முத்தையா முரளிதரன் பற்றி படம் எடுக்கிறதை கருத்தியல் ரீதியா எதிர்க்கிற இலங்கைத் தமிழர்களை,வழமை போலவே சீமாறு கட்சி எதிர்க்கிறாங்க என்ற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கிற சிலபல கட்சி ஆதரவாளர்களோட வாதங்கள் பார்த்தா சிரிப்பா இருக்குது
ஏன் முரளி படத்தை நாங்கள் (ஒரு சிலர் தவிர)எதிர்க்கிறோம்? போர் நடந்தப்பவும் சரி, பிறகும் சரி, எந்தவொரு சந்தர்ப்பத்திலேயும் முரளி இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கல்ல. அது பரவாயில்லை, ஆனா சிங்கள அரசியல்வாதிகளோட காலை நக்குறதுக்காக போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஆள் அவர்
தமிழ் தாய்மார் போராட்டம் தெரியுமா? போர்க்காலத்திலே வலுக்கட்டாயமா காணாமல் ஆக்கப்பட்ட தங்களோட பிள்ளைகள், துணைகள் எங்கே என்று வருஷக்கணக்கா போராடுற இந்த தாய்மார், தந்தைகள், முரளி யார்ப்பாணம் போயிருந்தப்ப அவரை சந்திக்க எத்தனிச்சிருக்காங்க
அதை இதே முரளி, நாலஞ்சு ஆக்கள் வந்து சொன்னா அது உண்மயா இருக்க வேண்டியதில்லைங்கிறாப்ல, அசிங்கமா கொச்சைப்படுத்தின ஆள்.
தங்களோட வர்த்தகத்துக்காக சிங்களத்துக்கு சிங்சாங் அடிச்சு, அதை வைச்சு ஆதாயம் தேடினவங்க இவங்க
அதை விடுங்க, இந்திய வம்சாவளித்தமிழர் என்றே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் இவர்.மலையக மக்களுக்கு என்ன செய்தீங்க, முரளி படத்தை எதிர்க்க முதல் என்று கேக்கிறவங்களுக்கு, முதல்ல, முரளி என்ன பண்ணவர் மலையக மக்களுக்கு? தன்னுடைய ஆதாயத்துக்காக, தன் வளர்ச்சிக்காக சிங்களத்தோட
இணைச்சிருக்கிற இவருக்கு, தமிழ், ஏன் மலையக தமிழ் கூட பேசத்தெரியாதாம் என்று அவரே சொல்லியிருக்கார்.அப்போ வரப்போற இந்தப்படத்திலே சிங்களத்திலயா பேசப்போறார்?
இதே சங்கக்காரவோ,மகேலவோ,அவங்களோட வாழ்க்கையை திரைப்படமா எடுத்திருந்தா ஒரு நியாயம் இருக்கும்.தங்களுக்கோ,தாம் சார்ந்த கொள்கைகளுக்கோ
இவங்க உண்மையா இருந்தாங்க. அறமே இல்லாத, தன் தாய்மொழியையே மறுதலிக்கிற ஒருத்தருக்கு எதுக்கு ஒரு ஆவணப்படம்? இந்தப்படத்துல எந்த மொழியில கதைக்கப்போறார்? தனியே அவரோட கிரிக்கட் வாழ்க்கைய மட்டும் தான் சொல்லப்போறாங்களா? இதற்கு எதுக்கு தன்னை தமிழின போராளியா அடையாளப்படுத்துற விஜய்சேதுபதி?
சேதுபதியே சில காலத்துக்கு முதல் இந்தப்படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்லியிருந்தவர். இப்போ ஏன்?

சரி, இது ஒரு படம், இதுக்கு ஏன் இவ்வளவு அலப்பறைன்னு சொல்றவங்க தான் குஷ்பு மணியம்மையா நடிச்சப்ப கதறுனவங்களும், மோடி படத்துக்கு குரல்கொடுத்தவங்களும்
கிரிக்கட் வேற அரசியல் வேற என்று எங்களுக்கு தெரியும். அதனால தான், இன்று வரைக்கும், பெரும்பான்மை இனத்துவேஷ கட்சிகளுக்கு வாக்கு அதிகமா கிடைக்கிறதில்லை, தமிழர் அல்லாதவங்க தமிழ் பிரதேசத்துல வெல்லவதும் இல்லை. இந்திய தேர்தல் முறைக்கும் எங்கடதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.படிச்சு
அறிஞ்சுக்கோங்க. அது தெரியாமல் வந்து சிங்களவனுக்கு வோட் போடுறீங்கன்னு கதறாதீங்க.

போக, மலையக தமிழர்கள் பற்றிய படம் இது இல்லையே. அப்படியாயிருந்தா முதல்ல ஆதரிக்கிற குரல் என்னுடையதா இருக்கும். வெறுமனே தன் இனத்துக்கே உண்மையா இருக்காமல், சுயநலமா தன் ஆதாயத்துக்காக அடிவருடிய ஒருத்தர்
பற்றி படம் எடுக்கிறதும், அது ஏதோ சாதாரண விசயம் போல,ஈழத்தமிழன் சோறு போட்டானா, மஞ்சள் அரைச்சு கொடுத்தானா, படம் தானே,எடுத்துட்டு போகட்டும் என்று சொல்றதும் முட்டாள்தனம். எந்தப்படமா இருந்தாலும், எங்களோட போராட்டங்களை கொச்சைப்படுத்தினா எங்களோட எதிர்ப்பு இருக்கும்- சீமாறுகளோ, இல்லை
எந்த ஓரு கட்சியுமோ எதிர்க்கவில்லை என்றால் அது அவங்களோட இந்திய அரசியல் ஆதாயத்துக்கு உதவாது என்ற ஒரே காரணம் மட்டுமே. அதை கொண்டு வந்து, உணர்வு சார்ந்த ஈழத்தமிழர்களின் எதிர்ப்போடு முடிச்சுப்போடாதீங்க. தவிர, இதை புலம் பெயர்ந்தவர்கள் பேசக்கூடாது என்று சொல்றதுக்கு யாருக்கும் உரிமை இல்லை
சாகும் வரை, ஒவ்வொரு இலங்கைத்தமிழனின் உணர்வு, உறவு எல்லாம் இலங்கையோடே இருக்கும்.
Finally, முன்னமே சொன்னது தான், முரளி is a good cricketer, ஆனால் அறமற்ற மனிதர். That’s all.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with $angeetha🎼

$angeetha🎼 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MusicaDSan

28 Mar
வீட்ல குட்டீஸ் கூட மல்லுக்கட்டிட்டு இருக்கிறவங்க நீங்கன்னா, இந்த short thread உங்களுக்கு தான்

கடந்த வருஷம் கூகிளாண்டவர், augmented reality feature மூலம் சின்னவங்களுக்கு வித்தியாசமான learning experience கொடுக்கலாம்ன்னு முடிவெடுத்து, 3D animals ஐ நேரா உங்க வீட்லயே, அறையிலேயே
பார்க்குறதுக்கு வழிசெய்தார். போன வருஷம் வந்தாலும், இப்போ தான், உலகளாவிய lockdown க்கு அப்புறம் தான் இந்த அம்சம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கு
அட பேசிட்டே இருக்காமல் என்னான்னு சொல்லுங்க’ன்னு நீங்க கேக்குறது புரியுது
உங்க வீட்டுக்குள்ள புலியை நேரா பார்த்தா எப்படி இருக்கும்?
இது எங்க hall க்குள்ள வந்த புலி. ஆஹான், புலியெல்லாம் வளர்க்குறீங்களா ன்னு கேக்குறீங்களா? புலி என்ன giant panda, shark ன்னு கொஞ்சம் மிருகங்களை நீங்களும் கூட்டிக்கொண்டு வரலாம்.
ரைட்டு , எப்படி எங்களுக்கும் சொல்லுங்க ங்கிறீங்களா, அதற்கு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!