சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன்.

கி.பி 985 முதல் கி.பி 1014 ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள் இவர் சோழப்பேரரசராக ஆட்சி புரிந்தார்.
#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
இவருடைய ஆட்சி காலம் சோழகளின் பொற்காலம் என்று புகழப்படுகிறது. இராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன். விஜயாலய சோழன் நிறுவிய சோழப்பேரரசு இவர் காலத்திலும் மற்றும் இவர் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்த நிலையை எட்டியது .
#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
இராஜராஜ சோழனனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்
#கேரளப்_போர்

இராஜராஜ சோழன்பல சிறப்பான போர்களைப் புரிந்தார். இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது,
#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
989ல் நடந்த இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது கல்வெட்டுகள் விளக்குகின்றது. கேரளாவில் உள்ள காந்தளூர்ச் சாலை எனும் இடம் சேர வீரர்கள் போர் பயிற்சி பெரும் இடமாக விளங்கியது. இராஜராஜ சோழன் இந்த இடத்தை முற்றிலுமாக அழித்தார். இந்த இடம் தற்போது கேரளாவில் வலியசாலா என்று அழைகப்படுகின்றது
மேலும் சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இராஜராஜ சோழன் தற்போது கேரளாவில் உள்ள விழிஞம் என்ற இடத்தில இருந்த வெற்றிபெற முடியாத கடற்கோட்டையைப் வெற்றிபெற்றார் என்றும் தெரிகிறது. மேலும் அங்கிருந்த கப்பல்கள் அனைத்தையும் அழித்தார் என்றும் தெரிகின்றது.
இந்த போரின் வெற்றிகுப்பிறகு இராஜராஜ சோழனின் மெய்கீர்த்திகள் அனைத்தும் ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்த’ என்ற வரிகளுடனே ஆரம்பித்தன. 2009ல் திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டில் இராஜராஜ சோழன் சேர நாட்டு வீரர்களின் தலையைக் கொய்தது பற்றி குறிப்புக்கள் உள்ளது.
மற்றும் சேர மன்னனின் கப்பலை இராஜராஜ சோழன் இரண்டாக பிளந்தது பற்றியும் குறிப்பு உள்ளது.
#சிங்களப்_போர்

993ல் இராஜராஜ சோழன் அனுராதபுரம் என்கிற சிங்களத்தின் மீது படையெடுத்து சென்றார். அப்போது அனுராதபுரத்தின் மன்னராக விளங்கியவர் ஐந்தாம் மஹிந்தா என்பவர். ஐந்தாம் மஹிந்தா கொடுமை மிக்க ஒரு திறமையற்ற மன்னர்.
#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
அவர் காலகட்டத்தில் அனுராதபுரம் பெரும் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இராஜராஜ சோழன் போன்ற பெரும் மன்னருடன் போரிட முடியாத ஐந்தாம் மஹிந்தா ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான்.
இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜ சோழன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டார் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் இராஜராஜன் சோழரால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
பொலன்னறுவா சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மஹிந்தா சோழர் சிறைச்சாலையில் 1029ம் ஆண்டு இறந்தார். ஐந்தாம் மஹிந்தாவுடன் அனுராதபுரம் அரசு முடிவுக்கு வந்தது. இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவர எண்ணியதால்
பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டார். ஆனால் இவரின் மகனான இராஜேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி சோழ அரசின் கீழ் வந்தது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Bhairavi Nachiyar பாண்டிய நாட்டு இளவரசி

Bhairavi Nachiyar பாண்டிய நாட்டு இளவரசி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Bhairavinachiya

16 Oct
" கல்வெட்டுப் படி "

வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ள சாசனங்களான கோவில் கல்வெட்டுகள்
இக்கல்வெட்டுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட்டனர் நம் முன்னோர்

ஒரு அரசன் கோவில் ஒன்றை செப்பனிடும் போது அங்குள்ள பழையக் கல்வெட்டுச் செய்திகளை படியெடுப்பார்கள்
செப்பனிடும் வேலை முடிந்தபின்பு படியெடுத்த கல்வெட்டுச் செய்தியை மீண்டும் கல்லில் வெட்டுவார்கள்.
" இது ஒரு பழம் கல்வெட்டு " என்ற குறிப்புடன் கல்வெட்டுச் செய்தியை பதிவு செய்வார்கள்.

குடுமியான்மலைக் கோவில் மடப்பள்ளியின் கீழ்புறச்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு.
மதுரைகொண்ட கோபரகேசரியான பராந்தகனின் 33 ஆம் ஆட்சியாண்டு. அதாவது கி.பி.940.

பராந்தகனின் படைத்தளபதியான கொடும்பாளூர் வேளிர் குல சிற்றரசன் பராந்தகன் குஞ்சரமல்லனான வீரசோழ இளங்கோ வேளான் என்பவர் இலங்கையின் மீது படையெடுத்தார்.
Read 8 tweets
8 Oct
இந்திய விமானப்படை தினம்

#indian_air_force_day

இந்திய பாதுகாப்பு படைகளில் விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. 1932 அக்.,8 ல் ஆங்கிலேயரால் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரம் பெறுவதற்கு முன் இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின், நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இப்போர்களில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது.
இயற்கை பேரழிவுகளின் போது, ஆபத்தான இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் விமானப்படை இடம் பெற்றுள்ளது இந்திய விமானப்படையில் 1,70,000 வீரர்கள் பணிபுரிகின்றனர். 1720க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.
Read 6 tweets
7 Oct
இன்று ஒர் தகவல்

சுஷ்ருதா என்பவர் 2600 ஆண்டுகளுக்கு முந்தையவர். இவரின் அரிய படைப்பு ‘சுஷ்ருதா சம்ஹிதம்’ என அறியபடுகின்றது. இப்படைப்பு அறுவை சிகிச்சையைப் பற்றிய மிக துல்லியமான படைப்பாகும். இதனாலே சுஷ்ருதா ‘அறுவை சிகிச்சையின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
ஆயுர்வேதாவைச் சேர்ந்த மிகமுக்கிய மூன்று நூல்களில் ஒன்றுதான் #சுஷ்ருதா_சம்ஹிதம். 184 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சம்ஹிதத்தில் 1120 வகையான நோய்களும், 700 மூலிகைகளும், 64 வகையான கனிமங்களும், 57 வகையான விலங்கியல் மருந்துகளும் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்ஹிதத்தில் சுஷ்ருதா ஆழமான, நுணுக்கமான அறுவை சிகிச்சைகளைப் பற்றி மிக தெளிவாக விளக்குகியுள்ளார். சொத்தைப்பல் நீக்கம், மூலம் சிகிச்சை, குடல்சார்ந்த சிகிச்சைகள், பாலின உறுப்பு சார்ந்த சிகிச்சைகள், எலும்பு முறிவு சிகிச்சைகள் போன்ற பலவகையான சிகிச்சைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
Read 4 tweets
5 Oct
✴சற்று முன் உலகின் ஒரு முதல் ஆயுதத்தை சோதிதுள்ளது #பாரதம்...💪🇮🇳💪

🔯அந்த ஆயுதம் #டோர்ப்பிடோக்களை🚀🚀 செலுத்தும் ஏவுகணை.
இப்படி ஒரு ஆயுதம் உலகில் எந்த நாட்டிடமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது..

♦️நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதய் என்றால் அது டோர்டோக்கள் தான் .. Image
டோர்பிடோக்கள் நீருக்குள்ளேயே பயணிப்பது. அதனால் அதன் வேகம் மிக குறைவு அதன் ரேன்ஜிம் 50 கிலோமீட்டரை தாண்டாது பொதுவாக டோர்ப்பிடோக்களை கப்பலிலில் இருந்தோ, நீர்மூழ்கி கப்பலில் இருந்தோ அல்லது, ஹெலிகாப்பரில் இருந்தோ தான் செலுத்த முடியும் Image
இதனால் எதிரி கப்பல் மிக அருகே நம் கப்பலோ நீர்மூழ்கி கப்பலோ செல்ல வேண்டும் இதற்கு காலதாமதம் ஆகும் காலதாமத்தைவிடவும் ஆபத்தும் அதிகம்

❤ஆனால் உலகில் முதல் நாடாக இந்தியா இனி அந்த வகை #ட்ரொப்பிடோக்களை ஏவுகணையில் இருந்து செலுத்தும் வல்லமை பெற்றுள்ளது
Read 6 tweets
2 Oct
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம் காந்தி மட்டும் தான் நம்முடைய சுதந்திரத்திற்கு போராடினாரா ? அவரை மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை படுத்த என்ன காரணம் ? ஒரு 5 ம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் சுதந்திரத்திற்கு போராடிய 10 பேர் பெயரை சொல் என்று கேட்டால் அதற்கு காந்தியையும் நேருவையும்
...தவிர வேறு யாரையும் சொல்ல தெரியவில்லை இதற்கு என்ன காரணம் ?
காந்தியும் நேருவும் மட்டும் தான் சுதந்திரத்திற்கு பேராடினார்களா ? தடியடி பட்டு உயிர் பிரியும் வரை தேசிய கொடியை கையில் எந்தி இருந்த கொடி காத்த குமரன், கொடியவன் ஆக்ஷ் துரையை தனிமனிதனாக சூட்டு கொன்று தானும் மாண்ட .....
வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, மருது சகோதர்கள், சிறு படையும் பொரும் வெள்ளையர் படையை வென்ற பழசிராஜா , மேலும் இவர்களை போன்ற பலர் இவர்களுக்கெல்லாம் வரலாற்றில் இடம் இல்லையா ? இவர்களை எல்லாம் எங்கள் வருங்கால சந்தியினர் மறந்து விட வேண்டியது தானா ?
Read 7 tweets
30 Sep
தமிழகத்தில்
இந்து எழுச்சிக்கு
இந்து ஒற்றுமைக்கு
வித்திட்டவரும்

எந்த தமிழகத்தில் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டதோ
அந்த தமிழ்க்கத்தில் வீதி எங்கும் விநாயகரை பிரதிஷ்டை செய்து வெகு ஜன இயக்கமாக மாற்றியவரும்
திருமணம் செய்து கொள்ளாமல் பிரும்மசாரியாக தவ வாழ்வு வாழ்ந்து 72 ஆண்டுகள் RSS ..
பிரசாரக்காக அர்ப்பணிப்புடன் செயல் பட்ட வீரத் துறவி இராம கோபாலன் இறைவனடி சேர்ந்தார்.

மதுரை இரயில் நிலையத்தில் கோவை பாஷாவால் மண்டையில் வெட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக கோமாவில் இருந்து இறையருளாலும், தன் மனோதிடத்தாலும் மரணத்தை வென்று மீண்டு வந்தார்.
ஜாதி, மொழி, அரசியலை மீறி தமிழக்கத்திலும் இந்து ஒற்றுமைக்கு வித்திட்டவர் ராம. கோபாலன்.

அவர் மறைவு இந்து சமுதாயத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.

இந்த பாரத நாட்டை உலகில் உள்ள எதையும் விட மிக அதிகமாக நேசித்தவர்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!