Siva_KS Profile picture
17 Oct, 5 tweets, 1 min read
நீங்களும் நானும்
உணவகம் தொடங்கிய பின்னர்,
அவாள் உயர்தர சைவ உணவகமாகிப் போனார்கள்.

நீங்களும் நானும்
படிக்கத் தொடங்கிய பின்னர்,
அவாள் உயர்தரக் கல்வி எனப் பேசினார்கள்.

நீங்களும் நானும்
அரசியல் பேசத் தொடங்கிய பின்னர்,
அவாள் அரசியல் ஒரு சாக்கடை என்றார்கள்.
1/n
நீங்களும் நானும்
ஊடகங்களில் போய் அமர்ந்த போது
விபச்சார ஊடகம் என்றார்கள்.

நீங்களும் நானும்
இசைக்கத் தொடங்கிய போது,
இசையே இறைவடிவம் என்ற அவாள்,
டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.

2/n
நீங்களும் நானும்
படம் இயக்கத் தொடங்கிய பின்னர்,
சினிமாவே கெட்டுபோச்சு என
முடித்துக் கொண்டார்கள்.

நீங்களும் நானும்
இஞ்சினியர் ஆன போது,
இஞ்சினியர் எல்லாம் ஒரு படிப்பா என்றார்கள்.

3/n
நீங்களும் நானும்
மருத்துவம் படிக்கச் சென்ற போது,
இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சு
என்ன ஆகபோகிறது என்றார்கள்.

இது எதுவுமே புரியாமல்
நீங்களும் நானும் சாதி, மதம், இனமென
சண்டையிடும் போது
இவனுகளுக்கு இதே வேலையா போச்சு,
எல்லாத்தையும் மறுபடியும்
நாமளே வச்சிபோம் என

4/n
மறுபடியும் மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்

இதில் நீங்களும் நானும்
நாம் யார்? அவாள் யார்?
புரிந்து கொண்டால்
உங்கள் குழந்தைக்கு
ஒருநல்ல எதிர்கால சொத்தை
விட்டுச் செல்வீர்கள். இல்லையேல்,
உங்கள் முப்பாட்டனின்
இடுப்புத்துண்டை அவர்களுக்கு
உறுதிப்படுத்தி விட்டுச் செல்கிறீர்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Siva_KS

Siva_KS Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sivaji_KS

16 Oct
#AnnaUniversity

அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கபட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, சூரப்பாவின் தாய்மொழி கன்னடம், இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் தலைநகரில் இருக்கும் ஒரு முன்னணி பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தும் அவர் குறைந்தபட்ச பேச்சு வழக்கிற்காக கூட
1/n
தமிழ்மொழியை அறிந்திருக்க/ கற்றுக்கொள்ளவோ விருப்ப படவில்லை

இரண்டு மாதங்களுக்கு முன் YouTube சேனல் ஒன்றின் பேட்டியில் கூறுகிறார் எனக்கு கன்னடமும், ஆங்கிலமும் தான் தெரியும் தமிழ் தெரியாது என்று, அப்படிபட்டவரை இங்கே இத்தனை நாளாய் துணைவேந்தராக இருக்க அனுமதித்ததே அதிகம்

2/n
எடப்பாடியின் முதல்வர் நாற்காலி பசைக்காக தன்மானத்தை இழந்து தமிழர் நலனை சூரப்பாவிடம் அடகு வைத்ததின் விளைவு, இப்போது சூரப்பா மாநில அரசின் நிதியின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலை கழகத்தை நேரடியாக மத்திய அரசே ஏற்று நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்,

3/n
Read 5 tweets
15 Oct
Sc/St இட ஒதுக்கீடு வரலாறு னு தேடிப்பாருங்க.

OBC இட ஒதுக்கீடு வரலாறு னு தேடிப்பாருங்க.

எல்லாத்துக்கும் ஒரு நீண்ட போராட்டம் இருக்கும்.

EWS தேடிப்பாருங்க. யாரு கேட்டாங்க. யாரு போராடினா. என்ன விவாதம் நடந்துச்சு ஒன்னுமே இருக்காது. ஆனா ஆறே மாசத்துல நடைமுறைக்கு வந்துச்சு.

1/n
ஏழைங்கனா எவ்ளோ ஏழை. வருஷத்துக்கு 8 லட்சம் வருமானம் 5 acre நிலம் வச்சிருக்க அளவுக்கு ஏழைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு.

சரி எல்லா இடத்துலயும் இந்த இட ஒதுக்கீடா னா. மருத்துவக் கல்லூரி இடங்கள், பல்கலைக்கழக பேராசிரியர், வங்கி ஊழியர் னு இந்த மாதிரியான இடங்களுக்கு மட்டும் தான்.

2/n
இடங்கள அதிகரிச்சு தான் 10% ஒதுக்கப்படும் னு சொன்னானுங்க. இப்ப என்னடா னா நம்ம இட ஒதுக்கீட புடிங்கி அவனுங்களுக்கு குடுத்திருக்கானுங்க.

இந்த 10% திருட்ட அயோக்கியத்தனம், ஃபிராடுத்தனம் னு எவ்ளோ கேவலமா வேணும்னா சொல்லலாம். இல்ல சிம்பிளா பார்ப்பனியம் னு சொல்லலாம்.

3/n
Read 4 tweets
15 Oct
This is the list of 28 Nationalist business men who looted money from Indian Banks

1) Vijay Mallya
2) Mehul Choksi
3) Nirav Modi
4) Nishan Modi
5) Pushpesh Baidya
6) Ashish Jobanputra
7) Sunny Kalara
8)Arti Kalara
9) Sunjay Kalara
10) Varsha Kalara

1/n
11) Sudhir Kalara
12) Jatin Mehta
13) Umesh Parikh
14) Kamlesh Parikh
15) Nilesh Parikh
16) Vinay Mittal
17) Eklavya Garg
18) Chetan Jayantilal
19) Nitin Jayantilal
20) Dipti Bein Chetan
21) Saviya Saith
22) Rajiv Goyal
23) Alka Goyal
24) Lalit Modi

2/n
25) Ritesh Jain
26) Hitesh Nagenderbhai Patel
27) Mayuriben Patel
28) Ashish Suresh Bhai

Total looted amount stands at Rs.10,000,000,000,000/-(only Rupees Ten Trillion)

Something special -
none of them-
are a Muslim
was declared a Terrorist
are an Urban Naxal
3/n
Read 4 tweets
15 Oct
வரலாற்றில் இன்று அக்டோபர் 15, 1932 - டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. ஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் முதலில் துவக்கப்பட்டது, பின்னர் டாடா ஏர்லைன்ஸ் எனப்
#TataAirline #Tata 1/n
பெயர்மாற்றப்பட்டது இந்த நிறுவனத்தை துவக்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா) இவர்தான் முதல் இந்திய வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். இரண்டு பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி தொழிலில் இறங்கினார்.

2/n
1932 அக்டோபர் 15 அன்று டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான். ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார்.
3/n
Read 4 tweets
14 Oct
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் திராவிட அரசியல் இயக்கங்களா (அ) ஒன்றியத்தின் கருணையா ?

Photo இருப்பது Madras School of Development Studies (MIDS) யின் 14வது நிதி கமிஷனுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த தொகுப்பு சொல்ல வருவது முக்கியமானவை. 1/n
1 ) தொடர்ச்சியாக ஒன்றிய அரசின் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கான பங்கீடு குறைக்கப்பட்டு வந்து இருக்கிறது. 4 - 7 நிதி கமிஷன்களில் 7%+ இருந்த நிதி ஒதுக்கீடு, 11 - 13 நிதி கமிஷன் காலக்கட்டத்தில் 5% குறைந்திருப்பதே சாட்சி.

2/n
2 ) நிதி கமிஷனின் பங்கீடும் தமிழ்நாட்டிற்கு மேலும் கீழுமாக மாற்றி அமைக்கப்பட்டு தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது.

3 ) நான்காவது நிதிகமிஷன் காலக்கட்டம் 1966 - 69. பதிமூன்றாவது நிதிகமிஷனின் காலக்கட்டம் 2010 -15. இந்த காலக்கட்டங்களில் தான் குறைவான ஒன்றிய பங்கீட்டையும்,
3/n
Read 8 tweets
13 Oct
#Thread

நிதியமைச்சர் திரும்பவும் வந்து $10 பில்லியன் என்று சொல்லிவிட்டு போனார். உள்ளே போய் பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்த மாதிரி ஹார்ட் அட்டாக்கிற்கு பாண்ட் எய்டு போடுவதை எப்போது நிறுத்த போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஏப்ரலிலேயே கரடியாய் கத்தி இருக்கிறோம். நேரடியாக மக்களுக்கு பணத்தினை கொண்டு போய் சேருங்கள் என்று. கேட்கவில்லை. நேற்று சொன்ன அறிவிப்புகளும் நுகர்வினை மேலெழ செய்யப் போவதில்லை. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிற LTCக்கு பதிலான செலவு என்பதை 12% ஜி.எஸ்.டி இருக்கும்
பொருட்களின் மீது தான் செலவிட முடியும். அவர்கள் தரும் வட்டியில்லாத ரூ. 10,000 கடன் என்பது ரூபே கார்டாக தான் வரும். கார்ட் வழியாக செலவு செய்யும் எல்லாம் இன்வாய்ஸ்களையும் கணக்கு காட்ட வேண்டும்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!