செவ்வாய் கோளில் இறங்கியுள்ள தரையுளவியின் பெயர் Perseverance அதாவது தமிழில் "விடா முயற்சி".
விடா முயற்சி கொண்டு பெர்சிவியரன்ஸ் எப்படி தரையிறங்கியது என்று பார்க்கலாம்.
புவியிலிருந்து கிளம்பி 480 மில்லியன் (48 கோடி) கிமீ பயணம் செய்து செவ்வாயை அடைய 7 மாதங்கள் ஆகின.
அவ்வளவு தூரத்தில் சென்ற தரையுளவியை தொடர்பு கொள்ள சமிக்ஞைகளை (signal) அனுப்பினால் அந்த செய்தி போய் சேர 14 நிமிடங்களாகி விடும்.
அது வேலைக்காது. எனவே செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து தான் இறங்க வேண்டும்.
மணிக்கு 21,000 கிமீ வேகத்தில் செல்லும் அதனை ஏழே நிமிடத்தில் நிறுத்தவேண்டும்.
அந்த 7 நிமிடங்கள் தான் திக் திக் நிமிடங்கள். இதனை Entry, Descend & Landing - EDL என்பர்.
இதற்கு துல்லியமாக திட்டமிட வேண்டும். கரணம் தப்பினால் மரணம். இதனை செயல்படுத்தவே 500,000 வரிகளுக்கு மேல் நிரல்கள் (coding) எழுதியுள்ளனர் நாசா தொழில்நுட்ப வல்லுநர்கள்.
அங்குள்ள காற்றின் எதிர்ப்பு போதாது. எனவே பெரிய பாராசூட் ஒன்று விரிகிறது.
இந்த நிலையில் கேப்சூல் தேவை இல்லாத ஆணி. Extra luggage. எனவே எடையை குறைக்க அந்த கேப்சூல் கழற்றி விடப்படுகிறது.
இப்போது தரையுளவியை கொண்ட சிறு ராக்கெட் பாராசூட் உதவியுடன் இறங்குகிறது. வேகம் குறையவில்லை.
இறங்கும் வேகம் மணிக்கு 200 கிமீ என்று குறைகிறது. வெற்றிகரமாக தரையிறங்க இதுவும் போதாது. இன்னும் வேகத்தைக் குறைக்க வேண்டும்.
ஆகவே ராக்கெட் இயக்கப்படுகிறது. இப்போது வேகம் கணிசமாகக் குறைகிறது.
இப்போது இன்னொரு பிரச்சினை. ராக்கெட் இப்படியே இறங்கினால், மணலை வாரியிறைத்து வயிற்றில்
உள்ள தரையுளவியை நாசமாக்கிவிடும். எனவே கிரேன் ஒன்றினால் 20 அடி உயரத்திலிருந்து இறக்கியது.
இறக்கிய பிறகு ராக்கெட் அந்த இடத்தை விட்டு நகர்கிறது. இவ்வளவு தடைகளை கடந்து perseverance என்ற 6வது தரையுளவி இன்ஞ்னியூடி என்ற உலங்கூர்த்தியை இறக்கிவிட்டு CO2வை O2ஆக மாற்றும் ஆய்வை தொடரும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மிக உயரமான மலை எது? எவரெஸ்ட். நான் கேட்டது இந்த புவியில் அல்ல. இந்த சூரிய மண்டலத்திலேயே பெரிய மலை எது?
செவ்வாய் கோளில் உள்ள ஒலிம்பஸ் மோன்ஸ் மலை. எவ்வளவு பெரியது எனத் தெரியுமா?
எவரெஸ்ட்டை விட 3 மடங்கு உயரம். 27 கிமீ உயரம். நம் எவரெஸ்ட்"வெறும்" 10கிமீ தான்.
மௌனா கீ என்ற மலையை விட இரண்டு மடங்கு பரந்தது. குறுக்கே உள்ள அகலம் (base) 550 கிமீ. இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து பார்த்தால் அதன் உச்சி 1000 கிமீ தூரத்தில் இருக்கும். அதாவது அதன் உச்சி கீழ்வானத்திற்கு அப்பால் இருக்கும்.
காரணம் இதன் சரிவு கோணம் (average slope) வெறும் 5 டிகிரி.
உண்மையில் இது ஒரு எரிமலை. மற்ற எரிமலை போல வெடித்து சிதறாமல், அதில் உள்ள லாவா அதன் மேற்புறத்தின் வாயிலாக சிறிது சிறிதாக வழிந்தோடியதால் இந்த மலை இவ்வளவு பெரிய மலையாக பரந்துள்ளது. இதனை ஷீல்ட் எரிமலை என்பர். ஹவாய் தீவுகள் இப்படி உருவாகியது தான்.
ஃபெப்ருவரி, 18, 2021 அன்று ஒரு சிறப்பான நிகழ்வு ஒன்று காத்திருக்கிறது. முதன்முறையாக செவ்வாய் நிலப்பரப்பின் மீது நாசாவின் ஹெலிகாப்டர் - இன்ஞ்யூனிடி- இறக்கப்படுகிறது.
Perseverance என்ற ரோவரில் இந்த இன்ஞ்யூனிடி பொருத்தப்பட்டு செவ்வாயில் இறக்கப்படுகிறது.
அது (மார்ச் அல்லது) ஏப்ரல் 19ந் நாளில் இருந்து மே 19ம் நாள் வரை 5 முறை பறந்து பல்வேறு இடங்களை படம் எடுக்கப்போகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 90 வினாடிகள் பறக்கும்.
இது வெறும் சோதனை ஓட்டம் தான். சிக்கல் இல்லாமல் வெற்றிகரமாக இந்த ஹெலி பறந்தால் தான் அடுத்தகட்ட ஆய்வை நாசா தொடங்கும்.
இதில் அப்படி என்ன சிக்கல் நேரும்?
சிக்கல் 1: அடர்வு குறைந்த செவ்வாய் வளிமண்டலம். நம் புலியின் காற்றழுத்தத்துடன் ஒப்பிட்டால் இது 1% சதவீதக்கும் குறைவு. நம் வளிமண்டல அழுத்தம் 1 பார் என்றால் செவ்வாய் வளி அழுத்தம் 6 -7 மில்லிபார். அதாவது 1000ல் 7 பங்கு தான். இத்தகைய வளி அழுத்தம்
தரப்படுகிறது. இரண்டையும் சேர்த்து Forensic Engineering பாடத்தில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஆனால் நம்ம ஊரில் இவை அரிது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1. 1978ல் அமெ. எடுக்கப்பட்ட சர்வேயின் படி பொருட்கள் செயலிழப்பு / பயன்பாட்டின் போது உடைதல் (Product Failures) ஆகியவற்றால்
ஆண்டுக்கு சுமார் 120 பில்லியன் டாலர் அமெ.வில் மட்டும் வீணாகியது.இது அன்றைய அமெ.வின் GDP-யில் 4%. எனவே Fracture Mechanics பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து அந்த இழப்பை சில ஆண்டுகளில் சுமார் 30 பில்லியன் டாலராகக் குறைத்தனர்.
மார்ச் 15, 1979 காலை M V குர்திஸ்தான் என்ற அந்த எண்ணெய் கப்பல் கனடாவில் க்யூபெக்கிலுள்ள டயூப்பர் முனையை விட்டு புறப்படுகிறது.
கப்பலுக்கு வெளியே, உறைய வைக்கும் அளவுக்கு சுழி டிகிரி செல்சியஸ் குளிர். கப்பலின் உள் எண்ணெயை கதகதப்பாக வைக்க
20 டி செ. வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. ஆனால் கப்பல் செல்ல ஏதுவான காலநிலை அதுவல்ல. எனினும் பனி நிறைந்த பகுதியை விட்டு கடந்தால் சரி என வருகையில் மதியம் 1:50க்கு பலத்த ஓசையுடன் ஒரு குலுக்கல். பிறகு எண்ணெய் கசிய ஆரம்பிக்கிறது. காரணம் ஒரு விரிசல். ஒரு 6 மணி அளவில் இன்னொரு பலத்த ஓசை.
இரவு 9 மணி அளவில் கப்பல் இரண்டாக பிளக்கிறது. (உயிரிழப்புகள்/ காயங்கள் ஏதும் இல்லை. மாலுமிகள் பிறகு மீட்கப்பட்டனர்).
உயர் ரக ஐஸ் க்ளாஸ் 1 என்ற கட்டுமான வடிவமைப்பை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் க்ரேட் A ஸ்டீலைக் கொண்டு கட்டப்பட்டது. சுமார் 183மீ நீளம்.
என்ன பிரச்சினை என்று
@Ravivar83779724 ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படத்தில் உள்ளது என்ன என்று...
இது ஒரு விண்கல். பொதுவாக நம் சூரியனை மண்டலத்தில் உள்ள விண்கற்கள் தான் வரும். ஆனால் இது வேறு விண்மீன் கூட்டத்தில் இருந்து வந்தது.
2017ல் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.
பெயர்: ஓமுவாமுவா
அன்று முதல்
வடிவேலு ஒரு படத்தில் தன் சகோதரி வீட்டிற்கு சிறு வயதில் விருந்தாளியாக வருவார். பிறகு அங்கேயே பல ஆண்டுகளாக டேரா போட்டு உட்கார்ந்து விடுவார்.
அதேபோல நம் விண்வெளியிலும் சில "வடிவேலு"கள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்...
சூரியனைச் சுற்றி வரும் கோள்கள்... அந்த கோள்களைச் சுற்றி வரும் நிலவு போன்ற துணைக்கோள்கள்.. இவையாவும் நமக்குத் தெரிந்தது தான்.
இந்தத் துணைக்கோள்களைத் தவிர சில குட்டி விருந்தாளிகளும் கோள்களின் நீள்வட்டப் பாதையில் அவ்வப்போது நுழைந்துவிடுவது உண்டு. அந்த அழையா விருந்தாளிகள்
வேறுயாருமல்ல 'ட்ராஜன் விண்கற்கள்' (Trojan Asteroids) தான்.
Asteroid எனப்படும் விண்கல் கேள்விப்பட்டுள்ளோம். அது என்ன பாண்டி-ங்குற பேர ஸ்டைல் பாண்டி, படித்துறை பாண்டி-ன்னு சொன்னா மாதிரி, விண்கல்லை, ட்ராஜன் விண்கல் என்று சொல்கிறோம்?