்கின்றேன், ராம்சந்தரும் கோமளவல்லி எனும் ஜெயலலிதாவும் குறவன் குறத்தி பாடலுக்கு ஆடிகொண்டிருக்கின்றார்கள்
ராம்சந்தரும் இடுப்பை எல்லாம் அசைத்து ஆடிகொண்டிருக்கின்றார், அவரை பார்த்தபின்புதான் பாக்கியராஜூக்கும் இன்னும் ராஜேந்தர் போன்ற பலருக்கும் தன்னம்பிக்கை பொத்து கொண்டு வந்திருக்க வேண்டும்

பாடலில் வாலியின் வரிகளை ஜெயலலிதா பாடுகின்றார்
"ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்"

அது பலித்துவிட்டது நிஜம், கடைசிவரை இருவருக்குமே குழந்தைகள் இல்லை அதைவிட முக்கியம் அந்த வரிகள் கருணாநிதியினை கடைசிவரை தூங்கவிட்டிருக்காது.

வாலி ஜெயலலிதாவுக்கு எத்தனையோ பாடல்களை எழுதினார்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!