2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது!
இதை எப்படியெல்லாம் வாங்கலாம்னு நிறைய தகவல்களை படிச்சிருப்பீங்க...

இங்க நான் சொல்ல வர்றது...இன்னமும் இதைப்பற்றி தெரியாம இருக்கறவங்களுக்கு சின்ன ஐடியாவா இருக்கும் :)
மொதல்ல Fast tag வாங்க என்ன Documents வேணும்னு பார்ப்போம்...

1.RC XEROX COPY
2.PAN CARD

மட்டுமே போதும்...

இதுலயும் ஒரு சில டவுட் உங்களுக்கு வரலாம்...

1.வண்டி யார் பேர்ல இருக்கோ அவங்கதான் வாங்கனுமா?

2.அவங்க பேங்க் Accountல தான் பரிவர்த்தனை நடக்குமா?
3. Used car வெச்சிருக்கறவங்க ownership மாற்றினால் car value போயிடும்னு அதே nameல சிலர் வெச்சிருக்கலாம்...

4.இப்போ RC owner பேர்ல இல்லாம நம்ம பேர்ல இந்த Fast tag ஐ வாங்க முடியுமா?

5.அப்படீனா அதற்கு பழைய RC Owner sign&documents தேவையா?
6.Bank மூலம் பரிவர்த்தனை நடக்குமெனில் RC owner nameல Account தரனுமா?

7.உதாரணமா ICICI இந்த fast tag தர்றாங்கனா,அவங்க பேங்க்ல நமக்கு Account இருக்கனுமா?

8.Insurance liveல இருந்தால் மட்டுமே தான் தருவாங்களா?
9. இதை வாங்க RC ownerஏ நேரில் போனால்தான் கிடைக்குமா?

இதுபோன்ற வேறு கேள்விகள் இருந்தாலும் கேளுங்க...

ஒவ்வொன்றாக பதில் சொல்லி வருகிறேன்...
முதல் கேள்விக்கான பதில்:-

RC OWNER யாரா இருந்தாலும் உங்க பேர்லயே வாங்கலாம்!

2வது கேள்விக்கான பதில்:-

Bank account பற்றிய கவலையே வேண்டாம்!
ஏனெனில் அனைத்து பரிவர்த்தனைகளும் Application மூலமே நடக்கும்!
3,4,5 கேள்விக்கான பதில்:-

(பழைய) RC Ownerரோட எந்த documentsம் தேவையில்லை... RC copy மட்டுமே போதும்..
6,7க்கான பதில்:-

பேங்க் accountற்கும் fast tagற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இது prepaid sim மாதிரி EC செய்வதுபோல நம்ம வெச்சிருக்கற bank accountல இருந்து இவங்க தர்ற appக்கு Money transfer பண்ணா போதும்...by G-Pay,,,extra...
8-க்கான பதில்:-

Fasttagவாங்க தற்போதைக்கு
Insurance liveல் இருக்கவேண்டிய அவசியமில்லை...!

ஒருவேளை 2021முதல் மாறலாம்!
9-க்கான பதில்:-

RC OWNERதான் என இல்லாமல்
யார் வேண்டுமானாலும் போய் வாங்கலாம்...

சரி...
இதை எங்கு மிக சுலபமாக வாங்கலாம் என பார்ப்போம்...
பைக்க ஸ்டார்ட் பண்ணுங்க...

RC Xerox
Pancard Xerox எடுத்துட்டு
உங்க ஊர் பக்கத்து டோல் கேட்டிற்கு போங்க,

(பேங்க் வேலை நாட்களா பார்த்து போங்க)

சுங்கச்சாவடி ஆபிஸ்லயே Paytm,KVB,ICICI,னு பலர் ஆளுக்கொரு டேபிளைப்போட்டு உட்கார்ந்திருப்பாங்க...

வெளிய அவங்கங்க கொடைய போட்டு இருப்பாங்க!!
இதுல என் Choice ICICIதான் 40 secondல எனக்கு Card தந்தாங்க...

உடனடியாக card activate ஆன message நீங்க தர்ற mobileக்கு வந்திடும்!

அவங்க Application பற்றி
சொல்லித்தர ஒரே ஒருநிமிடமே அவ்ளோதான்... கிளம்பிட்டே இருக்கவேண்டியதுதான்...
🚨முக்கியான விஷயம்🚨

டோல்க்குனு ஒரு Radiation வெச்சிருப்பாங்க...

நீங்க சும்மா வண்டிய டோல்ட்ட எடுத்துட்டுபோய்ட்டு laneல போகாம திரும்பி வந்தாலும் Automaticஆ deduction ஆகிடும் உஷாரா இருந்துக்கோங்க... ஆமா!!!!
இப்படியாக வாங்கிய fast tag க்கிற்கான validity என்பது life time முழுவதும் எந்த ஒரு extra chargesம் இல்லை...

3 மாதங்கள் நீங்கள் EC செய்யாமல் விட்டால் card block ஆகும்... EC செய்தால் block openஆகிடும் :))

ஒருவேளை உங்கள் வண்டியை விற்க நேர்ந்தால்...
நேராக Card வாங்கிய இடத்திற்கே சென்று cancellation செய்தால் நம்ம deposit உடனே நாம் சொல்லும் bank accountற்கு தந்துவிடுவார்கள்.

ஒரு Fast tag card வாங்க ₹500 ஆகும்!

இதில் ₹200 நம் கணக்கில் உடனடியாக வரவு வந்துவிடும்

₹200 card charge
₹100 service charge

அவ்ளோதான்

நன்றிகள் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூனையார்®

பூனையார்® Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!