Capernaum
2018.Drama.Arabic
TL ல சுத்தின இந்த சிறுவனோட சிரிப்ப பாத்து தான் என்ன மூவி இது, பாத்தாகனுமேன்னு தோனுச்சு. ஆனா இந்த சிரிப்புக்கு பின்னாடி இருக்க வலியும், வேதனையும் தெரியனும்னா இந்த படத்த நீங்க பாத்தே ஆகனும்..
இடத்த பாத்தாலே தெரியும், இந்த மாதிரியான ஒரு இடத்துல குடும்பத்தோட அன்றாட வாழ்க்கைக்கு போராடுற மாதிரியான ஒரு சிறுவன் தான் Zain.
இந்த டாப் ஆங்கிள் ஷாட்ஸ்+பின்னணி இசை.. அப்டியே ஏரியாக்குள்ள இழுத்துட்டு போகும் உங்கள.. ஜாக்கி ரிவ்வியூ ல அழகா சொல்லிருப்பார். "கூரைமேல படர்ந்து கிடக்குற டயர் லாம் இப்டி மொத்தமா பாக்க ஒரு அழகான கவிதை மாதிரி இருக்கும்" ன்னு. நிஜமாவே கவிதைதான்..
கைதுசெய்யப்பட்டு நிக்குற சிறுவன், அப்றம் இன்னொரு பொண்ணு. பத்து பொண்ணுங்க நிக்குற கூட்டத்துலையும் அந்த ஒரு பொண்ண உங்களால இப்பவே கண்டுபிடிக்க முடியும்.
கோர்ட்ல அவன் பெற்றோர் மேலையே வழக்கு போட்ருப்பான் Zain. எத்தன வயசுன்னு கேக்குறதுக்கு, எனக்கு தெரியாது அங்கள கேளுங்கன்னு பெற்றோரை காமிப்பான். பெற்றோருக்கும் தெரியாது. ஒன்னு ரண்டுன்னா தெரியும். கிட்டத்தட்ட பத்து குழந்தைகள். எப்டி தெரியும்
உன் பெற்றோர் என்ன தப்பு பண்ணாங்கன்னு ஜட்ஜ் கேக்குறதுக்கு அவன் சொல்ற பதில் தான் இது.. இங்கிருந்து தான் ஆரம்பிக்குது கதை..
தூங்குறதுக்கு கூட சரியா இடமில்லாதளவு சின்ன வீடு, இல்ல வீடுலாம் இல்ல கொட்டகை மாதிரி. (இதைவிட ரொம்ப சின்ன வீட்டுலையும் மக்கள் இப்பவும் வாழுறாங்க, மும்பைல தாராவி, மட்டுங்கா பகுதில பாக்கலாம்)
ஒரே மருந்துச்சீட்ட வச்சு, பல மெடிக்கல்ஸ்ல இரு குறிப்பிட்ட மாத்திரைய வாங்கி பொடியாக்கி, ஜெயிலுக்குள்ள போதை மருந்தா கொண்டுபோகுற விதம்..
இப்படியான ஒரு வாழ்க்கையிலையும் அவனுக்கு இருக்க ஒரே சந்தோசம் அவன் சகோதரி Sahar. அவ வயசுக்கு வந்துட்டான்னு தெரிஞ்சு அந்த வெளிய யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நிலமையை சமாளிக்குற விதம்
பெற்றோருக்கு கூட தெரிய கூடாதுன்னு சொல்லிடுவான் Sahara கிட்ட. தெரிஞ்சா யாருக்காச்சும் கல்யாணம்ங்குற பேர்ல வித்துடுவாங்க.. எந்த காரணத்துக்காகவும் அவள அப்டி விட்ரக்கூடாதுன்னு நினைப்பான்.. அவ்ளோ பாஜம்.♥
திஸ் ப்ரேம்ஸ்.. ♥
ஸ்கூல் வேன பாக்குறப்பலாம் அவன் முகத்துல தெரியுற ஏக்கம்..
அவன் சகோதரி வயசுக்கு வந்தத தெரிஞ்சு, அவன் வேலை பாக்குற கடை ஓனரே பொண்ணு கேட்டு வந்தத பாத்ததும் அவனுக்கு வர்ர கோபம்
கோவமும், சோகமும்.. சகோதரிய கூப்டுட்டு எங்கையாச்சும் ஓடிரலாம்னு யாருக்கும் தெரியாம ப்ளான் பண்ணிருப்பான் Zain
கிளம்பலாம்னு தேலையானதெல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டு வீட்ல வர்ரப்ப
அவன் பெற்றோர் அவள் வலுக்கட்டாயமா தூக்கிட்டு போய் அந்த கடை ஓனர்கிட்ட ஒப்படச்சுருவாங்க..
கடுப்பான Zain வீட்டவிட்டு கிளம்பிட்றான். எங்கபோறதுன்னு தெரியாம, பஸ்ல பக்கத்துல இருந்த தாத்தா இறங்குற இடத்துலியே இறங்கிடுறான்.. பசி.. கையில இருந்த கடைசி உணவையும் சாப்டுட்றான்.
அங்க வேலை செய்யுற Tigest ங்குற பொண்ணு கிட்ட வேலை எதாச்சும் கிடைக்குமான்னு கேக்குறான். இல்லைன்னதும் பாக்குற ஒவ்வொருத்தர் கிட்டையா வேலை வேணும்னு கேட்டு அலையுறான். பிச்சையெடுக்கவும் மனமில்லை.
ஒரு வழியும் இல்லாம மறுபடி அவகிட்டையே, பசிக்குது சாப்ட ஏதாச்சும் இருக்குதான்னு கேக்குறான். அவளும் அவன வீட்டுக்கு கூப்டு போய் தன் குழந்தையோட குழந்தையாவே பாத்துக்குறா
அவளுக்கும் ஆல்ரெடி ஏகப்பட்ட பிரச்சனைகள். போலியான பர்மிட் ல தான் சொந்த நாட்ல இருந்து வந்து இங்க தங்கியிருப்பா. அந்த பொர்மிட்ட ரினீவல் கூட காசு இல்லாத நிலமையில தன் முடிய கட் பண்ணி குடுத்து கொஞ்சம் காசு வாங்கிக்குவா
Zain ஒருபக்கம் தன் சகோதரி sahar அ நினச்சு இன்னமும் அழுதுட்ருப்பான்.
பெர்மிட் விசயமா வெளிய கிளம்புற Tigest திரும்ப வரவேமாட்டா. குழந்தைய பாத்துக்கனும், அவளையும் தேடனும், ரண்டு பேருக்கு சாப்பாடும் வேணும்..
குழந்தைய தூக்கிட்டே அவள் தேடிதிரிய ஆரம்பிக்குறான். பசி ஒரு பக்கம் இரண்டு பேரையும் கொன்னுட்ருக்கும்
வழியில தூங்கிட்ருக்க குழந்தைகிட்ட இருந்து பாலை திருடிட்டு வந்து இந்த குழந்தைக்கு குடுக்குறது. அதையும் குழந்த வேணாம்னு சொல்றப்ப வேற வழியே இல்லாம ப்ரிட்ஜ் ல இருந்த ஐஸ் க்யூப் எடுத்து அதுல சர்க்கரைய கொட்டி
ரண்டுபேரும் சாப்டுற அந்த சீன் லாம்.. (நிஜமாவே மக்களே, மூனுவேளை பசியாற சாப்பாடு கிடைக்குதுன்னு சந்தோச பட்டுக்கோங்க)
குடிக்க தண்ணி கூட இல்லாம, கைல கிடைக்குறத சாப்டுட்டு மறுபடியும் குழந்தைய தூக்கிட்டு அலைய ஆரம்பிக்குறான்.
வீட்ல இருக்க பாத்திரம் எல்லாத்தையும் சேத்து ஸ்கேட்டிங்க் போர்ட் ஓட சேர்த்து கட்டி அலையுறான். ஒரு கட்டத்துல அதுக்கு மேல குழந்தைய தூக்கிட்டு அலைய முடியாம,
விட்டுட்டு போகவும் முடியாம, அவனோட அந்த பரிதவிப்பு.. ச்சே.. ஒரு பன்னிரண்டு வயசு பையனுக்கு இவ்ளோ கஷ்டமான்னு நம்மளுக்கே கண்ணு கலங்கிரும்
ஒருகட்டத்துல குழந்தையாச்சும் நல்லாருக்கட்டும்னு ஒருத்தன்கிட்ட வித்துட்டு காச வாங்கிட்டு, ஊர விட்டே எங்கையாச்சும் போயிடலாம்னு முடிவு பண்ணிடுவான். குழந்தைய விட்டுட்டு சலூன் கடையில உக்காந்து அழுறதுலாம்
ஊரவிட்டு போகனும்னா, எதாச்சு ஐடி வேணும்னு, மறுபடி அவன் வீட்டுக்கே வந்து தேடுவான்.
அப்பதான் தெரியவருது அவன் உயிருக்குயிரா நேசிச்ச அவன் சகோதரி Sahir இறந்துட்டான்னு.. அழுது ஆத்திரமடஞ்சவன் கத்திய எடுத்துட்டு காரணமானவன குத்த கிளம்பிட்றான்
போன இடத்துல சம்பவமும் பண்ணிட்றான்..
ஜெயிலுக்குள்ள தூக்கொட்டு போயிடுறாங்க. ஆல்ரெடி Tigest ஐயும் பர்மிட் இல்லாததால போலீஸ் அரஸ்ட் பண்ணியிருப்பாங்க. இப்ப இவனும். குழந்தையும் எங்கையோ..
ஜெயிலுக்குள்ள எதேர்ச்சையா Zain பேர கேக்குறப்போ, Tigest, Zain அ பாத்துடுறா. குழந்தை எங்கன்னு கேக்குறா.. பதில் சொல்ல முடியாம தினறி, குற்றவுணர்சியோட ஒரு பார்வை பாப்பான்.. ப்ச்ச்ச்
Zain, Tigest, அப்றம் அந்த குழந்தை Yonas இவங்க மூனு பேரும் என்ன ஆனாங்க ங்குறதுதான் மீதி கதை. இடையில ஜெயிலுக்கு வர்ர அவன் அம்மாவுக்கும் இவனுக்குமான உரையாடல்..
அப்றம் ஒரு நாள் எதேச்சையாக டிவி ப்ரோக்ராம் ஒன்னுக்கு ஜெயில்ல இருந்தே கால் பண்ணிருப்பான் Zain.
சொல்லுங்க, எதுக்காக கால் பண்ணிங்க. உங்களுக்கு நாங்க என்ன பண்ணனும்னு கேப்பாங்க
அதுக்கு அவன் சொல்லக்கூடிய பதில் தான் என் பார்வையில மொத்த படமும்.. அங்கிருந்து கதை கோர்ட்டுக்கு நகருது.. மீதிய படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க மக்களே..
நிறைய படங்கள் பாக்குறோம். ஒரு சில படங்கள் தான் மனசளவுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த படம் கண்டிப்பா ஏற்படுத்தும். கடைசியா INTO THE WILD பாத்தப்ப கண்கலங்கினேன்.. நேற்றிரவு இத பாத்துட்டு அழுதுட்டேன்ம் இப்படியான படம் கண்டிப்பா நீங்க பாத்தே ஆகனும்..
இங்கு சிலர் சின்ன சின்ன விஷயங்களுக்காக மனவுளைச்சலுக்கு ஆளாகி புலம்புறத பாத்திருக்கேன்.. எங்கையும் சொல்லமுடியாம, இங்கையாச்சும் புலம்பி தீர்த்துடுவோம் என்னும் வலியாகவும் இருக்கலாம். நீங்க கண்டிப்பா இந்த படத்த பாத்தே ஆகனும். இத்தனை வலி நிறைந்த பன்னிரண்டு வயது சிறுவனைவிடவா உங்க
கவலைகள் பெரியதான்னு நினைக்கனும்.. கூடுதலாக இந்த Zain நிஜவாழ்வில் சிரியாவிலிருந்து லெபனானுக்கு குடிபெயர்ந்து குடும்பத்தோடு இதே மாதிரியான இடத்தில் வசித்தவர் தான். இந்த படத்தில் Zain க்காக வக்கீலாக வாதாடும் Nadine (Director of this film) இவரை தத்தெடுத்து நடிக்க வைத்து, எழுத்தறிவு
அற்றவனாக இருந்தவனை நார்வே அனுப்பி படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.. சூப்பர்ல.. மேன்மக்கள் மேன்மக்களே..♥
மீண்டுமொரு முறை சொல்கிறேன் மக்களே, இத்தனை காரணமெல்லாம் தேவையில்லை. இந்த புன்னகைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வலிக்காகவேனும் பாருங்கள்..♥
இதுவும் கடந்து போகும்..
எல்லாமும் மாறும்...

மாற்றங்களே வினா...
மாற்றங்களே விடை...♥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with படிப்பகத்தான்

படிப்பகத்தான் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Frompadippaham1

18 Oct
ஜீவாம்சமாய்ய்ய்...♥ ImageImageImageImage
ஜீவாம்சமாய், தானே நீ என்னில்..
காலங்கள் முன்னே வந்தூ... ImageImageImageImage
ஆத்மாவின் உள்ளில் ஈரம் தூவு மஞ்சாய், தூரத்தே பெய்தூ நீயி... ImageImageImageImage
Read 4 tweets
3 Oct
வழக்கமான ஊரில் வாழும் நாட்களில் இரண்டு நாளுக்கு ஒருமுறையேனும் மது அருந்தும் பழக்கம் இருந்தது.. ஊரின் அருகிலையே பார் வசதியுடன் கூடிய மதுக்கடைகள் இருந்தாலும் அங்கு அவ்வளவாக செல்வதில்லை.. சித்தப்பா, மாமன், தாத்தா என யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வந்துவிடுவர்..
அது நம் செளகரியத்தை கெடுக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு அசெளகரியத்தை அளித்து விடும்.. அதனால் நகரத்திற்குள் இருக்கும் பழக்கப்பட்ட ஹோட்டலுக்கு சென்றுவிடுவேன்.. தரைத்தளத்தில் உணவகமும், முதல் தளத்தில் குளிரூட்டப்பட்ட மதுக்கூடமும்.. வழக்கம்போல் காரை கீழ்தள நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு
இருவரும் ஆளுக்கொரு சிகரட்டை பற்ற வைத்தோம்.. இவன் ரிச்சோ, சிறுவயது முதலே நண்பன்.. கிட்டத்தட்ட "க்ரைம் பார்ட்னர்" என்று கூறுமளவுக்கு அத்தனை சண்டை சச்சரவுகளிலும் உடனிருப்பான்.. பாதிக்கு மேல் சிகரெட்டை இழுக்க மனமில்லை.. வீசிவிட்டு, முன்புறமாக வந்து ஹோட்டலில் நுழைய, முருகன் அண்ணன்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!