இந்த ட்வீட்க்கு வந்துருக்க பல க்வோட் ட்வீட்கள் அதிமுகவும் ஜெயாவும்தான் ஊழல் குற்றவாளிகள்ங்கற மாதிரி சொல்லிருக்கு.
இதுதான் பாஜகவின் தந்திரம். உண்மையில் ஜெயாவை விடப் பல மடங்கு ஊழல் குற்றவாளிகள் பாஜகவுல தான் இருக்காங்க. ரஃபேல் என்ன கொய்யாக்காய் யாவாரமா? Demonetization is a Scam.
இதெல்லாம் ஊழலா இப்படியும் ஊழல் பண்ணலாமான்னு இருக்கற சிஸ்டத்தையே மாத்திவச்சு அதைவச்சு ஊழல் பண்ற பெருச்சாளிங்கதான் பாஜக.
அத்தனையும் பண்ணிட்டு அதை நேக்கா அடுத்தவன் தலையில கட்டி ஊழலை ஒழிக்கப்போறேன்னு சொல்றதே ஒரு ஊழல்தான்.
பாஜக மாநிலங்கள்ல லஞ்சமே வாங்கப்படறதில்லையா?
நேத்து இவங்க பெருமையாப் பேசுன MLAக்களை விலைக்கு வாங்குனதே ஊழல் பணத்துலதான?
அமித்ஷாவும் மோடியும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி சம்பாதிச்ச காசா? ஒரு MLAவை விலைக்கு வாங்க எவ்ளோ பணம் தேவைப்படும் தெரியுமா?
எப்டி ஒரு ஊழலற்ற கட்சிக்கு இவ்ளோ பணம் வருது?
CSR Funds எங்க போகுதுன்னு தெரியுமா?
Donation funds for Political Parties எவ்ளோ போகுதுன்னு தெரியுமா?
அட வெளிய தெரியாம ஒவ்வொரு மினிஸ்ட்ரிலயும் ஒவ்வொரு பில் பாஸ் பண்றப்ப எவ்ளோ பணம் கைமாறிக்கிட்ருக்கு?
அதிகார துஷ்பிரயோகம்கிறதுக்கு டிக்ஷனரி விளக்கம் கொடுத்துட்ருக்க ஒரு ஆட்சியில ஊழலே இல்லங்கறதுதான் மாபெரும் ஊழல்.
ஆனா அதையெல்லாம் மறைச்சுட்டு சுண்டக்காய் ஊழல் ஜெயாவையும் சசிகலாவையும் ஊழல் தலைவிகள்னு நாமளே எடுத்துக்கொடுக்கக்கூடாது.ஏதோ ADMKகூட கூட்டணிவச்சதால தான் BJP புனிதம் கெட்டுச்சுன்னு இல்ல. இன்னும் இங்க அவனுக ஆட்சியில உக்காரல. அப்பத்தெரியும் வார்டு கவுன்சிலர் முதக்கொண்டு என்ன பண்ணுவான்னு.
ஒரு நிறுவனம் தொடங்க 1000 கோடி செலவு ஆகுதுன்னா அதுல 20% அதாவது 200 கோடியை அந்தத் துறை அமைச்சருக்கு அதிகாரிகளுக்கு முதல்வருக்கு கட்டிங் போறது ஊழல்ன்னா ஒரு பெருநிறுவனம் 10000 கோடி வாராக்கடன்ல இருக்குன்னு சொல்லி தள்ளுபடி பண்ணி அதுல 10% அதாவது 1000 கோடி Bondsன்னு வாங்கறதும் ஊழல்தான்.
அந்த 10000 கோடி கடன் வாங்குன நிறுவனத்தை வாங்க 8000 கோடி மக்கள் பணம் தள்ளுபடி ஆகி மீதி இருக்க 2000 கோடி வாங்க ஒரு கடனும் கொடுத்து அதுலருந்து அரசியல் கட்சிப் பத்திரமாக 1000 கோடியை வாங்கிட்டு மீதி 1000 கோடியும் பின்னாடி ஸ்வாஹா போடறதுக்குப் பேரு ஊழல் இல்லாம உழவுத்தொழிலா?
எது ஊழல்?
உண்மையில ஊழல்னு என்னங்கற தெளிவில்லாம நம்மை வச்சுருக்காங்களே அது ஊழல்.
ஊழலை ஒழிப்போம்னு ஆட்சிக்கு வந்து ஊழலை ஒழிக்கலயே அது ஊழல்.
ஊழலை ஒழிக்கக் கிளம்பிவந்த ஒவ்வொருவரும் பணம் பதவின்னு வாழறாங்களே அது ஊழல்.
எல்லாம் தெரிஞ்சும் கமுக்கமா அடுத்தவனை திட்றாங்களே இது ஊழல்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சவுக்கு சங்கர் ஒரு அரசியல் ப்ரோக்கர்.He is a guy having Selective Ethics of Journalism.
குறிப்பிட்ட தரப்பு ஆள். அதே நேரம் சோ போல எல்லாக் கட்சியினருடனும் தொடர்பில் உள்ள ஒரு ஆள்.
இங்கே கடந்த சில காலமாக BJPயை விமர்சித்து DMKதான் வெல்லவேண்டும் என்ற DMK ஆதரவு பிம்பம் உருவாக்கி,
பெரும்பாலான இணைய திமுகவினர் சவுக்கு சொல்வது உண்மைதான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திப் பின் அதே திமுகவினரை உதயநிதி என்ற துருப்புச்சீட்டை வைத்து வீழ்த்திவருபவர்தான் இந்த சவுக்கு.
அதற்கு முன் ராஜா, அண்ணாமலை போன்றோரை கேலிக்குள்ளாக்கி இப்போது அதையே உதயநிதி விஜய் என்று நீட்டி வருகிறார்.
அரசியல் வாரிசாக தினகரனுக்கு இருக்கும் வக்கு, ஓபிஆருக்கு இருக்கும் திறமை, GK வாசனுக்கு இருக்கும் தகுதி உதயநிதிக்கு மட்டும் இல்லை என்பது சவுக்கின் தற்போதைய நிலை.
ஒரு புலனாய்வு பத்திரிகையாளராக சவுக்கின் திறமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது.பல பிறநாட்டு பத்திரிகையாளர்களுக்கு ஈடானவர்.
விஜய் ஒரு பழைய சினிமா கை. ஒரு தயாரிப்பாளரோட இயக்குநரோட பையன்.அதுவும் சிக்கனமான ஸ்ட்ரிக்டான தயாரிப்பாளர் பையன்.
இன்னிக்குத் தேதிக்கு தியேட்டர்கள் லாபம் கொழிக்கக் காரணமா இருக்க வெகு சில நடிகர்களில் ஒருவர்.
தியேட்டர்கள் திரும்ப பழைய நிலைக்கு வரணும்னா மாஸ்டர் மாதிரி படங்கள் வரணும்.
தவிர இது சொந்தப்படம் எடுத்து முடிச்சு ஒரு வருசம் ஆகப்போகுது. ரிலீசுக்கு ஒரு மாசம் முன்னாடி லாக்டவுன் வந்ததால முழு பட்ஜெட்டும் முடிஞ்சுருக்கும். ரொம்ப நாள் ஒரு ஹைப்ப தக்கவைக்கமுடியாது. இது உதயா கொடுத்த பாடம்.
பொங்கல் இந்த முறை 4 நாள் லீவு. போகில ரிலீஸ் பண்ணா 5 நாள் கணக்கு.
ஓரளவு நல்ல ரிட்டர்ன் வந்துடும். ஏற்கனவே முடிஞ்ச சூரரைப் போற்று படத்துக்கு வட்டி கட்ட முடியாமத்தான் சூர்யாவே வேற வழியில்லாம OTTல ரிலீஸ் பண்ணார். இத்தனைக்கும் கன்டென்ட் அருமையா இருந்த படம். இப்பவரை தமிழ் OTT ரிலீஸ்ல அந்த ஒரு படம் தான் நல்ல ஹிட். மூக்குத்தி அம்மன் ஓரளவு ஹிட்.
காந்தியத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதில் இருக்க குறைபாடு இதுதான். அது பிரச்சனை வராம இன்னும் இன்னும் நம்மை ஓட்டுக்குள்தான் இருக்கச் சொல்லுமே தவிர எதிர்த்துக் கேள்வி கேட்க அனுமதிக்காது.
வெள்ளைக்காரர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துன காந்தி உள்ளூர் தீண்டாமைக்கு உதவ முடியல.
அடிப்படைவாதத்தை எதிர்த்து ஒரு ஆணியும் புடுங்கமுடியாத நிலைதான் காந்தியத்துக்கே இருக்கு. அப்டி இருக்கப்ப அதே அடிப்படைவாதத்தில் முற்போக்கு ஊறுகாயை எடுத்து வரும் கமலுக்கு மட்டும் புரிதலோடு கூடிய புரட்சிகர சிந்தனை இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது.