ஆலப்புழா, கேரளா.

இதனை ஆசியாவின் வெனிஸ் என்று அழைப்பது தவறு. வெனிஸ்ய் ஐரோப்பாவின் ஆலப்புழா என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கடை வெனிஸ்... ஆனால் இயற்கையின் கொடை ஆலப்புழா. வாழ்க்கையில் ஒரு முறையேனும் போக வேண்டிய ஒரு அழகான சுற்றுலா தளம்
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து வியந்து பரவசம் அடையக்கூடிய ஒரு ஸ்தலம் என்றால் இதுதான். பூலோகத்தில் ஒரு மாயலோகம் உண்டு என்றால் அதன் பெயர்தான் ஆலப்புழை. என்ன பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பில்டப் கொடுத்தாலும் இங்கு உங்களுக்கு
நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கும். தமிழ்நாட்டில் இருந்து ஆலப்புழாவிற்கு 3 வழிகளில் செல்லலாம். வடதமிழ் நாட்டில் இருப்பவர்கள் கோயமுத்தூர், பாலக்காடு வழியாகவும் தென்தமிழகத்தில் இருப்பவர்கள் நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாகவும் நடுவில் இருப்பவர்கள் குமுளி வழியாக செங்கனாச்சேரி
சென்று ஆலப்புழை அடையலாம். இந்த சுற்றுலாத் தலத்திற்கு ரயிலில் வருவது தான் சிறந்தது ஏனென்றால் இங்கு நாம் இறங்கி சுற்றிப்பார்க்க நாம் எடுத்துக்கொள்ளும் வாகனம் படகு தான். இங்கு 3 நாட்களுக்கு மூன்று விதமான படகுகளில் நாம் இந்த அழகான இடத்தை விதவிதமாக சுற்றிப்பார்க்கலாம்
முதலில் ஹவுஸ்போட், இரண்டாவது சிக்காரா போட், மூன்றாவது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் போட். மூன்றிலுமே உங்களுக்கு வெவ்வேறு விதமான அனுபவம் கிடைக்கும்.

ஹவுஸ்போட்:-

நீங்கள் ஆலப்புழா வந்து அடைந்தவுடன் நேரடியாக நீங்கள் புக் செய்திருந்த ஹவுஸ் போட்டிருக்கு சென்று விடலாம்
நீங்கள் புக் செய்யாவிட்டாலும் பரவாயில்லை இங்கு 2 போர்டிங் பாயின்ட்கள் உள்ளன அங்கு சென்று நேரடியாக பேரம் பேசி புக் செய்யலாம். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மிகவும் விலை குறைவாக பாதி வாடகைக்கு கிடைக்கும். காலையில் நம் படகை சென்றடைவதற்கு பல படகினுள் ஊடே நடந்து செல்லும் அனுபவமே
நன்றாக இருக்கும். அந்தப் படகிலேயே ஹோட்டலில் இருப்பது போன்ற அறைகள் இருக்கும் அட்டாச் பாத்ரூம் உடன். அங்கேயே குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட்டு அமர்ந்தால் சரியாக பன்னிரண்டரை மணிக்கு நமது போட் கிளம்பி பேக்வாட்டரில் பயணிக்கும் உங்களுக்கு சந்தோசம் ஆரம்பிக்கும்...
பின்னர் 1.30 மணிக்கு கறிமீனுடன் அருமையான மதிய சாப்பாடு இயற்கையை ரசித்தபடியே உண்ணலாம். பயணத்தின் இடையே உங்களுக்கு பிரஷ்ஷாக நிறைய மீன்கடைகள் உள்ளன அதில் மீன் வாங்கி போடில் உள்ள சமையல்காரர்கள் இடம் கொடுத்தால் அவர்கள் நமக்கு அருமையாக செய்து தருவார்கள் மற்றும் கள்ளுக்கடை நிறைய உள்ளன
அங்கு சிறிது நேரம் செலவழித்து மீண்டும் போட்டில் ஏறி சிரிது ரெஸ்ட் எடுத்தால் சாயந்தரம் படகினை ஒரு ஒதுக்குப்புறமான கரையில் நிப்பாட்டி விடுவார்கள் அங்கு அருகில் உள்ள வீட்டில் மின்சாரம் எடுத்து உலகிலுள்ள ஏசியை ஆன் செய்து விடுவார்கள் நாம் நிம்மதியாக இரவை செலவழித்து காலை 9 மணிக்கு
மீண்டும் நம்மை ஏற்றி விட்ட இடத்தில் இறக்கி விடுவார்கள். எல்லா வசதிகளும் கூடிய ஹவுஸ்போட் தனியாக ஒருநாள் வாடகை 4000 முதல் மூன்று லட்சம் வரை உள்ளது. இதுவே மற்றவர்களுடன் ஷேரிங் செய்து புக் செய்தால் ஒரு ரூமுக்கு ஒருநாள் வாடகை 2000 முதல் இருக்கிறது
சிக்காராபோட்:-

நீங்கள் ஹவுஸ் போட்டில் இருந்து இறங்கி அங்கு அருகில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன அதனைப் பற்றி பின்னர் பார்ப்போம் நீங்கள் ஏதேனும் ஒரு விடுதியில் ரூம் எடுத்து ஓய்வு பெற்று மதியம் 12 மணிக்கு ஆழப்புழா பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் சிகாரபடகு முகாமுக்கு சென்றால்
அங்கு சிறிய அளவிலான படகுகள் நிறைய உள்ளன 4 மணிநேர பேக்கேஜ்க்கு ரூபாய் 1200 முதல் 2000 வரை வாங்குகிறார்கள் தாராளமாக கொடுக்கலாம் ஏனென்றால் நீங்கள் ஹவுஸ்போட்டில் செல்லும்போது அகலமான ஏரியில் மட்டும்தான் சென்று இருப்பீர்கள் ஆனால் இந்த மாதிரி சிறிய படகுகளில் ஆலப்புழையில் வில்லேஜ் டூர்
என்று சொல்லப்படும் கிராமங்களில் உள்ள சிறிய,சிறிய வாய்க்கால்களில் படகு செல்லும் போது அங்கு காணக் கிடைக்கும் காட்சி அற்புதமாக இருக்கும். போகும் வழியில் மதிய உணவையும் நீங்கள் சாப்பிட்டு விடலாம் நிறைய ஹோட்டல்கள் உள்ளன.
பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் போட்.

இந்த அனுபவமே தனிதான் காலையில் 8 மணிக்கு புறப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான பப்ளிக் டிரன்ஸ்போட்போட்டில் செல்லும்போது நிறைய வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் வெறும் 40 ரூபாயில். சுமார் 2 மணி நேர பயணம் அந்தப் பயணத்தில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்,
வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டு செல்வது ஒரு சுகமான அனுபவம் மாகத்தான் இருக்கும் தயவு செய்து நீங்கள் அந்த போடில் இறங்கி விட வேண்டாம் மீண்டும் நீங்கள் ஏறின இடத்திற்கே வந்து சேருங்கள் ஏனென்றால் அதிகம் போட் சர்வீஸ் அங்கு கிடையாது
படகுப்போட்டி

ஆலப்புழையில் மெயின் அட்ராக்ஷன்தான் இந்த நேரு டிராபி படகுப் போட்டி. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் சனிக்கிழமை அன்று நடக்கும் இந்தப் போட்டியை காணவே மக்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள் இந்த நாட்கள்தான் இங்கு பெஸ்ட் சீசன் ஆக இருக்கிறது.
இந்த வருடம் ஆகஸ்ட் 14ம் தேதி போர்ட் ரேஸ் நடக்க இருக்கிறது அந்த நாட்களில் செல்ல பிளான் செய்யுங்கள்
கயாகிங்

கயாகிங் செய்வதற்கு இந்தியாவின் மிகச் சிறந்த இடங்களில் ஆலப்புழா ஒன்று. இங்கு நிறைய கயகிங் போட் வாடகைக்கு கிடைக்கின்றன ஒரு நாளைக்கு 1000 முதல் உள்ளது. சிறிய கால்வாய்களில் நண்பர்களுடன் கயகிங் செல்வது மிகவும் அருமையாக இருக்கும்
ஆலப்புழை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்

இங்கு போட்டிங்யைத் தவிர நிறைய இடங்கள் சுற்றிப்பார்க்க உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்
குட்டநாடு:-

ஆலப்புழை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குட்டநாடு என்றுபெயர் கேரளாவின் நெற்களஞ்சியம் என்று இது அழைக்கப்படுகிறது. மேலிருந்து பார்ப்பதற்கு பச்சை கடல்போல் காட்சியளிக்கும் இந்த வயல்வெளிகள காண சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்புகின்றனர்.
விண்ணைத்தாண்டி வருவாயா சர்ச்

இந்த சர்ச் ஆலப்புழையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் நெடுமுடி செல்லும் வழியில் புள்ளிகண்ணு இடத்தில் உள்ளது. பஸ்சிலும் வரலாம் இங்கு படகு மூலமாகவும் வரலாம்.
பத்திரமண்ணல் தீவு:-

பத்திரமண்ணல் எனும் இந்த அற்புதமான தீவுப்பகுதி ஒரு கனவுலகம் போன்று காட்சியளிக்கிறது. சிறிய நிலப்பரப்பில் கண்கவரும் இயற்கை அழகுடன் வீற்றிருக்கும் இந்த தீவுப்பகுதிக்கு படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
மாராரி கடற்கரை

அழப்புலா நகர்பகுதியில் இருந்து 14கி.மீ தொலைவில் மராரி கடற்கரை அமைந்துள்ளது. இக்கடற்கரை சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதி,மேலும் வசீகரிக்கக் கூடிய பீச். ஒருபுறம் சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்து உள்ளன. மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது,
ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுத் திளைக்கலாம்.
மாராரியில் பார்க்க வேண்டிய மற்றும் அருகாமையில் உள்ள இடங்கள்:-

கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம்,
அருந்தன்கால்,
பூச்சக்கால்,
பணவல்லி,
வெலோர்வட்டம்.
ஆலெப்பி பீச்

இத ஆலப்புழை ரயில்வே ஸ்டேஷனில் ஒட்டி உள்ளது. இங்கு சாயந்திர நேரங்களை கழிப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும் இங்கு உள்ள கடைகளில் வித விதமான ஸ்நாக்ஸ் கிடைக்கும்
கிருஷ்ணாபுரம் அரண்மனை

இது ஆலப்புழா டிஸ்ட்ரிக்ட்ல் அமைந்திருந்தாலும் நகரில் இருந்து 50KM தொலைவில் உள்ளது. 18ம் நூற்றாண்டில் திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனை
மாளிகையை உருவாக்கியுள்ளார்.சிதைவடையத் தொடங்கியிருந்த இந்த மாளிகையை கேரள தொல்லியல் துறை தன் பொறுப்பில் கொண்டு வந்து 1950ம் ஆண்டில் செப்பனிட்டு இப்போதுள்ள தோற்றத்துக்கு கொண்டுவந்துள்ளது.
தற்போது இது விஷயமாக செயல்பட்டு வருகிறது
ஒரு மலையின் உச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த
அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன. கேரள ராஜ பரம்பரையினரின் ரசனை, கலாச்சாரம் போன்றவற்றை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சுவரோவியங்கள், நாணயங்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம்

maps.google.com/?cid=176342593…
கருமாடிக்குட்டன் சிலை

ஆலப்புழாவுக்கும் புத்தருக்கும்கூட நெருங்கிய தொடர்பு உண்டு. புத்த அறிஞர்கள், கிறிஸ்துவ போதகர்கள் இந்த நகருக்கு விரும்பி வருகை தந்திருக்கின்றனர். பழமைவாய்ந்த புத்தசிலை ஒன்றும் ஆலப்புழாவில் உள்ளது. சுமார் மூன்று அடி உயரத்தில் பாதி உடைந்த நிலையில் காணப்படும்
இந்தச் சிலையின் பெயர் `கருமாடிக்குட்டன்'. 1965-ம் ஆண்டு ஆலப்புழாவுக்கு வந்த தலாய்லாமா, கருமாடிக்குட்டனைத் தரிசித்துச் சென்றிருக்கிறார்.
ஆலப்புழையில் இருக்கும் அழகிய தங்கும் விடுதிகளை பற்றி பார்ப்போம்.
இங்கு ஹவுஸ் போட்டை தவிர குடும்பத்தினருடன் தங்குவதற்கு அழகிய ரிசார்ட்டுகள் நிறையவே உள்ளன அதில் சிறந்தவகைகளைப் பற்றி பார்ப்போம்
1.லேக் பேலஸ் ரிசார்ட்

ஆலப்புழையில் நம்பர் ஒன் லேக் ரிசார்ட் இதுதான்.இது வேம்பநாடு ஏரியின் ஆரம்பத்தில் அமைந்துள்ளது ஏரியின் நடுவில் தனித்தனி வில்லாக்கள் அமைக்கப்பட்டு அதை சுற்றிலும் நிறைய பூங்காக்கள் அமைத்துள்ளார்கள்.
அந்த ரிசார்ட்ன் நடுவில் ஒரு அழகான நீச்சல்குளம் உள்ளது இங்கு தங்க ஒரு நாளைக்கு 7000 முதல் 12000 வரை வாடகை.
Lake Palace Resort
Thirumala Ward, Chungam, Alappuzha,
04772239701
maps.app.goo.gl/U1VcVRSebZUX4P…
2. CGH EARTH RESORT

இது மராரி பீச்சின் அருகே அமைக்கப்பட்டுள்ளது இங்கு தங்கும் விடுதிகள் பழங்காலத்து கிராமிய முறையில் வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ளது
இந்த இடம் மிகவும் ரம்மியமாக தனிமையாக உள்ளது இங்கு தங்க ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 5000 முதல் 8000 வரை வாடகை உள்ளது
CGH Earth
Marari Beach P.O, S.L.Puram, Mararikulam, Kerala 688549
0478 283 1500
maps.app.goo.gl/v9nUeZ5gkoKJGR…
3.Vasundhara Sarovar Premiere

இதுவும் ஒரு முக்கியமான ரிசார்ட் ஆகும். இங்குள்ள ரெஸ்டாரண்டில் உள்ள உணவுகள் அனைத்தும் மிகவும் பிரமாதமாக இருக்கும் இங்கு ஒருநாள் வாடகை 6000 முதல் 9000 வரை உள்ளது இது ஆலப்புழாவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
maps.app.goo.gl/R5pzifqC4xnBvu…
4.ஐலண்ட் லேக் ரிசார்ட்

இது ஃபினிஷிங் பாயிண்ட் எதிர்ப்புறம் உள்ள சிறிய தீவு ஆகும் இதற்கு படகில் செல்ல வேண்டும்.விலை மிகவும் குறைவான ரிசார்ட ஒரு குடும்பத்திற்கு 1,200 மட்டுமே இதற்கு செல்ல நீங்கள் OYO புக் பண்ணினால் மலிவாக இருக்கும்.

cell 093876 86210
maps.app.goo.gl/pqXknbs7NGn1xP…
5.oxygen resorts

இது ஸ்டார்டிங் பாயிண்ட் என்று சொல்லப்படும் இடத்தில் அமைந்துள்ளது. அரண்மனை போன்ற கட்டிடம் இது ட்ராவலர் பெஸ்ட் சாய்ஸ் அவார்ட் வாங்கிய ஹோட்டல் இங்கு தங்க ஒரு நாளைக்கு 3000 ரூபாய் ஆகும்

Oxygen Resorts Alleppey

0477 226 4444
maps.app.goo.gl/rVFYEp2PVvUrBJ…
கள்ளுக்கடைகள்

ஆலப்புழையில் சுற்றி நிறைய கள்ளுக் கடைகள் உள்ளன இங்கு அது மட்டும் பிரபலம் இல்லங்க இங்கு கிடைக்கும் உணவு வகைகள் அவ்வளவு டேஸ்டா இருக்கும். இங்கு குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள் இதனைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு இது:-

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Film Food & Travel

Film Food & Travel Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @FilmFoodTravel

12 Jan
டக்கீலா:-

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறப்பு மதுவகை இருப்பது போல் இது மெக்சிகோ நாட்டின் தேசிய மது ஆகும். இது ஒயின் மாதிரி தான் அதிக போதை இருக்காது இதற்கு பினிஷிங் டிரிங்க் என்று பெயர் அதாவது பியர், விஸ்கி, பிராண்டி குடித்தபின் கடைசியாக இதனை குடித்து விட்டு மட்டையாக வேண்டும்.
அப்ப ஸ்டார்டிங் ட்ரிங்க் எதுன்னு கேட்டீங்கன்னா என்னோட சாய்ஸ் பக்கார்டி பிரீஸ்ர்.
பலரும் தவறாக டக்கிலா கற்றாழையிலிருந்து தயாரிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது "ஏகேவ்" என்னும் கற்றாழையை போன்ற செடியின் தண்டு பாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த தண்டு பாகத்தை
வேக வைத்து மசித்து அதனுடன் ஈஸ்ட் சேர்த்து நொதிக்க வைத்து அந்த நீராவிலிருந்து டக்கீலா தயாரிக்கப்படுகிறது.
Read 5 tweets
12 Jan
THE LIFT BOY 2019ல் வெளிவந்த இந்தப் படம் பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலராலும் பாராட்டுப் பெற்றது. இப்படத்தின் 75% வசனங்கள் மெதுவான ஆங்கிலத்தில் இருப்பதால் நன்றாகவே புரியும். இப்படத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால் "நம்பிக்கை ஊற்று'.
2 லொகேஷன்களில் காட்சி அமைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் எடுத்த விதத்தில் அறிமுக இயக்குனர் ஜோனாதன் அகஸ்டின்ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும். கதை: மும்பையில் ஒரு 24 வயது ராஜு இன்ஜினியரிங் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவன். நான்கு முறை முயன்றும் ஒரு பரிட்சையில்
அவனால் தேர்ச்சி பெற முடியவில்லை இந்நிலையில் ஒரு அப்பார்ட்மெண்டில் லிப்ட்மேன் ஆக இருக்கும் அவனது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள். தற்காலிகமாக அவனது அப்பாவின் லிப்ட் ஆபரேட்டர் வேலைக்கு போக நேரிடுகிறது அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களால் அவனது
Read 6 tweets
22 Dec 20
மாணிக்கம் மெஸ், குளித்தலை.

குளித்தலை மற்றும் முசிறி சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கடையை மிகவும் பிரபலம். இந்தக் கடை மதியம் ஒரு மணிக்குத் தான் திறக்கும் அதற்கு தகுந்தார்போல் இங்கு சாப்பிடுவதற்காகவே நிறைய பேர் தனது பயண நேரத்தை மாற்றி அமைத்து இங்கு வருவார்கள்
#தவிர்ப்போம்கடை
ஒரு காலத்தில் இந்தக் கடை மட்டன் குழம்பு மற்றும் நாட்டுக்கோழிக்கு தனி சுவை இருந்தது ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது. குழம்பு வகையிலும் ஒரு டேஸ்டும் இல்லை பத்தாதற்கு மட்டன் மற்றும் நாட்டுக் கோழி வெறும் எலும்பு மட்டுமே வைக்கிறார்கள். கறியைக் கடையில் வாங்கும் போதே
கறியை கழித்து விட்டு வெறும் எலும்பு மட்டுமே வாங்குவார்கள் போல. ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து 150 ரூபாய் என்று நன்றாக ஏமாற்றுகிறார்கள் ஜாக்கிரதை மக்களே பழைய பெயரை நம்பி ஏமாந்து போகாதீர்கள்
Read 4 tweets
20 Dec 20
கல்ட்ராட் கோழி இறைச்சி

ஆய்வகத்தில் செயற்கையாக தயாரிக்கப்படும் இறைச்சிக்கு பெயர்தான் கல்ட்ராட் இறைச்சி. இது அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இட் ஜஸ்ட் என்னும் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது
தாவரம் சார்ந்த மாற்று இறைச்சியை சில நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. சைவ உணவுப் பிரியர்களை
அவை திருப்திபடுத்துகின்றன.
விலங்குகளின் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதன் மூலம் இறைச்சி தயாரிக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது
அந்த வகையில் கோழியின் செல்களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப்பொருள்களைக் கலந்து இந்த செயற்கை
கோழி இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. கோழிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை இறைச்சியாக மட்டுமே உருவெடுக்கும். மாறாக ரத்தம் உள்ள உயிருள்ள கோழிகள் உருவாக்கப்படுவதில்லை. இதை வளர்ப்பு இறைச்சி என்றும் குறிப்பிடுகிறார்கள்.இந்த செயற்கை கோழி இறைச்சி மனிதர்கள் உட்கொள்ள
Read 4 tweets
12 Dec 20
கைதி பிரியாணி

கார்த்திக் ஹீரோவாக நடித்து வெளிவந்த கைதி படத்தில் அவர் பிரியாணி சாப்பிடும் அந்த ஒரு சீன் செம மாஸ் ஆக படத்தில் அமைந்திருக்கும் அதையே தீம்மாக எடுத்து கேரளா, தமிழ்நாடுல் பல ஹோட்டல்களில் அதே ஸ்டைலில் பிரியாணியை தருகிறார்கள். அதில் பெஸ்ட் நம்ப சென்னை ஓஎம்ஆர் ரோட்டில்
உள்ள "ஹங்கரி கார்ஸ்" ரெஸ்டாரண்டில் தருவதுதான். நீங்கள் ஒரு நாள் முன்னதாக இந்த ஹோட்டலில் கைதி பிரியாணியை ஆர்டர் செய்ய வேண்டும் அடுத்தநாள் நீங்கள் செல்லும் போது உங்கள் கையில் விலங்கிட்டு உள்ளே அனுப்புவார்கள் டேபிளில் அமர்ந்தவுடன் ஒரு ஜெயன்ட் தட்டில் நான்கு பீஸ்
மதுரை பொரிச்சகோழியும், ஒரு முழு தந்தூரி சிக்கனும் 4 முட்டையும் வைத்து முதலில் தருகிறார்கள் பின்னர் படத்தில் வருவது போல உள்ள வாளியில் மூன்றரை கிலோ பிரியாணியை வைத்து தட்டில் அதே ஸ்டைலில் கொட்டுகிறார்கள் பின்னர் அதை ஒரு கட்டு கட்டுவது தான் நமது வேலை.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!