கிருஷ்ணரின் அண்ணன் பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.
பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.
பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான்.
பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான்.
சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.
அண்ணா, இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார்.
கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை.
இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது.
வா என் தோழனே என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார். அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது. அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன்,
அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம்.
தம்பி, எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார்.
இந்த அரக்கனின் பெயர் தான் நம் எதிரி - குரோதம்.
நீ கோபமாகும் போது, அது எதிரிக்கு உணவாகும். மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் அந்த எதிரி, நீ உன்னுடைய கோபத்தைத் துறந்துவிட்டு அன்பை அந்த எதிரிக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான்.
*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அன்னை குந்தி தேவியும் பஞ்ச பாண்டவர்களும் 12 வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு பதிமூணாவது வருடமாக ஒரு வருட காலம் அக்ஞாத வாசமும் இருந்த காலம் . அந்த அக்ஞாத வாசம் முடியும் வரை பஞ்ச பாண்டவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது எனும் ஒரு விதிக்கு கட்டுப்பட்டவர்களாய் மறைந்து
வாழ்ந்து கொண்டிருந்த காலம், அதனால் குந்தி தேவி ஆங்காங்கே போய் யாசகம் வாங்கி பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டிருந்த காலம்.
அப்படிப்பட்ட நிலையிலே ஒரு வீட்டுக்கு குந்தி தேவி போய் யாசகம் கேட்கிறாள் அங்கே இருந்த பெண்மணி சற்றே விவரமானவள் அவள் குந்தி தேவியைப் பார்த்து மலை மலையாய் ஐந்து
பிள்ளைகளை வைத்துக் கொண்டு இப்படி யாசகம் கேட்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டுவிட்டாள்
அதிர்ந்து போனாள் குந்தி தேவி அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வீட்டுக்கு திரும்பி வந்தாள் , அதே யோசனையாய் அமர்ந்திருக்கிறாள் நமக்கும் இப்படி ஒரு விதியா நாம் என்ன பாவம் செய்தோம் என்றே
ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று சொல்ல... கோபமான மொகலாய மன்னர்" நிரூபித்து காட்டிய துளசிதாஸர்
டில்லியை ஆட்சி செய்த மொகலாய மன்னரிடம் ராமபிரானின் பெருமைகளையும் ராம தரிசனத்தின் ஆனந்தத்தையும் மகான் துளசிதாஸர் மனம் விகசித்து விவரித்தார். ’அடியேனுக்கும் ராம தரிசனத்தைச் செய்து வையுங்கள்’ என வேண்டினார் மன்னர்.
ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று துளசிதாஸர் சொல்ல... கோபமானார் மன்னர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் செவிசாய்க்காத மன்னர் துளசிதாஸரைச் சிறையிலிட்டார்.
குருச்சேத்திரப் போரில் ஈடுபடுவோர் உணவருந்த பொறுப்பை ஏற்ற உடுப்பி மன்னன் - உணவை சமைத்து வீணாக்காமல் நிர்வகிக்க தினம் தினம் சூசகமாக ஆலோசனை தந்த பகவான் பரந்தாமன்
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரானது போர்களுக்கெல்லாம் தாயாக இருந்தது. அனைத்து மன்னர்களும் நூற்றுவர்களோடோ அல்லது ஐவர்களோடோ இணைந்து போரில் ஈடுபட்டனர். அத்தகைய மாபெரும் போரில் நடுநிலையாக மன்னர் உடுப்பி இருந்தார்.
அவர் கிருஷ்ணரிடம் போர்களில் ஈடுபடுவோர் உணவருந்த வேண்டும். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார். இன்றும் உடுப்பி மக்களில் பலர் உணவளிக்கும் நபர்களாக உணவகங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர்.
பாரதப் போர் முடிந்து கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பாண்டவர்கள் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஹஸ்தினாபுரமே விழக்கோலம் பூண்டது. கௌரவர்களைக் கொன்ற பாவம் நீங்க யாகம் ஒன்றைச் செய்ய விழைந்தார்கள் பாண்டவர்கள்.யாகம் என்றால் இப்படி அப்படியல்ல.
இந்திரனாலும் நடத்த முடியாத பிரம்மாண்ட யாகம்.இதுவரை யாரும் செய்திராத யாகம்.தேவர்களும் முனிவர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும்,பொன்னும் பொருளும் போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன.
மக்களெல்லாம் ஆஹா ஆஹா வெனப் புகழ்ந்தனர்.இது போல் யாகம் இது வரைக் கண்டதில்லை இனியும் காண்பது சந்தேகமே எனச் சொல்லிச் சொல்லிக் கொண்டாடினர்.
அன்று யாகத்தின் கடைசி நாள்.மிகப் பிரமாண்டமாயும்,அனைவரும் போற்றும் படியும் நடந்த தாங்கள் செய்த யாகத்தை எண்ணி மிகவும் கர்வம் அடைந்தனர்.
ஆஞ்சநேயரின் பரம பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு வினோத ஆசை இருந்தது. அதாவது, ஆஞ்சநேயருடன் சொக்காட்டம் ஆட வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.
இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன்
ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.
ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார்.
"பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது." என்றார்.
பக்தனும் சம்மதித்தான்.
இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, 'ஜெய் அனுமான்' என்ற படி காய்களை உருட்டினான்..
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..
உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.
கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.