K Profile picture
6 Apr, 24 tweets, 4 min read
தமிழர் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு அப்டின்னு பாடிருக்காங்க.

அது உண்மைதான். கடவுள் முதல் கலாச்சாரம் வரை நாம பல விஷயங்கள்ல தனித்து இருந்திருக்கோம். வளர்ந்துருக்கோம்.

இது இப்போ இல்ல.காலகாலமா நடந்துட்டு வர்றது.யார் இங்க வந்தாலும் நமக்கேத்த மாதிரி தான் மாறிருக்காங்க.
மத்த ஊர்கள்ல நாடுகள்ல பக்கத்து ஊருக்குப் போக வழியில்லாம இருந்தப்போ நாம கடல் கடந்து வியாபாரம் பண்ணிட்ருந்தோம்.

நம்ம கூட தொழில் நடத்தறதுக்காகத்தான் உலகத்துல பல கடல் வழிகளே கண்டுபிடிக்கப்பட்டுருக்கு.

ஆதிகாலத்துலருந்தே நமக்குக் கிடைச்ச தலைவர்கள் அரசர்கள் அப்படி. நம்ம அறம் அப்டி.
2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே நாம அறத்துப்பால் எழுதிருக்கோம்.இப்பவரை நிர்வாகவியல்ல புதுசு புதுசா உருவாக்குற தியரிகளை நாம பொருட்பால்லயே பாத்துட்டோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு இயற்கைச் சமத்துவம் பேசிட்டோம்.அது இப்பவரை சமூக நீதியாகத் தொடருது.

ஆனா இப்ப ஒரு தீவிரமான சிக்கல்
நமக்கு நம்ம மாநிலத்துக்கு ஏன் நாம இருக்க நாட்டுக்கே கூட மிகப்பெரிய ஆபத்து அது. கொடுங்கோலாட்சிங்கறதைக் கேள்விப்பட்டுருப்போம்.

பலரது படையெடுப்புல வெள்ளையர் ஆட்சியில ஏன் எமர்ஜென்சி வரைக்கும் கூட இந்த மண் பாத்துருக்கு. ஆனா நம்ம தலைமுறைக்கு இது புதுசு. மதத்தின் பேரால் பாசிச வணிகம்.
இது உண்மையில் நம்ம மக்கள் மேல நேரடியாகத் தொடுக்கப்படுற ஒரு கலாச்சார கல்வி வணிகப் போர்.

இதுக்கு உடந்தையா இருக்கறது நம்ம மக்கள்லயே சிலர்ங்கறதுதான் வருத்தமான விஷயம்.

நம்மைப் பல்வேறு காரணங்களைச் சொல்லித் துண்டாட ஒரு கூட்டமே வேலை பாத்துட்ருக்கு.

ஆனா ஒரு நாள்ல முடியற சண்டையா இது?
இந்தியக் குடியரசில் நம்ம தமிழ்நாட்டுக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு.

கல்வியில் நாம முக்கியமான இடத்துல இருக்கோம். பிச்சையெடுத்தாவது படிக்க வைக்கணும்கிறது நம்ம மனசுல ஆழமா ஊறிப்போனது. அதுக்காகத்தான் இத்தனை பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன.

நம்ம கல்வித்தரம் எவனுக்கும் சவால்விடக்கூடியது
ஆனா அப்படிப்பட்ட கல்வியை அழிக்கத்தான் இன்னிக்கு புதிய கல்விக்கொள்கை வந்துருக்கு.

5வதுல 8வதுல பொதுத்தேர்வு, 9 10 11 12ல செமஸ்டர், இருக்கற பள்ளிகளை எல்லாம் இடிச்சுட்டு மாவட்டத்துக்கு ஒரே ஒரு கல்விநிலையம், தேவையே இல்லாம மும்மொழித் திட்டம், அதன்மூலமா இந்தித் திணிப்பு,
BA BSc வரை நுழைவுத்தேர்வு, அதுக்கு கோச்சிங் கிற பேர்ல பல நூறு கொள்ளை நிறுவனங்களுக்கு வாய்ப்பு இப்டி நம்ம கல்வித்தரத்தைச் சீரழிச்சுச் சின்னாபின்னமாக்கக் கங்கணம் கட்டிட்டு வர்றாங்க.

இதன் பின்னாடி ஒரு மாபெரும் நீண்ட கால சதியே இருக்கு. இதை இப்ப விட்டா எப்பவும் நிறுத்தமுடியாது.
நாட்டுல எவ்வளவு பஞ்சம் வந்தாலும் நம்ம மாநிலத்துல மக்கள் ஏதோ ஒரு வயித்துக் கஞ்சியாவது குடிச்சு நிம்மதியா வாழமுடியும். அப்படிப்பட்ட ஒரு நிலையிலதான் நம்ம மாநிலம் வளந்து வந்துருக்கு. எல்லா மாவட்டங்களிலும் ஏதோ ஒரு வகையான தொழில் தொழிற்சாலைகள் போக்குவரத்து வசதின்னு நல்லா வளந்துருக்கோம்.
ஆனா இப்ப வந்துருக்க விவசாய சீர்திருத்த சட்டங்களும் பொருளாதார தனியார் மயமாக்கலும் வேலைவாய்ப்பில் இவங்க தரப்போற இடையூறுகளும் இந்தத் தொழில்வளர்ச்சியை நாம அனுபவிக்கமுடியாமப் பண்ணிடும்.

நமக்கு வரவேண்டிய வேலை நம்ம கையை விட்டுத் தாரை வார்த்திருட்டிருக்காங்க இப்பருக்க ஆட்சியாளர்கள்.
நெய்வேலில இருந்து EB Dept வரைக்கும் நாளைக்கு நம்ம TNPSCல புகுந்து VAO தாசில்தார்னு எல்லா இடத்துலயும் வட மாநிலத்துக்காரங்க இருப்பாங்க. நாமளும் நம்ம குழந்தைகளும் நடுத்தெருவுல நிக்கவேண்டி வரும்.

இதையெல்லாம் தடுக்க நம்ம தனித்தன்மையைக் காட்ட நம்மகிட்ட என்ன வழி இருக்கு ஓட்டைத் தவிர?
இனி இந்தி படிக்கவேண்டிய நிலை வரும்.அதாவது இந்தி கட்டாயம் படிக்கணும்கிற நிலை வரும். அங்கதான் பிரச்சனையும் வரும்.

ஏன்னா இங்க வடமாநிலத்தவர்களுக்கு நிலம் வாங்கி வீடுகட்டித் தரப்போறாங்க. அவங்களுக்கு மொத்தமா ஓட்டுரிமையும் கிடைக்கும்.அவங்க அவங்க ஆளுங்களைத் தேர்ந்தெடுத்துப்பாங்க.நமக்கு?
இத்தனை காலமா நாம அண்ணன் தம்பியாப் பழகிட்ருந்த அட ஒரு பிரச்சனை கூட பண்ணாத எல்லா மதத்து மக்களும் இனி ஒரு பயத்தோடயே நடக்கவேண்டியிருக்கும்.

இவன் கழுத்தைக் கடிப்பானோன்னு அவனும் அவன் கழுத்தைக் கடிச்சுருவானோன்னு இவனும் பயந்து பயந்தே நடந்து நிஜமான காட்டேரிகள்கிட்ட மாட்டிக்குவோம்.
இதெல்லாம் நடக்காம இருக்க அப்ப மட்டுமில்ல இப்பவும் இனி எப்பவும் நாம தனித்துவமானவங்கன்னு நிரூபிக்க நம்மகிட்ட இருக்க ஒரே ஆயுதம் நம்ம வாக்கு. இதுதான் கடைசி வாய்ப்பு.

ஓரளவாவது அமைதிப்பூங்காவா இருக்க தமிழகம் அப்படியே தொடர இதுதான் ஒரே வழி.

அதுக்கு நம்மகிட்ட இருக்க தேர்வுகள் என்னென்ன?
BJP ADMK கூட்டணி- மத்திலயும் சரி மாநிலத்துலயும் சரி இவங்ககிட்டருந்துதான் நாம தப்பிச்சாகணும்.இவங்கள வீழ்த்துவது மட்டுமே இப்ப நம்ம இலக்கு.இதைத் சரியாச் செஞ்சுட்டோம்னா நாம தப்பிச்சோம்.

ஆனா அதை எப்டி பண்றது? நம்மைத் தடுக்க அவங்ககிட்ட இருக்க அதிகாரம் பணபலம் வச்சு அவங்க என்ன பண்றாங்க?
தமிழ் தேசிய ஆர்வத்துல துடிச்சிட்ருந்த இளைஞர்களை விடுதலைப் புலிகளின் பேரைச்சொல்லி உணர்ச்சியைத் தூண்டி சிந்திக்கவிடாமப் பண்ணி உணர்ச்சிக் கொந்தளிப்புலயே வச்சு ஆதாயம் தேடிக்கிட்ருந்த சீமானுக்கு இப்ப இது ஒரு முறையான வணிகமாகவே ஆயிடுச்சு.5% இளைஞர்கள் ஓட்டு என் கையிலன்னு பேரம் பேசுற அளவு
ரஜினி கமல்னு ரெண்டு பேரை ஆபரேஷன் திராவிடாங்கற பேர்ல இறக்கப்போறதா 2018லயே சொல்லிட்டாங்க. அதுக்கேத்த மாதிரி அப்ப வருவேன் இப்ப வருவேன்னு சொன்ன ரஜினி கள நிலவரம் புரிஞ்சு உடல்நிலையைக் காரணம் காட்டி விலகிட்டாரு.

ஈழம் மற்றும் ஏழை இளைஞர்களுக்கு சீமான்னா வசதியான படிச்சவங்களுக்கு கமல்.
இதுலயும் மிஞ்சுன சாதி ஓட்டுக்களுக்கும் அதிமுக அதிருப்தி ஓட்டுக்களுக்கும் தினகரனும் தேமுதிகவும்.

இது தவிர மிஞ்சினவங்களுக்கு சகாயம் மாதிரி ஆட்கள் வேற. இப்படி ஏற்கனவே இருந்த சில பேரைப் பயன்படுத்திருக்காங்க. புதுசா சிலரை இறக்கிருக்காங்க. இதுதான் அவங்களோட ஓட்டைப் பிரிக்குற திட்டம்.
இதையெல்லாம் புரிஞ்சுக்கற அளவு காலமோ நேரமோ தராம அவசர அவசரமா ஒரு தேர்தல். ஆனா மின்னணு வாக்குப்பதிவை மூனாவது நாளே எண்ணி முடிக்கறதுக்குப் பதிலா 26 நாள் இடைவெளி.இதெல்லாம் பாத்தாலே தெரியலயா நம்மைச் சுத்தி நடக்குற சதிவலை எவ்ளோ ஆழமா பின்னப்பட்டுருக்குன்னு?

இதுலருந்து தப்பிக்க ஒரே வழி?
இப்போதைக்கு மிஞ்சியிருக்க ஒரே வாய்ப்பு உதயசூரியன். ஏகப்பட்ட வதந்திகளை வச்சு ஸ்டாலினையும் முடக்கப்பாத்தாங்க. ஆனா ஸ்டாலின் சறுக்கலை. கொஞ்சம் கொஞ்சமா அடி வாங்கி அடி வாங்கி இப்ப முன்னாடி வந்துருக்கார். கடந்தகாலத்தவறுகள்லருந்து நிறைய பாடம் கத்துக்கிட்டு வந்துருக்கார்ங்கறதும் தெரியுது.
2016ல எதிர்பாராத தோல்விக்கப்றம் 2018ல கலைஞர் மறைவுக்கப்றம் கட்சியும் போயிடாம மாநிலமும் போயிடாம காப்பாத்திட்டு வர்றார்.

இதை ஒத்துக்கறதுல உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகள் இருக்கலாம். ஆனா எல்லாத்துக்கும் ஒற்றை பதிலைக் காலம் தரும்.

இன்னிக்கு BJP பாசிசத்துட்டருந்து காக்க ஒரே வழி திமுக.
இத்தனை காலமாத் தமிழர்கள் கட்டிக் காப்பாத்திட்டு வந்த கவுரவத்தை ஈஸியா வேற வேற உத்திகளைக் கையாண்டு நொறுக்கிடலாம்னு நினைக்குற பாஜக RSS சித்தாந்தத்துக்கு முடிவு கட்டுற நேரம் இதுதான். இன்னிலருந்து இந்த நாட்டுக்கே விடியல் பிறக்கட்டும்.அது நம்ம கையால நடக்கட்டும்.ஓட்டைப் பிரிச்சுடாதீங்க.
ஏன்னா உங்க ஒரு ஓட்டுல நாட்டின் எதிர்காலமே அடங்கிருக்கு. இனி நாம அரசியல் பேசப்போறோமா இல்ல வாயே திறக்கமுடியாமத் தெருவுல நிக்கப்போறோமாங்கறதுக்கு இந்தத் தேர்தல்தான் சாட்சி.

நாம் தமிழர் மய்யம் அமமுக அப்டி இப்டின்னு எந்தக் கருத்துக்கும் மயங்கவேண்டாம். இது நம்மை நிரூபிக்க வந்த சோதனை.
இதுல யாருக்கும் மயங்காம எதுக்கும் அசராம தீர்மானமா திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட்டு பாசிசத்தை அடியோடு விரட்டுவது நம் கையிலருக்க ஐந்தாண்டுக் கடமை.

சிந்தித்து வாக்களிப்பீர்.ஓட்டு
சிதறாமல் வாக்களிப்பீர்.

#VoteForDMK

வெற்றி நமதே.

தமிழர் என்றோர் இனமுண்டு.
தனியே அவர்க்கொரு குணமுண்டு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K

K Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BlitzkriegKK

4 Apr
ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல பத்து வருசத்துக்கு முன்னாடி ஒரு ஸ்ட்ரிக்டான வார்டன் இருந்தாரு. அவருக்கு உப்புமான்னா ரொம்பப் பிடிக்கும். அதனால எல்லா நாளும் உப்புமா போட்டாங்க.

ஆரம்பத்துல நல்ல மாஸ்டர்லாம் இருந்தாங்க. அப்றம் அவங்கள்லாம் போயிட்டாங்க. ஆனா உப்புமா மட்டும் மாறவே இல்ல. அதே உப்புமா.
அப்றம் ஒரு நாள் வார்டனும் போயிட்டாரு. அவரு கூட இருந்த அல்லக்கைங்கள்லாம் வார்டனாகிட்டாங்க. அவங்களும் உப்புமா சாப்பிட்டே பழகிட்டதால மூனு வேளையும் உப்புமாவே போட்டுட்ருந்தாங்க.

இதெல்லாம் பாத்து நிறைய பேர் கடுப்பாயிட்டாங்க. என்னங்க அதே உப்புமாவை எத்தனை நாள் சாப்டறதுன்னு யோசிச்சாங்க.
சரி கல்லூரி நிர்வாகத்துகிட்ட சொல்லி வேற வார்டன் வேற மாஸ்டர் வேற சாப்பாடு சாப்பிடலாம்னு போராட்டம் பண்ணாங்க.

ஒரு வழியா சரி அவங்கவங்களுக்குப் பிடிச்சத ஒரு சீட்டுல எழுதி ஒரு பெட்டில போடுங்க. அதிகம் பேருக்கு என்ன பிடிக்குதோ அதையே சாப்பாடா வச்சுக்கலாம்னு நிர்வாகமும் முடிவு பண்ணுச்சு.
Read 13 tweets
26 Mar
கமலஹாசனை ஏன் எதிர்க்கவேண்டும் என ஆரம்பத்தில் கேட்டபோது நம்மிடம் ஓரளவு யூகங்கள் இருந்தன.

அந்த யூகங்கள் அனைத்தையும் உண்மையாக்கி தன்னை ஏன் வெறுக்கவேண்டும் என ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பறைசாற்றிவருபவர்தான் கமல்.

அடுத்த குலத்தொழில் கல்வி ராஜாஜி கமல்தான்.

கமலஹாசன் ஏதோ புதிய கல்விக்கொள்கையை அப்படியே உள்வாங்கி அவ்வப்போது வெளியே விடுபவர் என்று நினைக்கவேண்டாம். அவர்களது சிந்தனையிலேயே அது உண்டு.

12 ஆண்டுகள் ஒரு பாடத்திட்டத்தைப் படித்துத் தொடர்ச்சியாக ஒவ்வொரு படிநிலையிலும் தேர்ச்சி பெற்றபின் தனியாக ஒரு நுழைவுத்தேர்வு எதற்கு? யாருக்காக?
இந்த வீடியோவிலேயே என்ன சொல்கிறார் என்றால் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டோம். ஆகவே தகுதித்தேர்வு வேண்டும் என்கிறார்.

அப்படியென்றால் அந்தத் தரம் குறைந்த பாடத்திட்டத்தில் இத்தனை ஆண்டாக படித்தவர்கள் எப்படித் திடீரென உயர்தரத் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற முடியும்? என்ன வகை ஊழல் இது?
Read 14 tweets
21 Mar
Ask Something Tweeps. quizprank.xyz/message.php?id…
😡😡😡😡😡//

Yen?
🤯🤯🤕🤯🤕🤕//

Ithellam enna ne enakku theriyathu.
Read 33 tweets
20 Mar
இலவசம் கொடுத்துக் கொடுத்துத் தமிழ்நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்குறாங்கன்னு இன்னிக்கு ஒருத்தர் பேசிருக்காரு. வாழ்த்துக்கள்.

இவர் மட்டுமில்ல. இன்னும் நிறைய பேர் இப்டித்தான் பேசிட்ருக்காங்க.

ஆனா ஒரு அரசு இலவசம் கொடுக்கறது எதுக்கு? அதோட நோக்கம் அதன் வரலாறு என்னன்னு தெரியுமா?
ஒரு மாநில மக்களைப் பிச்சைக்காரர்களாக்குறதுதான் அரசின் நோக்கமா?

சட்டங்கள் மட்டும் வச்சுக்கிட்டு அரசாங்கமே இல்லாம 6 மாசம் ஜனாதிபதி ஆட்சி நடத்தலாம். ஏன் ராணுவ ஆட்சி கூட நடத்தமுடியும். அதையே பலநாள் நீடிக்கவும் முடியும்.

ஆனா ஏன் தேர்தல்னு ஒன்னு நடத்தி அரசைத் தேர்ந்தெடுக்கறாங்க?
திடடங்ள் தீட்டணும். மக்கள் பிரச்சனைகளைப் பேசணும். எல்லா மக்களும் சமமா இருக்கும்படி எல்லாரும் குறைந்த அளவாவது வசதியா வாழும்படி திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்தணும். அதுக்கு மக்களோட சிக்கல்கள் தெரிஞ்சிருக்கணும்.அதை விவாதிக்கணும்.இதெல்லாமே மக்களாட்சியில் ஒரு அரசின் அடிப்படைக் கடமை.
Read 38 tweets
18 Mar
இணையத்துல ஓட்டுக்கேக்கறதாலயோ இல்ல கைவலிக்க திமுகவின் திட்டங்கள் அதிமுகவின் அநீதிகள்னு பாடம் எடுக்றதாலயோ யாராவது ஓட்டுப் போட்ருவாங்க மாறிடுவாங்கன்னு எதிர்பார்க்கமுடியாது.

ஆனா தன் கண்ணுக்கு முன்னாடி நடக்குற தவறை சுட்டிக்காட்டி சரியானதை சொல்லவேண்டிய தேவை கடமை எல்லாருக்கும் இருக்கு.
நாம என்ன கத்துனாலும் யார் கேக்கப் போறாங்கன்னு விட்டேத்தியா நாம போயிடமுடியாது. யாருமே கேக்கலன்னாலும் குயில் கூவிக்கிட்டுருக்காப்ல நாம் சார்ந்த இனத்தின் நலனுக்கு நம்மால என்ன முடியுதோ அதைச் செஞ்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்.

இங்க வர்ற ஆர்டி லைக்லாம் பெருசா எடுத்துக்கவேணாம்.
ஆனா நாம என்ன சொல்றோம்கிறது யாருக்கு முக்கியமோ இல்லையோ நமக்கு முக்கியம்.

இணையத்துல கருத்து சொல்லிட்டேன் என் ஜனநாயகக் கடமை முடிஞ்சுபோச்சுன்னு நழுவிடமுடியாது.

ஆனா இணையத்துலயும் சொல்லவேண்டியதைச் சொல்லாம விட்டுட்டு கேஷுவலா இருக்கமாதிரி நடிக்கக்கூடாது. நாம வாழறது நமக்காக மட்டுமில்ல.
Read 9 tweets
18 Mar
தமிழ்நாட்டுக்கு ஏன் தேர்தல் தேவை?
முதலில் மக்களாட்சியில் தேர்தலின் பங்கு என்ன?
மக்களாட்சி என்றால் என்ன?
உலகம் முழுவதும் நடந்து வருவது என்ன?
இந்தியாவில் என்ன நடக்கிறது?
தேர்தல் அரசியல் என்றால் என்ன?
ஏன் கூட்டணிகள் உருவாகின்றன?
பலகட்சித் தேர்தல் என்றால் என்ன?
பல கட்சிகள் ஏன் தேவை?
ஒரே கட்சி மட்டும் இருந்தால் என்ன சிக்கல்?
பிரதிநிதித்துவம் என்பது என்ன?
ஓட்டுப் பிரித்தல் என்றால் என்ன?
நடுநிலையாளர்களால் ஓட்டுக்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?
அவ்வாறு ஓட்டுக்கள் பிரிக்கப் படுவதால் ஆளுங்கட்சிகள் எவ்வாறு ஆதாயம் அடைகின்றன?
மாநில சுயாட்சி என்பது என்ன?
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மொழிவாரி மாநிலங்களின் பங்களிப்பும் முக்கியத்துவமும் என்னென்ன?
மாநில சுயாட்சியே நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றும் என்பதில் உள்ள உண்மை என்ன?
மாநில சுயாட்சியைக் காப்பாற்றத் துடிக்கும் கட்சிகள் என்னென்ன?
மாநில உரிமைகளை இழந்தது யார்?
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!