உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் தாய் மொழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மொழி ஒரு கருவி தான் ஆனால் அது தான் பண்பாட்டின் மூலம் மரபின் மூலம். அவ்வகையில் தாய் மொழியை காத்திடுங்கள்.
ஆதியில் தமிழ் மொழியுடன் சமகாலத்தில் பேசப்பட்ட பல்வேறு மொழிகள் மறைந்துவிட்டன ஆனால் தமிழ் மொழி மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருவது நிச்சயம் கவனிக்கத்தக்க செய்தியாகும்.
மேலும் தமிழ் மொழி குறித்து சாதிய பார்வையில் "ஏலே! நாங்க தான்டா" என்று அணுகுவது பண்பற்ற வெறியாகும் அது அறமற்ற செயலாகும்.
ஏனெனில் எந்த மொழியும் சாதிக்கு அப்பாற்பட்டது. சாதி குறுகிய வட்டத்தில் புழங்கி வருவது ஆனால் மொழி உலகளாவிய அளவில் புழங்கி வருவதாகும்.
உலகில் பல மொழிகள் அரசியலில் சிக்கி தவிக்கும் சூழலில் தமிழ் மொழி நீண்டு வாழ்வது குறித்து மகிழ்ச்சி கொள்வதிலும் தவறில்லை அதே சமயம் சில மொழிகள் "வலுக்கட்டாயமாக" அழிக்கப்படுவது குறித்து குரல் எழுப்புவதிலும் தவறில்லை.
ஆதி கால தமிழ் எழுத்துக்கள் கண்டு அறியப்படவில்லை. அசோகரின் பிராமி எழுத்துக்கள் பின்பற்றப்பட்டு பிறகு வட்டெழுத்து பின்பற்றப்பட்டு பிறகு இன்றைய நடைமுறையில் உள்ள கிரந்த எழுத்துக்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
பின் குறிப்பு
வேத மொழியை சமஸ்கிருத மொழியை இத்துடன் இணைத்து பார்ப்பது தவறு. ஏனெனில், அம்மொழி அனைவரும் பேச உருவான மொழி அல்ல. பார்ப்பனர்கள் தாங்களே உயர்வு எனக்கருதி தாங்களே படிக்க வேண்டும் எனக்கருதி உருவாக்கப்பட்ட மொழிகள் அவை. அதனால் அம்மொழிகள் வளராமல் போனதில் ஆச்சரியமில்லை.
டிக் டாக் பரவலாக இருந்த சமயத்தில் ஒரு சில இடைநிலை சாதி மக்கள் "ஏலே! நாங்க ஆண்ட பரம்பரைடா! தமிழ்ல தான்டா பேசுவோம் ஆங்கிலமும் பேச மாட்டோம் இந்தியும் பேச மாட்டோம்" போன்ற தொனியில் பல வீடியோவை பார்த்து இருக்கிறேன். அதனாலே அது தவறு என்றேன்.
பல மொழிகளை கற்பதில் தவறே கிடையாது ஆனால் அதனால் தாய் மொழியை மறப்பதோ மறுப்பதோ சிறுமையாக எண்ணுவதோ முற்றிலும் தவறானது. ஏனெனில் தாய் மொழி என்பது உணர்வுகளை கொண்டது. அறிஞர் முருகா கூறியது போல பிறப்பால் பெருமை அடைய ஒன்றுமில்லை ஆனால் உணர்வால் தமிழ் மொழி பெருமைக்குரிய மொழியே.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
# 1948 இல் பாகிஸ்தான் அரசு உருதுவை பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது.
# கிழக்கு பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) தாய் மொழியான பெங்காலி பேசப்பட்டு வந்தததால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கட்டாய உருது மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
# உருது தவிர பெங்காலியும் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
# இக்கோரிக்கையை முதலில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து திரேந்திரநாத் தத்தா 23 பிப்ரவரி 1948 அன்று பாகிஸ்தானின் சட்டமன்றத்தில் எழுப்பினார்.
# உருது மொழி திணிப்பை எதிர்த்து 1952 பிப்ரவரி 21 அன்று "சலாம்-ரபீக்-பர்கத்-ஜாபர்-ஷபியூர்" ஆகிய மாணவர்கள் டாக்காவில் மொழி போராட்டத்திற்கு எதிராக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.
நீதிக் கட்சி சார்பில் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ரங்கா ராவ் (பொபிலி அரசர்) அவர்களின் பிறந்த நாள் இன்று.
இவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில் இவரின் செயலாளராக பணியாற்றியவர் பேரறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னிக்கவும் மேற்கண்ட படம் ராமகிருஷ்ண ரங்கா ராவ் தந்தை வெங்கட ரங்க ராவ் புகைப்படம் ஆகும்.
இது தான் ராமகிருஷ்ண ரங்கா ராவ் புகைப்படம். 🔽
# Updated Information #
பேரறிஞர் அண்ணா சில காலம் பொபிலி அரசரின் அந்தரங்க செயலாளராக (இது அரசு வேலை கிடையாது) இருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக திராவிட இயக்க மூத்த ஆராய்ச்சியாளர் அய்யா சு.திருநாவுக்கரசு அவர்களின் கூற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
# அக்காலத்தில் ஜெய் சங்கர் - விஜயலட்சுமி ஜோடி நல்ல வரவேற்பு பெற்ற ஜோடி.
# தமிழ் - தெலுங்கு - மலையாளம் - இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
# எங்க வீட்டு பிள்ளை ஓபனிங் சாங் டான்சர் இவர் தான்.
# 1967 இல் ஊட்டி வரை உறவு திரைப்படம் தான் இவர் கடைசியா நடித்த தமிழ் திரைப்படம்.
# 1968 இல் வெளியான குடியிருந்த கோவில் திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை ஏற்று "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பது தான்" என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
தி.மு.கவை ஆதரித்தால் சங்கிகள் நம்மை 200 ரூ உ.பி என்பார்கள். இதன் காரணம் என்ன தெரியுமா?
சங்கிகளின் எண்ணப்படி தனி மனிதர்களுக்கு அரசியல் அறிவு இருக்கக்கூடாது, சுயமாக சிந்தித்து பேசக்கூடாது அதுனால தான் என்னடா உ.பி காசு வாங்கிட்டு பேசுறியா என ஏளனம் செய்கிறார்கள்.
இப்ப நாம ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறோம். அங்க உணவு செம்மையா இருந்துச்சு என காசு வாங்கிட்டு சொல்றோமா? (I'm referring to Individuals and I'm not referring to YouTube channels) இல்லையே, நாம காசு கட்டி சாப்பிட்டு நல்லா இருந்ததால பிறரும் அச்சுவையை ருசிக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் தானே இந்த ஹோட்டல் டிரை பண்ணுங்க என்று சொல்கிறோம்.
அதே போல தான் நமக்கு சுயமாக சிந்திக்க அறிவு இருக்கிறதால தி.மு.க கட்சி நமக்கு (மக்களுக்கு) நிறைய நன்மைகளை செய்துள்ள காரணத்தால் தேர்தலில் தி.மு.க கட்சியை ஆதரியுங்கள் என காசு வாங்காமல் பேசுகிறோம்!