1.மொட்டை போடுவதன் காரணம்-
*உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.*
2.*இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.*

*பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.*
3.*குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.*

*ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும்
4.முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.*

*ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.*

*இதனை சிலர் கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும் ,*
5.*'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.*

*முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள்.*

*யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.*
6.*மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.*

*இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.*

*மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத
7.பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .*
8.*அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன்
9.நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.*

*குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.*

*அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின்
10.பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.*

*அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.*
11.*ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,*

*நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.*

*ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும்
12.ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.*

*ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.* *எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை
13.அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.*
*வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.*

*ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.*

*யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால்
14.ஹிந்துக்களோ,மற்ற மதமோ, காரணமில்லை என்பதை உணருங்கள்.*
*தனிமனிதனின் தவறுக்காக,எந்த ஒரு மதத்தையும் இழிவாக்குவது,*
*இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!*

வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy jayaraman

malathy jayaraman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

23 Nov
1.பாப்பாத்தியம்மா...யம்மோவ் மாடு வந்திடுச்சு
கட்னா கட்டிக்கோ...கட்டாட்டி விட்டுக்கோஓ !

ஏமண்டி ஐயர்காரு(ஐயர்+காரு = ஐயங்காரு
செப்பண்டி -^- தமிழ் மண் யாருடையது ?

பார்ப்பான் என்று சொல்லுவோம், இது பெரியார் பிறந்த மண், Image
2.பார்ப்பனர்களே வெளியேறுங்கள், சங்கரராமனை கொன்றது
பார்ப்பான், காந்தியை கொன்றது பார்ப்பான் என்று...
பல்கலைக்கழகம் முன் கலகக்காரர்கள் சிலரை எதிர்கொண்ட
வீரத்தமிழச்சியை நோக்கி கேட்கப்பட்ட
3. கேள்விகள் இவை.

சரி இவர்களது கேள்வியை...
உண்மையான பகுத்தறிவுடன் சிந்திப்போமா?

ஈவேரா தன்னை “கன்னடியன்”
Read 22 tweets
22 Nov
1.வீண் பெருமையால் ஒரு பயனும் இல்லை !
*******************************************
⚘ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
2.தென்னங்கன்று சொன்னது,
" ஒரு வருஷம் ".

"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
3.ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.

வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
Read 10 tweets
22 Nov
1.ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ரநாமம்_8

யுதிஷ்டிர உவாச - (தருமர் கூறியது)
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ரநாமம்_9

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்
2.*8 & 9*
சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப்படுகிறது. (கேட்பவனுக்கு நல்லவற்றைச்செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல
3.மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன.) தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்:
Read 6 tweets
22 Nov
a)கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்...
இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலையாவது கூறுங்கள் :

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்,
b)இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப் பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
c)5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அது போக எல்லா மூல ஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.
Read 15 tweets
22 Nov
1."விளையும் பயிர் முளையிலே"
இந்த பதிவை படித்துவிட்டு.. மக்களே நீக்கள் எரிச்சல் அடையாதீர்கள்....

____________________________________________

நம் போதாத காலம்,

சுதந்திரத்துக்குப் பின், யார் இந்தியாவின் முதல் பிரதமர் ஆக வேண்டும் எனக் கேட்டதற்கு அப்போதிருந்த 14 மாகாணங்களில்
2.12 மாகாணங்கள் சர்தார் வல்லபாய்ப் பட்டேலின் பெயரைத்தான் சிபாரிசு செய்தன...

2 மாகாணங்கள் ஆச்சார்ய கிருபளானி பெயரைத் தேர்வு செய்தன...

நேரு பெயரை எந்த மாகாணமும் தேர்வு செய்ய வில்லை...

ஆனால் காந்தியின் விருப்பம் நேரு தான் பிரதமர் ஆக வேண்டும் என்றிருந்தது...
3.காந்தி செய்த அந்தப் பாவத்தால் தான் இன்றும் நாம் பல விதங்களில் கஷ்டப் படுகிறோம். நம் போதாத காலம்...

நேரு காஷ்மீர் பிரச்னையைச் சர்தார் பட்டேலிடம் கொடுத்திருந்தால், அவர் ஹைதராபாத்தையும், மற்ற சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைத்த மாதிரி, அழகாகக் காஷ்மீர் முழுதையும்
Read 15 tweets
22 Nov
1.சிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன...?

சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

சிறுகண்பீளை வேர் பட்டையில் பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து
2.பாலில் கலந்து குடித்து வந்தாலும் மேற்கண்ட நோய் குணமாகும்.

சிறுகண்பீளையுடன் சிறு நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமுட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து குடிநீர் செய்து குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைத்து வெளியேற்றும்.
3.சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!