1.🌹🌺 *எல்லாரும் சேர்ந்து ராம நாமம் சொல்வோம். ஸ்ரீராமருக்காச்சு, நமக்காச்சு..ஒண்டிக்கு ஒண்டி பாத்துருவோம்.. கூட்டு பிரார்த்தனையின் வலிமையை விளக்கும் கதை* 🌹🌺

🌺கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை
2.மிக விமரிசையாகக் கொண்டாடுவார்.
கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராம‌நவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள்‌ வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு பகல்‌ பாராமல் பஜனை நடந்துகொண்டே யிருக்கும். வருபவர்கள்‌ அனைவருக்கும் உண்வுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி.
3.🌺ஒரு சமயம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம்.
அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம்.

🌺உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை ஓரமாக சமையலறையிலேயே விட்டிருந்தாள் கோபன்னாவின் மனைவி.
4.நைவேத்ய சமயம் வந்துவிட்டதா என்று பார்க்க கூடத்திற்குச் சென்றார். மிக உற்சாகமாக பஜனை நடந்து கொண்டிருந்தது. தன்னை மறந்து சிறிது நேரம் அங்கேயே ஓரமாக நின்றுவிட்டார்.

🌺சற்று நேரத்தில் நைவேத்யம் கொண்டு வா என்று கோபன்னா சைகை காட்ட உள்ளே வந்தார். நைவேத்யத்தை எடுக்கும் சமயம்
5.‘சொரேல்‘ என்று உரைத்தது. உறங்கிக்கொண்டிருந்த இடத்தில் குழந்தையைக் காணவில்லை.
பதறிப் போய்த் தேடினாள்.
குழந்தை தவழ்ந்த அடையாளம் கஞ்சித் தொட்டியின் அருகே தெரிந்தது.

🌺அங்கே.. கஞ்சித்தொட்டியினுள்..
கொதிக்கும் கஞ்சிக்குள்..
மிதந்துகொண்டிருந்தது..
குழந்தை..
6.குழந்தையேதான்..
மயக்கமடைந்து விழுந்தாள்.

🌺நைவேத்யம் கொண்டுவரப் போனவளை வெகு நேரமாய்க் காணோமே என்று கோபன்னா தானே தேடிக்கொண்டு வந்தார்.
மனைவி கீழே விழுந்திருப்பதைப் பார்த்து நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார்.
என்னாச்சும்மா?
பசி மயக்கமா?
இதோ நைவேத்யம் ஆயிடும்.
7.பாகவதா சாப்பிட்டா சாப்பிடலாமே..

🌺இ..ல்ல..
என்ன? ஏன் அழற?

🌺கு..ழந்..தை..

🌺குழந்தைக்கென்ன?
அவன் இங்கதான் எங்கயாவது விளையாடிண்டிருப்பான்.நேரமாச்சும்மா. நைவேத்யம் எடு.. ராமர் காத்துண்டிருக்கார்.. பாகவதாளுக்கும் பசிக்கும். காலைலேர்ந்து பாடறா‌ எல்லாரும்..

🌺கு.. ழந்.. தை.
8.🌹குழந்தைக்கென்னாச்சு?

🌺அங்க..கையை நீட்டிய இடத்தில் கஞ்சித் தொட்டிக்குள் மி தந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்.
ஒன்றுமே புரியவில்லை.

🌺கணவனும் மனைவியும்‌ ப்ரமை பிடித்தாற்போல் சற்று நேரம் நின்றனர்.
மெதுவாக கொதிக்கும் கஞ்சியிலிருந்து குழந்தையின்
9.உடலை எடுத்து வாழை இலையில் வைத்தார். ஒரு முடிவுக்கு வந்தவராக
கண்ணைத் துடைத்துக் கொண்டு இன்னும் பத்து வாழை இலைகளை வைத்து ஒரு சாக்கில் குழந்தையின் உடலைச் சுற்றி ஓரமாக வைத்தார்.

🌺நம்ம துக்கம் நம்மோடு போகட்டும். பாகவதா சாப்பிடும் வரை குழந்தை போனதை மூச்சு விடக்கூடாது.
10.கண்ணைத் துடை.
எப்படி? எப்படி முடியும்? போனது நம்ம குழந்தையாச்சே..

🌺அவன் நம்ம குழந்தை இல்ல. ராமனோட குழந்தை. ராமன் தான் கொடுத்தான். அவனே எடுத்துண்டாச்சு..இப்ப குழந்தை போனதை சொன்னா யாரும் சாப்பிடமாட்டா. எல்லாரும் இவ்ளோ நேரம் பாடியிருக்கா. பேசாம வா..
‌மனைவியை மிரட்டினார்.
11.🌺இருவரும் பஜனை நடக்கும் கூடத்துக்குப் போனார்கள். அப்போது ஒரு பாகவதர்,

🌺கோபன்னா, தீபாராதனை சமயம்.. குழந்தையைக் கூப்பிடுங்கோளேன்..
கூப்டுங்கோ..

🌺அவன் தூங்கறான். வர மாட்டான்.
பரவால்ல எழுப்பி தூக்கிண்டு வாங்கோ..என்று இன்னொருவர் சொல்ல, அதற்குமேல் தாங்கமாட்டாமல்
12.,கோபன்னாவின் மனைவி கதறினாள்.

🌺என்னாச்சு? என்னாச்சு?
எல்லாரும் பதற, கோபன்னா ஒருவாறு தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லும்படியாயிற்று.

🌺அனைவரும் உறைந்துபோயினர்.
பெற்ற குழந்தை இறந்துவிட்டான்.
உடலை ஒளித்து வைத்து விட்டு பஜனையா? பாகவத ஆராதனையா?
13.இப்படி ஒரு ஆத்யந்த பக்தியா?
நம்பவே முடியவில்லை.

🌺பெரியவராக இருந்த ஒரு பாகவதர்,
கோபன்னாவின் அருகே வந்தார்.
கோபு, இப்படி பக்தி பண்ற உனக்கே கஷ்டம் வந்தா, எல்லாருக்கும் ராமன் மேல நம்பிக்கையே போயிடும்.

🌺குழந்தையைக் கொண்டு வா. எல்லாரும் சேர்ந்து ராம நாமம் சொல்வோம். அம்ருத மயமான
14.நாமம் குழந்தையை எழுப்பும். ராமருக்காச்சு, நமக்காச்சு. எடுத்துண்டு வா..ஒண்டிக்கு ஒண்டி பாத்துருவோம்..

🌺கோபன்னா அசையாமல் நின்றார்.
அவரைத் தள்ளிக்கொண்டே போய் குழந்தை இருக்கும் இடத்தை அடைந்து அந்த பாகவதரே தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்.
15.🌺நடுக் கூடத்தில் வெந்துபோயிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் உடல் கிடத்தப்பட்டது.அனைவரும் சுற்றி அமர்ந்து தங்களை மறந்து கண்ணீர் வடிய ராம ராம ராம ராம ராம
என்று நாமம் சொல்ல ஆரம்பித்தனர்.

🌺எவ்வளவு நேரம் ஜபம் செய்தார்களோ தெரியாது. அனைவருமே தன்னை மறந்த நிலையில் ஜபம் செய்து
16.கொண்டிருக்க வாசலில் ஒருவர் வேகமாய் வந்தார்.

🌺வடநாட்டைச் சேர்ந்த ஒரு பெரியவர் போல் இருந்தார். நெடுநெடுவென உயரம். தலையில் பச்சை நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்.ஒரு கையில் பெரிய கோல். மற்றொரு கையில் கமண்டலம். ஆஹா யார் இந்த மஹானுபாவன்.கிடுகிடுவென்று கூடத்தினுள் வந்தவர்,
17.🌺ஏய் இன்னும் என்ன தூக்கம்? எழுந்திரு
என்று கர்ஜித்துக் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரைக் குழைந்தையின் உடல் மீது தெளித்தார்.

🌺குழந்தையின் உடல் சிலிர்த்தது.. ஆம்..உறக்கத்திலிருந்து எழுந்தவன் போல் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான் குழந்தை.
18.எல்லோரையும் சுற்றும் முற்றும் பார்த்தான்..

🌺மாயாஜாலம்போல்
அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க, கிடுகிடுவென்று வெளியேறினார் வந்தவர்.

🌺அனைவரும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க, வந்தவரைத் தேடி வாசலில் ஓடினார் கோபன்னா.
அதோ தூரத்தில் அந்தப் பெரியவர்.
விடாமல் துரத்தினர்..
19.🌺யோகி போலிருக்கிறார். யாராய் இருக்கும்?கரங்களை சிரமேல் குவிக்க, அந்தப் பெரியவர் திரும்பி கோபன்னாவைப் பார்த்தார். ஒரு கணம் கோதண்டமேந்தி, ஸ்ரீராமனாகக் காட்சி கொடுத்தவர், சட்டென்று மறைந்துபோனார்.

🌺ராமஜோகி மந்துகோனரே…
குதித்துக்கொண்டு பாட ஆரம்பித்தார்
20.பிற்காலத்தில் பத்ராசல ராமதாசர் என்று அழைக்கப்பட்ட கோபன்னா..
நாமத்தால் ஆகாததும் உளதோ?

#ஸ்ரீராம_ஜெயராம_ஜெயஜெய_ராமா !

💐🌹 *சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🏵️💐🌹

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy jayaraman

malathy jayaraman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

21 Nov
1.மொட்டை போடுவதன் காரணம்-
*உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.*
2.*இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.*

*பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.*
3.*குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.*

*ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும்
Read 14 tweets
21 Nov
1.#நவகாளி_கலவரம்

1946ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி லக்ஷ்மி பூஜை அன்று முஸ்லிம் லீக்கினால் அன்றைய கிழக்கு வங்காளம் சிட்டகாங் நகரத்தில் தொடங்கிய கலவரத்தில் 5000 மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர்; எண்ணற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; எண்ணற்ற மக்கள் வலுக்கட்டாயமாக
2.மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; 2000 மைல்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்த இந்துக்கள் ஜிசியா வரிவிதிப்பிற்கு ஆளாகினர்.

குலாம் சர்வர் ஹுசைனி என்ற சுஃபி இஸ்லாத்தை சேர்ந்தவன் தான் இந்த கலவரங்களை தன் ஆதரவாளர்களுடன் முன் நின்று நடத்தினான். இதுவே #நவகாளி_கலவரம் என்று அறியப்படுகிறது.

*
3.இதில் #ராஜேந்திரலால்_சௌத்ரி என்ற நவகாளி #இந்து_மஹாசபையின் உறுப்பினர் தன்னால் இயன்ற அளவு இந்து குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்து, தன்னால் இயன்றவரை கலவரக்காரர்களை நெருங்கவிடாமல் தன் வேட்டை துப்பாக்கி துணை கொண்டு தடுத்து வந்தார்.

ஆனால் குண்டுகள் தீர்ந்து விட்டதால்,
Read 9 tweets
21 Nov
1.துளசியைப் பற்றி_பத்ம_புராணம் :

1. எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே
மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக்
கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும்
ரோகங்களும் விலகி விடும்.
2.துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக
உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

2. எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த
இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன
ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய
வேண்டும்.
3.துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு
மறுபிறவி கிடையாது.

அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு
மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி
விசாரித்தபோது அது
Read 5 tweets
21 Nov
1.பூக்கின்ற எல்லா பூக்களும் இறைவன் பாதத்தை சென்று அடைவதில்லை.. அது இறைவனுக்கு மிகவும் பிடித்த பூவாக இருந்தாலும் கூட...♥

பவளமல்லி பூக்க ஆரம்பித்து விட்டது.. அதை சேகரிக்க வழக்கம் போல் வீட்டு வாசலுக்கு வந்தேன்..♥
2.அது என்னமோ இந்த பவளமல்லி மட்டும் வேண்டும் என்றே நம்மை சோதிக்கவோ என்னமோ தெருவிலேயேதான் உதிரும் ♥

மரக்கிளையை உலுக்கிவிட்டு பூக்களை பொறுக்க குனிந்த போது , முன்பே கீழே விழுந்து கிடந்த பூக்களின் மீது வண்டிகளும் சைக்கிளும் ஏறி
3.அவை நசுங்கி கிடைப்பதை பார்த்தும் மனம் மிகவும் வலித்தது.♥

♥ பூக்களே பகவானுக்கு மிகவும் பிரியமான பூக்களாக நீங்கள் பிறந்தும் கூட , அவன் திருவடியை அடையாமல்
இப்படி வீணே மிதிபட்டு கிடக்கிறீர்களே ♥
அடுத்த ஜென்மாவிலாவது அவன் திருவடியை அடைய அவனிடமே பிரார்தித்துக் கொள்ளுங்கள் ,
Read 5 tweets
20 Nov
1.ஞானியாக கருதப்பட்ட கபீர்தாசர் சிலை வழிபாட்டை குறை கூறியவர்களில் ஒருவராகவும் இருந்தார் ...

ஒருமுறை கல்லால் ஆன சிலைகள் விற்கும் ஒரு கடையிலிருந்து ஒரு விநாயகர் விக்கிரகத்தை தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டு விட்டு ”உன் கடையில் இருக்கும் எடைக்கல்லும் இந்த விநாயகரும்
2.ஒரே கல்லினால்தான் செய்யப்பட்டுள்ளன ... பெரிய வித்தியாசம் இல்லை” என்று கூறினார் ...

பல வருடங்கள் இந்த நிகழ்வை ஒரு கதையாக பல நாத்திகர்கள் கூறி வந்தனர் ...

இது குறித்து கிட்டத்தட்ட அது போன்றே மனநிலையில் இருந்த ஒருவர் பரமாச்சாரியாரிடம் கேட்டார் ...

பரமாச்சாரியர் கேள்வி கேட்ட
3.நபரிடம் ... “உன்னிடம் தினமும் காலையில் காப்பி குடிக்கும் பழக்கம் இருக்கிறதா” என்று கேட்டுள்ளார் ...

அந்த நபரும் உண்டு என்று பதில் அளித்துள்ளார் ...

காப்பியை பீங்கான் கோப்பையில் குடிப்பியா என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் பரமாச்சாரியர் ...

அதற்கு அந்த நபர் ஆமாம்
Read 5 tweets
20 Nov
1.சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்

சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை
சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.
2.சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.
மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம்,
3.இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!