🕉️ சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம்.

ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!

சைவ மார்கத்தினர் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் சகுணபிரம்மமாகவும்
உபாசிக்கின்றனர்.

சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.

இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.

சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது
வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.

இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர்.

ஆனால், மிகவும் உடல்திறன் வலிமையாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார்
சிவபெருமான்.

இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது.

சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள்
மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

🕉️ஜடாமுடி
சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள
உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.

🕉️நெற்றிக்கண்

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.
🕉️திரிசூலம்
திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

🕉️ஆழ்ந்தநிலை சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும்
பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

🕉️சாம்பல் சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சாம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும்
மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

🕉️நீலகண்டம்
சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது
திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.

🕉️உடுக்கை
சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.
🕉️கங்கை
சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

🕉️கமண்டலம்
சிவபெருமானின் கமண்டலம் மூலம் நாம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய
எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

🕉️| நாகம் |

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும்
நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்...

🕉️🕉️ஓம் நமச்சிவாய....🙏🏼🙏🏼

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

18 Oct
ஐப்பசி : 0️⃣2️⃣

நாட்டிய நவராத்ரி (Natya Navrathri)

நாட்டியக்கலை தெய்வப் பொலிவுற வளர்ந்து வந்ததற்கு ஆலயங்கள் பெரும்பங்கு வகித்துவந்தன.
பரதநாட்டியத்தின் நிறைவான கலையெழில் நமது தமிழகத்திலேதான் பொலிந்து விளங்குகிறது. தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி ஜில்லாக்களில்,
பரதநாட்டியம் இன்றும் ஜீவகளையுடன் விளங்குகிறது. இல்லையா??? கடவுளுக்கே நம்மவர் நடராஜ வடிவம் தந்து ஆடுந்தெய்வமாக வணங்கினர். கோயில்களில் நர்த்தனமும் தாண்டவமும் ஒரு வழிபாடாக இன்றளவும் கருதப்படுகிறது. கோயில் தூண்களிலும் சுவர்களிலும் கண்கவர் அழகான நாட்டிய வடிவங்கள் செதுக்கப்
பெற்றிருக்கின்றன. மதுரை, சிதம்பரம் கோயில்களில், அபிநய முத்திரைகளும், கரணங்களும் கூடிய நாட்டியக்கலைச் சித்திரங்கள் பலவற்றை நாம் காண்கிறோம்.

நம் பெரியோர்கள் கலையைக் கல்லிற் சமைத்து அழியாப் புத்தகமாக்கினார்கள்.
அந்தச் சித்திரங்களின் மேல் பிசுக்கும் மெழுக்கும் படர்ந்த
Read 9 tweets
17 Oct
சொறியாரின் துரோக வரலாற்றில் இதுவும் ஒன்று.

தமிழ்நாடு என பெயர் வைக்க கோரி 79 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார் சங்கரலிங்க நாடார்.

அந்த 79 நாளும் சங்கரலிங்க நாடாரின் உண்ணாவிரதம் பற்றி செய்திகளை ஒரு வரி கூட
(தனது விடுதலை நாளேட்டில்) வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தும்
இரங்கல் தெரிவிக்காமலும் தன் உண்மை முகத்தை காட்டினார் தெலுங்கர் ராமசாமி நாயுடு.

இறுதியில் தமிழ்நாடு என பெயர் மாறி அதைக் கொண்டாடும் போது, அந்த விழாவில் கலந்து கொள்ளாமல்.

கண்ணில்லாத குருடனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்தது போலத்தான் தமிழ்நாடு என பெயர் வைத்தது
என வெறுப்பை உமிழ்ந்து, தான் ஒரு தமிழர் இனப் பகை என்பதை நிருபித்தார் ராமசாமி நாயுடு.!

ஆதாரம்.

1) ஈ.வெ.ரா காலக்கண்ணாடி ஆனைமுத்து

2) தந்தை பெரியார் வரலாறு - கருணானந்தம்}

அடப்பாவிங்களா இப்பேர்பட்ட பித்தலாட்டக்காரனை
ஏதோ மனிதப் புனிதர் போல இத்தனை ஆண்டுகாலம் ஏமாற்றி வந்தீர்களா..???
Read 4 tweets
17 Oct
இந்துக்கள் செய்ய வேண்டியது.

1.இனிமே நீங்க தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்கு போனாலும், மொதல்ல அந்த கோயில் அறநிலையத்துறை கீழ் உள்ளதா? இல்லையா என்பதை முதல்ல கவனிங்க. ஒருவேள அறநிலையத்துறை கீழ் இருந்தா அங்கு பெரிய பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கும்
2 . அப்படி அறநிலையத்துறை என்று இருந்தால், அங்கு கோயில் உள்ளே மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அப்டியே ஒரு ரவுண்ட் பொறுமையா வாங்க

3. அதுல இந்து அல்லாத மாற்று மதத்தினர் கடை நடத்துவது போல தெரிந்தால், அந்த கடையை போட்டோ எடுப்பது போல அந்த நபரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுங்க
4. எடுத்த போட்டோவ சமூக வலைத்தளங்களில் @HRajaBJP, @BjpKalyaan @hmrss1980 @imkarjunsampath @Indumakalktchi போன்றோருக்கு டேக் பண்ணி தெரியப்படுத்துங்கள்

5.காரணம் இந்து கோயில் நிலங்களில், இடங்களில் மாற்று மதத்தினர் தொழில் பண்றது சட்டப்படி குற்றம். உடனே இது மதவெறி என்று
Read 5 tweets
17 Oct
ஶ்ரீசித்சக்தி மஹிமை
ப்ரஹ்மாண்ட கோடிகளையும் தன் கருப்பத்தில் தாங்கும் பராசக்தியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை விஷேஷமாக ஆராதிக்க வேண்டிய திருநாள் நவராத்ரி.வஸந்த நவராத்ரத்தில் அவளை பரம ஸௌம்யமூர்த்தியாக பாவிப்பதும், சரத் காலத்தில்அவளையே சற்றே சினமுடைய கொற்றவையாக பாவிப்பதும் வழக்கம்
சண்டிகா பரமேச்வரியாக அம்பாளை பாவித்து பூஜிக்க வேண்டிய புண்ய தினங்களே நவராத்ரி. மென்மையான.கொடி போல் துவளும் கரங்களில் தங்கத்தினாலான பாசாங்குசங்களையும், கரும்புவில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்தியருளும் காமாக்ஷியே, துஷ்ட நிக்ரஹத்திற்க்காக பதிணெட்டுக் கரங்களில் பதினெட்டு ஆயுதங்களைத்
தாங்கிய ஶ்ரீசண்டிகா மஹாலக்ஷ்மியாக ஆவிர்பவிக்கிறாள்.

முக்குண ஸம்பந்தமும் துளியுமில்லாத பூரண ஞானரூபிணியே லலிதையாகிற காமாக்ஷி எனில், மூன்று குணங்களும் சரிசமமாக ஏற்றக்குறைச்சல் இல்லாமல் விரவியிருக்கும் ப்ரஹ்மசக்தியே ஶ்ரீசண்டிகை. இரண்டுமே தேவியின்
Read 13 tweets
16 Oct
காருக்குள் கருகி மரணம்:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு. சஞ்சய் ஷிண்டே தனது காருக்கு உள்ளேயே கருகி மாண்டார். மும்பை- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட மின்கசிவினால் காரினுள் இருந்த Hand Sanitizer இல் தீப்பிடித்து
வேகமாகப் பரவியது. தீ பரவியதால் தானியங்கி செயல்பட்டு கதவுகள் திறக்கமுடியாமல் போன தால் அவரால் வெளியே வர முடியா மல் போயிற்று. அதற்குள் தீகொழந்து விட்டு எரியத் துவங்கியதால் காருக் குள்ளேயே அவர் கருகி மரணமடைந் தார். இச்சம்பவம் Pimpalgaon Baswant சுங்கச் சாவடி அருகே நடந்துள்ளது.
இவர் ஒரு திராட்சை தோட்ட அதிபர். தனது தோட்டத்திற்காக பூச்சிக் கொல்லி மருந்து வாங்குவதற்காக Pimpalgaon சென்று கொண்டிருந்த போது இது நடந்துள்ளது. ஒயின் தயாரிப்பில் நாசிக் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே அப்பகுதியில் ஏராளமான திராட்சைத் தோட்டங்கள் உள்ளன.
Read 4 tweets
16 Oct
"சிவம்_பேசினால்_சவம்_எழும்’’

என்று சொல்லும் அளவிற்கு மிக சிறந்த மேடை பேச்சாளரான சுப்ரமண்ய சிவாவும் , வ.உ.சியும் சுதேசி கப்பலை ஓட்டும் நிகழ்வையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தருணத்தில் வ.உ.சி பேசும் போது, இனிமேல் நாமே கப்பல் ஓட்டுவோம்.

வெள்ளைக்காரன் மூட்டை
முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒடிவிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட சுப்ரமணய சிவா இடையில் தலையிட்டு மைக்கை வாங்கி அவர்கள் வைத்துள்ள மூட்டை முடிச்சுகள் இந்தியர்களை சுரண்டியது. அதை இங்கேயே போட்டு விட்டு வெறும் கையோடு வெளியேறட்டும் என்று சொன்னார். அந்தளவுக்கு சிவா
இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்.

1884 ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த சிவா( இயற்பெயர் : சுப்பராமன்) தனது சிறுவயதில் மதுரையில் இருந்து வறுமையின் காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்குள்ள உண்டு உறைவிடப்பள்ளியில்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!