ஐப்பசி : 0️⃣2️⃣

நாட்டிய நவராத்ரி (Natya Navrathri)

நாட்டியக்கலை தெய்வப் பொலிவுற வளர்ந்து வந்ததற்கு ஆலயங்கள் பெரும்பங்கு வகித்துவந்தன.
பரதநாட்டியத்தின் நிறைவான கலையெழில் நமது தமிழகத்திலேதான் பொலிந்து விளங்குகிறது. தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி ஜில்லாக்களில்,
பரதநாட்டியம் இன்றும் ஜீவகளையுடன் விளங்குகிறது. இல்லையா??? கடவுளுக்கே நம்மவர் நடராஜ வடிவம் தந்து ஆடுந்தெய்வமாக வணங்கினர். கோயில்களில் நர்த்தனமும் தாண்டவமும் ஒரு வழிபாடாக இன்றளவும் கருதப்படுகிறது. கோயில் தூண்களிலும் சுவர்களிலும் கண்கவர் அழகான நாட்டிய வடிவங்கள் செதுக்கப்
பெற்றிருக்கின்றன. மதுரை, சிதம்பரம் கோயில்களில், அபிநய முத்திரைகளும், கரணங்களும் கூடிய நாட்டியக்கலைச் சித்திரங்கள் பலவற்றை நாம் காண்கிறோம்.

நம் பெரியோர்கள் கலையைக் கல்லிற் சமைத்து அழியாப் புத்தகமாக்கினார்கள்.
அந்தச் சித்திரங்களின் மேல் பிசுக்கும் மெழுக்கும் படர்ந்த
இன்றைய நிலை பரிதாபத்தின் உச்சக்கட்டம்.

எப்படியோ.. நாட்டியக்கலை இப்போது உயிர்த்தெழுந்து, மறுமலர்ச்சி பெற்று வருகிறது.

வங்காளத்தில் தாண்டவ வகையைச் சேர்ந்த மணிப்புரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டம் போலவே கர்பா நடனம் நடக்கிறது.
சொல்லப்போனால்..மீடியாக்கள் கர்பா ஆட்டங்களுக்கு அதிகமுக்கியத்துவம் ஈந்துவருகின்றன. கத்தியவாரில் ஒருவகை நடனம் நடக்கிறது. மலையாளத்தில் புராணக் கதைகளைக்கொண்ட கதகளி.

நடனத்தில் இரண்டு பிரிவுகளுண்டு: ஆண்மையும், உக்கிரமும், வீரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின்
பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும்(Thandavam).

பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரசபாவனையுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்ய ( Lasya)நடனமாகும். தாண்டவம், ஆண்மை; லாஸ்யம், பெண்மை இரண்டும் சிவபார்வதி நடனமாகி, அர்த்தநாரீசருள் அடங்கியுள்ளன.

பரத சாஸ்திரம் எழுதிய முனிவர் பாணினி
காலத்திற்குப் பிறகே இருந்ததாகத் தெரிகிறது. அந்த அரிய நூலுக்கு காஷ்மீரில் வசித்த அபிநவ குப்தாசாரியார் பெரிய விரிவுரை எழுதினார். நாட்டிய சாஸ்திரம் 36 அத்தியாயங்களில், நாடகம். சங்கீதம், கலைநுணுக்கம், இலக்கணம், நாட்டியம் ஆகிய அனைத்தையும் விரிவாக விளக்குகிறது;
அதில் பரத நாட்டியக் கலையை சுமார் பதின்மூன்று அத்தியாயங்களில் பரதமுனிவர் விளக்குகிறார். இக்கலையை பரதர் - மூன்று கூறாகப் பிரிக்கிறார்: அவை:
(1) நாட்டியம்: நாடகத்திற் பயனாவது; கதைப்பொருளுடன் இணைந்த நயத்தைக் கொண்டது;
(2) நிருத்தியம்: ரசம், குணப்பண்புகளைப்பற்றி அபிநயித்தல் ;
(3) நிருத்தம்: தாள லயத்தை முதன்மையாகக் கொண்ட வரிக்கூத்து.

...Natya Navrathri ....to b continued......

🌿

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

20 Oct
வரலாற்றை படித்தால் பல விஷயங்கள் இங்கு திரிக்கபட்டு பொய்யாக சொல்லபட்டிருப்பது தெரிகின்றது

காந்தியின் போராட்டம் தண்டனையாய் முடியும் பொழுது அன்றைய உலக பணக்காரர்களில் ஒருவரான நவாப் ஆஹாகான் பிரிட்டிசாரோடு வாதாடி தன் அரண்மனையிலே காந்தி தண்டனை காலத்தை கழிக்க வழி செய்கின்றார்
அவருக்கு இருந்த ஏராளமான அரண்மனைகளில் ஒன்று காந்திக்கு மகராஷ்ட்ரா பக்கம் ஒதுக்கபடுகின்றது, அதுதான் சிறையாம்

ஆம், அரண்மனையில் ஒரு சிறைவாழ்வு என்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. இந்த தியாக வாழ்வின் உச்சத்தில்தான் அவர் கடிதமும் புத்தகமும் எழுதி கொண்டே இருக்கின்றார்
நேரு சிறைவாழ்வு இன்னும் தியாகம் நிறைந்தது. அன்னாருக்கு கடுங்காவல் விதிக்கபட்ட நிலையில் மனைவிக்கு உடல் சரியில்லை சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும் என கோருகின்றார், அனுமதி கொடுத்து சுவிஸ்க்கு அனுப்பி வைக்கின்றது பிரிட்டன் அரசாங்கம்
Read 5 tweets
20 Oct
அன்னை சாரதா தேவியிடம் மன்னிப்பு கேட்ட குரு தேவர்**!!

ஒருநாள் அன்னை சாரதா,
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது அண்ணனின் மகள் லெட்சுமி வருவதாக கருதி, ‘துயி’ என்றார்.

வங்காளத்தில்
‘துயி’ என்ற சொல்,
வேலைக்காரர்களை அழைக்கும்
‘‘அடி’’ என்ற பொருள் படியான மிகவும் மரியாதைக் குறைவான சொல்லாகும்.

ஆனால் அன்னை அதை அவமரியாதையாக நினைக்கவில்லை. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர்.

‘‘ வந்தது நீயா? நான் லெட்சுமி என்று எண்ணிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு!’’ என்று கூறினார்.
ஆனாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனம் சமாதானம் அடையவில்லை.
மறுநாள், ‘‘ நான் உன்னை மரியாதை குறைவாக அழைத்துவிட்டதை நினைத்து எனக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் போய்விட்டது’’ என்று கூறி வருந்தியிருக்கிறார்.
Read 4 tweets
19 Oct
இனம் கண்டு கொள்ளுங்கள் நமது துரோகிகளை!

1993 மும்பை குண்டுவெடிப்பு நடந்து அப்பாவி பொதுமக்கள் பலநூறு பேர் உயிரை பலிவாங்கியது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் இது நடந்தது.

இதில் சம்பந்தப்பட்டவர்களில் யாகூப் மேமனும் ஒருவன்.

இவனுக்கு நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது.
அவன் தனக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு அனுப்பினான்.

அதில் மொத்தம் 291 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.

அதாவது மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட இவனுக்கு அந்த குண்டுவெடிப்பால்.

பல நூறு அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் இருந்த
இவனுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று 291 பேர் கேட்டனர்.

அதில் முக்கியமானவர்கள் பெயரை மட்டும் கீழே குறிப்பிட்டுளேன்.

பார்த்தால் அசந்துவிடுவீர்கள்.

Justice Panachand Jain (Retd)
Justice H.S. Bedi (Retd)
Justice P. B. Sawant (Retd)
Justice H. Suresh (Retd)
Justice K. P. Siva
Read 9 tweets
19 Oct
உலக கோடீஸ்வரர் கேரளத்து, அனந்த பத்மநாபருக்கு இணையான108 திவ்ய தேசங்களில் 68 வது திவ்ய தேசமும், , மலை நாட்டு திருப்பதிகளில் ஒன்றானதுமான திருவட்டாறு ஆதிகேசவர்
இன்று
தனக்காகக் கை நீட்டுகிறார் ?

12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நியதி கெட்டு,,இப்போது,,
400 வருடங்களாயிற்று
ஒரு முழுமையான கும்பாபிசேகம் நடந்து.

1932 வரை தினம் 600 கிலோ அரிசி சமைக்கப்பட்டு ஊருக்கே சோறிட்ட, திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் இன்று தனது கோவில் கும்பாபிசேகத்திற்கே தடுமாறுகிறார்?
யார் செய்த வினை?
காரணமானவர்கள் யார்?
பல்லாயிரம் ஏக்கர் நிலங்களின் வருவாய் எங்கே
1923 வரை 120 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்த திருக்கோவில் திருவட்டாறு ஆதிகேசவர் திருக்கோவில்
குமரி மாவட்டம் முழுக்க ஆதிகேசவரின் சொத்துக்கள் விரவிக் கிடக்க
குத்தகை கூட வசூலிக்க முடியாத நிலையில்
ஆதிகேசவருக்கு ஒரு அறம் கெட்ட துறை எதற்கு ?
Read 9 tweets
19 Oct
என்ன தான் நடக்கிறது
திம்மராஜபுரம் பெருமாள் கோவில்?
1) மொத்த கோவில் நிலங்கள் சுமார் 120 ஏக்கர்கள் மாநகர பகுதிகள்

2) அதில் 40 ஏக்கர் மேல் தமிழக அரசு கையகபடுத்தியுள்ளது (வாட்டர் போர்டு, காவல்துறை, என )
3) கோவில் நிலத்தை நுற்றுக்கணக்கானோர் பத்திர பதிவு செய்துள்ளனர் அது இன்று
வரை தொடர்கிறது

4) 1983 ல் கோவில் நிலத்தை குறிப்பிட்ட பகுதிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.

5) 1965 முதல் தற்போது வரை 2000 வீடுகளுக்கும் மேல் கோவில் பெயரில் வாடகை & குத்தகை செலுத்தாமல் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டும் தொடர்கின்றனர்
6) இதில் இந்து சமய அறநிலைத்துறை சட்டங்களை மீறி இந்து இல்லாதவர்களும் சுமார் 200 வீடுகள் உள்ளன.
சரி நாம் வலியுறுத்துவது

👉சட்ட விரோத பத்திரபதிவு & பட்டாக்களை ரத்து செய்

👉வாடகை குத்தகை பல ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடு
முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்று
Read 4 tweets
19 Oct
ஸ்டாலின்.. சட்ட மன்றத் தேர்தல்..
மத்திய அரசிடம் மண்டியிட்ட திமுக..
தூது விட்டும் பலன் இல்லை..

எச்சரிக்கை செய்த துரைமுருகன்..
வெலவெலுத்துப் போன ஸ்டாலின்..

மக்களவைத் தேர்தல் போல
பிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மாநில சட்ட மன்றத் தேர்தலில்
ஸ்டாலின் பிரசாரம் செய்ய முடியவில்லை.

ஏற்கனவே 2G வழக்கு வேகம் எடுத்துள்ளது.
ஜெகத்ரட்சகனின் 89 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வழக்கு மீண்டும் வருகிறது.
பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணிக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது.
ஸ்டாலின் குடும்பம் மீது உள்ள
அமலாக்கப் பிரிவு வழக்குகளை தூசி தட்டி எடுத்தால்
என்னாகும்.

சட்ட மன்றத் தேர்தலில் திமுகவை தோல்வியை சந்திக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

எனவே, பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!