Siva_KS Profile picture
16 Dec, 14 tweets, 4 min read
#Thread

உங்க கொள்கை என்னன்னு கேட்டாங்க. அப்படியே தலையே சுத்திருச்சி என்றபடி ஆன்மீக அரசியலை தூக்கிக் கொண்டு ஒருவரும், கொள்கையை வெளியே சொன்னால் காப்பியடித்து விடுவார்கள் என்று இன்னொருவரும் தமிழக அரசியல் மைதானத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
நேரில் நின்று மோதுவது வலதுசாரிக் கொள்கை அல்ல. இந்திய அரசு நிர்வாகம் முதற்கொண்டு அனைத்து துறைகளிலும் வலதுசாரி இயக்க நேரடி / மறைமுக தொடர்பு கொண்டவர்களை கொண்டு நிரப்பும் சோலியை அவர்கள் பல வருடங்களாக செய்து கொண்டே வந்தார்கள்.
அத்தகைய நிரப்புதல் அரசு அதிகாரம் தாண்டி ராணுவம், நீதித்துறை, பொதுத்துறை நிறுவனங்களின் செல்வாக்கு மிகுந்த பதவிகள், மற்றும் இதர முக்கிய பதவிகள் போன்றவற்றில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் அப்படியான ஒரு அதிகாரத்தை பெற முயன்றும் முடியாத சூழலில்
தமிழன் மிகவும் விரும்பி ரசிக்கும் திரைத்துறையில் இருந்து வெட்டப்படுவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளனர் ஆட்டின் தோல் போர்த்திய இருவர். வெளிப்படையான மென் ஆன்மீகவாதி யாக தன்னை கட்டமைத்து கொண்டு ஆன்மிக பற்று கொண்டவர்களை கவரும் விதமாக அவரை வைத்து ஒரு புறமும்,
கடவுள் மறுப்பாளராக இன்னொருவரை வைத்து பெரியாரிய சிந்தனை வழிவந்த திராவிட இயக்க ஓட்டுக்களை கவரும் விதமாக இன்னொரு புறமும், இரண்டு பக்கங்களில் இருந்தும் மக்களை திரட்டிக் கொண்டு வரும் அஜெண்டாவில் இவர்கள் இருவரும் பகடைகளாக மட்டுமே உருட்டப்படுவார்கள்.
கொள்கையை கேட்டால் தலை சுத்திருச்சு என்றவரை கூட போகட்டும் #சங்கி என்று விட்டு விடலாம். வெளிய சொன்னால் காப்பியடித்து விடுவார்கள் என்பது என்ன கேவலமான அரசியல், கமல் ? உங்களின் கொள்கை மக்கள் நலனுக்கானது என்று நீங்கள் நம்பினால் அதை வெளியில் சொன்னால்,
அதை வேறு கட்சிகள் நிறைவேற்றினால் பயன் பெறுவது மக்கள் தானே. ஆக மக்கள் பலன் பெறுவது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே எங்கள் நோக்கம் என்பது தான் உங்கள் கொள்கையா ? ஒரு கொள்கையில் கூட வெளிப்படைத்தன்மை இல்லாத உங்களிடம் ஆட்சியில் எத்தகைய
வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடியும்?

அது கூட கிடக்கட்டும் பாஸ். உங்கள் பார்வையில் ஏன் இவ்வளவு self centricity தெரிகிறது ? எங்கும் எதிலும் நானே என்பது உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் நன்றாகவே தெரிகிறது. சிறிய உதாரணம்.
மையம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் Maiyam என்று எழுதுவோம். Mayyam என்றும் எழுதுவதும் உண்டு. ஆனால் நீங்கள் புதிதாக Maiam என்றொரு பெயரை வைத்திர்கள். பலமுறை யோசித்து இருக்கிறேன். ஏன் இவர் இப்படி ஒரு ஸ்பெல்லிங் வைத்தார் என்று. இது தான் தோன்றியது.
Ma I aM. நடுவில் I, அதாவது நான். நடுவில் இருந்து எந்த பக்கம் வாசித்தாலும் I am. அதுவும் நான். அதாவது மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நான் தான் கட்சி. கட்சியே நான் தான். ஒரு கட்சிக்கு வைக்கும் பெயரில் கூட இவ்வளவு நார்சிஸ்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா கமல் ?
நார்சிசம் ஒரு ஆதிக்க மனப்பான்மை சார். அழுத்திச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு சர்வாதிகார மனப்பான்மை. ஒரு கட்சிக்கு வைக்கப்படும் பேரில் கூட தன்னை முன்னிறுத்துவது தான் முற்போக்கா ? இதுதான் மாற்றமா? இதுதான் சிஷ்டம் சரியில்லை என்று ஆன்மீக அரசியல்காரர் சொன்னாரா ?
நீங்கள் இருவருமே ஒரு கை உருட்டும் தாயங்கள் தான். உருட்டும் கையும் ஒரு நார்சிஸ்ட் கையாகவோ நார்ஸிசம் நிரம்பிய ஒரு பாசிஸ்டின் கையாகவோ இருக்க சகல வாய்ப்புகளும் உண்டு. தமிழகத்தின் அரசியல் இனி இப்படி தான் கையாளப் படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த இருவரோடு இது நின்று விடாது.
தோல் போர்த்திய இவர்களை ஆடுகள் என நினைத்து பிற ஆடுகள் பின் சென்று கசாப்புக் காரரின் மந்தையில் அடையும். மந்தையில் அடைபட்டு கசாப்புக் கடைக்கு விலை பேசிய பிறகு கூட ஆடுகளுக்கு தெரியாது அது தன் தலைக்கு மட்டுமல்ல, தன் தலைமுறைகளுக்கே பேசிய விலை என்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Siva_KS

Siva_KS Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sivaji_KS

10 Dec
அடுத்த அணுகுண்டு 2024 -2029 - Malapportionment

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாராகும் புது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மொத்த நாற்காலி எண்ணிக்கை 888 !

1/n
மொத்த loksabha உறுப்பினர் எண்ணிக்கை 545 யாக இருக்கும் போது எதற்காக 888 தற்கால அமைப்புகள் இது தானே உங்கள் கேள்வி ?

இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு உறுப்பினர் எண்ணிக்கை தருகிறது (article 81).
பாராளுமன்ற அரசியலில் உறுப்பினர் மெஜாரிட்டி அடிப்படையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியாவில் மாநில உறுப்பினர் எண்ணிக்கை மாநில உரிமையில் முக்கிய பங்கு வகிக்கிறது

1976 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு 42 ஆம் அமெண்ட்மென்ட் படி மக்கள் தொகை அடிப்படையிலான எண்ணிக்கை
Read 12 tweets
9 Dec
#Thread

ஒருவர் நேர்மையானவர் சமரசமற்றவர் பொது நலனை பாதுகாப்பவர் என்றால், அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை !

’’நேர்மையானவர், கறாரானவர், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் ஆகவே, தான் துணைவேந்தர் சூரப்பாவை அண்ணா பல்கலையில் இருந்து தூக்கியடிக்க துடிக்கிறார்கள்’’
கமலஹாசன் உள்ளிட்ட மேட்டுக்குடி மேதாவிகள் அனைவரும் இப்படித்தான் சொல்கிறார்கள்!

அவர் நேர்மையானவர் என்பது உண்மையா? என்று பார்த்துவிடுவோம்!

கொரனா வந்தது! பல்கலைக் கழகம் மூடப்பட்டது.படிப்பு தடைபட்டுள்ளது, என்ஞினியரிங் கல்வியை ஆன்லைன் மூலம் முழுமையாகவோ,முறையாகவோ கற்றுத் தரமுடியாது.
ஆனால், ’’நீ வராவிட்டால் என்ன? படிக்காவிட்டால் என்ன? முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டும்’’ என்று கட்டளையிடுகிறார் சூரப்பா!

பேரிடர் காலத்தில் கட்டணம் வசூலிப்பது மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்பதை விளக்கி துணைவேந்தர் அவர்களுக்கு சி.இ.ஜி மாணவர்கள் பலர்
Read 20 tweets
7 Dec
பட்டைய கிளப்பிய விவசாய கூட்டமைப்பு தலைவரின் கண்டன உரை

"இந்திய அரசாங்கமே ! நாங்கள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அறவழி போராட்டத்தை கையிலெடுத்துள்ளோம். அதற்காக அமைதியாக இங்கே அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்வோம் என நினைக்காதீர்கள்!
1/n
எங்கள் தோழர்களை நீங்கள் டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்கலாம். ஆனால் இங்கே வந்துவிட்ட எங்களை போன்ற பலரை என்ன செய்யபோகிறீர்கள் ?

நாங்கள் இங்குள்ள விவசாயிகளை ஒருங்கிணைப்போம். அவர்களிடம் உங்கள் சட்டத்தின் பாதிப்பை கூறி அவர்களையும் எங்களுடன் அணிதிரட்டுவோம் !
2/n
ஒவ்வொரு நாட்களும் எங்கள் போராட்டத்தின் வேகத்தை அதிகரிப்போம். அடுக்கடுக்கான ஆர்ப்பாட்டங்களை திட்டமிடுவோம். தலைநகரில் பிரம்மாண்ட அணிவகுப்புகளை நடத்துவோம். மக்கள் ஆதரவிற்காக 8ம் தேதி பாரத் பந்த் (கடையடைப்பு) அறிவித்துள்ளோம்.
3/n
Read 5 tweets
6 Dec
#Thread

புதிய வேளாண் சட்டம் -
அம்பானி - அதானிக்கு உழவாரப்பணி செய்தல்.

அம்பானி, அதானி மற்றும் பிற கார்பரேட்டு- இந்திய பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் இந்தியாவின் உணவு தானியங்கள் சந்தையில் களம் இறங்கினார்கள், ஆனால் அங்கே ஏராளமான பிரச்சனைகள் அவர்களுக்காக காத்திருந்தன.
பிரச்சனை 1 : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு தானியங்கள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள், நடைமுறைகள் இருந்தன. அதனால் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள வேண்டியதிருந்தது.
மோடியின் தீர்வு: மாநிலங்களிடமிருந்து இந்த உரிமைகளை கையகப்படுத்தி ஒரே நாடு ஒரே சட்டம் என்று நிறைவேற்றினார், கார்பரேட்டுகளுக்கு இந்திய முதலாளிகளுக்கு பெரு மகிழ்ச்சி
Read 15 tweets
4 Dec
Why farmers protests in Delhi are not being covered by Indian news channels can be easily understood by looking at the owners of these channels:

Mukesh Ambani owns 20 news channels, the most prominent of which are News 18, CNBC Awaaz, CNN-News 18, Colors, ENadu & CNBC TV18.
1/n
In addition, it has news portals such as First Post and Money Control.

All Zee News channels are owned by Subhash Chandra, a Rajya Sabha member from the BJP. It is also the owner of WION, the international English language news channel.

2/n
Repulic TV was jointly launched in 2017 by BJP Rajya Sabha members Rajiv Chandrasekhar, TV Mohandas Pai & Arnab Goswami.

The owner of India TV, Rajat Sharma was a member of ABVP which is the student wing of K RSS.

3/n
Read 7 tweets
29 Nov
பிரதான் மந்த்ரி க்ராமின் அவாஸ் யோஜனா - கிராமப்புற ஏழை மக்கள் தங்களுக்கு தாங்களே வீடு கட்டிக்கொள்ளும் திட்டம்

தீன் தாயால் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனா - வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக் கூடிய மற்றும் தலித் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலை வாய்பு திட்டம்
1/n
பிரதான் மந்த்ரி மட்ரிட்வ வந்தன யோஜனா - முதல் இரண்டு பிரசவத்திற்கு பிறகு 19 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் 4000 ருபாய் பெறலாம்

கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சன் யோஜனா -அறிவியல், பொறியியல்,மருத்துவம் தொடர்பான ஆராய்சிகளுக்கு மாணவர்களுக்கு கிடைக்க பெரும் உதவித்தொகை 2/n
பிரதான் மந்த்ரி உஜ்ஜவால யோஜனா - வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் பெண்களுக்கு இலவச LPG Connections கொடுப்பது.

"நாங்க பேசுற பாஷாயே புரியலையே எங்க லைப்ப எப்புடி புரிஞ்சுனு எங்களை நீங்க Improvement பண்ணிடுங்கோ?"

3/n
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!