கவி, கேரளா

கேரளாவின் அறியப்படாத அற்புத மலைவாசஸ்தலம் இது. கவி மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. இது அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும்
சுற்றுலாபயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. சபரிமலையில் மகரஜோதி தோன்றும் இடமான பொன்னம்பலமேட்டிற்கு மேலே அமைந்துள்ளது இந்த அழகிய இடம். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து செல்ல 2 வழி, தென்காசி மார்க்கமாக பத்தனம்திட்டா
பாலபள்ளி வழியாக சென்றும், தேனி மார்க்கமாக சென்றால் குமுளி வழியாக வண்டிப்பெரியார் சென்றும் கவி சென்றடையலாம். குமுளியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கவிக்கு செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு பெற்றே செல்லவேண்டும்.
கவி பசுமை மாறா காடுகள் மத்தியில் உள்ளதால் எங்கும் பசுமை நிறைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான் ஆகிய பல வனவிலங்குகள் உள்ளன. கவிக்கு செல்லும் பாதை வளைந்து நெளிந்து தேனீர் எஸ்டேட்கள் வழியே செல்லும்போது, வழியில் சின்ன, சின்ன அருவிகள்
வாய்க்கால்கள் , ஓடைகள் ஆகியவை குறிக்கிடுகின்றன. அதிக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தால் ஒரு இடம் எவ்வளவு இயற்கை செழிப்புடன் இருக்கும் என்பதற்கு கவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குமுளி டு கவி ரோடு கொஞ்சம் மோசமாக உள்ளது அதனால் சொந்த வாகனத்தில் செல்வது புத்திசாலித்தனமல்ல
அதுமட்டுமல்லாமல் வழியில் யானைகள் தாக்குதல் நடத்த நேரிடலாம் அதனால் நாம் குமுளியில் உள்ள ஜீப் வாடகைக்கு எடுத்து செல்வது நல்லது கட்டணம் இரண்டாயிரம் ரூபாய். கேரள அரசின் பஸ் போக்குவரத்தும் உண்டு ஆனால் மூன்று மணி நேரத்திற்கு ஒரு பஸ் தான் உள்ளது.
இங்கு செல்ல பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் ஏற்ற சூழல் உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை பெய்வதால் இரவு நேரத்தில் 10 டிகிரி வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. எனவே குளிர் அதிகமாகவே இருக்கும். இங்கு ஓர் அழகிய அணைக்கட்டு உள்ளது அதனை சுற்றி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன
இங்கு நீங்கள் போட்டிங் செல்லலாம்.ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு இங்கு ஏராளமான அட்வென்சர்ஸ் ஸ்பாட்ஸ் இருக்கின்றன.
கேரள வனத்துறையால் ‘எகோ டூரிசம்’ எனப்படும் சூழலியல் சுற்றுலா கவியில் செயல்படுத்தப்படுகிறது
காடுகளில் முகாமிடுவது. க்ரீன் மேன்ஷன், சுவிஸ் காட்டேஜ் டென்ட், ஜங்கிள் கேம்பிங்
என கட்டணத்திற்கு தகுந்தாற்போல் இரவு தங்க வைக்கப்படுகின்றனர் வனப்பகுதியில் இரவுப்பொழுதை கழிக்கும் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். கவி சூழலியல் சுற்றுலாவின் சிறப்பம்சம் என்னவென்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாகவும், சமையல்காரர்களாகவும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்
இங்கு தங்குவதற்கு கவர்மெண்ட் விடுதியை தவிர இங்குள்ள மக்களை அவர்கள் வீடுகளில் "ஹோம் ஸ்டே' ஏற்பாடு செய்கிறார்கள். புதிதாக செல்பவர்கள் அதை நம்பி செல்ல வேண்டாம் நிறையப்பேருக்கு இன்னும் இதைப் பற்றி அதிகம் தெரியாததால் இந்த இடம் இன்னும் அதிகம் மாசுபடாமல் இருக்கிறது.
கவியைப் பற்றி அதிகம் வெளியே தெரிய காரணமாக அமைந்தது 2012ல் வந்த 'ஆர்டினரி'என்ற மலையாள படம் தான். படத்தின் கதை கவி சுற்றி அமைந்திருக்கும் கவியின் அழகை அழகாக காட்டியிருப்பார்கள். முடிந்தால் படத்தை பார்க்கவும், அதைத்தான் தமிழில் "ஜன்னலோரம்" எடுத்து பர்னிச்சரை உடைத்து இருப்பார்கள்.
கேரளா சுற்றுலா துறையினர் இந்த இடத்தை ஒரு பெரிய சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள் அப்படி மாற்றி கவியின் அழகு கெட்டுப் போவதற்கு முன் ஒரு தடவை போய் பார்த்துவிட்டு தான் வாருங்களேன்

கவியில் தங்க இணையதள முகவரி

pathanamthittatourism.com/gavi-KFDC-pack…
சூழலியல் சுற்றுலா செல்ல இணையதள முகவரி

keralatourism.org/ecotourism/tre…

gaviecotourism.org/gavi-packages/

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Film, Food & Travel

Film, Food & Travel Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @FilmFoodTravel

24 Sep
மேகமலை

நண்பர்களே,
இந்தப் படத்தில் இருப்பது மேகமலை தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதுதான் உண்மை. ஆம் தமிழகத்தில் மறைந்துள்ள மாயலோகம், தமிழக மூணார், மேகங்களின் தலைநகரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இது கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ளது. Image
இங்கு வருடம் முழுவதும் மூடுபனி உலா வந்து கொண்டே இருக்கிறது அதனாலேயே இந்த மலைக்கு மேகமலை என்று பெயர்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் கூட இவ்வளவு மூடுபனி பார்த்ததில்லை, நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை அது இங்கு வந்தால் தான் புரியும். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு
மேகமலையை அதிகம் பேருக்கு தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்த பிறகும் சுற்றுலாப் பயணிகளால் இங்கு செல்ல முடியவில்லை அதற்கு காரணம் குண்டும் குழியுமாக பின்பு அதிக சகதியாக இருந்த சாலைதான். அரசாங்கத்தால் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழுவதுமாக
Read 22 tweets
23 Sep
வரதன் 2018

இது நடிப்பு அரக்கன் பகத்பாசிலின் அமைதியான மற்றும் அட்டகாசமான நடிப்பில் வெளி வந்த ஒரு திரில்லர் படம். இதை இயக்கியவர் பிரபல இயக்குனர் அமல்நீராட். இந்தப்படத்தில் பகத்பாசிலுக்கு ஈடுகொடுத்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ஐஸ்வர்யலட்சுமியை பாராட்டியே ஆகவேண்டும்
கதை:- அபின் (பகத்) பிரியா(லட்சுமி) துபாயில் இருக்கும் மகிழ்ச்சியான தம்பதியர் திடீரென்று அவனுக்கு வேலை போகிறது அதனால் கேரள திரும்புகின்றனர் அங்கு அவளுக்கு மூதாதையரின் வீடு ஒன்று அழகான மலை வாசஸ்தலத்தில் உள்ளது தற்காலம் அங்கு சென்று தங்க முடிவு செய்து கிளம்புகின்றனர்.
அங்கு அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கையில் அவர்களை யாரோ நோட்டம் இடுவதாக அவள் எண்ணுகிறாள் அந்த ஊரில் உள்ளவர்கள் அவர்களை அமானுஷ்யமாக நடத்துகிறார்கள். யார் அவர்களை தொந்தரவு செய்கிறார்கள் அதற்கு காரணம் என்ன படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Read 4 tweets
22 Sep
மீசைப்புலிமலை கொழுக்குமலை

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம் கொழுக்குமலை தான். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலை. இந்த மலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை
சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம்
வருடம் முழுவதும் குளிர்ந்தே இருக்கும் இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் ஆனால் இங்கு செல்வதற்கு கேரள வழியாக சொல்ல வேண்டும். தேனி வழியாக போடிமெட்டு சென்று அங்கிருந்து சூடு பார்க்காத
மலை நகரம் சூரியநெல்லி என்னும் அழகான ஊரை அடைந்து அங்கிருந்து கொழுக்குமலைக்கு செல்ல வேண்டும். மலைப்பாதை உயரமாக இருக்கும் அதனால் அதை OFF-ROAD என்பார்கள். அதனால் நாம் ஜீப்பில் தான் செல்ல வேண்டும்.இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி,
Read 16 tweets
21 Sep
அனு மெஸ், கோயம்புத்தூர்

இது ஆர்எஸ் புறத்தில் உள்ள சிட்டி யூனியன் பாங்க் எதிர்ப்புறம் உள்ள லோக்மானிய தெருவில் அமைந்துள்ளது. சுமார் 14 வருடங்களாக சகோதரிகளால் நடத்தப்படும் உணவகம் இது.
இதன் இன்னொரு கிளை ஆவாரம்பாளையத்தில் உள்ளது.இரண்டுக்கும் சமையல் மேற்பார்வை இவர்களது அம்மா தான்.
சிட்டில பெஸ்ட் வீட்டுமுறை சாப்பாடு இங்குதான் கிடைக்கின்றது. இந்த ஏரியாவை சுற்றி வேலை பார்ப்பவர்கள் இங்கு 10 வருடத்துக்கும் மேலாக ரெகுலர் கஸ்டமர்
ஆக இருக்கின்றனர். இவர்களே தயாரித்த மசாலாக்கள் உபயோகிப்பதால் எல்லா உணவு வகைகளும் அருமையான சுவையுடன் உள்ளது
இங்கு ஸ்பெஷல் நெத்திலி மீன் வருவல், நாட்டுக்கோழி பிரட்டல், கருவாட்டுக் குழம்பு, மட்டன் கோலா உருண்டை, காடை மசாலா, மட்டன் சுக்கா, ஈரல், குழம்பு மீன், நண்டு மசாலா தவறவிடாமல் சாப்பிட வேண்டிய ஐட்டங்கள் அசைவத்தை தவிர இங்கு சைவ உணவுகளும் நிறைய உள்ளன அத்தனையும் அருமையான டேஸ்ட் உடன்
Read 5 tweets
20 Sep
கோவளம் கடற்கரை, கேரளா

ஆண்களின் ஆதர்ச இந்திரலோகம் எனலாம் இந்த கோவளம். இதன் பிரதான கவர்ச்சி அம்சம் அழகிய கடற்கரைகளாகும். அலைகள் வீசும் கடலை ரசித்தபடியே இதமான மணற்பகுதியில் நடக்கும் அனுபவம் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். Image
கோவளத்தின் பசுமையும், மணற்பரப்பும், நீலக்கடலின் சாந்தமும் உங்கள் கவலைகளை எல்லாம் மறக்க வைத்து விவரிக்கமுடியா பரவசத்தில் மிதக்க வைக்கும். இதை அங்கு இயற்கையின் நெக்லஸ் என்று அழைக்கிறார்கள் அதற்குக் காரணம் அடுக்கடுக்காக பிறை போல் வளைவுகளுடன் கூடிய 3 கடற்கரைகள்
லைட் ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் என்று இந்த மூன்று கடற்கரைகளும் அழைக்கப்படுகின்றன.
கடற்கரையின் மற்றொரு சுவாரசியமான அம்சம் இங்குள்ள மணல் சற்றே கருப்பு நிறத்தில் காணப்படுவதாகும். மோனசைட் மற்றும் லைம்னைட் எனும் கனிமப்பொருட்கள் இம்மணலில் நிறைந்திருப்பதே இதற்கு காரணம்.
Read 14 tweets
17 Sep
ஒட்டிப் பிறந்தால் ஒற்றுமையா இருக்கணும் இப்படி சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது
அந்த ஒன்று மட்டும் தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்கோ?
பல்லே இன்னும் சரியா முளைக்கல அதுக்குள்ள கடிக்கிறது பாரேன்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!