சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டல், கீழப்பாவூர்

பாவூர்சத்திரம் என்ற ஊரை உலகறியச் செய்த
சுமார் 35 வருடமாக தனித்தன்மையுடன் இயங்கிவரும் சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டல்ன் புதிய கிளை தான் இது. இந்த ஹோட்டல் திருநெல்வேலி டு தென்காசி மெயின் ரோட்டில் பாவூர்சத்திரத்திக்கு முன்னதாக உள்ள
கீழப்பாவூர் என்னும் இடத்தில் உள்ள புதிய மார்க்கெட் வாயிலில் அருகே அமைந்துள்ளது. இங்கு மட்டன் உடன் சாப்பாடு மற்றும் முட்டை, குடல் மற்றும் ஆட்டு ரத்தம் கலந்த பொரியல் மட்டுமே இங்கு உள்ளது வேறு எந்த அசைவ உணவுகளும் கிடையாது. கூட்டு பொரியலும் இல்லை ஆனால் இதை மட்டும் சாப்பிடவே கூட்டம்
அள்ளுகிறது. இங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு தான் இந்த ஏரியாவின் தனித்துவமான சுவை கொண்டது குழம்பு மட்டுமே 4, 5 முறை வாங்கி சாப்பிடுபவர்களும் உண்டு அன்லிமிட்டட் மீல்ஸ். மட்டனுடன் சாப்பாடு 120 ரூபாய் குடல் ரத்த பொரியல் 30 ரூபாய் முட்டை பத்து ரூபாய் இவர்களால் உருவாக்கப்படும் ஸ்பெஷல்
தயிர் பத்து ரூபாய். தென்காசியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதனால் குற்றாலம் செல்பவர்கள் இங்கு சாப்பிடுவதற்காகவே சென்று விட்டு வரலாம் கண்டிப்பாக மனதில் நிற்கும் சுவை

கடையோட டீடெயில்ஸ்

Kamarajar Market, Keezhapavur,
maps.app.goo.gl/DaoTUuz7YPvj18…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Travel & Living ( தமிழ் )

Travel & Living ( தமிழ் ) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TraveILiving

8 Nov
பாண்டிச்சேரிக்கு சரக்கு அடிக்க போறீங்களா?
இத படிச்சிட்டு போங்க

சமீபத்தில் பாண்டிச்சேரி போக நேரிட்டது. அங்குள்ள எல்லா மதுக்கடைகளும் காற்றாடியது.. என்னவென்று விசாரித்தால் அப்போதுதான் தெரிந்தது தமிழகத்தை காட்டிலும் பாண்டிச்சேரியில் மது வகைகளின் விலை மிகவும் உயர்ந்துள்ளது Image
காரணம் கொரோனா வரி. அதனால் தமிழகத்திலிருந்து யாரும் இங்கு மது அருந்த வருவதில்லையாம். விஸ்கி, பிராந்தி, ஓட்கா, ரம் உள்ளிட்ட மதுபான வகைகளின் விலை 200% வரை உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, Mc brandy மதுபானம் ஒரு குவாட்டர் இதுநாள்வரை அங்கு 80 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது
தற்போது இந்த
மதுவகையின் மீது 78 ரூபாய் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்டு, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே வகை மது தமிழகத்தில் ஒரு குவாட்டர் ரூபாய் 140 மட்டுமே.
மற்றுமொரு உதாரணம் மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி ஒரு ஃபுல் தமிழ்நாட்டில் 840 ரூபாய் மட்டும் ஆனால் அதே பாண்டிச்சேரியில் 930 ரூபாய்
Read 8 tweets
5 Nov
கொல்லிமலை ரிசார்ட்ஸ்

இங்கு அரசு தங்கும் விடுதிகள், தனியாருக்கு சொந்தமான ரிசார்டுகள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் கிடைக்கும் உணவு மிகவும் சத்து நிறைந்தது.இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வளர்ந்த ஆடு, கோழிகள் வைத்து சமைக்கப்படுவதால் அந்த உணவுகளை மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Image
கவர்மெண்ட் யூத் ஹாஸ்டல்

இது அரப்பளீஸ்வரர் கோவில் முன்பாகவே அமைந்துள்ளது இங்கு Dormitory எனப்படும் பல படுக்கைகள் கொண்ட பெரிய படுக்கை அறை உண்டு இதற்கு ஒருநாள் ஒருவர் தங்க Rs.200 மட்டுமே இதைத்தவிர குடும்பத்தினர் தங்குவதற்கு டபுள் பெட்ரூம் உண்டு Rs 700 முதல் வாடகை ஒரு நாளைக்கு. ImageImageImageImage
Silverline Retreat Hotels

இந்த ரிசார்ட் வாழவந்தி நாடு என்னும் இடத்தில் உள்ளது. குடும்பத்தினருக்கு மிகவும் ஏற்ற ரிசார்ட் இது இந்த ரிசார்ட் அமைந்துள்ள இடமே அவ்வளவு அழகாக இருக்கும் இங்கு இருவருக்கு ஒருநாள் வாடகை Rs2600 முதல்

07502558585

maps.app.goo.gl/sXiaub5Uvs8fJf…
Read 8 tweets
20 Oct
கொடைக்கானல் போக பிளான் பண்றீங்களா?

இந்த லாக்டவுன் காலத்திலும் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் ePASS பெற்றுக்கொண்டு வரலாம் என்று முதன்முதலில் அறிவித்தது கொடைக்கானல் சுற்றுலாதளத்துக்குதான். அப்படி ePASS பெற்றுக்கொண்டு சென்றால் ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை பெற முடியுமா Image
என்பதே கேள்வி? அதற்கு பதில் தான் இந்த பதிவு.

முதலில் ePASS பற்றி பார்ப்போம். சமீப நாட்களில் ePASS செக்கிங் அதிக அளவில் இல்லை. நான் இங்கு வந்த போது என்னிடம் உள்ள ePASSசை பார்க்கக்கூட இல்லை அனுமதிக்கிறார்கள். ஆனால் நீங்கள்காரில் வருகிறீர்கள் என்றால் ePASS எடுப்பது அவசியம்.
முன்புபோல் இல்லை இப்போது ஆட்டோமேட்டிக் அப்ரூவல் தான் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திலே உங்களுக்கு அப்ரூவல் வந்துவிடும். நீங்கள் வாடகை காரில் வருகிறீர்கள் என்றால் முன்னரே அந்த காரின் நம்பரை கேட்டு பெற்று என்டர் செய்யவும். அப்ரூவல் வந்தவுடன் 2 பிரின்ட் அவுட் எடுத்து Image
Read 18 tweets
6 Oct
வால்பாறை- அதிரப்பள்ளி அருவி

நீங்கள் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால் அதிரப்பள்ளி அருவியை காணாமல் அந்த சுற்றுலா முழுமையடையாது. அதற்கு உங்களுக்குத் தேவை மூன்று பகல் இரண்டு இரவு. முன்னதாகவே வால்பாறையில் தங்கும் விடுதியில் இரண்டு நாட்கள் பதிவு செய்து விடுங்கள் Image
ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை பெற நீங்கள் பொள்ளாச்சியிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட பார்த்துக்கொள்ள வேண்டும் ஏனெனில் போகும் வழியில் 3 முக்கியமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன

சேத்துமடை அணை

இது மிகவும் பிரபலமான சூட்டிங் ஸ்பாட். முன்பு அழகான கிராமத்தை காட்ட வேண்டுமென்றால்
பொள்ளாச்சியை சுற்றியுள்ள இடங்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். அதில் ஒன்றுதான் இது. வின்னர் படத்தின் பல காட்சிகள் இங்கு தான் எடுத்தார்கள். காலையில் இங்கு குளிப்பது ஒரு சுகம்
ஆழியார் போகும் வழியில் அங்கலகுறிச்சி என்னும் இடத்திலிருந்து ரைட் சைடில் 5 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது Image
Read 27 tweets
20 Sep
கோவளம் கடற்கரை, கேரளா

ஆண்களின் ஆதர்ச இந்திரலோகம் எனலாம் இந்த கோவளம். இதன் பிரதான கவர்ச்சி அம்சம் அழகிய கடற்கரைகளாகும். அலைகள் வீசும் கடலை ரசித்தபடியே இதமான மணற்பகுதியில் நடக்கும் அனுபவம் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். Image
கோவளத்தின் பசுமையும், மணற்பரப்பும், நீலக்கடலின் சாந்தமும் உங்கள் கவலைகளை எல்லாம் மறக்க வைத்து விவரிக்கமுடியா பரவசத்தில் மிதக்க வைக்கும். இதை அங்கு இயற்கையின் நெக்லஸ் என்று அழைக்கிறார்கள் அதற்குக் காரணம் அடுக்கடுக்காக பிறை போல் வளைவுகளுடன் கூடிய 3 கடற்கரைகள்
லைட் ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் என்று இந்த மூன்று கடற்கரைகளும் அழைக்கப்படுகின்றன.
கடற்கரையின் மற்றொரு சுவாரசியமான அம்சம் இங்குள்ள மணல் சற்றே கருப்பு நிறத்தில் காணப்படுவதாகும். மோனசைட் மற்றும் லைம்னைட் எனும் கனிமப்பொருட்கள் இம்மணலில் நிறைந்திருப்பதே இதற்கு காரணம்.
Read 14 tweets
12 Sep
பாண்டிச்சேரி உணவகங்கள்

பாண்டிச்சேரி பல கலாச்சாரங்களை கொண்ட ஊர். அதனால் அங்கு எல்லா விதமான உணவகங்கள் உள்ளன முக்கியமாக இந்திய, பிரஞ்ச், இத்தாலி, ரோட்டோர கடைகள் நிறைய உள்ளன அவற்றில் முக்கியமான வகைகளைப் பற்றி பார்ப்போம் முதலில் நம்ம கடைகளைப்பற்றி பார்ப்போம். Image
சேலம் பிரியாணி

60 வருடங்களாக பிரியாணிக்கு மிகவும் புகழ்பெற்ற இடம் இது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் இங்கு அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். முதலில் நீடராஜபயர் தெருவில் அமைந்திருந்தது இப்போது இடத்தை மாற்றி ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது.
பிரியாணிகள் இங்கு அவ்வளவு ருசியாக இருக்கும் மிஸ் பண்ணிடாதீங்க.

கடையோட டீடெயில்ஸ்:-

Salem biriyani hotel
no. 45, Eswaran Dharmaraja Kovil St, Heritage Town, Puducherry
063795 11828
maps.app.goo.gl/AdNAXRAjLGorad…
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!