Wolfrik Profile picture
16 Sep, 13 tweets, 2 min read
திமுக இரு இடங்களில் கடுமையாக சொதப்பியிருக்கின்றது, முதலில் தமிழ்நாட்டு சட்டமன்ற தொடரில் நீட் பிரச்சினையினை மிக பெரிதாக அது எழுப்பியது

உண்மையில் திமுக எழுப்பியிருக்க வேண்டிய விவகாரம் கொரோனா கால நடவடிக்கையும் அதில் நடக்கும் ஊழலும்
நிச்சயம் மிகபெரும் ஊழலும், ஏமாற்றும் ஒரு நிச்சயமற்ற சிகிச்சைமுறையும் தமிழகத்தை கதிகலங்க வைத்து கொண்டிருக்கின்றன, திமுக அதை தொட்டிருக்கலாம்

இன்னொன்று பிரதமரின் விவசாயிகளுக்கான‌ நிதியிலே இங்கு ஊழல் நடந்ததென்றால், தமிழக அரசின் பண விநியோக திட்டம் எப்படி இருக்கும்?
வெள்ளை அறிக்கை வேண்டும் என கேட்டிருக்கலாம்

அதையும் விட்டுவிட்டார்கள், காரணம் அதற்கெல்லாம் அறிவு வேண்டும்

நீட் என கிளம்பி சென்ற திமுக கோஷ்டிக்கு, அட்டகாசமாக பதிலை செவிட்டில் அடித்து சொல்லியிருக்கின்றது அதிமுக அரசு

நீட்டில் செத்தவர்களுக்கு அஞ்சலில் என திமுக கிளம்பியபொழுதே
அதை யாரும் ரசிக்கவில்லை, தொடர்ந்து நீட்டை ஒழிக்க வேண்டும் என திமுக‌ நெருக்கடி கொடுத்ததை அனாசயமாக எதிர்கொண்டது பழனிச்சாமி & கோ

"7 மாதத்தில் நீட்டை எப்படி ஒழிப்பீர்கள்? உங்களிடம் உள்ள செயல்திட்டம் என்ன? நீங்கள் என்ன தனிநாடு ஆகிவிட முடியுமா? இங்கு நீட் செல்லாது என
சொல்லிவிட முடியுமா? , நீதிமன்றம்தானே செல்லமுடியும் , அதைத்தான் நாங்களும் செய்தோம்

தமிழ்நாட்டு மாணவர்களை பயமுறுத்தி கொன்ற கொலைகாரர்கள் நீங்கள்" என அதிமுக கேட்ட கேள்விக்கு திமுகவிடம் பதில் இல்லை

பதிலே இல்லை என்பதால் வழக்கம் போல ஓன்..டூ..திரி என சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டார்கள்
அப்படியே தங்கள் உறுப்பினரெல்லாம் இருக்கின்றார்களா? யாராவது பாஜக எம்.எல்.ஏ என உள்ளே உட்கார்ந்திருக்கின்றாரா? என்பதை உறுதிபடுத்திவிட்டும் வந்துவிட்டார்கள்

தமிழ்நாட்டில் இந்த காமெடியென்றால் டெல்லியில் அடுத்த காமெடி

டெல்லியில் 1962க்கு பின், அதாவது நேரு காலத்துக்கு பின்
சீன சிக்கல் எதிரொலித்த நிலையில் அனைவரின் பார்வையும் ராஜ்நாத்சிங் மேலேயே இருந்தது. பாராளுமன்றம் என்பது அரசு தன் நிலைப்பாட்டை விளக்கும் இடம் என்பதால் பெரும் கவனம் கூடியிருந்தது

இந்தியா தன் நிலைபாட்டை, உலகமே கவனிக்கும் நிலையில் மிக பொறுப்பாக சொன்னது, ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கபட்ட
வார்த்தைகளை பேசினார் , சீனாவுக்கு தோல்வி இந்தியாவுக்கு பெருவெற்றி என்றெல்லாம் அவர் பேசவில்லை

இந்திய நிலம் எதுவும் ஆக்கிரமிக்கபடவில்லை, ராணுவம் மிக திறமையாக தியாகத்துடன் எல்லையினை உயிரினும் மேலாக காத்து நிற்கின்றது என்பதை மட்டும் சொன்னார்
இந்த முக்கிய கூட்டத்தில் டி.ஆர் பாலுவும் பேசியதுதான் காமெடி

இந்தியாவின் எல்லா மாநிலமும் ஏற்றுகொண்ட எதையுமே ஏற்ககூடாது என்பது திமுகவின் கொள்கை என்பதை புரிந்த எல்லா கட்சிகளும் அமைதி காத்தன காங்கிரஸ் உட்பட‌

டி.ஆர் பாலு மிக சீரியசாக "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் சாவுகள் நடக்கின்றன"
என சீறியபடி சபையினை பார்த்தார்

சபை "ம்ம்ம் அப்புறம்" என அமைதியாக கேட்டது, சிலர் "ஓஓ திமுகவா .. நோ வொண்டர்" என அமைதியாக இருந்து கொண்டனர்

திமுகவினை யாரும் கண்டு கொள்ளா நிலையில் சம்பிரதாய பேச்சை முடித்து கொண்டு அமர்ந்துவிட்டது திமுக‌
ஆம், தமிழ்நாட்டில் சாகின்றார்கள் என திமுக புலம்புவது புதிதா? என்ன?

ஒரு காலத்தில் திராவிட நாட்டுக்கு சாகின்றார்கள், பின் இந்திக்கு சாகின்றார்கள், பின் ஈழத்துக்கு சாகின்றார்கள் என எவ்வளவு சாவு புகார்களை அவர்கள் எழுப்பிய பாராளுமன்றம் அது
அதனால் என்ன ஆனது ஒன்றுமே ஆகவில்லை, திமுக வாசிக்கும் சாவு பட்டியெலெல்லாம் அர்த்தமில்லாத சுயநல அரசியல் என்பது என்றோ புரிந்துவிட்ட ஒன்று என்பதால் பாராளுமன்றம் திமுகவினை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை

சட்டசபை பாராளுமன்றம் என இரு இடங்களிலும் மூக்கில் குத்துவாங்கி
மல்லாக்க கிடக்கின்றது திமுக‌

மிக சோகத்தில் இருக்கும் திமுக‌ ஆர்மி ஜெனரல் அந்த சைக்கிளை கூட எடுக்க மனமில்லாமல் மூலையில் நிறுத்திவிட்டார் என்கின்றன செய்திகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Wolfrik

Wolfrik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Wolfrik1

24 Sep
தமிழக அரசியல் நிலை எப்படி இருக்கின்றதென்றால் யார் என்ன சொன்னாலும் அடுத்த ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்குத்தான் பிரகாசமாக இருக்கின்றது, அதை மறுக்க முடியாது

இந்த சமூக ஊடகமெல்லாம் வெறும் 2% கூட மக்கள் வராத இடம், மீதி 98% வாக்குவங்கி இதற்கு வெளியேதான் இருக்கின்றது,
அங்கு சூழலே வேறு.

அதிமுகவினை பொறுத்தவரை 10 வருடம் இருந்தாயிற்று இன்னும் அதை நீட்டிப்பது சரியல்ல, சரியான தலமை இல்லா நிலையில் உட்கட்சி தகறாறும் உள்ள நிலையில் அவர்களுக்கு வெற்றி எளிதில் சாத்தியமில்லை

வாய்ப்பு திமுகவுக்கு உண்டு ஆனால் அதன் கடந்த கால சரித்திரம் என்ன சொல்கின்றது
திமுக ஒரு காலமும் தனியாக வென்ற கட்சி அல்ல, அதுவும் ராம்சந்தரின் பிரிவுக்கு பின் கூட்டணி இல்லாமல் வென்ற கட்சி அல்ல‌

இதை நன்கு உணர்ந்துதான் கருணாநிதி கூட்டணியில் கவனமாக இருப்பார், நம்புகின்றீர்களோ இல்லையோ இப்பொழுது இருந்திருந்தால் பெரும் கூட்டணியினை ஆட்சிக்கு எதிரான அறிக்கை என
Read 9 tweets
24 Sep
அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது : செய்தி

அநேகமாக வசனம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்..

"கண்ணா நான் துண்டு சீட்டு பார்த்து பேசுறவன் இல்லே, துண்டு ரெண்டு வெட்டு ஒண்ணுண்ணு பேசுறவன்.." Image
"இன்னைக்கி நாம செய்ற பாவமெல்லாம் நாளைக்கி நம்ப பிள்ளைகள் ரூபத்துல வந்து பழிவாங்கும்."

"இங்கபாரு புகழ் உச்சத்துல இருக்கிறவன் புள்ளைகள இல்லாமலே இருந்திரணும், அப்படி இருந்தாலும் நம்ப தொழிலுக்கும் புகழுக்கும் வாரிசாக்க கூடாது, அது ஆண்டவனுக்கே புடிக்காது"
"அப்பன் விட்டுட்டு போன மந்தைய மேய்க்கிறது திறமை இல்லை, தனக்குன்னு ஒரு மந்தைய உருவாக்குறதுதான் திறமை"

"நான் 300 கோடி கொடுத்து ஒரு எஜனான தேடுறவன் இல்ல, 300 கோடி பேரு என் பின்னால வரவைக்கிற வேலைக்காரன்."
Read 7 tweets
24 Sep
அரசியலுக்கு லாயக்கில்லாதவர் எனும் முழு தகுதியினை பெற்றுவிட்டார் ராகுகாந்தி, இவர் தேசத்தின் மிகபெரிய ஆபத்து

இந்த உலகத்தின் ஒவ்வொரு நாடும் சுயநலமானது, அவர்களின் தேவைக்கும் வாய்ப்புக்கும் மட்டுமே நட்பு பாராட்ட கூடியது

இங்கு "சமாதானத்தை விரும்பினால் முதலில் பலசாலியாக
இருத்தல் வேண்டும்" என்பது பொதுவிதி, அதுவும் அண்டை நாடுகள் பலம் பெருகும் பொழுது நாமும் பலம் பெற்றே தீரவேண்டும்

காங்கிரஸ் எங்கே நல்லுறவினை வளர்த்தது என்பதுதான் தெரியவில்லை

பாகிஸ்தானுடன் தீரா பகைக்கு காங்கிரஸ் நடத்திய 3 போர்களே காரணம். இலங்கையில் நடத்த அத்தனை குழப்பங்களுக்கும்
காங்கிரஸே காரணம்

இங்கு சில நாட்டு பகைகள் தானாக வரும், பாகிஸ்தானும் சீனாவும் அப்படி. சில பகைகள் உருவாக்கபடும் இலங்கை உள்பட பல நாடுகள் அப்படி

சரி காங்கிரஸ் பலமான நல்லுறவினை வைத்திருந்தால் ஏன் இந்திராவும் சாஸ்திரியும் நேருவும் போர் நடத்தியிருக்க வேண்டும்,
Read 6 tweets
24 Sep
உன் வீட்டின் முன்வாசலை எதிர்வீட்டுக்காரன் ஆக்கிரமிக்கின்றான், விடாத சண்டையிடு நான் உன்னோடு இருக்கின்றேன் என தூண்டிவிடும் ஒருவன், அப்படி ஒரு சண்டை நடக்கும் பொழுது பின்வாசலை ஆக்கிரமித்தால் எப்படி இருக்கும்?

அப்படி இருக்கின்றது நேபாள நிலமை

நேபாள சீன சிக்கல் 1950களில் தோன்றிற்று,
இந்தியாவும் பலவீனமாக இருந்த நிலையில் நேபாளம், பூட்டான், சிக்கிம், பர்மா போன்ற நாடுகள் சீனா சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அமைதியானது

1962லே நேபாளத்தை மிரட்ட தொடங்கியிருந்தது சீனா, மிக இக்கட்டான நிலையில் இருந்த நேபாள மன்னர் ஒருமாதிரி சமாளித்து சென்றுகொண்டிருந்தார்
இந்திய சீனபோரின் பொழுது நேபாள கூர்க்காக்கள் அடங்கிய பிரிவினைத்தான் முதலில் இந்தியா களத்துக்கு அனுப்பியது, ஆனால் "ஏ நேபாள சகோதரர்களே, நாமெல்லாம் ஒரே ரத்தம்" என சீனா உணர்ச்சியினை தூண்டிவிட ஆரம்பித்தது இதன் பின்பே விழித்த இந்தியா கூர்க்காக்களை திரும்ப அழைத்து வேறு பிரிவுகளை அனுப்பி
Read 9 tweets
24 Sep
சீப்புக்கு இப்பொழுது முற்றியே விட்டது

ஒரு புறாவுக்காக தன் உடலையே கொடுத்த சிபிசோழன் வாழ்ந்த மண் இது

கொல்லாமை, புலால் மறுத்தல் என உயிர்களை கொல்லாமை பற்றி இரு அதிகாரங்களை எழுதிய வள்ளுவன் பிறந்த மண் இது

தமிழரின் உணவு பெரும்பாலும் சைவமாகவே இருந்தது என்பதற்கு ஏகபட்ட ஆதாரங்கள் உண்டு, Image
அவர்கள் போற்றிய ஜீவ‌ காருண்யம் பெரிதாகவே இருந்தது

அசைவம் உண்டால் கோவிலுக்கு வராதே என விலக்கி வைத்த சமூகம் இது , அது இன்றும் உண்டு

கறிசோறு தமிழன் கலாச்சாரம் என சொன்னவன் எவன்? முதலில் சோறே தமிழனின் முழு உணவு அல்ல, பல்வேறு தானியங்களில் அதுவும் ஒன்றாய் இருந்தது
இதில் கறிகுழம்பு தமிழரின் அடையாளம் என எங்கிருந்து சொல்ல முடியும்? அப்படியே பாணிபூரி வடக்கத்திய உணவாம்

பாணிபூரி ஒரு சிற்றுண்டி வகை என்பது கூடவா தெரியாது

மனிதர் நன்றாக சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருக்கும் போல, மீடியா வேலையினை விட்டுவிட்டு
Read 4 tweets
23 Sep
வாலியின் பல வரிகள் அப்படியே பலித்துவிடுவது அவருக்கான வரம், ராமசந்திரனுக்கு அவர் எழுதிய பல வரிகள் அப்படியே பலித்தன‌

இப்பொழுது ஒரு பாடல் பார்த்து கொண்டிருக்கின்றேன், ராம்சந்தரும் கோமளவல்லி எனும் ஜெயலலிதாவும் குறவன் குறத்தி பாடலுக்கு ஆடிகொண்டிருக்கின்றார்கள்
ராம்சந்தரும் இடுப்பை எல்லாம் அசைத்து ஆடிகொண்டிருக்கின்றார், அவரை பார்த்தபின்புதான் பாக்கியராஜூக்கும் இன்னும் ராஜேந்தர் போன்ற பலருக்கும் தன்னம்பிக்கை பொத்து கொண்டு வந்திருக்க வேண்டும்

பாடலில் வாலியின் வரிகளை ஜெயலலிதா பாடுகின்றார்
"ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்"

அது பலித்துவிட்டது நிஜம், கடைசிவரை இருவருக்குமே குழந்தைகள் இல்லை அதைவிட முக்கியம் அந்த வரிகள் கருணாநிதியினை கடைசிவரை தூங்கவிட்டிருக்காது.

வாலி ஜெயலலிதாவுக்கு எத்தனையோ பாடல்களை எழுதினார்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!