சீனா ஏன் லடாக் எல்லையில் அடக்கி வாசிக்கின்றது என்பதற்கான பல விடைகள் இப்பொழுது கசிகின்றன‌

சீனாவுக்கு கட்டம் கட்ட கிளம்பிவிட்ட மேற்குலகம் எதெல்லாம் சீனாவில் மெல்லிய சிக்கலோ அதை எல்லாம் கூர்மையாக்கி சீன ட்ராகன் தன் நகத்தாலே தன்னையே கிழித்து கொள்ள வழி செய்கின்றன,சீனாவின் 4 பக்கமும்
பெரும் சிக்கல் ஏற்படும் அளவு ஒரு ராஜதந்திரமான சிக்கலுக்குள் சீனாவினை சிக்க வைக்கின்றன‌

ஒரு பக்கம் ஹாங்காங், தைவான் சிக்கல் என நெருப்பினை பற்றவைக்கும் நாடுகள் அடுத்து மாபெரும் ஆயுதத்தை கையில் எடுக்கின்றன அதன் பெயர் உய்க்குர் இஸ்லாமிய சிக்கல்

உய்க்குர் இன இஸ்லாமியரை
சீனா மிக கடுமையாக நடத்துவதையும் அதை இந்தியாவின் கம்யூனிஸ்டுகள், இந்திய காங்கிரஸ் மற்றும் திமுக தவிர உலகின் எல்லா நாடுகளும் தீவிரமாக கண்டிப்பதும் அன்றாட நிகழ்வுகள்

இதில் துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகளின் உறவு மூலம் எப்படியோ அங்கும் இங்கும் சமாளித்து சீனா நகர்ந்தாலும்
மாபெரும் சிக்கலை அமெரிக்கா தோற்றுவிக்கின்றது

ஆம் முன்பு எப்படி சோவியத் யூனியனுக்கு எதிராக இஸ்லாமிய போராளிகளை ஆப்கனில் வளரவிட்டு அவர்களை விரட்டினார்களோ அப்படியே சீனாவுக்கும் கட்டம் கட்டபடுகின்றது

ஆம் ஆப்கானிஸ்தானின் அடுத்த எல்லையில் சீனாவின் உய்க்குர் பகுதி வரும் அங்குதான்
இஸ்லாமியர் மேல் சீனா அடக்குமுறை செய்கின்றது

இப்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபான்கள், அல் கய்தா, ஐ.எஸ் போன்றவை சீனாவுக்குள் ஊடுருவினால் மிகபெரிய சிக்கலை சீனா சந்திக்க நேரிடும்

நிச்சயம் தீவிரவாதிகளுக்கு வெற்றி கிடைக்க சீனா விடாது இரும்புகரம் கொண்டு அடக்கும்,ஆனால் அதைத்தான்
மனித உரிமை என உலகெல்லாம் சொல்லி சீனாவினை அரக்கன் பட்டியலில் சேர்த்து பட்டினி போட்டு பழிவாங்க முடியும்

மாறாக இதற்கு சீனா அஞ்சி யோசித்தால் நாடெல்லாம் குண்டுவெடிப்பும் கலவரமுமாக மாறும் சீனா தன் அமைதியினை இழக்கும்

அமெரிக்கா இதில் மிக தீவிரமாக இயங்குகின்றது, ஆனால் இதில் சிக்கலும்
உண்டு

முன்பு இப்படித்தான் பின்லேடனை வளர்த்து பின் ரஷ்யா விரட்டபட்டதும் அவர் அமெரிக்காவுக்கு எதிராக பாய்ந்ததும் வரலாறு, அதன் பின் ஐ.எஸ் மிரட்டல் வந்தது

அந்நிலை மறுபடி வரகூடாது என மிக பக்குவமாக காய்நகர்த்துகின்றது அமெரிக்கா

இப்பொழுது தாலிபான்களும் ஐ.எஸ் இயக்கமும் அல் கய்தாவும்
அமெரிக்காவின் அவசிய தேவைகள், இதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இல்லை காரணம் அதன் கழுத்து சீனாவிடம் இருக்கின்றது

எந்த தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்கா ஆப்கனில் அவ்வளவு பெரிய யுத்தம் நடத்தியதோ இனி தாலிபான்களும் அமெரிக்காவும் கூட்டாளிகள்

இது சாத்தியமா என்றால் இதுதான் உலக அரசியல்,
இதுதான் அமெரிக்க அரசியல்

இதனாலே ஆப்கானில் இருந்து அமெரிக்கா கிளம்பும் முடிவினை தள்ளிபோட்டாயிற்று அங்கிருந்து இனி தீவிரவாதிகள் உருவாகி சீனாவின் தூக்கத்தை கெடுக்கலாம்

தீவிரவாதிகள் மேல் சீனா தாக்கினால் அது மனித உரிமையாகும், ஆப்கன் மேல் சீனா படையெடுக்க அங்கிருக்கும் அமெரிக்க படை
விடாது

ஒருமாதிரியான சிக்கலுக்குள் சீனா சிக்கிவிட்டது, இந்நிலையில் இந்தியாவினையும் சேர்த்து பகைக்க அந்நாடு தயாராக இல்லை

வடமேற்கு எல்லையில் இந்தியாவோடு சமாதானம் நிலவினால் மட்டுமே இனி உய்க்குர் விவகாரத்தை சமாளிக்க முடியும் எனும் நிலைப்பாட்டுக்கு வந்தாயிற்று
இனி காஷ்மீர் பிரச்சினையினை எழுப்பமுடியாதபடி சீனாவின் வாய் நன்றாக அடைபட்டுவிட்டது, இது போக காஷ்மீர் தீவிரவாதிகளை சமாளித்து வெற்றிகண்ட இந்தியாவின் அனுபவம் இன்றி சீனாவால் தீவிரவாதிகளை எதிர்கொள்ள முடியாது

இதனால் இந்தியாவோடு வெள்ளை கொடி காட்டிவிட்டு ஓடிவிட்டது சீனா, ஓடியதோடு
மட்டுமல்லாமல் இந்தியா பற்றி கனத்த மவுனம் சாதிக்கின்றது

ஆனால் இந்தியா சீனாவோடு பெரிதும் நெருங்கவில்லை மாறாக அதை சீண்டும் விதமாக அறிக்கைவிட்டும் குவாட் போன்ற அமைப்ப்பில் சீனாவுக்கு எதிராகவும் நிற்கின்றது

விரைவில் ஆப்கன்,சிரியா, ஏமன் எல்லை போல சீனாவின் உய்க்குர் பகுதியும் மாறலாம்,
குபீர் திடீர் தீவிரவாத இயக்கங்கள் இனி சீனாவின் தூக்கத்தை கெடுக்கலாம்

சோவியத் தன் அந்திமகாலத்தில் ஆப்கனில் வசமாக சிக்கியது போல் சீனாவும் இனி அந்த தீவிரவாத கும்பல்களிடம் சிக்கலாம்

இந்த தாலிபான்கள் ஆட்டம் உய்க்குர் பக்கம் அதிகமானால் இந்தியாவின் ஆதரவு சீனாவுக்கு தேவைபடும் அப்பொழுது
இந்திய மாவோயிஸ்டுகளை சீனா கைவிட வேண்டியிருக்கும்

ஏகபட்ட கணக்குகளையும் திட்டங்களையும் கொண்டு வடமேற்கு சீனாவினை உலக நாடுகள் நோக்கி கொண்டிருக்க இந்தியாவும் தன் பல கணக்குகளோடு காத்திருக்கின்றது

தாலிபன்கள், அல் கய்தா என அமெரிக்கா தன்னால் வளர்க்கபட்டு பின் தன் எதிர்களான அமைப்புகளை
ஏன் மறுபடி கையில் எடுக்கின்றது என்றால் அதுதான் உலக அரசியல்

தான் வளர்த்த நாய் தன்னை கடித்துவிட்டால் உடனே அதை கொல்ல கூடாது, உடலுக்கு தடுப்பு ஊசிகளை செலுத்திவிட்டு நாய்க்கு என்ன சிக்கல் என கண்டு அதை காவலுக்கும் வேட்டைக்கும் பழக்குவதே நல்ல நிர்வாகம்

பாம்பை வைத்து எதிரியினை
பயமுறுத்தும் பொழுது அதை கட்டுபடுத்தும் வித்தையும் தெரிய வேண்டும் மாறாக அதை கொன்றுவிட கூடாது

இதைத்தான் இப்பொழுது தாலிபான்கள் மூலம் சீனாவுக்கு எதிராக செய்கின்றது அமெரிக்கா

இதையே புலிகள் மூலம் இலங்கைக்கு செய்யும் திட்டம் இந்தியாவிடம் முன்பு இருந்தது ஆனால் அதற்கு வாய்ப்பு
கொடுக்காமல் அந்த பாம்பினை அடித்தே கொன்றுவிட்டது சீனா இலங்கை கூட்டணி

சரி, இப்பொழுது உலகெங்கும் சீனாவின் மேல் இஸ்லாமிய உலகம் மிகபெரிய கோபம் கொண்டு பெரும் கொந்தளிப்பினை தெரிவிக்கும் நிலையில் பல போராட்டங்கள் நடக்கும் நிலையில் தமிழக இஸ்லாமிய காவலரான திமுகவும், கம்யூனிஸ்டுகளும்
காங்கிரசும் ஏன் வாய்திறக்கவில்லை

ஆம் சீனா எனும் அவர்களின் ரகசிய எஜமான் மேல் இந்த கூட்டம் வாய்திறக்காது, ஏனென்றால் அதுதான் இந்தியாவுக்குள் நடக்கும் இன்னொரு மர்ம அரசியல்

விரைவில் ஒரு பலமான இந்திய கட்சி உய்க்குர் இஸ்லாமியருக்காக குரல் எழுப்பும், அப்பொழுது இந்தியாவின் குறிப்பாக
தமிழக இஸ்லாமியரும் அவர்களை ஆதரிக்க வேண்டி இருக்கும்

ஆம் இஸ்லாமிய பெருமக்கள் திமுக கம்யூனிஸ்டுகளை விட்டுவிட்டு இஸ்லாமியரின் உண்மையான நண்பன் இவர்களே என அவர்கள் பகக்ம் சரிய வேண்டியிருக்கும்

அக்கட்சி எது தெரியுமா? பாரதிய ஜனதா கட்சி.

ரமலான் காலங்களில் மிகபெரிய சீன எதிர்ப்பு அலை
உலகெல்லாம் வெடிக்கலாம் அதில் இந்திய முஸ்லீம்களின் அனுதாபத்தையும் அப்படியே சீன எதிர்ப்பு அரசியலையும் அழகாய் செய்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக அடிக்கலாம்

கொஞ்ச நாளாக நேரு பல்கலைகழக சர்ச்சை இல்லை, இந்த இளம் இம்சை கன்னையா குமார் போன்றோரின்
இம்சை இல்லை, நாடெல்லாம் பல்கலைழகங்கள் பாடம் மட்டும் படிக்கின்றன, சாதி சண்டை இல்லை கொள்கை சண்டை இல்லை என நிறைய இல்லை எப்படி?

சீனாவினை மிக அழகாக எங்கே வெட்ட வேண்டுமோ அங்கே வெட்டியது இந்தியா, அதை இன்னும் கூர்மையாக்க அதற்கு வாய்ப்புகள் பெருகிகொண்டிருக்கின்றன

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அரிதாரி

அரிதாரி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kirukkalgall

6 Apr
வாக்களிக்க அஜித்தண்ணன் கருப்பு உடையில் வந்தார், ஜோசப்பு விஜயண்ணா சைக்கிளில் வந்தார், விக்ரம் எனும் கென்னடியார் நடந்து வந்தார் என ஏக அவதானிப்புகள்

இதை கிளப்பிவிடுபவன் யாரென்றால் முழுக்க உபிஸ், இவர்களாக அப்படி ஒரு அரசுக்கு எதிரான கருத்தை கிளப்பிவிடுகின்றார்கள்
சரி, ஒருவேளை நடிகர் கூட்டத்துக்கு பழனிச்சாமி மேல் கோபம் இருக்குமா? நிச்சயம் இருக்கும்

காமராஜருக்கு பின் திரைதுறை அல்லாமல் 5 வருடம் ஆண்ட முதல் முதல்வர் பழனிச்சாமி, அதற்கு முன் பன்னீர் செல்வம் எனும் நடிகர் அல்லாத அரசியல்வாதி இருந்தார்

பழனிச்சாமி ஆட்சியில் முதல்வர்கள்
சினிமா மேடைகளில் அமரும் அவமானமில்லை, "பாச தலைவனுக்கு பாராட்டு விழா" எனும் இம்சை இல்லை

முதல்வர் ஏதோ சோழ மன்னன் போல் அமர்ந்திருக்க , பாணர்கள் போல் திரை கவிஞர்கள் கவிதை வாசித்து கணிகையர் போல் நடிகையர் ஆடும் அந்த கலாச்சாரம் பழனிச்சாமி ஆட்சியில் இல்லை
Read 6 tweets
5 Apr
1980கள் அமெரிக்காவுக்கு அரேபியாவில் அடிவாங்கிய காலங்கள்

ஈரானின் கோமேனி ஆட்சியினை பிடித்து அமெரிக்க தூதரகத்தை சிறைபிடித்து அலறவைத்தது, லெபனானில் ஒரே நாளில் 200 அமெரிக்க வீரர்கள் கொல்லபட்டு அமெரிக்காவினை விட்டு ஓடியது, சி.ஐ.ஏ அதிகாரிகளெல்லாம் மர்மமாக கொல்லபட்டு அந்த அமைப்பே
லெபனானை காலி செய்தது என அமெரிக்கா பட்ட அவமானம் ஏராளம்

அதைவிட அவமானம் அமெரிக்க விமானம் கடத்தபட்டு அமெரிக்க அதிபர் ரீகன் காசு கொடுத்து மீட்டு வந்த சம்பவம்

ஆம் 1980ல் அவர்கள் பட்ட அடியினைத்தான் பின்பு ஜார்ஜ் புஷ் சதாமினை ஒழித்து கட்டி தாங்கள் யாரென காட்டினார்
இப்பொழுது அமெரிக்கா அடிவாங்க வேண்டிய காலம் என்பதை சொல்கின்றார் பிடன்

ஆம் ஈரானில் சொத்தபல், சிரியாவில் சிக்கல் , சவுதியுடன் முறுகல், ஏமனில் குழப்பம் என ஒருமாதிரி சிக்கும் அமெரிக்க அதிபர் இப்பொழுது ஜோர்டானிலும் எதையோ செய்து வசமாக மாட்டியிருக்கின்றார்
Read 6 tweets
5 Apr
தமிழக தேர்தலில் சில ஈழ இம்சைகளும் புகுந்து பரப்புரை என காணொளி வெளியிட்டு கொண்டிருப்பதுதான் உச்சகட்ட காமெடி

முதலாவது அவர்களுக்கு இங்கு வாக்குரிமையே கிடையாது, முன்பு போல கள்ளதோணியிலும் வரமுடியாது பின் ஏன் அவர்களும் குதிக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை
கருணாநிதி மேல் திமுக மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அது எம் உள்நாட்டு பிரச்சினை அதை நாம் கவனித்து கொள்கின்றோம், இது எம் நாட்டு அரசியல் இதில் அவர்கள் ஏன் தலையிடுகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

நிச்சயம் கருணாநிதி ஈழ விவகாரங்களில் சந்தர்ப்ப அரசியல் செய்தார் சந்தேகமில்லை,
ஆனால் அவரை விட ஆயிரம் மடங்கு சந்தர்ப்பவாதம் , எதிர்பாரா கொலை என செய்தவன் பிரபாகரன்

சிங்களனை எதிர்த்து இந்தியா, பின் இந்தியாவினை எதிர்த்து சிங்களனுடன் கைகோர்ப்பு கடைசியில் கருணாநிதியுடன் கைகோர்த்து பத்மநாபா கொலை என அவன் மிக கடுமையான சந்தர்ப்ப அரசியலை செய்தான்
Read 10 tweets
5 Apr
மே.வங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் குஜராத்தியர்கள்: மம்தா குற்றச்சாட்டு

பதற்றம் மற்றும் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றார் மம்தா என்பதற்கு இந்த வாக்குமூலம் பெரும் உதாரணம்

வங்காளி வங்க மொழியில் எழுதிய கவிதை தேசியகீதமாகலாம், வங்கத்து நேதாஜி தேசத்தின் தலைவனாகலாம்.,
இன்னும் வந்தே மாதரம் போன்ற வங்கமொழி கோஷமெல்லாம் தேசிய அடையாளமாகலாம்

வங்காளி விவேகானந்தரை ஆன்மீக அடையாளமாக்கி தமிழக கடற்கரையில் மண்டபம் கட்டி வணங்கலாம்

ஆனால் அரசியலில் மட்டும் குஜராத்திகள் இங்கு வரகூடாது என்பதெல்லாம் என்ன வகை?
இதே வங்கம் பிரிவினையில் எரிந்தபொழுது குஜராத்தி காந்தி வந்தார், நவகாளியில் வந்து உண்ணாவிரதம் இருந்தார்

ஆர்.எஸ்.எஸ் வங்கபோரில் இதே வங்கத்தில் இந்திய படைகளுக்கு உதவிற்று

இங்கு எல்லோரும் இந்தியர்களே, அப்படித்தான் ஒவ்வொரு இந்தியனும் கருதிகொண்டிருக்கின்றான்
Read 4 tweets
4 Apr
தினமலர் போன்ற ஏடுகள் உண்மையல்லா செய்தியினை வெளியிட முடியாது, அவர்கள் திமுக மேல் பதியபட்ட சட்டரீதியான வழக்குகளைத்தான் அதாவது நீதிமன்ற காவல் நிலைய ஆதார அடிப்படையில்தான் எழுதினார்கள்

இது பத்திரிகா தர்மம்

முன்பு ஜெயா பற்றி சன்டிவியும் முரசொலியும் பக்கம் பக்கமாக எழுதி
வாசிக்கலாம் எனும் நிலையினை எண்ணி பார்க்க வேண்டும், இவ்வளவுக்கும் ஜெயா சொன்ன ஒரு வரி யார் காதிலும் விழாமல் மறைக்கபட்டது

ஆம் "காவேரி தந்த கலைசெல்வி" எனும் நாடக குழுவினை ஜெயா முன்பு நடத்தினார், பின்பு அவர் அரசியலுக்கு வந்தாலும் அந்த நாடக ஆடைகள் போலி ஆபரணங்களையெல்லாம் நினைவாக
வீட்டில் வைத்திருந்தார்

1996ல் ஜெயா வீட்டில் ரெய்டு என்றபொழுது அந்த நாடக பொருட்களும் அவர் குவித்த ஆடை அணிகலன்களாக போலியாக கணக்கில் பரப்பபட்டது

இதை திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தன‌

ஆக அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆனால் நீதிமன்ற தரவுகளின் அடிப்படையில் தினமலர் போன்ற ஏடுகள் செய்தி
Read 6 tweets
18 Mar
தமிழகத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கின்றது அது இஸ்லாமிய பெருமக்களின் பாஜக பற்றிய பார்வை மாறியிருப்பது

இந்த தேர்தலில் அதை கணிக்க முடிகின்றது, அவர்கள் மிக நன்றாக சிந்திக்கின்றார்கள். 7 ஆண்டு கால மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஏதும் நடக்கவில்லை
என்பதையும் இஸ்லாமிய வழிபாட்டுக்கோ உரிமைக்கோ எள்முனை ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்துவிட்டார்கள்

மோடி அரசு இந்திய அரசு , இந்தியருக்கு எது தேவையோ அதை செய்யும் அரசு, நாட்டுக்கு எது தேவையோ அதை சரியாக அரசு என்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்
இங்கு பெரும்பான்மை இந்துக்களுக்கு அநீதி நடந்திருப்பது என்பதையும், சிறுபான்மையான தங்களுக்கு எவ்வளவோ சலுகைகள் கிடைத்திருக்கின்றது என்பதையும் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டார்கள்

இந்திய யதார்த்ததுக்கு ஏற்ற நியாய தர்மங்களை அவர்கள் புரிந்து கொண்டு இப்பொழுது பாஜக பக்கம் திரள்வது
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!