Sumi Profile picture
20 Nov, 13 tweets, 2 min read
#தகவல்நேரம்
*நாவடக்கம்..*
முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் பண்டிதர்..

அவரும் .. *முடிவெட்ட நாலணா.. சவரம் பண்ண ஒரணா சாமி !* என்று பணிவுடன் கூறினார்..

பண்டிதர் சிரித்தபடியே,
*அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு* என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு
அமர்ந்தார் பண்டிதர்..

வயதில் _*பெரியவர்*_ என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..

_*நாவிதர் கோபப்படுவார்*_ என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்..

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்..

*ஏன்டாப்பா..
உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம..* *உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..?*

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..
*நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்..*
*எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?*
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது..

அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. *இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?*

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..

*சாமி ரொம்ப சிரிப்பா
பேசுறிங்க..* என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..

*எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?.!*

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம்
காயப்படுத்திவிட்டது..

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்..

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்..

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..

பண்டிதரின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..
*சாமிக்கு இந்த மீசை
வேணுங்களா..?*
பண்டிதர் உடனே, *ஆமாம்* என்றார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..
*மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க..* என்றார்

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..

அதிர்ச்சியில் உறைந்து
போனார் பண்டிதர்..

நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..

அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,
*சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?*

இப்போது பண்டிதர் சுதாரித்தார்..
_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..
*இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..* என்றார் பண்டிதர்..

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..

*சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..*

*சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..* என்றபடி கண்ணாடியை பண்டிதரின்
முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்..

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..

கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு..
விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்..

*நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..*

*இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும்..*

தலைக்கனம் - நம் தலையெழுத்தை மாற்றி
விடும்.

நமக்கு தலைக்கனமும் வேண்டாம்.
தன்மானக் குறைவும் வேண்டாம்.
சுயநலமும் வேண்டாம்.
சுயமரியாதையை இழக்கவும் வேண்டாம்.👍
🌹 இனிய நாளாகட்டும்🌹

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sumi

Sumi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sumi_sumiprem

19 Nov
#உலக #ஆண்கள் #தினம்

#ஆண் #என்பவன் #வாழ்க்கையில்

1 என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி காவலன் என்று சொல்லிக் கொள்ளலாம்.

2
உடல் ரீதியாக இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன் ஆண் தான்.

3 ஷாப்பிங் செய்ய பெண்களுக்கு இருக்கும்
மகிழ்ச்சியை விட, தான் சம்பாதித்த பணத்தில், தன் தங்கை, காதலி, அம்மா போன்றவர்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதில் ஆண் மகனே அதிக மகிழ்ச்சி அடைகிறான். ஆண் மற்றவரை மகிழ்விக்க தன் வலியையும் மறைத்து வாழ்பவன் என்பதே நிதர்சனம்.

4 ஓர் பெண்ணின் வாழ்க்கை ஆண் இன்றி முழுமை அடைவதில்லை. அதே போல
Read 6 tweets
19 Nov
#தகவல்நேரம்
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:
1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது
3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது
4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே
5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை.
ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்
8. இ-மெயில் கண்டுபிடித்தது
இந்த மாநிலம் தான்.
9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்
10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான்
Read 4 tweets
18 Nov
#தகவல்நேரம்
டுவிட்டர் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......

இங்கே நமது சகோதாிகள் வருவது

தனது உலகத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற ஆவலுடனும், தன்னைப் போன்ற மற்ற தோழிகள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும், உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ரணங்களை சற்று மறைத்து விட்டு
மனதினை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், திறமை மிக்க தோழிகளை இணைத்துக் கொள்ளவும், மரியாதையான நண்பர்களையும், உறவுகளையும் பெற்றுக்கொள்ளத்தான்

மேலும் இங்கு உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் காயம் பட்டவர்களாகவும் இருப்பார்கள் . அல்லது இல்லாமலும் இருக்கலாம், அதற்காக
அவர்களின் அந்தரங்க விடயங்களில் நீங்கள் தலையிடுவது மிகவும் அநாகரீகமாகும். ஒரு ஆண் நட்பினை பெண் ஏற்றுக்கொள்கிறாள் என்றால்
கண்ணியமான ஆண் தேவதை என்று நம்புகிறாள்.
சில மிருகங்கள்
இங்கே பதிய இயலாத வார்த்தைகளில் இம்சைகள் செய்வது அருவருப்பூட்டுகிறது.

உங்களின் மீது மதிப்பு
Read 6 tweets
15 Nov
#ஆகாய ஆச்சரியம்.!

#தகவல்நேரம்

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது.

கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலய
பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம்.
இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கலாம்
ஆச்சரியம் தான்.
! அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு
Read 6 tweets
14 Nov
#மக்களை_மதியுங்கள்

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது சாதரணமாக
இங்கிலாந்து தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார். அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை
பற்றி விசாரிக்க நினைத்தார்.

இவர் மன்னர் என்பதை
அறியாமல்
ஒரு ஏழை என்று நினைத்து ஷோரூம் ஊழியர்கள் அடித்து விரட்டினர். இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டார்.

பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.சிவப்பு கம்பள
வரவேற்பு அளித்தனர். ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக
Read 7 tweets
14 Nov
பாவியாகிவிட்டோமே என
பிறந்ததற்காக அழுதீர்கள்.
புன்னியம் பெற்றதாக
நாங்கள் சிரித்தோம்.

நீங்கள் சிரித்தபோது
சிதறியது எங்கள் துயரம்.
நீங்கள் பேசினாலே
கலவரமடைந்தது எங்கள் கவலை.

நீங்கள் குழந்தையானபோது
எங்களுக்கு..
குட்டி பொம்மையானீர்கள்.
நீங்களோ பொம்மைகளுக்குகூட
தாயானீர்கள் தந்தையானீர்கள்.

நாயென்றும் பூனையென்றும்
நாங்கள் சொன்னதை
நீங்கள் சக உயிராக பார்த்தீர்கள்.
உணர்வுகளின் மொழி
அன்பென்று பாடம் நடத்தினீர்கள்

வேற்றுமை உங்கள் கண்களுக்கு
தெரியவில்லை
நாங்களோ சாதி மதங்களுக்கும்
பார்வைகளை வைத்தோம்.

நாங்கள் புன்னகையை சேமித்து
அன்பை தொலைத்தோம
நீங்கள் சிரிப்பை செலவு செய்து
அன்பை சேகரித்துக்கொண்டீர்கள்.

உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள
நிறைய இருக்கிறது
அதற்குள்ளாக..
வேக வேகமாக வளர்த்து
நாங்கள் உங்களை..
கெடுத்து விடுகிறோம்.

உங்களை போல குழந்தைகளாகவே இருந்திருக்கலாமென
ஆசைக்கூட படமுடியவில்லை
குழந்தைகளாகவே மாறிப் போனதற்காக
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!