விண்வெளி வீரர்கள் சில சமயங்களில் ஆரஞ்சு நிற விண்ணுடைகளையும் சில நேரங்களில் வெள்ளைநிற விண்ணுடைகளையும் அணிவதை கவனித்திருப்பீர்கள். காரணம் அவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை.
Images: NASA ImageImage
ஒன்று விண்கலம் ஏவும்போதும் தரையிறங்கும் போதும் அணியும் விண்ணுடை - Advanced Crew Escape Suit (ACES).

இன்னொன்று விண்வெளியில்
இருக்கும் போதும் அங்கு விண்ணடை (space walk) பயிலும் போதும் அணியும் விண்ணுடை - Extravehicular Activity (EVA) suit.

Image: Adam Savage’s Tested Image
ACES என்ற ஆரஞ்சு நிற விண்ணுடைகள் புவியிலிருந்து (/ கோள்களிலிருந்து) விண்வெளிக்குச் செல்லும் போதும் அல்லது விண்வெளியிலிருந்து புவிக்குத் (/கோள்களுக்குத்) திரும்பும் போது அணிவது ஆகும். விபத்தின் போது எளிதாக தப்பித்துக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Image: NASA Image
விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்தால் ஆரஞ்சு நிறம் மீட்புக் குழுவினரின் கண்களுக்கு எளிதாகப் புலப்படும். ACES விண்ணுடையில் பாராசூட் அதனை இயக்கும் கயிறு, பாராசூட்டில் சிக்கக்கொண்டால் அதனை கிழிக்கக் கத்தி, உடைக்குப் பின்புறம் காற்றுப்படகு ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும்.

Image: Datrex Image
ACES ல் சில மாத்திரைகள், விளக்குகள், கையுறைகள் ஆகியன வைக்கப்பட்டருக்கும்.

ஆனால் இந்த ஆரஞ்சு வண்ணம் இடையில் வந்தது தான். ஆரம்பத்தில் ACESம் வெள்ளை நிறத்தில் தான் இருந்தன. 2020ம் ஆண்டில் SpaceX நிறுவனம் வெள்ளை / சாம்பல் நிறத்திற்கு மாறவிட்டது.

Image: EDS / SpaceX ImageImage
ஆனால் EVA என்ற வெள்ளை விண்ணுடை விண்வெளியில் இருப்பதற்கேற்ப தடியாக இருக்கும். அடர்கதிர்வீச்சையும் வெப்பத்தையும் தாங்கும் வகையிலும் அவற்றை எதிரொளிக்கும் வகையிலும் இருக்கும். மேலும் இருண்ட விண்வெளியில் வெள்ளை விண்ணுடையை எளிதாக அடையாளம் காணலாம். இவை விண்ணடை பயிலவும் ஏதுவாக இருக்கும். Image
மேலும் EVA ல் வீரர்களின் உடலைப் பாதுகாக்க நீர் குளிர்விப்பான் (water cooling system) மற்றும் 6 மணி நேரத்திற்கான குடிநீர் ஆகியன வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஆக்சிஜன் உருளை, மின்கலம் (battery) & தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும். 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹிலால் ஆலம் | Hilaal Alam

ஹிலால் ஆலம் | Hilaal Alam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @HilaalAlam

28 Nov
@gmuruganandi இலக்கியம் & திரைப்பாடல்கள் வரிசையில் ஒரு தகவல். “வீரமாதேவி சபதம்” என்ற வரலாற்று புதினத்தில் “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்று அப்பர் பாடியதாக ஒரு பதிகம் பார்த்தேன். கவியரசு கண்ணதாசன் “அவன்தான் மனிதன்” என்ற படத்திற்காக அதே வரியில் தொடங்கும் பாடலை இயற்றியுள்ளார். ImageImage
கவியரசரின் பாடலில் முதல் பல்லவியின் பொருள் அப்பர் பாடிய பதிகத்தின் பொருளோடு ஒத்துப் போகிறது போல எனக்குப்படுகிறது. சரியா?
(ஒரு வேறுபாடு கவியரசு கண்ணனை பார்த்து பாடியிருப்பார். ஆனால் அந்த புதினத்தில் அப்பர் சிவபெருமானை பார்த்து பாடியது போல் உள்ளது.)

tamilpaadallyrics.com/2017/07/aattuv… Image
மேலதிகத் தகவல். திரு. விக்ரமன் எழுதிய இந்த வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தின் தொடர்ச்சியை போல் உள்ளது. பொ.செ - ல் வானதிக்குப் பிறக்கும் குழந்தை தான் இராசேந்திர சோழன் என்று கல்கி அவர்கள் குறிப்பால் சொல்லியதாக எனக்கு ஞாபகம். வீ.ச-ல் அதை தெளிவாக கூறியுள்ளார்.
Read 5 tweets
12 Nov
பணப்பெட்டியை அனுப்புவது எப்படி?

உங்கள் பணி, பெட்டிகளில் பணத்தை வைத்து மற்றவர்களுக்கு அனுப்புவது. Ok? அந்த பெட்டி மிகக் கனமானது. பெட்டியை தூக்கிக் கொண்டு யாராலும் ஓட முடியாது. பூட்டை உடைத்தால் தான் பணத்தை எடுக்க இயலும். சரியா? நீங்கள் என்னிடம் பெட்டியை அனுப்பினால் நம்மிருவரிடமும்
ஒரே மாதிரியான சாவி - அதாவது என்னிடம் ஒரு டூப்ளிகேட் சாவி இருக்கவேண்டும். நீங்கள் எந்த சாவியை வைத்து பூட்டினீர்களோ அதன் டூப்ளிகேட் சாவியை வைத்துதான் திறக்கவேண்டும் அல்லவா? நம்மிருவரின் சாவியும் symmetrical. சரி எப்படி இந்த சாவியை பகிர்ந்து கொள்வது? உங்களுக்கு ஒன்று எனக்கு ஒன்று.
ஒன்று, நான் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் சாவியை அனுப்பவேண்டும். நீங்கள் அனுப்பும் போது அதனை 3வது நபர் இன்னொரு duplicate செய்துவிட்டால்? இப்போ triplicate ஆகிவிட்டது. இந்த சாவித் திருட்டு நமக்குத் தெரியாது. இப்போ நீங்கள் பணப்பெட்டியை எனக்கு அனுப்பினால் அந்த
Read 19 tweets
5 Nov
பைசாந்தியப் படைத்தலைவனும், ப்ளாக்செயினும்...
Byzantine General & Blockchain
#ஹிலால்

மறைச்சொல் மொழிகளில் (cryptography) இராணுவச் செய்திகளை பரிமாற்றப்படுவது பண்டைய காலத்திலிருந்து நடைபெற்றுவருகிறது. அப்படி ஒரு கற்பனை நிகழ்ச்சி தான் இந்த பைசாந்திய படைத்தலைவன் பிரச்சனை. ஒரு ஊரை
பைசாந்தியப் படை இருபுறமும் முற்றுகையிட்டது. அவ்வூர் பெயரை பகையூர் என்று வைத்துக்கொள்வோம். பைசாந்தியப் படை வடபுறமும் தென்புறமும் சூழ்ந்துள்ளன. இப்போது ஒரு சிக்கல். பகையூர் படையால் ஏதேனும் ஒருபுறம் தாக்குப்பிடித்து பைசாந்தியரை வெற்றிகொள்ள இயலும். இருபுறமும் ஒரே நேரத்தில் அது
எதிர்த்துப் போரிட்டால் தோற்றுவிடும். ஆகவே பைசாந்தியப் படைகள் இருபுறமும் ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடுக்கவேண்டும். ஆகவே தாக்குதல் குறித்த நாள் / நேரம் ஆகியவற்றை வடபுறமிருந்து தூதுவர் மூலம் தெற்குப்புறம் தெரிவிக்கவேண்டும். அதாவது “திங்கள் காலை 7:00 மணிக்கு ஆயத்தமாகுங்கள்” என்ற
Read 28 tweets
1 Nov
கதிரவனின் மையத்திலிருந்து ஒளி
#ஹிலால்

பெரும்பாலோர் 8 நிமி. என
பதில் அளித்துள்ளனர். கேள்வியை மீண்டும் நன்கு பாருங்கள். கதிரவனின் மையத்திலிருந்து. மேற்பரப்பில் இருந்து அல்ல.

கதிரவனின் மேற்பரப்பில் இருந்துதான் ஒளி 8 நிமி.ல் புவியை வந்தடையும். மையத்திலிருந்து? வாங்க பார்க்கலாம்.
இரண்டு ஹைட்ரஜனின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறன. எப்படி? இணைந்து! அங்கே தான் ஒரு ஃ இருக்கு. இரு புரோட்டான்கள் ஏதோ பிணைந்து வைக்கப்பட்ட புரோட்டா மாவு அருகருகே இருப்பது போல வந்து இணைவதில்லை. காரணம் இரண்டும் பாசிடிவ் துகள்கள். இரண்டு காந்தங்களை வடபுலம் - வடபுலம் என்று வைத்தால்
எப்படி விலகி ஓடுமோ, அப்படி ஹைட்ரஜனின் இரண்டு புரோட்டான்களும் விலகிவிடும். அப்படியெனில் எவ்வாறு கதிரவனில் ஹைட்ரனின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறன?

இதனை நடத்துவது குவாண்டம் டன்னலிங் (Quantum Tunnelling). குவாண்டம் டன்னலிங் என்பது ஒரு ஹைட்ரஜனில் உள்ள புரோட்டான் மறைந்து
Read 18 tweets
26 Oct
கணிணி படித்தால் மட்டுமே வேலை என்ற கருத்து மிகவும் கவலைக்குரிய விசயம். மற்ற நாடுகளில் நான் கண்ட அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
UGகளில் traditional engineering (civil, mech, materials, electronics) படித்துவிட்டு, PGயில் சிறப்புத்துறைகளை (mechatronics, AI/ML, Nanotechnology, Aerospace) எடுப்பது நலம். இது வேலை வாய்ப்பின் அடிப்படையில் ரிஸ்க்கை குறைக்கும்.
Mechanical இன்னும் ராஜா தான். இதை UG-யில் படித்துவிட்டு PGயில் Mechatronics, Materials Sciences, Nanotechnology (Nano-instrumentation / Nano-metrology), AI (Design Process / Design Management) என்று வளர்ந்து வரும் துறைக்குப் போகலாம். Automotive & Aerospaceல் வாய்ப்புகள் உள்ளன.
Read 8 tweets
25 Oct
உங்கள் கேள்வியை படமாக இணைத்துள்ளேன். இதை தான் நீங்கள் கேட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒளிவேகத்தில் செல்லவேண்டாம். infinity குழப்பம் எல்லாம் வரும். ஆகவே ஒளியின் வேகத்தில் 99.986% வேகத்தில் செல்வதாக கற்பனை செய்து கொள்ளலாம். #அறிவியல்
நான் புவியிலேயே இருக்கிறேன். நீங்கள் மட்டும் ஒரு கோளுக்கு ராக்கெட்டில் ஏறி ஒளியின் வேகத்தில் 99.986% வேகத்தில் செல்லுங்கள். அந்த கோளில் நொடிக்கு ஒருமுறை விளக்கு அணைந்து அணைந்து ஒளிர்கிறது (blink) என வைத்துக் கொள்ளலாம் (1Hz). எனக்கு பூமியில் அந்த ஒளி வினாடிக்கு ஒருமுறை ஒளிரும்.
நீங்கள் கிட்டத்தட்ட ஒளிவேகத்திற்கு அருகில் செல்வதால் அந்த விளக்கு எனக்கு தெரிவதை விட உங்களுக்கு வேகமாக ஒளிர்கிறது (higher frequency) என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் ஒளி (Wave length மாறாமல்) வினாடிக்கு 300,000 கிமீ-ஐ விட வேகமாக உங்களை நோக்கி வருகிறது என்று தானே பொருள்?
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!