கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என கூறும் மக்கள் நீதி மய்யம், கூட்டணிக்காக அறிவாலயத்தின் கதவுகளை தட்டியிருக்கிறது.

அறிவாலயத்தின் வாசலில் நின்று கொண்டு, கமல்ஹாசனை முதல்வர் ஆக்குவோம் என்று செயற்குழுவில் முழங்கினால் எப்படி...?

Thread
அதோடு மட்டுமில்லாமல் திமுக கூட்டணிக்கு வந்தால் மநீம-விற்கு 40 முதல் 50 சீட்டுகள் தர வேண்டும் எனவும் வலியுறுத்தலாம்.

காங்கிரசுக்கே 20 தொகுதிகளை தாண்டி திமுக கொடுக்குமா என்பது சந்தேகம் என்ற நிலையில், மநீமவிற்கு எப்படி 40 தொகுதிகளை தருவார்கள் என மய்யத்தார் எதிர்பார்க்கின்றனர்?
இன்றைய செயற்குழு கூட வெறும் சடங்குக்காக கூட்டப்பட்ட கூட்டமாகவே இருந்திருக்கிறது.

கமலை முதல்வர் நாற்காலியில் அமர்த்துவோம் என பொதுச்செயலாளர்கள் அருணாச்சலம், முருகானந்தம், குமரவேல், துணை தலைவர் மகேந்திரன் போன்றோர் முழங்கியிருக்கிறார்கள் அவ்வளவே.
கூட்டணி பற்றியோ, தமிழக கட்சிகளின் நிலை குறித்தோ எதுவும் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், அருணாச்சலம் மட்டும் அதிமுகவை சாடி "கூவத்தூர் கூட்டத்தை வீழ்த்துவோம்" என மூன்று, நான்கு முறை பொங்கியிருக்கிறார்.

மற்றவர்கள் "கப்சிப்" என இருந்திருக்கிறார்கள்.
வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தராமல், கமல் ஆலோசனை குழுவான சங்கையா சொலியூஷன்ஸ் சுரேஷ் அய்யரை தேர்தல் வியூகம் குறித்து பேச சொல்லியிருக்கின்றனர்.

அவரும் வழக்கம்போல் விட்டமின் "ப" பற்றியும், டீ கடை முதல் டெலிவிஷன் வரை விளம்பரங்கள் தருவது பற்றியும் பேசியுள்ளார்.
விளம்பரங்கள் அதிகம் தந்தால்தானே சங்கய்யா சொலியூஷனையும் மக்கள் நீதி மய்யத்தோடு சேர்த்து பிரபலப்படுத்த முடியும் என்பதை அறிந்தே விளம்பரம், விளம்பரம் என்று சொன்னதோடு, ஒரு PPT யையும் போட்டு காட்டி 108 தொகுதிகள் நமக்கு சாதகமாக இருப்பதாக (?) சொல்லியிருக்கிறார்.
தலைமையுரை நிகழ்த்திய கமல்ஹாசன், நான் #BiggBossTamil நிகழ்ச்சி நடத்தினாலும், திரைப்படத்தில் நடித்தாலும் அவற்றை மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்தி வருகிறேன் (ரைட்டு) என மய்யப்படுத்தியிருக்கிறார்.
தேர்தலுக்கு பணம் முக்கியம் என்றும், அதனை திரட்டி தந்தால்தான் ஊர்கூடி தேர் இழுக்க முடியும் எனவும் பேசியுள்ள கமல், 90களின் பிற்பகுதியிலேயே நற்பணி மன்ற பணிகளுக்கு ₹30 கோடி வரை திரட்டியதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
யாருடன் கூட்டணி வைக்கலாம் ? தனித்து போட்டியிடலாமா ? என்பது குறித்தெல்லாம் கமலும் எதுவும் பேசவில்லை, தலைமைக்கழக நிர்வாகிகளும் கேட்கவில்லை.

கூட்டணி பற்றிய முடிவை எடுக்க கமலுக்கு அதிகாரத்தை கொடுத்து, லஞ்ச்சோடு கூட்டத்தை முடித்திருக்கின்றனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raja Shanmugasundaram - தன்னரசு நாட்டுக்காரன்

Raja Shanmugasundaram - தன்னரசு நாட்டுக்காரன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SRajaJourno

14 Oct
காட்டிலே இருக்கின்ற விலங்குகள் நாட்டிற்குள் நுழைகின்றபோது, மன்னர் வேட்டையாடி, அவற்றை கொல்வதுபோல், கயவர்களை களைவதற்கு "என்கவுன்டர்களும்" நிகழ்த்தப்பட வேண்டும்...

தினமணி நாளேட்டில் பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதியுள்ள கட்டுரையில் வலியுறுத்தல்

#Encounter Image
என்கவுன்டர்களுக்கு ஆதரவாக திருவள்ளுவரை துணைக்கு அழைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர், கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் அரசன் ஒறுத்தல், பயிரைக் காப்பாற்ற களையை களைவதற்கு ஒப்பாகும் என

" கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட்ட தனொடு நேர்'

என்ற குறள் சொல்வது என்கிறார்
காவல்துறை தன்னிச்சையாக செயல்படக்கூடாது என, நீதிமன்ற தீர்ப்பின்படியே நடக்க வேண்டும் என சிலர் ஜனநாயகம் பேசினாலும், சிலப்பதிகார காலத்திலேயே பூம்புகாரில் நடுத்தெருவில் நின்ற சதுக்க பூதமே, கொடியோரை கொன்று, தின்று நீதிமன்ற பணியையும் காவல்துறையின் பணியையும் ஒருங்கே நிகழ்த்திருக்கிறது
Read 5 tweets
10 Oct
தொலைக்காட்சிகள் என்பது "இடியட் பாக்ஸ்"

எல்லா தொலைக்காட்சிகளும் விலைபோய்விட்டன. கேள்வி கேட்டால், ஒன்றுமில்லாத விஷ்யங்களை பெரிதுப்படுத்தி திசைத்திருப்புகின்றன என பொத்தம்பொதுவாக, அபத்தமாக திரு.@ikamalhaasan சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் ன்னிப்பு கோர வேண்டும்

Thread
நகர வாசிகள் கிராமங்களை பற்றி தெரிந்துகொள்ள நம்பியிருப்பது தொலைக்காட்சி என்ற"இடியட் பாக்ஸ்சை" தான்.

தொலைக்காட்சிகள் இன்று விலைபோய்விட்டன.

"கேள்வி கேட்டால், ஒன்றுமில்லாத விஷயங்களை பெரிதுபடுத்தி மக்களை திசைத் திருப்புவார்கள்" என கமல் பேசியதாஜ ஜூவி கட்டுரை வெளியிட்டுள்ளது
இதற்கு உடனடியாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்

எல்லாம் ஊடகங்களும் விலைபோய்விட்டன, முக்கியமான விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகின்றன என்ற அபத்தமான குற்றச்சாட்டை அவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்
Read 12 tweets
16 Aug
இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியர் தானா என திமுக எம்.பி.கனிமொழியை பார்த்து அதிகாரி கேட்ட கேள்வியை ஒரு அதிகாரியின் தனிக்குரல் என புறம்தள்ளிவிட முடியாது.

ஆதிக்கத்தின் அம்பாறத் தூணியிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது என

கவிஞர் வைரமுத்து அறிக்கை

Thread
இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் சம உரிமை 22 இந்திய மொழிகளுக்கும் வழங்கப்படுவதுதான் இந்தியாவை இணைத்திருக்கும் கயிற்றை இற்றுப் போகாமல் கட்டிக் காக்கும் : வைரமுத்து

ஆனால், இந்திதான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா ? இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா… ?
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக வைரமுத்து தனது அறிக்கையில் கூறியுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
Read 6 tweets
8 Aug
1971 நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் உள்ள பிரிவு 2 (1) (C) ஐ நீக்கக்கோரி பிரசாந்த் பூஷன், எ.ராம், அருண் ஷோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கே.சந்துரு எழுதியுள்ள கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது
Thread
நீதிபதிகள் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள முயன்று வருவது அதிகரித்து வருவதாக அந்த கட்டுரையில் மேனாள் நீதியரசர் கே.சந்துரு பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தை அசிங்கப்படுத்துவது, களங்கப்படுத்துவது என்பது எந்த விளக்கத்துக்கும் ஆட்படாத ஒரு பொருள் என்றும், இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பாதிக்கப்பட்ட நீதிபதியே விசாரிக்க தடை ஏதும் இல்லை என்பதும் இன்னும் ஆபத்தானது என்றும் சந்துரு அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Read 6 tweets
4 Aug
திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதில் அழகு, வடுவூர் சிலை அழகு என்பார்கள்

அப்படி வடுவூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கோதண்டராமர் ஆலயம் "தென்னகத்தின் அயோத்தி" என அழைக்கப்படுகிறது

மந்தகாச புன்னகையில் அருள்பாலிக்கும் இராமர் சிலையை இராமரே வடித்து தந்ததாக நம்பப்படுகிறது

Thread Image
கண்ணபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த இராமர் சிலையை வடுவூரில் நிறுவிய பின்னர், லட்சுமணர் சிலையை வடுவூர் மக்கள் செய்ய, அது பெண் வடிவமாக அமைந்துவிடுகிறது.

அதனால் அந்த சிலைக்காக தனியாக ஒரு கோயில் எழுப்பி அழகு சுந்தரி அம்மனாக அதனை பிரதிஷ்டை செய்துவிடுகின்றனர் வடுவூர் மக்கள்
பிறகு மற்றொரு லட்சுமணர் சிலையும், சீதா பிராட்டி சிலையும் செய்யப்பட்டு ஸ்ரீ கோதண்டராமரோடு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இப்போது சீதா, லட்சுமணர் மற்றும் அனுமனோடு அருள்பாலிக்கிறார்அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர்

ராமாயண காட்சிகளை கொண்டு செய்யப்பட்ட திருத்தேர் கோயிலுக்கு உள்ளது
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!