PALRAJ T Profile picture
9 Jan, 10 tweets, 2 min read
அன்னை குந்தி தேவியும் பஞ்ச பாண்டவர்களும் 12 வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு பதிமூணாவது வருடமாக ஒரு வருட காலம் அக்ஞாத வாசமும் இருந்த காலம் . அந்த அக்ஞாத வாசம் முடியும் வரை பஞ்ச பாண்டவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது எனும் ஒரு விதிக்கு கட்டுப்பட்டவர்களாய் மறைந்து
வாழ்ந்து கொண்டிருந்த காலம், அதனால் குந்தி தேவி ஆங்காங்கே போய் யாசகம் வாங்கி பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டிருந்த காலம்.

அப்படிப்பட்ட நிலையிலே ஒரு வீட்டுக்கு குந்தி தேவி போய் யாசகம் கேட்கிறாள் அங்கே இருந்த பெண்மணி சற்றே விவரமானவள் அவள் குந்தி தேவியைப் பார்த்து மலை மலையாய் ஐந்து
பிள்ளைகளை வைத்துக் கொண்டு இப்படி யாசகம் கேட்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டுவிட்டாள்

அதிர்ந்து போனாள் குந்தி தேவி அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வீட்டுக்கு திரும்பி வந்தாள் , அதே யோசனையாய் அமர்ந்திருக்கிறாள் நமக்கும் இப்படி ஒரு விதியா நாம் என்ன பாவம் செய்தோம் என்றே
அவள் மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது

பஞ்ச பாண்டவர்கள் என்னம்மா இன்று ஒன்றும் கிடைக்கவில்லையா என்று கேட்டதும் இல்லையப்பா என்றாள்

தருமபுத்திரர் மட்டும் குந்தி தேவி ஏதோ பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து என்ன நடந்தது என்று கேட்க நடந்தவரை அப்படியே சொன்னாள் குந்தி தேவி
ஏனம்மா நீங்கள் அந்த பெண்மணியை ஒன்றுமே சொல்லாமல் அப்படியே வந்துடிட்டீர்களா என்றார்

ஆமாம் தருமா அவளை நொந்து என்ன பயன் நம் விதி இப்படி இருக்கிறதே என்று வருத்தப்பட்டாள்
உடனே தருமன் நம் விதி நன்றாகத்தான் இருக்கிறது சரி நான் சொல்வதைக் கேளுங்கள் மீண்டும் அந்தப் பெண்மணியிடம் செல்லுங்கள்
அங்கே போய் ஏதேனும் நாலு வார்த்தைகளாவது சொல்லிவிட்டு வாருங்கள் என்றார். வேண்டாம் தருமா என்றாள் குந்தி தேவி

இல்லையம்மா இது என் அன்பு வேண்டுகோள் தயவு செய்து போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.

அங்கே போனாள் மீண்டும் குந்தி தேவி அங்கே அவள் கண்ட காட்சி அவளை துணுக்குற வைத்தது
நாக்கிலே நரம்பில்லாமல் பேசிய அந்தப் பெண்மணி கதறிக் கொண்டிருந்தாள்.

நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்றாள் அதற்கு அந்தப் பெண்மணி அம்மா நான் உங்களை அப்படிப் பேசிய சிறிது நேரத்திலேயே எனது ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்திலே இறந்து விட்டார்களே அப்போதுதான் நான் உணர்ந்தேன் நல்லவர்களை
மனம் நோகச்செய்யக் கூடாது என்று கதறினாள்

குந்தி தேவிக்கு தருமன் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வரவே மனதை திடப்படுத்திக் கொண்டு ஏனம்மா என்னை மனம் நோகச் செய்யும் வண்ணம் பேசினாயே அப்படி பேசலாமா எதுவும் இல்லை என்றாலே நான் போய்விடுவேனே இப்போது இப்படி உனக்கு ஆகிவிட்டதே என்றாள்
அதிசியமாக குந்தி தேவி பேசிய அடுத்த கணமே அந்த பெண்மணியின் ஐந்து பிள்ளைகளும் உயிரோடு எழுந்து குந்தியை வணங்கினர் அந்தப் பெண்மணியும் குந்தியை வணங்கி உங்கள் தெய்வத்தன்மை தெரியாமல் நான் பேசினேன் இப்போதுதான் உணர்ந்தேன் உங்கள் தெய்வத் தன்மையை என்னையும் மன்னித்துவிடுங்கள் என்றாள்
கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்

யாரேனும் நம்மை வருந்த வைத்தால் அவர்களை நாம் ஏதும் சொல்லாமல் மனதுக்குள்ளே வருத்தப்பட்டால் நம் மனதிற்குள்ளே இருக்கும் இறை அவர்களை சபித்துவிடுகிறது தண்டித்து விடுகிறது என்னும் உண்மை

சர்வம்
*கிருஷ்ணார்ப்பணம்*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with PALRAJ T

PALRAJ T Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @stpalraj

10 Jan
கிருஷ்ணரின் அண்ணன் பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.

பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.

பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான். Image
பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான்.
சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

அண்ணா, இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார்.

கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை.
Read 6 tweets
8 Jan
ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று சொல்ல... கோபமான மொகலாய மன்னர்" நிரூபித்து காட்டிய துளசிதாஸர் Image
டில்லியை ஆட்சி செய்த மொகலாய மன்னரிடம் ராமபிரானின் பெருமைகளையும் ராம தரிசனத்தின் ஆனந்தத்தையும் மகான் துளசிதாஸர் மனம் விகசித்து விவரித்தார். ’அடியேனுக்கும் ராம தரிசனத்தைச் செய்து வையுங்கள்’ என வேண்டினார் மன்னர்.
ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று துளசிதாஸர் சொல்ல... கோபமானார் மன்னர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் செவிசாய்க்காத மன்னர் துளசிதாஸரைச் சிறையிலிட்டார்.
Read 7 tweets
8 Jan
குருச்சேத்திரப் போரில் ஈடுபடுவோர் உணவருந்த பொறுப்பை ஏற்ற உடுப்பி மன்னன் - உணவை சமைத்து வீணாக்காமல் நிர்வகிக்க தினம் தினம் சூசகமாக ஆலோசனை தந்த பகவான் பரந்தாமன் Image
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரானது போர்களுக்கெல்லாம் தாயாக இருந்தது. அனைத்து மன்னர்களும் நூற்றுவர்களோடோ அல்லது ஐவர்களோடோ இணைந்து போரில் ஈடுபட்டனர். அத்தகைய மாபெரும் போரில் நடுநிலையாக மன்னர் உடுப்பி இருந்தார்.
அவர் கிருஷ்ணரிடம் போர்களில் ஈடுபடுவோர் உணவருந்த வேண்டும். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார். இன்றும் உடுப்பி மக்களில் பலர் உணவளிக்கும் நபர்களாக உணவகங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர்.
Read 7 tweets
4 Jan
பாரதப் போர் முடிந்து கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பாண்டவர்கள் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஹஸ்தினாபுரமே விழக்கோலம் பூண்டது. கௌரவர்களைக் கொன்ற பாவம் நீங்க யாகம் ஒன்றைச் செய்ய விழைந்தார்கள் பாண்டவர்கள்.யாகம் என்றால் இப்படி அப்படியல்ல.
இந்திரனாலும் நடத்த முடியாத பிரம்மாண்ட யாகம்.இதுவரை யாரும் செய்திராத யாகம்.தேவர்களும் முனிவர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும்,பொன்னும் பொருளும் போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன.
மக்களெல்லாம் ஆஹா ஆஹா வெனப் புகழ்ந்தனர்.இது போல் யாகம் இது வரைக் கண்டதில்லை இனியும் காண்பது சந்தேகமே எனச் சொல்லிச் சொல்லிக் கொண்டாடினர்.

அன்று யாகத்தின் கடைசி நாள்.மிகப் பிரமாண்டமாயும்,அனைவரும் போற்றும் படியும் நடந்த தாங்கள் செய்த யாகத்தை எண்ணி மிகவும் கர்வம் அடைந்தனர்.
Read 16 tweets
2 Jan
ஆஞ்சநேயரின் பரம பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு வினோத ஆசை இருந்தது. அதாவது, ஆஞ்சநேயருடன் சொக்காட்டம் ஆட வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.

இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன்
ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.

ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார்.
"பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது." என்றார்.
பக்தனும் சம்மதித்தான்.

இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, 'ஜெய் அனுமான்' என்ற படி காய்களை உருட்டினான்..
Read 6 tweets
2 Jan
ஆண்டிமடம்

ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..

உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். Image
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.
கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!