"டாக்டர்" கலைஞர்.

காலங்கள் கடந்தாலும் காயங்கள் ஆறவில்லை...

எத்தனையோ அப்பாவிகள் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் திமுகவின் அதிகார வெறிக்கு பலியாகி இருந்தாலும் அண்ணாமலை பல்கலை
கழக மாணவர் உதயகுமார் படுகொலையை நினைத்தால் இப்படியும் ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருந்துள்ளார் என்று
வருங்காலங்களில் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு
தெரிவிக்கத் தொடங்கினர். ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பது தான் பல்கலைகழக மாணவர்களில் இருந்த மாணவர் காங்கிரஸ் அமைப்பின் கோஷம்.
.
இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் அப்போதைய முதல்வர் கருணாநிதியை ஆத்திர
மூ ட்டியது.
அந்த மாணவர்கள் கழுதையின் கழுத்தில் "டாக்டர்" என்று எழுதி தொங்கவிட்டு பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டும் காம்பவுண்டு சுவற்றில் படம் வரைந்தும் கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்.

மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, போலீஸ் பாதுகாப்புடன்
பட்டமளிப்பு விழா காலையில் இனிதே
நடந்து முடிந்தது. கருணாநிதியும் "டாக்டர் கருணாநிதி" யாக புறப்பட்டு
விட்டார். போகும் பொழுது காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள் என்று சொல்லியிரு க்கிறார்.

அதற்கு பிறகு சாயங்காலம் மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த போலீஸ் அறைகளில் தங்கியிருந்த
மாணவர்களைத் ஊடுகட்டி அடித்தார்கள். பல பேருக்கு மண்டை உடைந்து இருந்தது. மாணவர்களுக்கு போலீஸ் அடிக்கும் காரணம் முதலில் புரியாவிட்டாலும் "ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா" என்று அடியோடு விழுந்த வார்த்தைகள் 'ஆஹா இது கருணா நிதியின் கைங்கரியம் தான்' என்று புரிந்து கொண்டார்கள்.
அதை விட பெரிய கொடுமையை மறுநாள் பல்கலை கழக குளத்தில் மிதந்து கிடந்த சக மாணவன் உதய குமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள்; உறைந்து நின்றார்கள்.போலீஸ் தான் உதயகுமாரை அடித்து
குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட
ஆரம்பித்தார்கள்.

கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் அப்பா பெருமாள்
சாமியோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டார். இத்தனைக்கும் அவரும் ஒரு பள்ளி வாத்தியார். பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் போலீஸ் அவரை என்ன பாடு படுத்தி இருக்கும். இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கால வரை யற்ற போராட்டம் நடத்த
ஆரம்பித்தார்கள்..

போலீசோ... இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது. இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலை யில் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் மாலை வரை இருந்தது ஏன்? திடீரென போலீஸ்
மாணவர்கள் விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள்...? என்று விசாரணை கமிஷன் கேட்டார்கள் மாணவர்கள்.!

எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் என்எஸ்.ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தர
விடப்பட்டது. கடைசியில்,
விசாரணையின் முடிவில் குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்துக்கும் போலீஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறி கருணாநிதிக்கு பரிசுத்த சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை.

இது நடந்து முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகு பத்தி ரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது.
அதில் கருணா நிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் எம்ஜியாருக்கு உதவி கேட்டு ஒரு லட்டர் அனுப்பியிருந்தார். அந்த லெட்டர் அப்பொழுது பத்திரிக்கைகளிலும் வந்ததாம் ..

அந்த லெட்டரில் உதயகுமாரின் தம்பி என்ன எழுதியிருந்தார் என்றால்...

ஐயா,

கொலையுண்ட உதயகுமாரின்
(அண்ணாமலைப்பல்கலைக் கழகம்) தம்பி கே.பி.மனோகரன்எழுதிக் கொண் டது.

எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல்லச் செய்து பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத் தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.
இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் (கருணா நிதி)அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்தனர். வீடு கொடுப்பதாக கூறினர்.
வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டுமென என் தந்தையை பயமுறுத்தி சொல்லச்செய்தனர்.
எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறினர். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினர். ஆனால் நாங்கள் இதுவதை எந்தவித உதவியையும் பெறவில்லை. என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது: "தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல்" என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசாங் கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட்
கம்பெனியில் உத்தியோகமோ எனக்கு வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத் திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக்கின்றோம்.

தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள்
என்று
உறுதியாக நம்புகிறேன்.

இப்படிக்கு..
கே.பி.மனோகரன்.

இப்படிதாங்க கருணாநிதியாலும் திமுகவாலும் அழி ந்து போன தமிழர்கள் எத்தனை பேர் தெரியுமா...?. காலங்கள் கடந்தாலும், திமுகவினால் தமிழக மக்களுக்கு உண்டான காயங்கள் இன்னும் ஆறவில்லை
பின்னாளில் எங்காவது "டாக்டர் கலைஞர்" என்று நீங்கள் படிக்க நேர்ந்தால் உடனே இந்த சம்பவம் தான் (இந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த இந்த சம்பவம் தான்) உங்களுக்கு நிச்சயமாக நினைவில் வரும். காரணம் இந்த டாக்டர் பட்டம் படித்து பெற்றதல்ல... அடித்து பெற்றது.
நினைவில் இருக்கட்டும்.

இவர்களுக்கு காலம் தான் முடிவு கட்ட வேண்டும்.

காத்திருப்போம்..

1971-சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவன் உதயகுமாரைக் கொன்று வாங்கிய டாக்டர் பட்டத்துடன் -

டாக்டர் கொலைஞர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Protagonist 

Protagonist  Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RaamanSpeaks

19 Oct
நீங்கள் கோடீஸ்வரராகும் ஏழு வழிகள்!
கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ கூறும் அறிவுரை இது. அவர் சொல்கிறார் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் யாராக இருந்தாலும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று. வாருங்கள் அந்த ஏழு வழிகளையும் சற்றே அலசுவோம்.
1. பொதுவாக ஒரு குடும்பத்தை நல்ல முறையில் நடத்த பொருளாதாரம் மிக முக்கியமான ஒரு அடிப்படைக் காரணி. அதற்கு ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஒன்றை ஏற்பாடு செய்து கொள்ளுதல் வேண்டும் ( அதன் படி ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மைக் காப்பாற்றும்).
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும் (அதனால் ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்)
Read 9 tweets
15 Oct
#முயற்சி_திருவினை_ஆக்கும்
ஒரு #உழைப்பாளியின் அற்புதக் கதை
சமூகத்தின் மிக மிக ஏழ்மையான குடும்பம் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப் போல் தொழில் செய்துவந்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது.
அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
சென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. பிளாட்பாரம் தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை
கேட்டார் கிடைக்கவில்லை.
‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்வி மேல் தோல்வி பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என விளிம்பு நிலை மனிதர்களுடன் படுத்துக் கொண்டிருந்தார்.
Read 25 tweets
13 Oct
உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?
தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி ‘மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம் அனைவரையும் மகிழ்விக்கும்
பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு’ என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை
கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.
மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!