#Thread

Car loan and bike loan

Plz RT

2020 மார்ச் 25 மாலை 6 மணிக்கு நம்ம நாட்டோட பிரதமர் அறிவிக்கிறார் அன்னைக்கி நைட்லயிருந்து 21 நாளைக்கி லாக்டவுண். 90 சதவீத இந்திய மிடில்கிளாஸ்களுக்கு கொரானாவைவிட மிக பெரிய கவலை அவங்களோட EMI தான். அதுல 10 சதவீதம் பேர் மட்டும்தான்
ஹோம் லோன் EMI கட்ட முடியாதேனு வருத்த பட்டாங்க. மித்த 80% பேருக்கும் வாகன EMI எப்படி கட்ட போறோமுனு கவலை. அந்தளவுக்கு எல்லா சம்பள வாசியும் வாகன கடன் வாங்கி வச்சுருக்கோம். அத பத்திதான் இந்த thread. யார், எதுக்கு, எப்படி, எவ்வளவு, எங்கே கடன் வாங்கலாம் அததான் சொல்லப்போறேன்.
1. கவர்மெண்ட் பேங்
2. பிரைவேட் பேங்
3. கார்பரேட் பைனான்ஸ்
4. பிரைவேட் பைனான்ஸ்

இந்த 4 சோர்ஸ் இருக்கு லோன் வாங்க.

டாடா, ஹீரோ, டிவி எஸ், பஜாஜ், மஹிந்த்ரா மாதிரி பிராண்டுங்க அவங்க ஓன் பைனான்ஸ் (கார்பரேட்) பண்ணுவாங்க.

உங்க சிபில் ஸ்கோர்தான் மேல சொன்ன நாளு சோர்ஸ்ல ஏதாவது ஒரு
சோர்ஸ்க்கு உங்கள கொண்டு போகும். 4 க்கும் என்ன வித்தியாசம்?

1. கவர்மெண்ட் பேங்கோட லோன் ஏஜேண்ட் ரொம்ப கம்மியானவங்கதான் இருப்பாங்க. எல்லா ஷோரூமலயும் இருக்க மாட்டாங்க. அதனால நாம கொஞ்சம் மெனக்கெட்டாதான் அங்க வாங்க முடியும். மத மதனுதான் இருப்பாங்க ஆனா அங்க லோன் கிடைச்சா அதோட பலன்
நல்லாயிருக்கும். சிபில் ஸ்கோர், டாக்குமெண்ட்ஸ்னு எல்லாமே பக்காவா இருந்தாதான் அப்ரூவல் கிடைக்கும். Zero pre closure charge, anytime part payment, variable EMI amountநு எக்கசக்க பலன்கள மேனேஜர்ட்ட பக்கத்துல உக்கார்ந்து கேட்டு வாங்கலாம். (SBI, Indian bank, IOB, Canara Bank)
2. Private bank ஏஜெண்ட் எல்லா ஷோரூம்லயும் ரெடியா இருப்பாங்க. வண்டிய பாத்துட்டு திரும்பிவீங்க உங்க மூஞ்சுகிட்டயே நிப்பாங்க. சார் ரெடி கேஷா இல்ல பைனான்ஸானு? கொஞ்சம் அசந்தோமுனா நல்ல சிபில் புரோபைல் இருக்கவங்களையே அலேக்கா அவங்க பேங் லோன் வாங்க வைச்சுடுவாங்க.
ஒரு கையெழுத்து போட்டா போதும் சார் நாளைக்கே லோன் அப்ரூவல் நாள மறுநாளே வண்டி டெலிவரி எடுத்துக்கலாமுனு ஆசை காட்டுவாங்க. நம்ம பய அங்கதான் விழுவான். உங்க எல்லா டாக்குமெண்ட்டும் வாங்கிடுவாங்க. அப்பறம்தான் ஒவ்வொரு முடிச்சா அவுப்பாங்க. சிபில் பத்தல, 4 வருஷத்துக்கு முன்னாடி ஒரு செக்
பவுண்ஸ் ஆகிருக்கு ஆதார்ல மூஞ்சு சரியா தெர்ல அது இதுனு கிட்டதட்ட உங்கள குற்றவாளியாவே நினைக்க வைப்பாங்க. இல்லாத காரணத்த சொல்லி வட்டிய ஏத்துவாங்க. EMI period ஏத்தி விடுவாங்க. போன் வெரிபிகேஷன், பிசிகல் வெரிபிகேசன், கிரெடிட் மேனேஜர் அது இதுனு புது புது பில்டப் கொடுப்பாங்க
ஒரு கட்டத்துல லோன் கொடுத்தா போதுமுனு மனச கொண்டுவர வச்சு லோன் கொடுப்பாங்க. நீங்க அவங்ககிட்டயும் நல்லா டிமாண்ட் பண்ணி கேக்கலாம் ஆனா அதுக்கு அவங்க வாய்ப்பே தர மாட்டாங்க. என்ன கேட்டாலும் சென்னை ஆபிஸ் மும்பை ஆபிஸ்னு கதையா விடுவாங்க. (HDFC,Axis bank, icici, Kotak Mahindra, kvb)
3. கார்பரேட் பைனான்ஸ்

(ஆட்டோ மொபைல் + பைனான்ஸ் குரூப்)(டாடா, ஹீரோ, மஹிந்த்ரா, டிவி எஸ், பஜாஜ்)

சிபில் கம்மியா இருக்கவங்க, டாக்குமெண்ட் சரியா இல்லாதவங்க, யூஸ்டு கார், பைக் வாங்குறவங்களுக்கெல்லாம் ஒரு சாய்ஸ்தான் இந்த கார்பரேட் பைனான்ஸ். எக்கசக்க வட்டி, கன்னாபின்னா கண்டிசன்னு
உங்க பின்னாடியே வந்துகிட்டே இருப்பாங்க. கலக்‌ஷன் ஏஜெண்ட் எக்கசக்க பேர் இருப்பாங்க. ஒரு EMI மிஸ் ஆச்சுனா போதும் போன் போட்டு கேட்டுகிட்டே இருப்பான் காச வாங்காம விட மாட்டாங்க. Pre closure க்கு பதிலா EMI கட்டிடலாங்குற அளவுக்கு சார்ஜ் இருக்கும். அவங்ககிட்டயே இன்ஸூரன்ஸ் இருக்கும்
வண்டியோட சேர்த்து ஓனருக்கும் தனியா இன்ஸூரன்ஸ் போட வைப்பாங்க. RC புக் ஒரிஜினல் க்கூட 6 மாசம் அவங்ககிட்டதான் இருக்கும். கடன் முடியுர வரை ஒரு கில்ட்டி பீல் கொண்டு வந்துடுவாங்க இந்த குரூப் (Sundaram, shriram, L&T, ashok Leyland)
4. பிரைவேட் பைனான்ஸ்

பொதுவா புது வண்டிக்கி இவங்க பண்ண மாட்டாங்க. பழைய வண்டிக்கி மட்டும்தான். லோக்கல்ல வட்டிக்கி விடுறவங்கதான். ஆர் சி புக் ஒர்ஜினல் கடன் முடியுற வர அவங்கட்டதான் இருக்கும். வண்டியோட மதிப்புல 30 டு 50% தருவாங்க அதுவும் தெரிஞ்ச ஆளா இருந்தா மட்டும்தான்
மாச மாசம் வட்டி காசு சரியா போகலனா நேரா வீட்டுக்கு வந்து வண்டிய கொண்டு போயிடுவான். பேச்சே இல்ல ஒரே வீச்சுதான். ( காமாட்சி பைனான்ஸ், மீனாட்சி பைனான்ஸ்)
வாகன கடணுக்கும் வீட்டு கடனுக்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கு. வீட்டோட மதிப்பு ஒவ்வொரு வருசமும் அதிகமாகும் கடன முடிச்சு வீடு நம்ம கைக்கு வரப்ப மிக பெரிய சொத்தா இருக்கும். ஆனா வாகனம் ஒவ்வொரு வருஷத்துக்கும் அதோட மதிப்பு குறையும். கடன முடிச்சு கார் கைக்கு வர்ரப்ப மதிப்புல
பாதிக்கூட இருக்காது. சோ எவ்வளவு கடன் வாங்கணும், எவ்வளவு நாள்ள கட்டணும், வட்டி, மித்த சார்ஜ், பிரீ க்ளோசர் பத்தி அடுத்த பார்ட்ல பார்ப்போம். கை வழிக்கிது.

எனது அனுபவத்த மட்டும் வச்சுதான் இந்த thread. ஏனா நானும் மாசம் 7 காருக்கு EMI கட்டிகிட்டு வரேன். நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with TRICHY SAMAR CAR SPA.🚐🔧

TRICHY SAMAR CAR SPA.🚐🔧 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vinothpaper

1 Sep
#SWIFT
#THREAD

கிமு, கிபி நு வரலாற இரண்டா பிரிக்கிற மாதிரி ஸ்விப்ட் க்கு முன் ஸ்விப்ட்க்கு பின் அப்படினு இந்திய வாகன சந்தைய இரண்டா பிரிச்சுடலாம். முன்னாடிலாம் மாருதி 800, ஓம்னினு இந்த இரண்டு கார வச்சுகிட்டு இந்திய மார்க்கெட்ல முடி சூடா மன்னனா மாருதி இருந்துச்சு.
வருஷம் 2000
ஹீண்டாய், சாண்ட்ரோவோட இந்தியால எண்ட்ரி ஆகுது. ஷாருக்கான் சர்தார்ஜிய வச்சு விளம்பரம் பன்றான். பேசிக் மாடல் மேனுவல் ஸ்டீயரிங்க பார்த்துகிட்டு இருந்த இந்திய மார்க்கெட்ல பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோனு மாடல் செம்ம ஹிட் அடிக்கிது. இன்னோரு பக்கம் சரக்கு வாகனத்துல
பெரிய கவனம் செலுத்திக்கிட்டு இருந்த மற்றொரு ஜாம்பாவான் ரத்தன் டாடா அவனோட முழு முதல் இந்திய தயாரிப்பான டாடா இண்டிகாவ களம் இறக்குறாரு. டீசல் வேரியண்ட்டோட வந்த முதல் குட்டி கார். இந்திய சந்தைய நல்லா புரிஞ்சு சின்ன பட்ஜெட் காரா இறக்குனாரு. விற்பனை அமோகமா ஆச்சு.
Read 21 tweets
12 Aug
ஓடியாங்க ஓடியாங்க

ஆம்பள பொம்பள எல்லாரும் ஓடியாங்க RT

வருமானம் பத்தலை, மாசம் 5000, 10000 கூடுதலா வந்தா கொஞ்சம் பரவாலனு நினைக்கிறீங்களா?

சைடு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனுமுனு ஆசை படுறீங்களா

இந்த த்ரெட் ஃபார் யு

நான் 4 சைடு பிசினஸ் பன்னிருக்கேன் சோ எனக்கு தெரிஞ்ச அனுபவம் சொல்றேன்
சைடு பிசினஸ் பண்ண ஆசை படுறவங்க 4 பேரு.

1. ஜாப், பிசினஸ்ல போதிய வருமானம் இல்ல
2.ஜாப், பிசினஸ் நல்லாதான் போகுது வாழ்க்கைல அடுத்த லெவல் போகனுமுல
3. பாரின்ல இருக்கேன் சோ நம்ம ஊர்ல ஏதாவது தொழில் தொடங்கணும். பீயூச்சர்ல வந்தா செட்டில் ஆக.
4. பெண் குடும்ப தலைவி ஊட்ல சும்மா இருக்க முடியல
செய்ய கூடாதத முதல் சொல்றேன்

1. தெரிஞ்ச தொழில விட்டவனும் கெட்டான் தெரியாத தொழில தொட்டவனும் கெட்டான். சோ தெரியாத knowledge இல்லாத எந்த தொழில்லயும் செய்யாதிங்க.

2.நீங்க உங்க மனைவி பாத்துக்குற மாதிரி இருந்தா மட்டும் அந்த தொழில தொடங்குங்க. அக்கா மகன் சும்மா இருக்கான், சித்தி மகன்
Read 21 tweets
2 Aug
செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது.

Read and RT

இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு
1.வீடு கட்டணும்
2. கார் வாங்கணும்
அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
ஆனா 50000 இருந்தா உடனே கார் வாங்கலாம். உங்களோட 2 வது கனவு நிறைவேறிடும். விஷயம் அது இல்ல.
சொல்லவே வேண்டாம் யூஸ்டு கார் வாங்குறவங்க 95 % மிடில்கிளாஸ் தான். நீங்க ஒரு கார வாங்குறதுக்கு வீட்ல அப்பா, அம்மா, பொண்டாட்டி வர ஆட்சேபம் தெரிவிப்பாங்க. அந்த காச பேங்ல இருக்குற நகைய
திருப்புங்கனு ஒயிப் சொல்லுவாங்க. 4 செண்ட் நிலம் வாங்கி போடுடானு அப்பா சொல்வாரு. எல்லாத்தையும் மீறி ஒரு கார் வாங்குவீங்க. அந்த கார் எப்படி இருக்கணுமுனு தான் நான் எனக்கு தெரிஞ்சத சொல்றேன். யூஸ்டு கார் வாங்குறது 60% உங்க அதிர்ஷ்டத்த பொருத்தது. 40% நீங்க தேர்ந்தேடுக்குறது.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!